தேர்தல் சிந்தனைகள்
---------------------------------
சில எண்ணங்கள் கட்டுக்குள் இல்லை
கர்நாடகா தேர்தல்
ஜுரத்தில் இருக்கிறது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததொ என்னும் வண்ணம் பேசுகிறார்கள் எப்படி இருந்தாலும் சாமானியன்
வாக்களிக்க வேண்டும் அல்லவா வாக்களிக்கும்
போது வேட்பாளருக்கா இல்லை கட்சிக்கா என்னும்
சந்தேகம் எழுகிறது வேட்பாளர் பற்றி பெரும்பாலோருக்கு தெரியாது அவர் நல்லவர் ஆனாலும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவர் கட்சி இல்லாமல் சுயேட்சையாக இருந்தால் எதுவும் செய்ய
இயலாதவர் ஒரு வேளை பலம் குறைந்த கட்சிக்கு பலம் சேர்க்க விலை போகலாம் ஆகவே வேட்பாளர் என்பதை விட கட்சி என்பதே முதல் இடம்
பெற வேண்டும் என்று தோன்று கிறது என்னை கேட்டால்கட்சி
தாவியவர் யாராயிருந்தாலும் நிராகரிக்கப் படவேண்டும் இவர்களை நம்ப முடியாது சரியான பச்சோந்திகள் ஒரு
கட்சி ஆட்சியின் போது அதன் பலனை அனுபவிப்பவர்களுக்கு தேர்ந்தெடுக்க கஷ்டம் இல்லை மற்ற படி கட்சியின் கொள்கைகள் பிடித்திருந்தால்
அவர்களுக்கு வாக்களிக்கலாம் சில நாட்கள் முன்
படித்த நினைவு வழக்கு உள்ளாவர்களது
வழக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணைக்கு வந்து முடிவெடுக்கப்படும் என்பதே
யார் மீதெல்லாம் வழக்கு இருக்கிறது என்பதே மறக்கும் அளவுக்கு மாற்றங்கள் வந்து நல்லவர்கள்போல் நடமாடுபவர்களே
அதிகம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதுஎன்று ஒருமத்திய மந்திரி அன்றே சொன்ன நினைவு (கட்காரியோ ) அது போல்தானே
நடக்கிறது பூனழிக்கும்காவல் பாலுக்கும் காவல்
என்றே செயல் படும் மத்திய அரசின் செயல் பாடுகள் நம்பத்தக்கதல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது
ஜன் லோக்பால் என்ற முழக்கம் இருந்ததே நினைவுக்கு வருகிறதா
அதை நீர்க்கச் செய்து ஏதோ ஒரு லோக்பால்
நிறுவுவதாகக் கூறி ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி இடப்பட்டது ஊழல் வழக்குகளை விசாரிக்கும் முறையில் ஒரு கான்ஸ்டி ட்யூஷனல் அந்தஸ்து பெற்றஒரு அமைப்பு ஊழல்
வழ்க்குகளை விசாரிக்கும் என்றுபடித்த நினைவு
பலசெய்திகள் மறந்து போய் விடுகின்றனா
அதுவே கட்சிகளுக்கு வர மாகிறது இப்போதுஅரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும்
அமைப்புகள் அவர்களுக்குத் தோன்றியபடி(அல்லது அவர்களுக்குவரும் கட்டளைப்படி ) நினைத்த
நேரத்தில் வழக்குகளை ஆராய்வார்கள் தோன்றியபடி நிறுத்துவார்கள் என்ன வழக்கு
என்றே மறந்துபோன நிலையில் விசாரணைக்கு வந்து
தீர்ப்பு வரும் குற்றம் புரிந்தவர்கள்
விடுதலை செய்யப்படுவார்கள் இதை எல்லாம் நோக்கும்
போதுஏதோ சக்திக்மறை முகமாக இயங்குவது தெரியும்
இல்லை தெரிகிறதா
கர்நாடகா தேர்தலில் வலைத்தள
வாசகர்கள்பங்கு மிகவும் குறைவாகவே இருக்கும் இருந்தாலும் ஊதுகிற சங்கை ஊதி என் கருத்துகளை கூறி இருக்கிறேன்
வாக்களிக்கும் போது தனி
வேட்பாளர் முக்கியமல்ல க்ட்சியே முதன்மை இடம்
பெற வேண்டும் ஒரு செய்தியுடன் முடிக்கிறேன் We will get what
we deserve