சொன்னதும் இவர்தானே...........
-----------------------------------------
சென்ற பதிவில்
சொன்னது யார்
என்று கேள்வி கேட்டுவிட்டேன். முதன் முதலில் சொன்னது யார் என்று கேட்கவில்லையே என்று
சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் ஏன் என்றால் நான் அந்த வாசகங்களை ஒரு நண்பர், மூத்த
வலைப் பதிவர் சொல்லித்தான் கேட்டேன்.
சுமார் ஒரு
மாதத்துக்கும் முன் அவர் திருச்சிக்குச்
சென்றிருந்தபோது இன்னுமொரு மூத்த பதிவரை சந்தித்தது பற்றி எழுதி இருந்தார். அதைப்
படித்ததும் நான் பெங்களூரில் என்னை சந்திக்க வருவதாகக் கூறிய அவர் இங்கு வந்தும்
நான் காத்திருந்தும் சந்திக்க வரவில்லையே என்று எழுதி இருந்தேன் உடனே அவர் மே மாதத்தில்தேதி
பத்திலிருந்து பதினைந்துக்குள் வந்தால் எனக்கு சௌகரியப்படுமா என்று கேட்டு எழுதி
நான் எங்கும் போகும் உத்தேசம் இல்லை என்று அறிந்ததும் என்னைக்காண்பதற்காகவே ரயிலில் முன் பதிவு
செய்து 14-ம் தேதிகாலை வந்து மாலை திரும்புவதாக எழுதி இருந்தார் ஒருவேளை நான்
எழுதியது தவறோ என்று நான் எண்ணியது உண்மை, அவர் வந்ததும் இதைத் தெரிவித்தேன்
அப்போது அவர் உதிர்த்த பொன் மொழிகள்தான் முந்தைய பதிவில் யார் சொன்னது என்று
கேட்டுப் பதிவிட்டிருந்தேன் நான்காவதாக அவர் சொன்னது சில சில அபிலாக்ஷைகள்
இருந்தால் மிச்சம் வைக்காமல் முடிக்கவேண்டும் என்றார் என் ஆசை அவர் விருப்பம்
இரண்டுமே நிறைவேறியது. சாணக்கியரோ விதுரரோ சொல்லியதை நான்
படித்ததுமில்லை,கேட்டதுமில்லை. மூத்த பதிவர் டாக்டர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
என்னைப் பார்க்க வந்தபோது சொன்ன வாக்கியங்கள் நான் எழுதும் இப்பதிவுக்கு
முன்னோட்டமாக இருந்தது.
ஒரு வாரம்
முன்பே அவர் வரவை நானும் என் மனைவியும் எதிர்பார்க்கத் துவங்கி விட்டோம். நான்
தங்கி இருக்குமிடத்துக்கு வரும் வழிபற்றிக்கேட்டிருந்தார். எனக்கோ என்னிலும்
மூத்தவரை எங்களைப் பார்ப்பதற்காகவே பெங்களூர் வருபவரை ரயிலடிக்கே சென்று வரவேற்பதே
முறை என்று தோன்றியது. என் வீட்டிலிருந்து பெங்களூர் சிடி ஸ்டேஷன் சுமார் 15 கிமீ.
தூரம் உள்ளது. காலை 8-35-க்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல தாமதமாக வந்தது.
ஸ்டேஷனிலிருந்து ஒரு ப்ரீபெய்ட் ஆட்டோவில் வீடு வந்து சேரும்போது காலை மணி பத்தாகி
இருந்தது. அவரை வரவேற்க மே மாதம் மட்டுமே செடிக்கு ஒரு பூவாகப் பூக்கும் ஃபுட்பால்
லில்லி தயாராய் இருக்க அதன் வரவேற்பை படம் பிடித்து ஏற்றுக் கொண்டார்
வந்தவர் ரயிலில்
வந்த களைப்பு தீர முதலில் காஃபியும் காலை உணவாகத் தோசையும் பரிமாறப்பட்டது. உண்டு
முடித்துக் குளித்துவிட்டு வந்தவர் ஆயாசம் தீர சற்று ஓய்வெடுக்கட்டும் என்றாள் என்
மனைவி. டாக்டரும் சரியென்று சொல்லி உறங்கச் சென்றார். மதிய உணவு நேரம் வந்ததும் அவரைத்
தூக்கத்தில் இருந்து எழுப்பினோம். என்னால் அவரதுநிலையைப் புரிந்து கொள்ள
முடிந்தது. நானும் ஒரு முதியவன்தானே
மதிய உணவாக பிசி
பேளா ஹுளி அன்னா என் மனைவி செய்திருந்தாள். அவர் சாப்பிடும் அளவு ஒருவேளை சமையல்
பிடிக்கவில்லையோ என்று என் மனைவிக்குத் தோன்றியது. ஆனால் எனக்கென்னவோ ருசித்து
சாப்பிட்டதாகவே தோன்றியது. உட்கொளும் அளவு அவர் வயதை கணக்கிட்டால் சரிஎன்றே
தோன்றியது. சிறிது அவல் பாயசமும் உட்கொண்டார், சர்க்கரையான மனிதர் என்பதால்
எதையும் force செய்ய விரும்பவில்லை.மதிய உணவு முடிந்ததும் மிண்டுமுறங்கப் போனாஅது அவரது வாடிக்கையான வழக்கம் என்று தெரிந்துஅவரை உறங்க விட்டேன்
மாலை நான்கு மணிக்கு ஒருஆட்டோ ஏற்பாடு செய்திருந்தேன். என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீ. தூரத்தில் தும்கூர் ரோடில் ஒரு கோவில் cum ஆசிரமம் இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன் நாங்கள் சென்றிருக்கிறோம் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் மூன்று மொழிகளிலும் சுற்றிலும் எழுதப் பட்டு கீதைக்கு ஒரு கோவில் போல் இருக்கிறது
மாலை நான்கு மணிக்கு ஒருஆட்டோ ஏற்பாடு செய்திருந்தேன். என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீ. தூரத்தில் தும்கூர் ரோடில் ஒரு கோவில் cum ஆசிரமம் இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன் நாங்கள் சென்றிருக்கிறோம் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் மூன்று மொழிகளிலும் சுற்றிலும் எழுதப் பட்டு கீதைக்கு ஒரு கோவில் போல் இருக்கிறது
அவரை அங்கு அழைத்துப் போய்க் காட்ட விரும்பி முதலிலேயே ஒப்புதல் வாங்கி
இருந்தேன் உண்ட களைப்போ ஏதோ அந்தப் பயணத்தைக் கான்சல் செய்யலாமா என்றார். நான்
அந்த இடம் அவர் பார்த்தால் மகிழ்வார் என்றும் கூறி பெங்களூரில் இருப்பவரில் பலரும்
பார்த்திருக்காத இடம் என்று கட்டாயப் படுத்தி அழைத்துப்போனேன். என் மனைவியும் கூட
வந்தார்
ஒரு பிரம்மாண்டமான ஹால் அதன் நடுவே பகவானின் விஸ்வரூபதரிசனம் சிலையாக
வடிக்கப் பட்டு இருக்கிறது ஹாலைச் சுற்றியும் வெளியிலும் கீதை சுலோகங்கள் மூன்று
மொழிகளில் கீழே காயத்ரி மாதாவின் கோவில் தரிசனம் செய்து வெளியே வந்தால் பார்த்தசாரதியின்
கீதா உபதேசம் சிலை வடிவில் வளாகத்தில் ஏழு நதிகளின் சிலா ரூபங்கள். அருகே நடு
நாயகமாக விட்டலனின் திருச் சிலை.
நேரம் பற்றாக் குறையால் இன்னும் நன்கு கூர்ந்து கவனிக்க முடியவில்லை.
அங்கிருந்து வீடு வந்த போது மாளை ஆறு மணிக்கு மேல் ஆகி இருந்தது. டாக்டர் ஐயா
மஜெஸ்டிக் சென்று அங்கு சுற்றிப் பார்த்து விட்டு ரயில் ஏறிப் போவதாகக் கூறினார்.
என் அன்பின் அடையாளமாக நான் எழுதி வெளியிட்டிருந்த “ வாழ்வின் விளிம்பில்
“ சிறுகதைத் தொகுப்பையும் நான் வரைந்திருந்த பாமா ருக்மிணி சமேதராக கிருஷ்ணனின் தஞ்சாவூர்
ஓவியம் ஒன்றையும் கொடுத்தேன்
நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பதிவுகளின் மூலம் ஒருவரை ஒருவர்
தெரிந்து கொண்டிருந்தோம் . பதிவின் மூலம் தெரியாதது அவருக்கு கர்நாடக சங்கீதத்தில்
இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் மாலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் வரை ஆட்டொக் காரரிடம் கூட்டிச்
செல்லப் பணித்திருந்தோம்
மறுநாள் அதாவது 15-ம் தேதி அவர்
பத்திரமாய் வீடு சேர்ந்தார் என்று அறியும் வரை சற்று கவலையாகவே இருந்தாள் என்
மனைவி.
![]() |
| என் சிறுகதைத் தொகுப்பு பரிசாக |
![]() |
| தஞ்சாவூர் ஓவியம் நினைவுப்பரிசாக |
![]() |
| விஸ்வரூப தரிசனம் டாக்டர் ஐயாவுடன் நானும் என் மனைவியும் |
![]() |
| காயத்ரி தேவி ஆலையம் - என் மனைவி |
![]() |
| கீதா உபதேசம் சிற்பம் |
![]() |
| சப்த நதிகள் சிலாவடிவில் |
![]() |
| விட்டலன் |
.
.







