நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

நவராத்திரி தெய்வங்கள்


                                            நவராத்திரி தெய்வங்கள்
                                            ----------------------------------

                  

சமயபுரம் மாரியம்மன் தஞ்சாவூர் ஓவியம் 



அணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லி அழைப்பேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகன் என்பேனா கண்ணன்என்பேனா- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
 
( அண்மையில்  நவராத்திரி பதிவுகளாக திருமதி கீதா சாம்பசிவம் நவராத்திரியின் போது வழிபடும் தேவியர்களின் பெயர்களை ஒவ்வோரு நாளுக்கொன்றாகக்  கூறி எழுதி வருகிறார் . எனக்கு ஒரே கன்ஃப்யூஷன்  நான் ஒருபாடல் எழுத முயற்சித்தேன் . விளைவு இப்பதிவு )

      
மூன்றாண்டுகளுக்கு முந்தைய எங்கள் வீட்டுக் கொலு

ஒரு விண்ணப்பம் பிரதிலிபி நடத்தும்  ஞாபகம் வருதே என்னும்  போட்டியில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் அதில் ஒரு விதி. பரிசுக்காக வாசகர்களே படைப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்  ஆகவே இதன் மூலம் என் தள வாசகர்களை கீழே கொடுத்திிருக்கும்  சுட்டிக்குச் சென்று  நான் எழுதி இருக்கும் “அரக்கோண நாட்கள் என்னும் படைப்பினை வாசித்துக் கருத்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன் 
போட்டிப் படைப்பு  இந்தச் சுட்டியில் படைப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள் மிக்க நன்றி