மன சாட்சி ( நாடகம் )
காட்சி.:- 8.
இடம்.:- சாலை
பாத்திரங்கள்.:- ரவி, சபாபதி.
(திரை உயரும்போது ரவி சோர்ந்து நடை
போட்டுப் போக எதிரில் சபாபதி வருகிறான்.)
சபாபதி.:- என்ன சார்....எங்க “ அம்போ”ன்னு
பொறப்பட்டீங்க.....?
ரவி.:- எங்கெ போனா உனக்கென்னப்பா.....உன் வேலையைப்
பார்த்துட்டு நீ போயேன்........
சபாபதி.:- வில்லன்னாலும் சரியான வில்லந்தான்யா
நீ.......உன்னைத் தனியா நல்லா கவனிச்சுக்கணும்னு நெனச்சேன்...பின்ன ஏதோ நடந்தது நடந்து போச்சு நல்லாவே
இருக்கலாம்னு நெனச்சா ....சும்மா மொரைக்கறியே .....அது சரி.... நம்ம பழைய
காதலி..... அதுதான் ...ஷீலா ...எப்படியிருக்கா......?
ரவி.:- உனக்கு சம்பந்தப் படாத விஷயங்களிலெல்லாம் நீ
அனாவசியமாய்த் தலையிடறே.......அது உன் நல்லதுக்கில்லெ...ஊம்ம்ம். போயிடு
இங்கேருந்து......
சபாபதி.:- என்னய்யா.... மெரட்டறியே.....ஷீலாவை நான்
கட்டிக்கிட்டா எவ்வளவு சொத்து கிடைக்கும்னு நெனச்சு அவளைக் காதலிக்கத்
தொடங்கினேன்....ஆனா நீ என்னடான்னா எப்படியோ அவளை மயக்கி உன்னைத் திருட்டுக்
கல்யாணம் செய்ய வெச்சுட்டே....அது சரி........... கல்யாணம் மட்டும் பண்ணினாப்
போதாதே...... ஒரு குழந்தையாவது பொறந்தாத்தானே சொத்து........ ஹேங்........ஆமா....
ஏதாவது... இருக்கா.....?
ரவி.:- உன்னை மறுபடியும் எச்சரிக்கிறேன்........நீ
அனாவசியமா என் கோபத்தைக் கிளர்றே...! ஜாக்கிரதை......!
சபாபதி.:- இதப் பாருய்யா
... நானாயிருந்தேன்னா இந்நேரம் ஒண்ணில்லை... ரெண்டோ மூணோ
பெத்திட்டிருப்பேன்...ஒண்ணுக்கூட வழியக் காணோம்....ரொம்ப மெரட்டறியே...நீ. ஒரு
ஆண்பிள்ளையில்லியா ...
ரவி.:- ( மிகவும்
கோபப்பட்டு )என்ன சொன்னே....! ராஸ்கல்.....! இனிமே சொல்வியாடா.....சொல்வியாடா....(
கேட்டுக் கேட்டு அடிக்கிறான் )முதலில் இல்லை இல்லையென்று சொல்லி அலறிய சபாபதி,
ரவியின் பிடியிலிருந்து மீண்டதும்)
( திரை ) ( தொடரும் )