நினைவில் இருந்த பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் இருந்த பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூலை, 2017

ஒரு பயண நினைவு


                                                    ஒரு பயண நினைவு
                                                     -------------------------------
  அண்மையில் வெங்கட் நாகராஜின்பதிவு படித்தேன் அதில் அவர் விசாகைக்கு பயணம் செய்தது பற்றி எழுதப் போவாதாகக் கூறி இருந்தார். உடனே எனக்கு என் வைசாக்  நினைவுகள் வந்து அலை மோதின. வலைப்பதிவன் நினைவுகளையே முக்காலும் பதிவாக்குபவன்  சும்ம இருப்பேனா இதோ ஒரு பதிவு
முன்பெல்லாம்  அவ்வப்போது பயணப் பட்டு விடுவேன்   விசாகப் பட்டினத்தில் என்  மச்சினன்  வேலையில் இருந்தான் போனால் தங்க இடம் உண்ண உணவு கவலை இல்லை.நானும் மனைவியும் பயணித்தோம்   மனைவியில்லாமல் பயணிப்பது இல்லை  1999ம் வருடம்  பதினெட்டு வருட முந்தைய நினைவுகள் காலையில் மச்சினன் வேலைக்குக் கிளம்பிப் போனால்  திரும்பி வர மாலையாகும்   அதன் பின்  எங்காவது போகலாம் ஆனால் நாள் முழுவதும் என்ன செய்வது. அப்போது நான் தஞ்சாவூர் ஓவியங்கள் தீட்டுவதில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தேன் பகல் வேளையை ஓவியம் தீட்ட உபயோகிக்கலாம் என்று முன்னாலேயே திட்டமிட்டிருந்தேன்   அதற்கு வேண்டிய பொருட்களையும் எடுத்துச் சென்றேன்  என் மச்சினன்  அய்யப்பன்  படம்  தீட்டுங்கள் என்றான்  தீட்டிய படம் அவனுக்குத்தானே ஆகவே அவன்  விருப்பம்போல் ஓவியம்  தீட்டத் துவங்கினேன்
ஓவியத்துக்கு தங்க ரேக்குகள் (gold foils) தேவைப்படும்   நான் எடுத்துச் சென்றது போதவில்லை. சென்னையில் என்  மருமகளிடம்  வாங்கி குரியரில் அனுப்பச் சொன்னேன் கூரியரும்வந்தது  ஆனால் பிரித்துப்பார்த்தபோது தங்கரேக் இருக்க வில்லை. அதற்குள் கூரியர் கொடுத்தபையன் போய் விட்டான் மீண்டும் தகவல் சொல்லி மறுபடியும் அனுப்பச் சொன்னேன்  இந்த முறை கூரியர் வந்தபோதுபையனை வைத்துக் கொண்டே கவரைப் பிரித்தேன்  அதுவும் காலியாக இருந்தது கூரியர் பையன் கம்ப்லெயிண்ட் கொடுக்கச் சொன்னான் அந்தக் கூரியர் சென்னையில் இருந்து  ஹைதராபாத் வந்து அங்கிருந்து விசாகப் பட்டணம் வருவதாகத் தெரிந்தது அவர்கள் வந்ததை டெலிவர் செய்ததாக கூறினார்கள்  ஒரு எழுத்துக்கம்ப்லெயிண்ட் கொடுத்தோம்   மருமகளுக்கும்தகவல் தெரிவித்தோம்   அவள் குரியர் கவரை அந்த அலுவலகர்  முன்புதான் தங்க ரேக்குகளை இட்டு மூடியதாகக் கூறினாள்  சென்னையில் அந்தக் கம்பனியிடமிருந்து நஷ்ட ஈடாக  ஒரு தொகையை  வாங்கினாள் இம்முறை அனுப்பியது ஒழுங்காக வந்தது பிறகு ஓவியத்தை வரைந்து முடித்தேன்  கூரியர் சம்பந்தப்பட்ட இந்த நினைவுதான்/ நிகழ்வுதான் முதலில் வந்தது
மச்சினன் வீட்டில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில்  சிம்ஹாசலக் கோவில் இருந்தது  எழுநூறு எண்ணூறு  அடி உயரத்தில் சிம்மகிரி என்னுமிடத்தில் உள்ள கோவில் அது வராக நரசிம்ஹர் என்று நினைவு. ஆனால் அதைவிட அந்த சுவாமியின்  சிலையைக் காண முடியாதபடி சந்தனத்தால்  மூடி இருக்கிறர்கள்  வழக்கம்போல் கடவுளின்  உக்கிரம்  தாங்க முடியாது என்றும்  ஆண்டுக்கு ஒரு முறையே மூர்த்தியைப் பார்க்க முடியும்   என்றும் கதை  கூறினார்கள்
இன்னொரு கோவில் விசிட் விசாகப் பட்டினத்திலிருந்து சுமார் 120 கி மீ தூரத்தில் அன்னாவரம்  என்னும்  இடத்தில் இருந்த சத்திய நாராயணர் கோவில்  அங்கே கோவிலில் மதியம் உணவு படைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பசியில் இருந்த நாங்கள் அவர்கள்பிரசாதமென்னும் பெயரில் கொஞ்சூண்டு புளிசாதம் கொடுத்த போது பசி ஆறாமல்  சாப்பாட்டுக்கு உணவகம் நாடியதும் நினைவுக்கு வருகிறது

விசாகப்பட்டினம் கடற்கரை சின்னது  அங்கே சில பெண்கள் மெஹந்தி தீட்டிபணம்பார்க்கிறார்கள்  ஐந்தே ரூபாய்க்கு  இரண்டு நிமிடத்தில் அழகான டிசைனில் கைகளில் மெஹந்தி ஓவியம் தீட்டுகிறார்கள் சிறந்த கைவேலைப்பாடு உடையவர்கள்

அங்கே கைலாஷ் கிரி என்னும அழகான இடம் சென்றிருந்தோம் பொழுது போக்கவும் அழகான காட்சிகளைக் காணவும்  ஏதுவாக இருக்கிறது மூழ்கிய டைடானிக் கப்பலை நினைவு கொள்கிறமாதிரி இருந்தது விசாகாவில்  சுமார் இரண்டு வார காலம் இருந்தோம்  அதற்கு முன்   பணியில் இருந்தபோது  விசாகப்பட்டினத்துக்கு ஏரோப்லேனில் பயணித்திருக்கிறேன் 

விசாகப்பட்டினம்  கைலாஷ் கிரியில் எடுத்த படம் 
 
விசாகப்பட்டினத்தில்  வரைந்த ஐயப்பன் ஓவியம் n