மனசில் நிற்கும் சில பாடல்கள்
-------------------------------------------
நேற்றுக் காலையில் எழுந்ததிலிருந்து ஒரு பாட்டின் ராகம்
மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பாட்டின் வரிகள் நினைவுக்கு வராமல் மனதை என்னவோ
செய்து கொண்டிருந்தது. பாட்டின் ட்யூன் மனதில் ஓட திடீரென்று முதல் வரி நினைவுக்கு
வந்தது. “’சின்னஞ்சிறு
“ எனத் துடங்கும் பாடல் என் மனைவியிடம் இந்த் வரிகளைச் சொல்லி நினைவுக்கு வருகிறதா
என்று கேட்டேன் சின்னஜ் சிறு கிளியே கண்ணம்மாவா என்றாள். இல்லை என்றேன் . ட்யூனைக்
கேட்டாள். மனசுக்குள் சுருதி பிசகாமல் ஓடிய ட்யூனை நான் பாடிக் காட்ட முயன்றபோது
எனக்கே எருமைக் குரலாக ஒலித்தது. அவளால் சொல்ல முடியவில்லை. நேற்று மாலை அவள்
சகோதரி வீட்டில் ஒரு பூஜை. சென்றிருந்தோம். என் மனைவியின் சகோதரி லைட் ம்யூசிக்கில்
சினி,ஆப் பாட்டுகள் நன்றாகப் பாடுவாள். எதையாவது பாடி கோடி காட்டலாம் என்றால் என்
குரல் என்னையே பயமுறுத்தியது. , இன்றுகாலை திடீரென்று ஒரு க்ளூ சிக்கியது. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாட்டு
அது என்று மனசு சொல்ல. இணையத்தில் மேய்ந்தேன். ஒரு சில தேடலுக்குப் பின் அந்தப்
பாட்டு கிடைத்தது.
“சின்னஞ் சிறு பெண்போலெ
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே..... என்று போகும் பாட்டு.
நீங்களும் கேட்டுப்பாருங்களேன்
இதேபோல சில பாடல்கள் மனசுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்
இனிய நினைவுகளைக் கூடவே கொண்டு சேர்க்கும் எனக்கு எட்டு ஒன்பது வயதிருக்கும் என்று
நினைக்கிறேன் என் தந்தை ஒரு நாள் அவரது நண்பர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அன்று அந்த நண்பர் பாடிய பாடல் “தாயே யசோதா உந்தன் .....” இன்றைக்கும்
அந்தப் பாட்டைக் கேட்கும் போது அந்த அரக்கோண நாட்கள் நினைவுக்கு வருகின்றன
திருச்சியில்
குடியிருப்பில் ஒரு நாள் கோவிலில் ஒரு விசேஷம் . யாரோ ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.
எத்தனையோ முறை யார் யார் பாடியோ கேட்டிருந்தாலும் அவர் அன்று பாடியபோது கேட்ட அனுபவித்த பரவசம் இன்று வரை கிடைக்கவில்லை.
“அலை பாயுதே கண்ணா “ என்னும் அந்தப்பாடலில் கண்ணனை அவர் உருகி உருகிக்
கூப்பிடும்போது ஏற்பட்ட மயிர்க் கூச்சம்
ஓ. சொல்ல முடியாத அனுபவம்
இன்னொரு பாட்டு . இளைஞர்கள் கேட்டிருக்க வாய்ப்பு வெகு
குறைவு. அசோக் குமார் என்னும் படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு ,
பாபனாசம் சிவன் எழுதியது என்று நினைக்கிறேன் என் தந்தையார் அடிக்கடி பாடும் பாட்டு
:” மனமே நீ
ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்” அதில் வரும் ஒரு
fast beat அந்தக் காலத்தில் நான் மிகவும் ரசித்தது. அந்தப் பாடல் உங்களுக்காக இணையத்தில் இருந்துு எடுத்தது
மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்
தினம் வாழ்த்துவாய்
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே (மனமே..)
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வாதனையில்
தடுமாறும் மனமோடு
துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவே ( மனமே)
விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலமே எங்கும் ( மனமே)
சிறு வயதில் காம மோஹ மத வைரிகள் வசமாய் என்று வரிகள்
மிகவும் கேட்கப் பிடிக்கும்
இன்னும் ஒரு பாட்டு. இரண்டு மூன்று ஆண்டுகள் என் மனைவி கர்நாடக சங்கீதம் பயின்று வந்தாள் பாட்டு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குடியிருப்பின் கோவிலில் பக்க வாத்தியங்களுடன் என் மனைவி பாட ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கற்றுக் குட்டியாகிய அவள் மிகவும் தைரியத்துடன் பாடியராகமாலிகைப் பாடல். அது எம்மெஸ்ஸின் குரலில் இங்கு உங்களுக்காக
.