பல்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூன், 2019

ஒரு கதம்பம்



                                          ஒரு கதம்பம்
                                          --------------------

அண்மையில் நண்பர் நெல்லைத்தமிழன்  என் பதிவு ஒன்றுக்கு கீழ்கண்டவாறு பின்னூட்டம் எழுதி இருந்தார்
”நான் என் பையன் கொஞ்சம் சின்னவனாக இருந்தபோது, இருவரும் பூங்காவில் ஓடி (அப்போது நான் 5 வருடங்கள் வெயிட் குறைத்து என்னை ஓரளவு ஃபிட் ஆக வைத்துக்கொண்டிருந்தேன்) அவனை ஜெயித்து காணொளி எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போ அவன் வேகத்துக்கு நடக்க முடியலை..ஹாஹா”
நானும்  ஒரு தந்தை மகனுடன் ஓடி தோற்றதை அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்  வாய்ப்பாக  நினைத்து  இருந்ததை ஒரு பதிவாக்கி இருந்தது நினைவுக்கு வந்தது  மேலும்நாம்குழந்தைகளிடம் பாடம்கற்பதையும் சித்தரிக்கும் விதத்தில் ஒரு காணொளியையு ம் பகிர்கிறேன் 
 
             
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 
              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 
              கவனம் கவனம் என்றே பதறினாள் 
              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய்

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 
வென்ற நாள் நானே முதல்வன்நானே முதல்வன் 
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பாஉன்னையும் நான் வெல்வேன் 
பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 
               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 
              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 
               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 
               என்றே அப்பனும் மழுப்பிட 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது
             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 
             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 
             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்

இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 
விரிகிறது ஒரு முறுவல்

வீழ்வது எழுவதற்கே 

காணொளி

                          
வாசகப் பெருமக்களில்  பக்த கோடிகள் இதை ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்


 28 2 2005  மறக்க முடியாதநாள்  என் இரண்டாம்பேரன் பிறந்ததினம் மாலை அப்போல்லோ மருத்துவமனை  சென்னை  பிரசவத்துக்கு தயாராக  என் மருமகள்  எல்லாம் சரியாக இருக்கிறது  என்று சொன்ன டாக்டர்கள்  திடீரென குழந்தைகொடி சுற்றி மூச்சு திணறல்  இருப்பதால் சிசெரியன்  ஆப்பரேஷன்செய்ய வேண்டுமென்றார்கள்  நல்லபடியாய் நடக்க  வேண்டி சரி என்றோம்  சற்று நேரத்தில்  குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்தோம்   அந்நேரத்தில் எல்லாம் சரியாகநடந்தால் கர்ப்ப ரக்க்ஷகாம்பிகை  கோவிலில் தங்கத்தொட்டிலில் கோவில் சுற்றி வருகிறோமென்னும் பிராத்தனையும் இருந்தது  அந்தபிரார்த்தனை நிறை வேறிய போது  எடுத்த படங்கள் பழைய நினைவுகளுக்கு  இழுத்துச்சென்றது 


               


வியாழன், 10 மே, 2018

ஒரு கதம்பமாலை



                                             ஒரு கதம்பமாலை
                                             ------------------------------

கடந்த சில வருடங்களாக மே மாதத்தில் யாராவதுவீட்டுக்கு வ்ருவதுண்டு அவர்களை சிரம் தாழ்த்தி வரவேற்க என்வீட்டில் ஒரு எக்சோடிக் பூ உண்டு  மே மாதம்  மட்டும் தலை காட்டும்  பூவின் வாழ்வும் சுமார் பத்துநாட்கள்மட்டுமே  இந்த ஆண்டு செடி தலைகாட்டி இருக்கிறது மொத்தம் நான்கு செடிகளிருக்கும் இதுவரை இருப்பைக்காட்டியது இரண்டுசெடிகளே   ஒரு பூவும் ஒரு மொக்கும் படமெடுத்துள்ளேன்  இப்பூ பற்றி நான்  சிலமுறை  பகிர்ந்ததுண்டு  இதன்பெயர் ஃபுட்பால் லில்லி என்று கீதா மதிவாணன்தான் முதலில் எனக்குத் தெரிவித்தார் பார்ப்போம் இன்னுமெத்தனை செடிகள் எத்தனைஆண்டுகள் என்று


விரியும் மலரும்  அருகே மொட்டும் 


ஒவ்வொரு ஆண்டும் விஷுப்பண்டிகை வரும்  கேரளத்தவருக்கு விசேஷமானது  அதிகாலையில் கணி வைப்பார்கள் அதைக் காண்பது ஆண்டுமுழுவதும்  நல்லதை காண வைக்கும்  என்பார்கள்  கணி வைப்பது அவரவர் திறமையைப்பொறுத்தது அரிசி பருப்பு உப்பு தேங்காய்  தங்கநகை பழங்கள்  ரூபாய் நோட்டுகள் எல்லாமிடம் பெறும் இது வருஷப் பிறப்புடன் சேர்ந்து வரும் பெரியவர்கள்சின்னவர்களுக்கு கணி நேட்டம் கொடுப்பது வழக்கம்  என் மாமியார் இருந்தவரை  எனக்கும் கிடைத்ததுபுதிய நோட்டாகப்பார்த்துக் கொடுப்பார் என்பேரக்குழந்தைகள என்னிடம் டிமான்ட்  செய்து  ஆளுக்கு ரூ  நூறுக்குக் குறையாமல் கறந்து விடுவார்கள்  அப்படிக் கொடுப்பதிலும் ஒருமகிழ்ச்சி இருக்கிறது
இந்த ஆண்டு என் மனைவி கூடுதலாக தங்க முலாம் பூசிய விக்கிரகங்களையும்   வைத்திருந்தாள் ஒரு காலத்தில் தாமரை படத்துடன் வந்து கோண்டிருந்த  இருபது பைசா நாணயங்களும் தங்க முலாமில் மினுக்கின  அவற்றை நவ ராத்திரியின் போது  பூஜைக்கு  உபயோகப் படுத்துவாள்  108 காயின்களிருக்கும்இந்தமுறை கணியிலும்


விஷுக் கணி  தங்கத் தாமரைகளுடன் 
விஷுக் கணி 

அவரவர் பிம்பம்  காணப்படுவதில்லை 
----------------------------------------------------------------------

என் பெயர் அர்ச்சனா நானொரு புது அப்பாயிண்ட்மெண்டுக்கு அந்தமருத்துவருக்காகக்காத்துக் கொண்டிருந்தேன்  அங்கே அவரது BDS படிப்பைத் தாங்கி அவர் பெயர் கொண்ட பலகையும்  பார்த்தேன் திடீரென என் நினைவலைகளில் ஒரு உயரமான கம்பீரமான முகம் அதே பெயர் கொண்ட உருவம்  தெரிந்தது ஒரு காலத்தில் சுமார் முப்பது  வருடங்களுக்கு முன்   எனக்கு அவர் பால் ஏற்பட்டிருந்த ஈர்ப்பும்நினைவிலாடியது
அவரைப் பார்த்ததும்  அந்த எண்ணம்மறைந்தது இந்த வழுக்கை விழுந்த நரை முடியுடன் கூடியவர் முகச் சுருக்கமுள்ளவர் என் பழைய நண்பராக இருக்க முடியாது
என் பற்கள் சோதிக்கப்பட்ட பிறகு “ நீங்கள் செயிண்ட்  சேவியரில் படித்தீர்களா “ என்று கேட்டேன்
“ஆம் “ என்று சந்தோஷத்துடன்கூறினார்
‘ எந்த ஆண்டு “
’1987’’ என்றார்
“அப்படியானால் என்வகுப்பில் ‘ என்றேன்
சிறிது நேரத்துக்குப்பின்  அந்த வழுக்கை தலையன் நரைத்த முடி கொண்டவன்  முகச் சுருக்கம் கொண்டவன்  என்னை தீர்க்கமாகப் பார்த்து
எந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் “ என்று கேட்டானே ஒரு
கேள்வி ……………..!!


பெண்கள்பற்றி சில பதிவுகள் எழுதி இருந்தேன் ஏன் ஆண்களை பற்றி எழுதக் கூடாதுஎன்று தோன்றியது விளைவு கீழே

ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும்ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.


 இப்போது ஆண்களும் பெண்களும்.
--------------------------------------------------
ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சிமோட்டுசோடாபுட்டி )

பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபாசந்தியா )

நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.

நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்

ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.

பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.

ஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட்ரேசர்ஷேவிங் க்ரீம்,
சோப்டவல் ஆகியவை இருக்கும்.

பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.

ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.

ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.

பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.

பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.

ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.


பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்

ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.

ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.

பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.

ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.

ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
 
வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ). 
                                ==========================