வாடகைக்கு வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாடகைக்கு வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மே, 2016

ஆமேல நோடோனா......


                                                  ஆமேல நோடோனா........
                                                  -------------------------------------
1992-ம் ஆண்டு நான் எங்கள் வீட்டின் மேல் இன்னொரு தளமெழுப்பினேன்  அதற்கு ஆன மொத்த செலவு மூன்று லட்சங்களே  அதே வீட்டை புதுப்பிக்க எனக்கு ஆன செலவு இப்போது ஏறத்தாழ  மூன்று லட்சங்கள் வீடு புதுப் பொலிவுடன் விளங்குகிறது  அதில் குடிவருவோரும் அதை நல்ல படியாக மெயிண்டெயின்  செய்ய வேண்டும் என்ற கவலையால்  வாடகைக்கு இருத்துபவரைகவனமாக கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது வீடு வாடகைக்கு என்று போர்ட் மாட்டியதில் இருந்து பலரும் வீடு பார்த்துப் போக வந்தனர்  இவர்களில் ப்ரோக்கர்களும் வீடு தேவைப்படுபவர்போல் நடித்து வீட்டைப் பார்க்க வந்தனர் ஆனால் இவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததுபலரும் வீட்டைப் பார்க்கும்  முன்னர் வாடகை எவ்வளவு என்று அறிவதிலேயே கண்ணாய் இருந்தனர் வீடு யாருக்கு என்று கேட்டு அவர்கள் வந்து பார்க்கட்டும் என்று சொல்லியே அனுப்பி விடுவேன்  அவர்களை . வீடு வாடகைக்கு என்று எழுதியதைப் பார்த்தும் பலரும் லீசுக்கு  தருவீர்களா என்று கேட்டனர் லீசுக்கு இல்லை என்றதும் சிங்கிள் பெட் ரூம் வேண்டும் என்று சொல்லிப் போனவரும்  உண்டு. இத்தனைக்கும் வாடகைக்கு என்று எழுதிய போர்டில் இரண்டு பெட்ரூம்  இரண்டு ஹால்கள்  என்றும் எழுதி இருந்தேன் . நேரம் கெட்ட நேரத்தில் டெலிபோனில்  வீடு வாடகைக்குஎன்றால் என்ன வாடகை என்று கேட்டோரும்  உண்டு
 வந்தவர்களில் நிஜமாகவே சீரியசாக வீடு வேண்டி வந்தோரும் உண்டு  வருபவர்களில் நல்லவர்கள் யார் என்று கணிப்பதில் கவனம் தேவைசிலர் வாடகையைக் குறைத்து அட்வான்ஸ் அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள்  என்றும் கேட்டனர் ஒரு பார்ட்டி தொலை பேசி விட்டு வீடு பார்க்க வரலாமா என்று கேட்டார்கள் யாருக்கு வீடு தேவையோ அவர்கள் வரலாம் என்றேன்  வந்தவர் முதலில் கேட்ட கேள்வி முஸ்லிம் களுக்கு வீடு கொடுப்பீர்களா என்றது தான் எனக்கு எந்த ஆட்சேபணையும்  இருக்கவில்லை. ஆனால் என் மனைவிக்கு சில ரிசர்வேஷன்கள் இருந்தது நான் அவர்களை வீடு பார்க்க வரலாம் என்றேன்  எனக்கு ஒரு கண்டிஷன் இருந்தது. வீட்டில் குடி வருபவர்கள் எண்ணிக்கை ஐந்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதுதான்  அது இருக்கும் தண்ணீர் பிரச்சனையால் வந்த கண்டிஷன் இன்னொன்று குடிப்பக்கம் கூடு என்பும்ான். வந்த முஸ்லிம்  பார்ட்டி ஐந்து பேரே என்றனர்  அதிலும் ஒரு மகன் திருமணத்துக்குத்  தயார் என்றும் அவனது திருமணத்துக்குப் பின் ஆறு பேர்கள் என்றும் கூறினார்  நான் அவரது மனைவியையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னேன்  மறு நாள் வீடு பார்க்க வந்தபோது திருமணத்துக்கு இருக்கும் மகன் மகள் தவிர ஐந்து பேர் வந்தனர்  நான் அவர்கள் குடும்பத்தினரே  திருமணத்துக்கு  முன்பே ஏழுபேர் இருக்கிறார்களே என்று கேட்டேன் அவர் மகள் மணமாகிப் போய்விடுவார் என்று கூறினார் அப்படியும் இப்போதே ஆறு பேர் இருக்கிறார்களே என்று கேட்டேன்  திருமணத்துக்குப் பின் ஆறுபேர் இருக்கலாம் என்றால் இப்போது ஆறு பேர் இருப்பதில் என்ன தவறு என்றார் நான் திருமணத்துக்குப் பின்  ஏழு பேர் ஆவார்களே என்றேன்  அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அவருக்கு வீடு இல்லை என்று சொல்ல வைத்தது நான் கேள்வி கேட்டபோது அவர் அது குறித்து( ஆமேல நோடோனா” பிறகு பார்த்துக் கொள்ளலாம் ) என்றார் குடி  வைத்தபின்  அவர்களோடு மல்லுக்கட்ட என்னால் முடியாது என்று தோன்றியதாலும் வார்த்தைப் பிறழுபவரை  எனக்குப் பிடிக்காது என்றும் கூறினேன்  நான் அந்தப் பார்ட்டியை ரிஜெக்ட் செய்தது என் மனைவிக்கு மகிழ்ச்சி தந்தது
 இன்னொரு நாள் இரவு எட்டுமணி சுமாருக்கு  மூன்று பேர் வந்து நேரே மாடிக்குச் செல்லத் துவங்கினர் நான் அவர்களைத் தடுத்து யாருக்கு வீடு என்று கேட்டேன் மூவரில் ஒருவர் தனக்கு என்றார்  குடித்ிருந்தார் போல் இருந்தது. வீட்டில் எத்தனை மெம்பர்கள் என்று கேட்டேன்  அவர் மிகப் பெருமையாக பத்துபேர் என்றும் அவரது இரு மனைவிகளுடனும்  சேர்த்துக் கூட்டுக் குடித்தனம் என்றும் கூறினார்  நான் அவர்களுக்கு வீடு கொடுக்க முடியாது என்று அனுப்பி விட்டேன்
வீடு மிகவும் பிடித்துப் போய்  விடவும் முடியாமல்முடிவும்  எடுக்க முடியாமல் அவ்வப்போது வந்து இன்னும்  காலியாகவே இருப்பது அறிந்து சென்றவரும் உண்டு கார் பார்க்கிங் வசதியுடன் சற்றே விசாலமான புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கு வாடகைக்கு வந்தாகி விட்டதுஒரு சற்றே வயதான தம்பதியர் ஒருமகன் இன்னும் திருமண மாகவில்லை என்று மூன்றே பேர் அடங்கிய காம்பாக்ட் குடும்பம்  வீட்டை நன்கு பர்ராமரிப்பார்கள் என்னும் நம்பிக்கையில் வாடகைக்கு கொடுத்திருக்கிறேன் . பார்ப்போம் புதுப்பிக்கப் பட்ட வீட்டின் புகைப்படங்கள் சில கீழே.         
 
வெளியில் இருந்து பார்வை
 
வீட்டு எண்ட்ரன்ஸ்
  
வெளி ஹால் ஒரு பகுதி
    
 
வெளிஹால் இன்னொரு வியூ 
.   
          
படுக்கை அறை  இதுபோல் இன்னொன்றும் உண்டு 

உள்ஹால் 
உள்ஹால் இன்னொரு வியூ
பூஜா அறை
சமையல் அறை 
ஸ்டோர் ரூம் 
குளியல் அறை  டாய்லெட்
பால்கனியிலிருந்து சாலை வியூ 
பின்புற கேட் 
கார் நிறுத்த
மாடிக்குச் செல்ல