திங்கள், 26 ஏப்ரல், 2021

டிட் பிட்ஸ்

 

டிட்பிட்ஸ்

ஒருவழியாய்இர்ண்டாவதுதடுப்பூசி யும்போட்டாயிற்று கோவிட்  தொற்று வராதுஎன்று நம்பலாமா கடந்தஓராண்டில் இரண்டாவது முறையாகவீட்டின்வெளியே வந்தேன்

பதிவுலகில்கூறப்படும்பாசிடிவ் என்ற சொல்லே  பயமுறுத்துகிறது தொற்று இருக்கிற்தா என்பதை அறியவீட்டுக்கெ அல்லது  வீட்டருகே வந்து செக் செய்கிறார்கள் ஆனாலும்  பொது மக்கள் யாரும்வந்து செக் செய்து கொள்வதில்லை அவ்வள்வு பயம்

 நான் வீட்டின்  உள்ளேயே இருப்பதால் முகக்கவ்சம்அணிவதில்லைஆனால் தடுப்பூசி  போடப் போகும்போது  இரண்டு கவசங்கள்  அணிய வற்புறுத்தப்பட்டேன்

தடுப்பூசிக்குபோட வயது வரம்புண்டா இல்லை என்றே தோன்றுகிறது  60 வயதுக்கு மேற்பட்டொர்  என்பதுபோய் இப்போது 18 வயது அடைந்தோர்  என்பதெல்லாம் தடுப்பூசி இருப்பினை பொறுத்ததுஎன்றே தோன்றுகிறது   18 வயது வந்தவர்க்கெல்லாம்  என்றால் கூட்டம் தாங்காது அரசு தன்   கையிருப்பில்தடுப்பூசிமருந்துகள் இருக்கும்ப்டி பார்க்க வேண்டும்

 ஒருவன் பிட்சா  ஆர்டர் செய்தானாம்  நான்கு துண்டுகளாக்கவாஆறு  துண்டு களாக்கவா என்று கேட்டதற்கு நான்கு துண்டுகளாக்கு போதும்   இப்போது பசியில்லை  ஆறு துண்டுகள் சாப்பிட முடியாது  என்றானாம்            ;      

            

  

 

 

 

 

 


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சித்தன்போக்கு

 


எழுதுவதே எண்ணங்களைகடத்த என்று நினைக்கும் நான்அது நிகழப்படாதபோது ஏன் எழுத வேண்டும் என்று நினைதததுண்டு நான் ஒரு கன்வென்ஷன்ல்  எழுத்தாளன் அல்ல என் லேட்டெரல்  திங்கிங் கவனிக்கப்படதும் உண்டு சான்றுக்கு ஒன்று

  சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

அவருக்காdகவே இரண்டு பதிவுகள்  எழுதி இருந்தேன் சுட்டி https://gmbat1649.blogspot.com/2016/02/

https://gmbat1649.blogspot.com/2016/03/blog-post_4.html

திரு அண்டன் சுரா அவர்கள் என் வித்தியாசமான வார்த்தை பிரயோகததை குறித்து எழுதி இருந்ததை  திரு ஜம்புலிங்கம் கூறி  இருந்தார் இவறை நான் குறிப்பிடகாரணாம் எங்கோ என் எழுதுதுகள் எங்கோ அதன் இலக்கை எட்டுகின்றனஎன்று கூற்த்தான்

ஜீவாத்மா பரமாத்மாஎன்னும்  என்பதிவில்  அதற்கெ என்  வித்தியாசமானசிந்தனைவெளிப்பட்டிருக்கும்சில நேரங்களில் பதிவு எழுத முற்படும்போது இம்மாதிரிசிந்தனைகள் வருவதுண்டு, மேலும் மரணத்துக்குப் பின் எதிர்பார்க்க என்றே பல வியாக்கியானங்கள் சொல்லி பயமுறுத்தப் படுகிறோம் இருக்கும் போது அனைவரையும் நேசித்து வாழ்தலே சாலச் சிறந்தது. மரணத்துக்குப் பின் என்று கூறப்படுபவை அனைத்துமே ஹேஷ்யங்களேவிளக்க் முடியாது விளங்கினாலும் ஏதும் பயனில்லை. இப்போதைய மனித வாழ்வு பற்றி அடிக்க்டி எழுதிக் கொண்டுதானே இருக்கிறேன் என் கருத்து எல்லோரையும் நேசி 

நான் அறிந்ததுதான் அறிவாக முடிந்த பொருளாக நான் நினைக்கவில்லை. புதியதோர் கோட்பாட்டை சிருஷ்டிக்கவும் நினைக்கவில்லை. சிந்தனை போன போக்கில் எழுதியது சற்று வித்தையாசமாய் இருந்ததால் இடுகையாக்கினேன்

 

 

 

  

            

  

 

 

 

 

வியாழன், 15 ஏப்ரல், 2021

பிரசவ கால நினைவுகள்

 


 

பிரசவ கால நினைவுகள்

 அது என் இரண்டாம்மகனை  பிரசவித்த நேரம்  திருச்சி குடியிருப்பிலிருந்தோம் விடியற்காலை  சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே சென்றோம் டாக்டர்கள் கடிந்து கொண்டனர்  நேராகவே லேபர் வார்டுக்கு  கூட்டிச் சென்ற்னர்அப்போதுஅவளது வலி முகக்தில்தெட்ரிந்த்து அப்போது ஒர் முடிவு எடுத்தேன் இன்னொரு குழந்தை வேண்டாம்  என்று  குடும்பக்கட்டுப்பாடுசெய்ய நினைப்பவ்ர் பிர்சவத்தில்மனைவி படும்   பாடை  பார்க்க வேண்டும்

பிரசவ நேரத்திலென் மறுமகள் அருகே  என் மனைவி இருந்தும்பிரசவம்  ஆவதை  என்மனைவி பார்க்க வில்லை  என்கிறாள் மறுமகள் கையைப் பிடித்து வருடிக்கொண்டிருந்தாளாம்ஆறுதலாக

சென்னை  அபோல்லோ மருத்துவ மனையில்என்  இரண்டாம்  பேரனின் பிரசவ  நேரம் எல்லாம் சரியாக  இருந்த போதும் கடைசி  நேரத்தில்தொப்புழ்கொடி குழந்தையின்   கழுத்தைசுற்றி இருந்ததால் எம்ர்ஜென்சி ஆப்பரேசன் செய்ய வேண்டுமென்றனர் என்  சம்பந்தி இதை கேட்டவுடன் அங்கிருக்க பயந்து  திடீரெனகாணாமல் போய் விட்டார் அவ்வளவு பயந்தசுபாவம்

அயல் நாடுகளில்பிரசவ நேரத்தில் கண்வ்ன் அருகே  இருக்க வேண்டுமாம் ஒருதமாஷ் கதைஎங்கள் ஊரில்திருவாழத்தான் கதை என்பார்கள் ஒருவ்ன் குழந்தை பிறப்பதை காண விரும்பி னானாம் மெல் ஓட்டின்  வழியேமனைவி  பிரசவிப்பதை கண்டானாம் பயந்து போய்  இந்தமனைவி வேண்டாம் என்றானாம் ஊர் பெரிய்வர்கள் அவனை ஒரு குளதுக்கு  கூட்டிச் சென்று ஒர்கல்லை  எறியச் சொன்னார்களாம்நீர்  விரிந்து  மறு படியும்   குவிவது போல்தான் பிரசவமும் என்று  விளக்கினார்களாம்   

 

 

 

 

 

 


புதன், 14 ஏப்ரல், 2021

ரசிக்கும்பாடல்

ஒரு இனிய காதல் பாட்டுடன் அனைவருக்கும்   இனிய பொஙகல் வாழ்த்துகள்              
 காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் – அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)