தொடரும் உரத்த சிந்தனைகள்
--------------------------------------------------
சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that
..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else
do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for
interesting read..
(தொடர்ச்சி)
(தொடர்ச்சி)
போகுமிடம் பற்றி என்ன நினைக்கிறேன் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் போவது பற்றி நினைக்கும் அளவுக்குப் போகுமிடம் பற்றி யோசிப்பது/ யோசித்தது இல்லை. யாருக்குத் தெரியும் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் கூறிப் பயமுறுத்துகிறார்கள். சொர்க்கத்தில் எல்லா நலன்களும் இருக்கும் என்றும் நரகத்தில் எல்லா தண்டனைகளும் இருக்கும் என்று கூறுகிறார்கள் அதுவும் மினிட் டிடெயிலுடன் விவரிக்கிறார்கள் ஏதோ பார்த்து வந்து கதை சொல்வது போல். ஒரு கிருத்துவப் பாடல் கேட்ட நினைவு.
OH OH OH EVERYBODY
IS GONNA BE SINGING HIS STORY
EVERY BODY IS GONNA BE SINGING HIS GLORY
EVERY BODY IS GONNA HAVE A WONDERFUL TIME UP THERE
GOING DOWN THE
VALLEY GOING ONE BY ONE
YOU GOT TO BE
REWARDED FOR THE THINGS YOU’VE DONE
HOW YOU GONNA FEEL ABOUT THE THINGS YOU’LL SAY
ON THAT JUDGEMENT
DAY....OH OH OH ..... இறந்தவர்களை எல்லாம் அழைத்து அவர்கள் செயலுக்கு ஏற்ப நியாயம் வழங்கப்படும் என்றும் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தும் விதமாக அமைந்த பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. நோக்கம் நல்லது தான் இப்படிக் கூறினால்தான் பயம் வந்து நல்லது செய்வார்கள் என்று சொல்வதுபோல் இருக்கிறது மனிதனின் நல் இயல்புகளில் நம்பிக்கை போய் பயமுறுத்தியே அவனைப் பணிய வைக்க முடியும் என்று எண்ணம் வலுத்ததினாலேயே இத்தனை கதைகளும் நம்பிக்கைகளும் நம் இந்து மதத்தில் இதையே வித்தியாசமாக ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் கூறி சுயமாக சிந்திக்க விடாமல் செய்கிறார்கள் சரி சுயமாக சிந்திக்கும் உனக்கு என்ன தோன்றுகிறது என்னும் கேள்வி நிச்சயம் வரும் என் அறிவு இது பற்றி சிந்தித்து முடிவெடுக்கும் அளவுக்கு வளரவில்லை என்பதே அப்பட்ட உண்மை. நாம் கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு என்பது நிதர்சனம் இருந்தாலும் பதில் தேட முயற்சிப்பதில் தவறில்லையே விஞ்ஞானரீதியாகவோ தர்க்க ரீதியாகவோ QED போட வைக்க முடிந்தால் சரி எனக்குள் எழுந்த கேள்விகளும் அதற்கு நான் சொன்ன சமாதானங்களும் கூற முயற்சித்தேன் விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்னும்பதிவில்
எப்பொருளையும் ஆக்கவோ
அழிக்கவோ இயலாது.
ஆக்கலும் அழித்தலும் வெறும் தோற்றமே.,
உண்மையோ முன்பிருந்த
நிலையின் மாற்றமே.
இது விஞ்ஞானம் கூறும் தேற்றமே.
இருளும்
ஞாயிறும் விடியலும்
மாற்றமிலா
நிகழ்ச்சி போல் தோன்றினும்,
நேற்று
போல் இன்றில்லை, இன்று போல்
நாளையில்லை,இது நாமறியும் உண்மையே.
விஞ்ஞானக்
கூற்று உண்மையாயின்,
நேற்றிருந்த
என் அப்பன் என்னானான்.?
யாதாக
மாறினான்.?உடலம் வெந்து
சாம்பலாயிருக்கலாம், இல்லை மண்ணில்
மக்கிக்
காணாதிருக்கலாம்.ஆனால்,
அப்பனாக
எனக்குத் தெரிந்த அவன்
எங்கே
என்னவாக மாறினான்,?
இன்று நானாக அறியப்படும் நான் நாளை
என்னாவேன், சாம்பலோ மண்ணோ அல்லாமல்.
உயிரென்ற
ஒன்று இருந்ததால்தானே
என்
அப்பன் அப்பனாகவும், நான்
நானாகவும்
அறியப்படுகிறோம்.?
அந்த
உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
ஆன்மா
என்றழைப்பின் அதுவும் எங்கே உள்ளது. ?
யுகயுகமாய்
உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள்
எண்ணிக்கையில்
மாற்றம் இருக்கக் கூடாதே,
விஞ்ஞானக்
கூற்றுப்படி, விஞ்ஞானம் விளங்க வில்லை
ஊனென்றும்
உயிரென்றும் ஆன்மா என்றும்,
ஆயிரம்தான்
கூறினாலும், அதெல்லாம் ஒன்றின்
வியாபிப்பே என்று
மெய்ஞானம் கூறுகிறது.
அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும்
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிப் போவேன்.
அறிய முற்படுவோர் நிலையும் அதுதான்.அதுவரை ஹேஷ்யங்கள்தான்
என்றோ
எவனோ வரைந்து முடித்த வட்டத்தின்
தொடக்கப்புள்ளி
தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
அறியாமை
இருளில் இருப்பதே சுகம்.
அண்ட
வெளியே இருட்டின் வியாபிப்பு
அதில் ஒளி
தருவதே
ஞாயிறின் ஜொலிப்பு
அறியாமையும்
அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில்
நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.
ஹேஷ்யங்களும்
கேள்விகளும் எனைத் துளைக்க
ஞாயிறின் விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.
இருந்தாலும்
எண்ணங்கள் சிறகசைப்பதை நிறுத்துவதில்லையே
அம்மாதிரியான ஒரு சூழலில் எழுதியதும் இங்கு
பொருந்தும் என்பதால் அது கீழே
அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
அன்றொரு நாள்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி
உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
அந்த நாள் அக்குயவன் கை
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.
எண்ணி
எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம் .என்றறிந்தவன் தானே நீ.?
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம் .என்றறிந்தவன் தானே நீ.?
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்
உன்
உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூ டிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூ டிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே
(குயவன்
= படைத்தவன் என்று பொருள் கொள்க
வீடு=
தெரியாத போகுமிடம் என்று புரிந்து கொள்க)
கேள்வி
கேட்டவருக்கே தெரியும் எந்த பதிலும்
ஹேஷ்யமாகத்தான் இருக்கும் என்று. அதுதான் உண்மை. தெரியாத ஒன்று பற்றி எண்ணி
அசைபோடுவதில் தவறு இல்லையேநான் எது பற்றியும் சிந்திப்பது இல்லை என்று கூறிவிடலாம்
ஆனால் அது உண்மையாக இருக்காதே பார்க்க என் தளத்தின் முகப்பில் எழுதி இருக்கும்
வரிகளை
(உரத்த சிந்தனைப் பதிவுகள் முற்றும் )
(உரத்த சிந்தனைப் பதிவுகள் முற்றும் )
மிகப் பெரிய விஷயம். அதோடு மிகக் கனமானதும் கூட! இதில் கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஏதும் தெரியவில்லை! :)
பதிலளிநீக்குமௌனமாக இருக்கின்றது மனம்..
பதிலளிநீக்கு2011 டிசம்பர் -ல் மதிப்பிற்குரிய திரு ரமணி ஐயா அவர்கள் நெடும்பயணம என்ற தலைப்பில் ஒரு அருமையான
பதிலளிநீக்குகவிதை பதிவு செய்திருந்தார்கள் ..அதில் ' இறுதியில்பயணிக்கும்பொழுது வலியோ ,உணர்வுகளோ இல்லையெனில் நெடும்பயணம மிகவும் சிறந்ததே ' என்று
எழுதியிருந்தார் ..தாங்கள் முடித்திருக்கும் விதமும் அதே மாதிரி ..
மற்றும் ஜீவாத்மா /பரமாத்மா , judgement Day என்பன எல்லாம்
sociological viewpoints என்று தங்களுக்கே உறிய Rationalistic கருதுக்களை பதிவிட்டுரிக்கிறீர்கள் ..மிகவும் நன்றி.
மாலி
படித்து விட்டேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஉண்மை ஜொலிக்கிறது ஐயா...
பதிலளிநீக்குதங்களின் உரத்த சிந்தனைகள் வியப்பாக இருக்கின்றது ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
இதிலெல்லாம் துறை போகியவர் என்று அறியப்பட்ட உங்களால் கருத்து சொல்லும் அளவுக்கு தெரியவில்லை என்று சொல்வது ஆச்சரியம் தருகிறது வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
மௌனமாய் இருக்கிறது மனம் என்று சொல்வது விளங்கவில்லை.ஒன்று என் எழுத்து விளங்கவில்லை அல்லது உங்களால் செரிக்க முடியவில்லை என்பதாகத்தானே இருக்க முடியும் இருந்தாலும் வந்து வாசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ வி மாலி
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் கருத்துக்களை எழுதி இருக்கிறேன் நான் எடுத்தாளும்,. நண்பர் ஒருவருடைய, சில வாக்கியங்களை இங்கு குறிப்பிடுவது தவறாகாது என்று தோன்றுகிறது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்துக்களிலேயே மயங்கிக் கிடப்பதை அடிமைத்தனம் என்று கூறுவார் / "தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாதமுறைக்குட்பட்டு நடப்பது.."
"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.." அதையும் மீறி சுதந்திரமாக சிந்தித்து எழுதுவதை ஏதோsocialogical viewpoints என்று குறிப்பிடுவது வருத்தம் அளிக்கிறது அடிமைத்தனத்தையும் மீறி ஒரு விஷயத்தை அணுகுதல் rationalistic கருத்துக்கள் என்கிறீர்கள் இதையே நான் தமிழில் பகுத்தறிந்த கருத்துக்கள் என்பேன் இதுபோல் எந்தக் கருத்துகளும் உண்மைநிலை என்று அறுதி இட்டுக் கூற முடியாதபோது ஸ்பெகுலேஷன் என்பதை ஒப்புக் கொள்கிறேன் அதனால்தான்அப்படி நீங்கள் போனபதிவில் கருத்திட்டபோதுஇதை நீட்டி முழக்காமல் சுருக்கமாக முடித்துவிட்டேன் உண்மை என்று அறியாதவரை அவை ஸ்பெகுலேஷனே அதை வார்த்தைகளால் உண்மையாக்க நான் துணியவில்லை. என்னை எழுதத் தூண்டிய உங்களுக்கு நன்றி வருகை தந்து எனக்கு இதை எழுத வாய்ப்பளித்ததற்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
என்ன சொல்வது என்று தெரியவில்லை என்னும் உங்கள் கூற்றை மனம் ஏற்க மறுக்கிறது
இருந்தாலும் உங்கள் சிந்தனைகளுக்கு மாறாக இருக்கும் கருத்துக்களை வந்து வாசித்ததற்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
உண்மைகள் ஜொலிக்கத்தான் செய்யும் டிடி சார்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை ஜி. சிந்தித்ததைக் கருத்தாக்குகிறேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி ஜி.
ஒருமுறைக்கு இருமுறை வாசிக்க வைக்கும் சற்று கனமான பதிவு. மிருகங்கள் சிந்திப்பது ஜீவிதம் அல்லது வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கம் இவற்றைப் பற்றிமட்டுமே. ஆனால் மனிதன் மட்டும் தான் இது போன்ற உரத்த சிந்தனைகளை எழுப்புகிறான். இம்மாதிரியான தர்க்கங்களுக்கு முடிவே கிடையாது, கிடைக்காது.
பதிலளிநீக்குஐயா கந்தசாமி அவர்கள் கூறுவது போன்று தற்போதைக்கு //நான் யார், இந்த ஆன்மா ஜீவாத்மா பரமாத்மா போன்ற சிந்தனைகள் எனக்குத் தேவையில்லை. நான் இந்த உலகில் வந்தது வாழ்வதற்காக. மரணம் வரை நன்றாக வாழ்வேன். எங்கிருந்து வந்தேன் எங்கே போகப் போகிறேன் என்பவை எனக்குத் தேவையில்லை.// என்று கூறி தற்போதைக்கு இந்த தர்க்க சிந்தனைகளை முடித்து வைப்போம்.
ஜெயகுமார்
ஒருமுறைக்கு இருமுறை வாசிக்க வைக்கும் சற்று கனமான பதிவு. மிருகங்கள் சிந்திப்பது ஜீவிதம் அல்லது வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கம் இவற்றைப் பற்றிமட்டுமே. ஆனால் மனிதன் மட்டும் தான் இது போன்ற உரத்த சிந்தனைகளை எழுப்புகிறான். இம்மாதிரியான தர்க்கங்களுக்கு முடிவே கிடையாது, கிடைக்காது.
பதிலளிநீக்குஐயா கந்தசாமி அவர்கள் கூறுவது போன்று தற்போதைக்கு //நான் யார், இந்த ஆன்மா ஜீவாத்மா பரமாத்மா போன்ற சிந்தனைகள் எனக்குத் தேவையில்லை. நான் இந்த உலகில் வந்தது வாழ்வதற்காக. மரணம் வரை நன்றாக வாழ்வேன். எங்கிருந்து வந்தேன் எங்கே போகப் போகிறேன் என்பவை எனக்குத் தேவையில்லை.// என்று கூறி தற்போதைக்கு இந்த தர்க்க சிந்தனைகளை முடித்து வைப்போம்.
ஜெயகுமார்
"நான் இந்த உலகில் வந்தது வாழ்வதற்காக. மரணம் வரை நன்றாக வாழ்வேன். எங்கிருந்து வந்தேன் எங்கே போகப் போகிறேன் என்பவை எனக்குத் தேவையில்லை.// என்று கூறி தற்போதைக்கு இந்த தர்க்க சிந்தனைகளை முடித்து வைப்போம். .." ஆஹா , " அப்பாடா ' என்றிருக்கிறது ...
பதிலளிநீக்குமாலி
எல்லோரும் மனதில் அசை போடுவதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ jk22384
ஐயா வணக்கம் சில சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது இல்லாவிட்டால் நாமும் மாக்களைப் போல் இருப்போம் அந்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது சில அபிப்பிராய பேதங்கள் தவிர்க்க முடியாது இம்மாதிரி சிந்தனைக்கு உறுதியான பதில்கிடைக்காது என்று தெரியும் ஆகவேதான் ஓரளவு சுருக்கமாகவே முடித்து விட்டேன் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ வி மாலி
ஐயா வணக்கம் நான் இந்த ஸ்பெகுலேடிவ் சிந்தனைகளை முடித்துவிட்டேனே எனக்கும் போதுமடா சாமி என்றிருந்தது வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
மனதில் அசை போட்டதுதான் உரத்த சிந்தனைகளாக எழுதி இருந்தேன் வருகைக்கு நன்றி ஐயா
இது பற்றி கருத்தோ பதிவோ போடவில்லை. -என்று வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் ..சாதாரணமாக நாம் ஒரு பின்னூட்டம் இட்டால் கூட , அதற்கு என்ன 'பின்னூட்டம்' வ ருகிறது
பதிலளிநீக்குஎன்று அறிய முற்படுவது இயற்கையே ..இருந்தாலும் சுமார் 10 நாட்கள்
முன்பு வரை ..நான் பின்னூட்டம் இடுவது மிகவும் அரிதாகவே இருந்தது ..அதற்கு முக்கிய காரணம் 'TECHNOLOGICAL and language
deficiency..( சமீபத்தில் தான் மாதங்கி ,தயவில் எனக்கு ஒரு சொன்னதை செய்யும் lap Top கிடைத்தது ! ) தமிழை ENGLISH -ல்
TYPE செய்வது எனக்கு பிடிக்காது ..தமிழில் type செய்யும் வசதி எனக்கு
இன்னும் நன்கு கை கூடவில்லை ..தங்களை போன்ற veteran பதிவர்கள் நினைப்பதை எல்லாம் எப்படி தான் பதிவிடுகிறார்கள் என்ற மலைப்பிலிருந்து என்னால் மீள முடியவில்லை
தங்களை போன்ற 10-12 பதிவர்களின் பதிவுகளை நான் படிக்க
தவ றுவது இல்லை ..பின் னூட்டம் என்று போடமுடியாவிட்டலும் ..நான் வந்தேன் படித்தேன் என்பதை அறிவிக்க ஒரு like போடும் வழக்கம் ஏற்படுதிக்கொளலாம் என்று தோன்றுகிறது ..!
மாலி
@ V.Mawley
பதிலளிநீக்குஐயா நான் ஃபேஸ்புக் பக்கம் அதிகம் போவதில்லை. அதில் இருக்கும் லைக் வசதி எனக்குப் பிடிக்காது. அது வெறும் வருகைப் பதிவே என்பது என் எண்ணம் பதிவுக்கு வருகிறவர்கள் கருத்து இட வேண்டும் சிலர் வருகையும் கருத்துப் பதிவும் எனக்கு டானிக் போன்றது பின்னூட்டங்கள் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் எதிர்மறை கருத்தானாலும் நான் எழுதி விடுவேன் அதுவே என் பலமும் பலவீனமும் தொடர்ந்து வரவும் கருத்திடவும் வேண்டுகிறேன்
அன்புள்ள G.M.B. அவர்களுக்கு வணக்கம். ‘உரத்த சிந்தனைகள்’ என்ற தலைப்பில் தாங்கள் தொடர்ந்த பதிவுகளை அப்போதே படித்து விட்டேன். கருத்துரையும் எழுதுவதாக இருந்தேன்.
பதிலளிநீக்குஅந்த சமயம் அப்பா உடல் நிலை திடீரென்று மோசமாகி விட்டது. அம்மா இறந்ததிலிருந்து (சென்ற ஆண்டு) எனது அப்பாவிற்கு (வயது 90) கவலை காரணமாக தடுமாறுகிறார். தனியாகவே இருக்கிறார். எங்களோடு அல்லது தங்கை குடும்பத்தோடு வந்து இருக்கவும் மறுக்கிறார்.
இந்த சூழ்நிலையில், மரணம் பற்றிய உங்களது உரத்த சிந்தனையை மறுபடியும் படித்து, ஆழமாக சிந்தித்து கருத்துரை எழுத இயலவில்லை. மரணம் பற்றிய மூட நம்பிக்கை என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எனவே பிறிதொரு நாளில் விவரமாக எழுத முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
ஐயா வணக்கம் மரணத்துக்குப் பின் என்ன என்னும் தலைப்பில் நண்பர் ஒருவர் கேட்டதற்கிணங்க எழுதியது உரத்த சிந்தனைகள் அதில் மரணம் பற்றியுமான என் எண்ணங்களைப் பதிவிட்டிருக்கிறேன் மரணம் பயப்படுவதற்குரியது அல்ல என்பதே என் கருத்து வருகைக்கு நன்றி ஐயா