Thursday, March 24, 2016

நாளை என்ற ஒன்றை நினைக்காதவனின் நேற்றைய நினைவுகள்


  நாளை என்ற ஒன்றை நினைக்காதவனின்   நேற்றைய நினைவுகள்
---------------------------------------------------------------------------------------


கோவாவில் ஜுவாரி கெமிகல்ஸ்  தொழிற்சாலைக்கு ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி இருந்தது. கோவாவை நினைத்தால் நினைவுக்கு வருவது இரண்டு மூன்று
சம்பவங்களும் கோவாவின் இயற்கை எழிலும். மேற்குத் தொடர்ச்சி மலையில் தவழும் கோவா கேரளத்தையும் நீலகிரி மலையையும் நினைவு படுத்துகிறது.காற்றில் ஒருவித மீன் வாசம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது, மட்காவ்ங் (MADGAON )என்று அறியப்படும் மர்மகோவா கோவாவில் குறிப்பிடத்தக்க நகரம்( ? ) அங்கு ஒரு நாள் மார்க்கெட் பகுதிக்குச் சென்றேன். எந்த விலங்கின் குடலோ தெரியாது , மாலை மாலையாகத் தொங்க விட்டிருந்தனர். என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வெளியேறி விட்டேன். 

கோவாவின் தலைநகரம் பணாஜி ( PANAAJI ) எனப்படும் பஞ்சிம் ஆகும். மண்டோவி நதியின் தீரத்தில் அமைந்திருக்கிறது. அருகே COLANGUT  கடற்கரை. நான் போயிருந்த காலத்தில் அங்கே ஹிப்பிகள் எனப்படுபவரின் ஆக்கிரமிப்பு என்றே கூறலாம். எந்த ஒரு ஆடையும் இன்றி கடற்கரையில் ஆண்களும் பெண்களும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருப்பது கண்டு மிகவும் கூச்சமடைந்து நான் திரும்பி வர முயலுகையில் என்னை ஒரு மேனாட்டுப் பெண் வழி மறித்தாள். ( மேலாடை ஏதுமின்றி ) நான் பயந்து ஒதுங்க முயற்சிக்க அவள் என்னிடம் ஒரு ஜோடி காது வளையங்களைக் காட்டி வாங்கி கொள்ள வற்புறுத்தினாள். என் மனைவிக்கு இட்டு அழகு பார்க்குமாறு சிபாரிசு செய்தாள். என் பாக்கெட்டில் கைவிட்டு ரூபாய் இருபதோ முப்பதோ அவள் கையில் திணித்து விட்டு ஓடி விட்டேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவளிடம் பேச்சுக் கொடுத்து நிறைய விஷயங்களை சேகரித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.ஏதோ வாழ்க்கையைத்தேடி எங்கிருந்தொ இங்கு வந்து அல்லல் படும் அவர்களை இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.


ஒரு ஹோட்டல் லௌஞ்சில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தபோது நான் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். அருகில் ஒரு முதியவர் என் சிகரெட் புகையால் அவதிப் படுவது கண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு என் சிகரெட்டை அணைத்து விட்டென். எனக்கு நன்றி கூறியவர் ஒரு கதை சொல்லலாமா என்று கேட்டார். காத்திருக்கும் பொழுதைக் கதை கேட்டுக் கழிக்கலாமே என்று கேட்கத் தயாரானேன்.

முடிந்தவரை அவர் சொன்ன மாதிரியே சொல்கிறேன்
 நான் இப்போதெல்லாம் யாரிடமும் சிகரெட் புகைக்காதீர்கள் என்று சொல்வதில்லை. ஒரு முறை ரயிலில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் அருகில் ஒரு வாலிபன் விடாமல் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான். என் கணக்குப் படி ஒரு மணி நேரத்தில் அவன் குறைந்தது மூன்று சிகரெட்டாவது புகைத்துக் கொண்டிருப்பான். பொறுக்க முடியாமல் நான் கேட்டே விட்டேன் ‘தம்பி ஒரு சிகரெட் என்ன விலை இருக்கும்.?அவன் அது சிகரெட்டின் ப்ராண்டைப் பொறுத்தது என்று கூறி அவன் புகைக்கும் சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாய் என்றான்.( இது 1960-களில் நடந்த சம்பவம் )ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் புகைப்பீர்கள் என்று கேட்டேன். மூன்று பாக்கெட் வரை இருக்கலாம் என்று கூறினான் நான் மனதில் கணக்குப் போட்டு ‘ ஒரு நாளைக்கு முப்பது ரூபாய், ஒரு மாதத்துக்கு ரூ.900-/ , ஒரு வருடத்துக்கு ரூ.10800-/ பத்து வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டுக்குச் செலவு செய்யாமல் இருந்தால் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளலாமே என்று கூறி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சிறிது நேரம் இருந்து விட்டு அவன் என்னிடம் ‘அங்கிள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு வீடு இருக்கிறது ?என்று கேட்டான். சொந்த வீடு ஏதும் இல்லையப்பா. பொழுதை ஒட்டுவதே பெரும்பாடாகி இருக்கிறது. இதில் வீடு எங்கே கட்டுவது என்றேன் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு சொன்னது எனக்குள் பதிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவன் சொன்னான் எனக்கு சொந்தமாக மூன்று வீடு இருக்கிறது 

கோவாவில் புனித சேவியருடைய உடல் வைக்கப் பட்டிருக்கும் சர்ச்சுக்கும்  புகழ் பெற்ற அம்மன் கோயிலுக்கும் போக முடியவில்லை. சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்  நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்
                                                    






30 comments:

  1. மிக மிக அருமை
    முத்தாய்பாக அவன் சொன்னது
    லேசாக புன்னகைக்க வைத்தது
    தங்கள் ஞாபக சக்தி வியக்கவைக்கிறது
    சுவாரஸ்யமாக பதிவு

    ReplyDelete
  2. அவன் சொன்னது என்னையும் யோசிக்க வைத்தது ஐயா

    ReplyDelete
  3. நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவத்தி வேறு மாதிரி ஒரு ஜோக் வடிவில் வாட்சாப்பிலும் மெஸேஜிலும் படித்திருக்கிறேன்.

    சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  4. //நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்.. //

    நேற்று இருக்கறச்சே நாளையும் இருக்கத் தான் செய்யும் சார்!

    நாளை இல்லாம போகறச்சே நேற்றும் இல்லாமப் போயிடும்!

    நாளைய நேற்று இன்று தானே, சார்?..

    ReplyDelete

  5. @ ரமணி
    வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete

  6. @ கில்லர் ஜி
    யாருக்கும் எப்போதும் இலவச ஆலோசனை தருவது தவறு என்பதை நான் புரிந்து கொண்டேன் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    நான் சொல்லி இருப்பது வாட்ஸப் மெசேஜ் கள் இல்லாத காலத்தைய ஒரு நிகழ்ச்சி. இந்த சிகரெட் கதையை நான் ஒருவரது பதிவில் பின்னூட்டமாகப் பகிர்ந்திருக்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  8. @ ஜீவி
    என் இந்தப் பதிவின் தலைப்பு உங்களை நேற்று இன்று நாளை பற்றிய கருத்துக்களை எழுத வைத்ததில் மகிழ்ச்சி சார் நான் என் பதிவின் தலைப்பில் நாளை என்ற ஒன்றை நினைக்காதவன் என்றுதான் சொல்லி இருக்கிறேன் நேற்று இன்று நாளை பற்றி நானும் அறிவேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  9. சிகரெட் கதை அருமை ஐயா...
    உண்மைதான்... இன்னைக்கு நிலமைக்கு தண்ணி அடிப்பவனெல்லாம் வசதியாத்தான் இருக்கான்... அது தப்புன்னு சொல்றவன் இன்னும் வறுமையில்தான் இருக்கான்... இருந்தாலும் அவனை விட இவன் மனசளவில் சந்தோஷமாக இருக்கிறான்.. அது போதுமல்லவா...

    ReplyDelete
  10. அந்தக் காலத்தில் கோவா இன்னும் அழகாக இருந்திருக்கும். சரி, எந்த வருஷத்துக் கதை இது?

    ReplyDelete
  11. ஒரு பிரபல ஆங்கில நாவலில் வருவது போல் Tomorrow is another day!நாங்க கோவா சென்றது எண்பதாம் வருடம். இப்படி எல்லாம் எதுவும் பார்க்கலை! :) நன்றாகவே ரசித்து ஊர் சுற்றிப் பார்த்தோம். செயின்ட் சேவியர் உடலையும் பார்த்தோம். கோவாவில் பிரபலமான சிவன் கோயிலுக்கும் போனோம். அந்தக் கோயிலுக்கருகே குடி இருந்த பிரசித்தி பெற்ற பாட்டியையும் பார்த்தோம். பேச முடியலை. பாஷை புரியாததால்! :)

    ReplyDelete
  12. ஹிஹி.. ஏண்டா வாயைக் கொடுத்தோம்னு ஆகிற கணங்கள்.

    ReplyDelete
  13. என்ன சொல்வது. சிகரெட்டே புகைக்காத மாமனார் புற்று நோயில் இறந்தார்.வயது 64.
    அது எனக்கு இன்னமும் புதிர்.

    ReplyDelete
  14. நினைவலைகள் என்றுமே இனிமையானவை
    நன்றி ஐயா

    ReplyDelete
  15. சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம் என்று தாங்கள் கூறியதை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன் ஐயா. இரண்டு வருடங்களாகக் கோயில் உலா என்ற நிலையில் தமிழ்நாட்டில் பல கோயில்களுக்குச் சென்றுவருகிறோம். உடன் வருபவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேலுள்ளோர். இருவர் 70 வயதைத் தாண்டியவர்கள். அவர்களுடன் செல்லும்போது அவர்கள் இதைத்தான் கூறுகிறார்கள். நமக்கு ஒரு நல்ல வாய்ப்பை உரிய நேரத்தில் இறைவன் அளித்துள்ளான் என அப்போது நினைத்துக்கொள்வேன். நன்றி.

    ReplyDelete


  16. நானும் 1976 ஆம் ஆண்டு கோவா சென்றிருந்தேன். அப்போது சைவ உணவிற்கு காமத் ரெஸ்டாரண்ட் மட்டும் தான் இருந்தது உடுப்பியில் இருந்து மகிழுந்துவில் கோவாவிற்கு சென்றதால் வழியிலேயே கொங்கணி மக்களின் கோவிலான மங்கேஷ்கர் போன்ற கோவில்களைப் பார்த்துவிட்டு மட்காவ்ங், பணாஜி. வாஸ்கோ துறைமுகம், டோனோ போலா , கால்ங்கூட் கடற்கரை, குழந்தை இயேசு பெருங்கோவில்(Basilica of Bom Jesus) போன்ற இடங்களைப் பார்த்தேன்.தங்களின் பதிவு என்னை 1978 ஆம் ஆண்டிற்கே அழைத்து சென்றுவிட்டது. பணாஜி செல்ல ஜுவாரி ஆற்றை காருடன் பெரிய படகில் கடந்தது ஒரு இனிய அனுபவம்.(இப்போது பாலம் கட்டிவிட்டதாக அறிகிறேன்) பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  17. @ பரிவை சே குமார்
    மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகாதோர் உடல் நலனில் அக்கறை கொண்டவர்களே வருகைக்கு நன்றி குமார்

    ReplyDelete

  18. @ ஏகாந்தன்
    நான் கோவா சென்றது பணி நிமித்தம் எல்லா இடங்களையும் பார்வையிட முடியவில்லை, சரியான ஆண்டு நினைவில்லை. ஆனால் அது 1970களின் முன்பகுதி. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    நான் கோவா சென்றது பணி நிமித்தம் நேரப் பற்றாக் குறையும் பணிச் சுமையும் பல இடங்களுக்குச் செல்ல விடாமல் தடுத்தது பதிவின் தலைப்பு பலரை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  20. @ அப்பாதுரை
    சரியாகச் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  21. @ வல்லி சிம்ஹன்
    புகை மது இரண்டு பழக்கமும் இருந்த என் மாமனார் 85 வயதுக்கும் மேல் நல்ல ஆரோக்கியத்துடந்தான் இருந்தார். இவைஎல்லாம் எக்செப்ஷன்ஸ். வருகைக்கு நன்றிமேம்

    ReplyDelete

  22. @ கரந்தை ஜெயக்குமார்
    இனிமையான நினைவுகள் பகிரச் செய்கின்றன வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  24. @ வே நடன சபாபதி
    நான் பணி நிமித்தம் கோவா சென்றிருந்தேன் ஆகையால் எல்லா சுற்றுலா தலங்களுக்கும் செல்ல இயலவில்லை. நான் சென்ற போது மண்டோவி ஆற்றில் படகுகளில் சரக்குகள் கார் உட்பட செல்வதைக் கவனித்தேன் வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  25. சொந்தமாக மூன்று வீடுகள் சரிதான்,
    சொந்தமாக நல்ல ஆரோக்கியமான
    உடல் நிலையை கட்டிக்காக்க முடியவில்லையே/

    ReplyDelete
  26. நீங்கள் கேட்ட கதை அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  27. @ vimalan perali
    /சொந்தமாக நல்ல ஆரோக்கியமான
    உடல் நிலையை கட்டிக்காக்க முடியவில்லையே/ அப்படி எங்காவது எழுதி இருக்கிறேனா என்ன.? வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  28. @ கோமதி அரசு
    கதையை ரசித்ததற்கு நன்றி மேம்

    ReplyDelete
  29. சூப்பர், கதை ரொம்ப நல்லா இருந்தது ஐயா!

    கோவாவின் இயற்கை எழில்ன்னு நீங்க ஆரம்பிச்சவுடனே நெனச்சேன், ஏதாவது வில்லங்கமா இருக்கும்...

    முக்கியமான மேட்டர் பத்தி சொல்லலியே - வாங்கின காது வளையங்களை கடைசியா என்ன செஞ்சீங்க?

    ReplyDelete
  30. @ அருள்மொழிவர்மன்
    /முக்கியமான மேட்டர் பத்தி சொல்லலியே - வாங்கின காது வளையங்களை கடைசியா என்ன செஞ்சீங்க?/நானெங்கே காது வளையங்கள் வாங்கினேன் கையில் இருந்த பணத்தைக் கொடுத்து விட்டு ஓடினேனே..! வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete