அப்பாவின் நினைவுகளில்
------------------------------------------
சென்ற ஆண்டு அப்பாவின் நினைவு நாளன்று(2-3 2015) ஒரு பதிவு எழுதி இருந்தேன்
(நெஞ்சம் மறப்பதில்லை)
அப்பாவுக்கு
முந்தைய பதிவுகளுக்கு
சொடுக்கிப் படிக்கலாம்
அவற்றில் அவர் மறைந்த நாளின் கனம் மிகுதியாக இருந்தது. அப்பாவின் நினைவுகள் மனதை கனக்க வைக்க மட்டுமா? இப்போதும் சில சில நினைவுகளைப் பகிர்கிறேன்
என் அப்பாஇப்புவியில்
வாழ்ந்த நாட்கள் 49 வருடங்களேஅவர் வாழ்ந்த நாட்களைவிட எங்களைப் பிரிந்து சென்ற நாட்களே அதிகம் ( 59 வருடங்கள் ஆகிறது) அதற்குள் ஒரு முறை மணந்து ஆறு குழந்தைகளுக்குத்
தகப்பனாகி மனைவியை இழந்து மறுமணம் செய்து அதிலும் ஏழு குழந்தைகளைப் பெற்று இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத
சாதனைகளாகத் தோன்றுகிறது அப்பா இறக்கும் போது எனக்கு 18 வயது. எனக்கு மூத்தவர்கள்
மூன்று பேர் அதில் ஒரு சகோதரியும் அடக்கம்
எனக்குக் கீழே உயிருடன் ஐந்து பேர். அனைவரும் ஆண்மக்களே அவ்வப்போது இது குறித்து எழுதி வந்திருக்கிறேன்
அப்பாவைப் பற்றி எனக்குத் தெரிந்த வற்றை மட்டுமே எழுத முடியும் வாழ்க்கையில் எந்த இன்பமும் ( பிள்ளைகள்
பெறுவது தவிர) அனுபவிக்காதவர். வாழ்வின்
படிக்கட்டுகளில் முன்னேறி வந்தவர்
எங்களுக்கு துரை வீட்டுப் பிள்ளைகள் என்னும் பெயர் வாங்கித் தந்தவர் ஏனோ செய்யாத
குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு பதவி இறக்கம் ஆனவர் ஆனால் மிகுந்த தெய்வ பக்தி
மிக்கவர் எந்த வம்புக்கும்போகாதவர் நிச்சயம்
தவறு செய்ய இயலாதவர் என்னும்
எண்ணமே என்னுள் இருக்கிறது நண்பனாகவே
என்னை நடத்துவார் அவர் நினைவில் சில எண்ணப்பகிர்வுகள்
அப்பாஒரு ஹீரோ
அப்போது எனக்கு ஏழோ
எட்டோ வயதிருக்கும் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் ஒரு முருங்கை மரம்
இருந்தது. ஒரு நாள் அந்த வீட்டு சொந்தக்காரரின் உறவு என்று சொல்லிக் கொண்டு ஒருவர்
வந்து முருங்கைக்காய்களைப் பறிக்க வந்தார் அது முறையல்ல என்று அப்பா
தடுத்தார் அவர் அதையும் மீறி தொடர்ந்து
காய்களைப் பறிக்கவே அப்பாவுக்கும் அவருக்கும்
கைகலப்பு ஏற்பட்டு அப்பா அவரைப் புரட்டி எடுக்க அவர் துண்டைக் காணோம் துணியைக்
காணோம் என்று ஓடிய போது அப்பா ஒரு
ஹீரோவாகத் தெரிந்தார்
அப்பா ஒரு நண்பன் . நாங்கள்
நீலகிரி வெல்லிங்டனில் குடியிருந்தோம் வாரம் ஒரு முறை அங்கு தம்போலா எனப்படும்
ஆட்டம் நடக்கும் ஒரு ஆட்டம் ஆட நாலணா
கொடுத்து டிக்கட் வாங்குவார் அது போல் நான்கு ஆட்டங்கள். ஒரு ரூபாய்ச் செலவு .
எனக்கு அதில் விருப்பமிருக்கவில்லை. வேண்டாம் வெறும் லக் சார்ந்த விளையாட்டு
என்பேன் அவரும் அந்த விளையாட்டைத் துறந்து
R M D C என்னும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுக்கத்
துவங்கினார் ஏதாவது அதிர்ஷ்டம் வந்து நிறைய வென்று தனது கஷ்டங்கள் விடியாதா என்னும் ஆதங்கமே
காரணம் குறுக்கெழுத்துப் போட்டிகளில்
கேட்கப்படும் புதிர்களுக்கு என்னிடம்
ஆலோசனைக் கேட்பார்
அப்பா காரியவாதி/ கெட்டிக்காரர்
அப்பா காரியவாதி/ கெட்டிக்காரர்
அவரது முதல் மனைவி (
என் தாயார் ) இறந்தபோது உறவு விடாதிருக்க என் அம்மாவின் தங்கையை மண முடிக்க என் தாத்தா பாட்டி முயற்சி
செய்தனர். அப்பாவுக்கு விருப்பமிருக்கவில்லை நயமாக மறுத்து தன் தங்கையை தன் மச்சினனுக்கே மணமுடித்தார். உறவு
விட்டுப்போக சாத்தியமிருக்கவில்லை. ஆனால் அதற்கும் மேல் சென்று காதலித்து மறுமணம்
செய்தது உறவில் விர்சல் ஏற்படுத்தியது
அப்பா ஒரு ரசிகர்
அப்பாவுக்கு என் எஸ்
கிருஷ்ணனின் நகைச்சுவை மிகவும் பிடிக்கும்
அந்தக் காலத்தில் வந்த நல்லதம்பி திரைப்படத்தில் வரும் கிந்தனார் காலட்
சேபம் விரும்பிக் கேட்பார் என் சின்ன அண்ணாவுக்கு அது மனப்பாடம் அவனிடம் சொல்லக் கேட்டு ரசிப்பார்
கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே...
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே...
என்னும் வரிகள்
நினைவுக்கு வருகிறது
அப்பா ஒரு தேசியவாதி
காந்திஜி இறந்த அன்று இரவு
ஊண் ஒழித்து வீட்டிலேயே ஒரு இழவு விழுந்தமாதிரி அழுதிருக்கிறார்
அப்பா ஒரு அப்பாவி
அப்பா ஒரு அப்பாவி
அப்பாவின் முதல்
திருமணம் நிகழ்ந்தபோது அவருக்கு காலணி கூடப்போடத்
(ஷூ)தெரிந்திருக்கவில்லை என்று என் மாமாக்கள் தமாஷ் செய்வார்கள் ( கால் மாற்றி
போட்டு விடுவாராம் ) அதை அவர்கள் கூறுவது கேட்க எனக்குக் கோபம் வரும்
அப்பாவின் முன் எச்சரிக்கை
அப்பாவின் முன் எச்சரிக்கை
எம் ஈ எஸ் சில் பணி
புரிந்து வந்த அவர் வருடாவருடம் மெடிகல் செக் அப் செய்ய வேண்டும் மிலிடரி ஆஸ்பிடலில் சிறு நீர் டெஸ்ட் செய்ய என் சிறு நீரை
எடுத்துக் கொடுப்பார் அவருக்கு டயாபெடீஸ்
இருந்ததை மறைக்கவே என்று எனக்கு அப்போது தெரியாது நோய் இருப்பது
தெரிந்தால் ஏதாவது பிரச்சனை வரலாம் என்று பயந்திருக்கிறார்
இப்போதும் நினைவுகள் மனம் கனக்க வைக்கிறது
/
நெகிழ்தேன் ஐயா...
பதிலளிநீக்குநெகிழ வைக்கும் பகிர்வு. தங்கள் அப்பாவுக்கு என் வணக்கங்கள்.
பதிலளிநீக்குமிலிடரி இஞ்சினீரிங் செர்விஸ்! அப்பா வேலையில் இருக்கையிலேயே இறந்திருப்பதால் உங்களுக்கோ சகோதர சகோதரிகளுக்கோ வேலை கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு என்பது அப்போது தெரிந்திருக்கவில்லையோ? அப்பாவின் நினைவுகளைப் போற்றி வருகிறீர்கள். நெகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குகனமான நினைவுகள். அப்பா பற்றி என் நினைவுகள் வித்தியாசமானவை. அவர் ஒரு டெரர்!
பதிலளிநீக்குஅந்தகாலத்தில் இம்மாதிரி அப்பாக்களைப் பார்க்க முடிந்தது.பெண்டாட்டி இறந்தால் புது மாப்பிள்ளை. குழந்தைகள். அன்பு வற்றாத நேசம் எல்லாமிருந்தது. நானும் இம்மாதிரி கேட்டும், சொல்லியும்,நேரிலும் பார்த்திருக்கிறேன். அன்பானவர்களாதலால் நேசம் இன்னமும் போற்றி வளர்க்கப் படுகிறது. நெகிழ்ச்சியாக இருந்தது. அன்புடன்
பதிலளிநீக்குநெகிழச் செய்யும் நினைவுகள்
பதிலளிநீக்குநெஞ்சம் மறப்பதில்லை எற்கனவே படித்து இருக்கிறேன், அப்பாவுக்கு படித்து கருத்துரை இட்டு வந்தேன் ஐயா
பதிலளிநீக்குதங்களது தந்தையுடன் உறவாடிய பேச்சொலிகள் நினைவு கூர்ந்தது மனம் நெகிழ வைத்த செய்திகள் ஐயா.
நம் அனைவருக்குமே அப்பா ஹீரோ தான். உங்கள் அப்பாவுக்கும் என் அஞ்சலிகள்.
பதிலளிநீக்குஇனிமையான நினைவுகள்.
பதிலளிநீக்குஅப்பாவைப்பற்றிய சிந்தனைகள் மனதில் பொங்கித்தான் வரும் - குறிப்பாக அவரை நிரந்தரமாக இழந்தபின்னே. (அப்பாவைப் பற்றி ஒரு மகன் நினைவுகூர்வதற்கும், ஒரு மகள் நினைவுகூர்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஏனெனில் பெண்கள் தங்கள் தந்தைமார்களைக் கொண்டாடும் விதமே அலாதி. ஒரு மகளின் பதிவில், சின்னச்சின்ன சந்தோஷங்கள், சோகங்கள், வாழ்வின் நுணுக்கமான தருணங்கள் நிறைந்து காணப்படும்.) நீங்கள் குறைவாகவே எழுதியிருந்தும், பதிவில் அப்பாவைப்பற்றிய உங்கள் மனதின் உருக்கம் புரிகிறது. அவருடைய கோட்டோவியம் தெரிகிறது. இன்னும் சிலவற்றை நினைவுபடுத்தி எழுதியிருக்கலாம்.
பதிலளிநீக்குஉங்கள் அப்பா தெய்வபக்தி மிக்கவர் என்று எழுதியிருக்கிறீர்கள். அவருடைய பிள்ளையான உங்களைப்பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன். இன்னும் சிலவரிகள் எழுதி, நீக்கிவிட்டேன். பிறகு வைத்துக்கொள்ளலாம் அதை எனத் தோன்றியதால்!
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி டிடி
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
பதிவில் பழைய பதிவுகளின் சுட்டிகள் கொடுத்திருக்கிறேன் அவற்றைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன் அப்பா இறக்கும் போது நான் ஏற்கனவே பயிற்சியில் சேர்ந்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத் திருப்பதும் அவருக்குத் தெரியும் மிலிடரி எஞ்சினீரிங் செர்வீசில் சேர வேண்டிய அவசியமிருக்கவில்லை. முந்தைய பதிவுகளில் அவரது மறைவு பற்றி விளக்கமாக எழுதி இருந்தேன் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
எங்கள் அப்பா ஒரு சாது. நண்பர் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ காமாட்சி
முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
அது என்னவோ தெரியவில்லை ஜி. மார்ச் மாதம் 2-ம் நாள் என்றால் பல பழைய நினைவுகளில் மூழ்கி விடுகிறேன் அப்பாவின் நினைவுகள் காலம் கடந்தவை வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ வல்லி சிம்ஹன்
அப்பா ஹீரோ மட்டுமல்ல ஃப்ரெண்ட் ஃபிலாசஃபர் கைட் சொல்லிக் கொண்டே போகலாம் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ ஏகாந்தன்
பதிவில் சுட்டிகள் கொடுத்திருக்கிறேன் அப்பா பற்றி அவற்றிலும் நிறைய செய்திகள் உண்டு அப்பா தெய்வ பக்தி உள்ளவர் என்று கூறி இருப்பது அவர் குணம் பற்றியது என்னைப்பற்றி அது நினைக்க வைப்பது உங்கள் குணம் பற்றியது நான் ஒரு திறந்த புத்தகமாக உண்மைக்குப் பங்கம் இல்லாமல் பதிவெழுதி வருகிறேன் என்னைப் பற்றி யாரும் எது வேண்டுமானாலும் அனுமானித்துக் கொள்ளலாம் வருகைக்கு நன்றி சார்
அப்பாக்கள் நம் இளவயது ஹீரோக்கள். அவர் பற்றிய நினைவுகள் அருமை.
பதிலளிநீக்குஅப்பா என்றாலே ஹீரோ தான் ...
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
பதிலளிநீக்குஅப்பாவைப் பற்றிய நினைவுகளை கொடுத்திருக்கும் சுட்டிகளிலும் உண்டு. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ அனுராதா ப்ரேம்
எனக்கு அப்பா ஹீரோ மாத்திரம் அல்ல. ஃப்ரெண்ட் ஃபிலாசபர் அண்ட் கைட். வருகைக்கு நன்றி மேம்
நெகிழ வைத்துவிட்டீர்கள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
சுட்டியில் கொடுத்திருக்கும் விஷயங்கள் இன்னும் நெகிழ வைப்பவை வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களின் தந்தையார் பற்றிய நினைவுகளை நெகிழ்ச்சியாக நினைவுகூர்ந்திருக்கிறீர்கள். மனதை தொட்டது.
@ வே நடன சபாபதி
பதிலளிநீக்குஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் மனம் கனக்கும் இது மூன்றாவது பதிவு. மற்றதைப் படித்தீர்களா சுட்டி கொடுத்திருந்தேனே வருகைக்கு நன்றி ஐயா
மனம் கனக்க வைக்கும் நிணைவுகள்
பதிலளிநீக்குமனம் ஏனோ வலிக்கிறது!!
பதிலளிநீக்குநினைவுகளின் கனம் சுகமான வலிகள்...தந்தையின் நினைவுகள் தங்களின் எண்ணத்திலும் எழுத்திலும் உருப்பெற்றுள்ளன..
@ அருள்மொழிவர்மன்
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றி ஐயா. பதிவில் இருக்கும் சுட்டிகளுக்கும் சென்றீர்களா ?