Monday, February 29, 2016

ஒரு உரத்த சிந்தனை சிலதேடல்கள்


                           ஒரு உரத்த சிந்தனை-- சில தேடல்கள்
                          ------------------------------------------------------------
நான் இரண்டு மூன்று நாட்களாக மும்முரமாய் இருந்ததில் இதை எழுதத் தாமதயிற்று. பொருத்தருள வேண்டுகிறேன்

 சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

மேலே குறிப்பிட்டிருப்பது என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டம் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்  பொதுவாக “நான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன் “ என்று சொல்வதெல்லாம் வெறும்  உதட்டளவில்தான் என்றானாலும் ஒரு நாள் பிறந்தவர் இறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும்  இறப்பை யாரும் விரும்பி வரவேற்பதில்லை. கைகால் விளங்காமல் ஏதும் செய்ய இயலாதவர் கூட இன்னும் வாழத்தான் விரும்புகிறார்கள் அடிப்படையில் இறப்பைப் பற்றிய பயமே இதன் காரணம் என்று தோன்றுகிறது
 ஏன் நான் கூட என் பதிவு வீழ்வேனென்று நினைதாயோவில் மயங்கி விழுந்து எழுந்ததும் இறப்பையே வெற்றி கொண்டேன் என்று நினைத்துவிட்டேன்  போலும் அதனால்தான் எழுந்தவுடன்  I JUST KICKED HIM என்று கூறினேனோ  அதே பதிவில் /                                                                      நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
 கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.

மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி  இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
மரணிப்பவனால் அவனுக்கு எந்த பாதகமும் இல்லை.
நோய் நொடியால் கஷ்டப்படுபவர்கள் அந்த வேதனை தாங்காமல் இறப்பது மேல் என்று நினைக்கலாம் ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது மனோதிடம் உள்ள தைரியசாலி ஒரு முறைதான் இறக்கிறான் ஆனால் கோழையோஇறந்து  இறந்து வாழ்கிறான்
வயதாகும் போது மரணம் பற்றிய சிந்தனைகள் அதிகம் வரலாம் அந்த பயத்திலிருந்து எழ  கடவுள் என்றும் நம்பிக்கை என்றும் ஏதோ ஒன்றில் மனதை லயிக்க விடலாம் நம் கலாச்சாரத்தில்தான் இந்த மாதிரி நம்பிக்கைகளுக்குக்  குறைவில்லையே சொர்க்கம் என்றும் நரகமென்றும்  ஜீவாத்மா பரமாத்மா  என்று என்னவெல்லாமோ கூறிக் குழப்பி வைத்திருக்கிறார்களே. ஒரு வகையில் இந்த பயமே நாம் கெடுதல் நினைக்காமலும்செய்யாமலும் இருக்கவும் உதவுகிறதோ என்னவோ  வாழ்க்கையில் வால்யூஸ் என்று நினைப்பவர்கள் பொய் சொல்லக் கூடாது திருடக் கூடாது போன்ற வற்றைக் கடை பிடிக்க இந்த நம்பிக்கையும் பயமும் தேவை என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் நல்ல ஒழுக்கங்களை பேணி வளர்க்க இவையெல்லாம் தேவை என்று நினைக்க வில்லை. நல்ல ஒழுக்கங்கள் நம்மைச் செம்மைப் படுத்தும் சீராக சிந்திக்க வைக்கும்  அதுவே மனோதிடமும்  தைரியமும் கொடுக்கும்  இறப்பு பற்றிய எண்ணத்தையும் ஒதுக்கிவிடும் என்று நினைக்கிறேன்
எனக்கு மட்டும் இறப்பு பற்றிய எண்ணங்கள் தோன்றுவதில்லையா என்ன.? ஆனால் அது குறித்து நிறையவே சிந்திக்கிறேன்  அதுவே என்னை  இந்த ஜீவாத்மா பரமாத்மா பற்றி வித்தியாசமாக நினைக்க வைத்தது
ஒவ்வொரு மூச்சுக்கும் நடுவே ஒரு இறப்பு இருக்கிறதுஅந்த இடைப்பட்ட நேரம்போதும் கனவு  காண அதில் என்னவெல்லாமோ  நினைக்க முடியும்
கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன்.
 என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? 
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது 
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர் 
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
 ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?
( சொல்ல வந்தது சொல்லி முடியவில்லை ஆகவே இது தொடரும் )


   .                                                                                                                                               
               
  
   42 comments:

 1. தங்களின் சிந்தனையில் உதித்த முத்துகள் அருமை ஐயா மரணத்தில் கூட நல்ல மரணங்களும் உண்டுதானே ஐயா.
  சிலர் சட்டென ஒரு நொடியில் அழகாக மரணிக்கின்றார்கள் சிலர் கஷ்டப்பட்டு பிறருக்கும் கஷ்டத்தை கொடுத்து இறக்கின்றார்கள்
  சிலர் அழகிய முறையில் மரணிக்கின்ரார்கள்.
  சிலர் உருத்தெரியாமல் சிதறுகின்றார்கள்.
  மரணத்தில்கூட அதிஷ்டம் வேண்டும் ஐயா தங்களது பதிவு எனக்கும் கூட சில விடயங்களைக் கொடுத்து விட்டது விரைவில் சந்திப்போம் பதிவின் வழியே...

  ReplyDelete
 2. மிக நல்ல சிந்தனைப் பதிவு. எல்லோரையும் ஆக்கிரமிக்கும் சிந்தனை பயம். நல்ல மரணம் நல்லவர்களுக்குக் கிடைக்கிறது.
  அதை அவர்கள் இறந்த பிறகு தெரிந்து கொள்கிறோம்.
  நீங்கள் சொன்னது போல எழுத ஆரம்பித்திருக்கிறேன். கதையாக.

  ReplyDelete
 3. பிறப்பு என்ற ஒன்று இருக்க, நிச்சயம் இறப்பு உண்டு என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை.

  உங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. Sir ,Great writing.This type of thoughts comes from a matured mind.For maturity age is not a cosideration.Human birth is a cotinuous process till you reach the supreme conciousness(merging with god).so you are already far ahead of average person and hence in your next birth you may be identified at a very young age as a divine soul.
  Please contiue.
  Please also refer "ENIPPADIYIL MANDHARHAL" a tamil book by Sivan Swamihal younger brother of Kanchi saint Chandrasekhara saraswathi swamihal.

  ReplyDelete
 5. ///பொதுவாக “நான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன் “ என்று சொல்வதெல்லாம் வெறும் உதட்டளவில்தான் என்றானாலும் ஒரு நாள் பிறந்தவர் இறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இறப்பை யாரும் விரும்பி வரவேற்பதில்லை.///

  சிறிய திருத்தம் யாரும் என்பதைவிட பலர் விரும்பி வரவேற்பதில்லை என்பதுதான் உண்மை..இதை சொல்லக் காரணம் நான் வரவேற்கிறேன்...சாக அஞ்சுவதில்லை ஆனால் நான் சாகமல் நான் விரும்பும் நேசிக்கும் மற்றவர்கள் இறப்பை மட்டுந்தான் நான் வரவேற்கவில்லை

  ReplyDelete
 6. மிகவும் அருமையான பதிவு. புதிர் நிறைந்த முடிவை மிகவும் சுவையாக, சுவராச்யமாக எழுதியுள்ளீர்கள். நன்றி ஐயா.

  ReplyDelete
 7. இந் subject-ல் எழுத எல்லோராலும் முடுயாது !தாங்கள் எழுத முற்பட்டதற்கு நன்றி ..மேலும் இந்த subject -ல் என்ன எழுத ப்பட்டாலும் , அது speculation ஆக வே
  கருதப்ப டும் ..இருந்தாலும் தங்களுடைய சிந்தனை போக்கையும்
  ( நம்பிக்கைகளையும் ?) அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் ..
  மாலி

  ReplyDelete
 8. மகாத்மா காந்தி அவர்களை மிகவும் கவர்ந்த தமிழ் வாக்கியம்
  பிறப்புண்டேல் இறப்புண்டு என்பதாகும்
  அனைவருக்கும் இறப்பு நிச்சயம்என்பதை அனைவருமே அறிவோம்,
  ஆனாலும் வாழத்தான் ஆசைப்படுகிறோம்.
  எனக்கு என்னசந்தேகம் என்றால்
  சொர்க்கம் இருக்கிறது, அங்கு சென்றால் இன்னும் நன்றாக
  மகிழ்வாக வாழலாம் என்று பேசுகிறவர்கள் கூட இறப்பதற்கு
  அஞ்சுகிறார்களே அது ஏன்?என்பதுதான்
  மனம் விசித்திரமானது ஐயா
  நன்றி

  ReplyDelete
 9. அருமையான எண்ண பகிர்வுகள் ...

  ReplyDelete

 10. @ கில்லர்ஜி
  வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி. ஜி. மரணம் என்பது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. அதில் நல்ல மரணம் துர்மரணம் என்றெல்லாவும் நினைத்துப்பார்க்க இயாலாத நேரத்தில் நிகழ்பவை நிகழ்ந்தால் அது விடுதலையே எப்படி இறந்தாலும் அது நொடி நிகழ்வுதான் வலி தெரியாதது/ அல்லது வலி இருந்தால் பகிர்ந்து கொள்ள முடியாதது

  ReplyDelete

 11. @ வல்லி சிம்ஹன்
  நல்ல மரணம் கெட்ட மரணம் என்பது எல்லாமே நாம் நினைப்பதுதான் பயம் இல்லாமல் மரணம் நிகழ்ந்தால் ஒரு வேளை நல்ல மரணம் என்று சொல்லலாமோநீங்கள் எழுதும் கதையை எனக்கும் தெரிவியுங்கள் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 12. @ வெங்கட் நாகராஜ்
  ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் மரணம் பற்றிய நினைப்பு வரும் அதுவரை நினைப்பதெல்லாம் நல்லவையாக இருக்கட்டும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 13. @ கல்னல் கணேசன்
  ஐயா எனக்கு இந்த மறுபிறவி முற்பிறப்பு போன்ற வற்றில் நம்பிக்கை இல்லை. அதே போல் இந்த ஆத்மா சமாச்சாரங்கள் எல்லாமே நம்பமுடியாதவை வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார் தங்களை மறுத்துப் பேசுவதற்கு மன்னிக்கவும்

  ReplyDelete
 14. இதில் கருத்துப் பதியும் அளவுக்குப் புரிதல் எனக்கு இல்லை. தொடரக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

 15. @ அவர்கள் உண்மௌகள்
  /.சாக அஞ்சுவதில்லை ஆனால் நான் சாகமல் நான் விரும்பும் நேசிக்கும் மற்றவர்கள் இறப்பை மட்டுந்தான் நான் வரவேற்கவில்லை/ சாக அஞ்சாதவர்கள் ஒரு முறைதான் மரணிக்கிறார்கள் அதை இயக்கும் சக்தி யாரிடமும் இல்லை.யாருடைய மரணமும் தவிர்க்க முடியாதது வரவேற்றாலும் இல்லாவிட்டாலும் . வருகைக்கு நன்றி

  ReplyDelete

 16. @ சம்பத் கல்யாண்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் ( முதல் வரவு?)

  ReplyDelete

 17. @ நாகேந்திர பாரதி
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 18. @ திண்டுக்கல் தனபாலன்
  ஆர் யூ கன்ஃப்யூஸ்ட்? வருகைக்கு நன்றி டிடி

  ReplyDelete

 19. @ வி மாலி
  உண்மைதான் சார் நிச்சயமாகத் தெரியாத எல்லாவற்றிலும் கருத்துக்கள் ஸ்பெகுலேஷன் ஆகத்தான் இருக்கும் என்னை எழுதத் தூண்டியதற்கு நன்றி சார் தொடர்ந்து வாருங்கள்

  ReplyDelete

 20. @ கரந்தை ஜெயக்குமார்
  ஏன் என்றால் சொர்க்கம் என்பதே கற்பனைதானே ஐயா. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 21. @ அனுராதா ப்ரேம்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்.

  ReplyDelete

 22. @ கீதா சாம்பசிவம்
  தொடர்ந்து வாருங்கள் நன்றி மேம்

  ReplyDelete
 23. நாம் உலகுக்கு வரும்போது மண்டையோட்டில் எக்ஸ்பைரி தேதியை ஒட்டித்தான் அனுப்பப் படுகிறோம்.மரணத்தையும்,மரணத்துக்குப்பின் என்னவாகிறோம் என்பது பற்றியுமான பயமும் சிந்தனைகளும் ஒருவகையில் மனிதர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறதோ. உங்கள் சிந்தனைகளை இன்னமும் தொடர இருப்பதால், வேறேதும் எழுதி உங்கள் எழுத்தின் போக்கை மாற்றாமல்... காத்திருக்கிறேன்.. மிகத் தெளிவான வார்த்தைகள் உங்களுக்கு சொன்னபடி கேட்கின்றன GMB சார்!

  ReplyDelete
 24. கண்டவர் விண்டிலை
  விண்டவர் கண்டிலை
  மரணத்தைக் கண்டவர் மரணம் என்ன என்று சொல்லவில்லை. மரணம் பற்றி சொல்பவர்கள் மரணத்தைக் காணாதவர்கள்.
  மரணம் ஒரு புதிர்தான்.

  ஜெயகுமார்

  ReplyDelete
 25. கண்டவர் விண்டிலை
  விண்டவர் கண்டிலை
  மரணத்தைக் கண்டவர் மரணம் என்ன என்று சொல்லவில்லை. மரணம் பற்றி சொல்பவர்கள் மரணத்தைக் காணாதவர்கள்.
  மரணம் ஒரு புதிர்தான்.

  ஜெயகுமார்

  ReplyDelete
 26. திருவள்ளுவர் கூட நிலையாமையைப் பற்றி சொல்லும்போது உறங்குவதுபோலும் சாக்காடு’ என்கிறார். எனவே ஒவ்வொரு நாளும் நாம் இறந்துதான் பிறக்கிறோம். எனவே கவலையில்லாமல் வாழ்வோம். காத்திருக்கிறேன் நீங்கள் சொல்ல வந்ததை அறிய.

  ReplyDelete

 27. @ மோகன் ஜி
  நான் எழுதுவது அவ்வப்போது தோன்றும் எண்ணங்களைத்தான் எழுத்து எண்ணப்படி ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறதுவேறெதையாவது எழுதி என் எழுத்தின் போக்கை மாற்றுவேனோ தெர்ரியவில்லை. இருந்தாலும் அவை என் உரத்த சிந்தனைகளே பாராட்டுக்கு நன்றி ஜி

  ReplyDelete

 28. @ ஜேகே 22384
  மரணம் ஒரு புதிர்தான் அது பற்றித் தோன்றுவதைப் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 29. @ வே நடனசபாபதி
  வருகைக்கும் கருத்டுப் பதிவுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 30. //நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?//

  சாதாரணமாக உலகியலில் என்ன வழக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதிலேயே உழன்று கொண்டிருந்தால் இல்லை அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அதைத் தாண்டி வெளியே வர முடியாது. குறைந்தபட்சம் எதனால் எதன் பொருட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதையாவது ஆராய வேண்டும். அதற்கு முயற்சி செய்தால் தன்னாலே அதைத் தாண்டிய உன்னதமான விஷயங்களுக்கு நீங்கள் தள்ளிக் கொண்டு போவதை உணர்வீர்கள்..

  ReplyDelete

 31. @ ஜீவி
  / குறைந்தபட்சம் எதனால் எதன் பொருட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதையாவது ஆராய வேண்டும். அதற்கு முயற்சி செய்தால் தன்னாலே அதைத் தாண்டிய உன்னதமான விஷயங்களுக்கு நீங்கள் தள்ளிக் கொண்டு போவதை உணர்வீர்கள்./ அதிலேயே உழன்று கொண்டிருக்காமல் இருக்கச் செய்யும் முயற்சியே என் உரத்த சிந்தனைகளாக இருக்கின்றன. ஒரு விஷயம் பற்றி அணுகும் முறையில் வெவ்வேறு பார்வைகள் இதில் எது சரி எது தவறு என்று நான் சொல்வதில்லை.உன்னதம் என்று சிலர் நினைப்பது சிலருக்கு அவ்வாறு தெரியாமலும் இருக்கலாம் என் எண்ணங்களில் எழுந்தவையே பதிவாக்குகிறேன் அணுகு முறைகளில் வித்தியாசம் இருக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 32. இறப்பு இயற்கை.

  ஆனால் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் கை கால் நல்லா இருக்கும்போதே போய்ச்சேரணும் என்ற ஒரே பிரார்த்தனைதான் எனக்கு.

  ReplyDelete
 33. இருட்டைக் கையில் பிடிக்க முயல்வது
  சுவாரஸ்யமான விஷயம் தானே...
  அதுவும் அறுபதைக் கடந்தவர்களுக்கு
  அந்த வகையில் நானும் சுவாரஸ்யமாகத் தொடர்கிறேன்..

  ReplyDelete

 34. @ துளசி கோபால் எதிர்பார்ப்புகள் மட்டும் அநேகமாக அனைவருக்கும் ஒன்றுதான் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 35. @ ரமணி
  அறுபதைக் கடந்தவர்கள் இருட்டைக் கையில் பிடிக்க முயல்கிறார்களாசுவாரசியம்தான் பலரும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கவே செய்கிறார்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 36. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்.
  இருக்கிறோம் , இல்லாது இருந்தோம் என்பதை உணர முடிகிறது. இந்த உணர்வே நாம் என்று ரமணர் சொல்லியுள்ளார். எந்த சட பொருளும் அதுவல்ல.. பிராண வாயு உட்பட.

  ReplyDelete

 37. @ ssk tpj
  படித்தது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லையோ எனும் ஐயம் எழுகிறது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமே உரத்த சிந்தனைகள் எழுந்தது இருக்கிறோம் சரி. இல்லாது “இருந்தோம் “ புரியவில்லை. இவர் சொன்னார் அவர் சொன்னார் என்பதை விட பலரும் சொன்னதிலிருந்து நாம் என்ன நினைக்கிறோம் என்பதே முக்கியம் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 38. அய்யா , தூங்கி எழுந்ததும் நான் நன்றாக தூங்கினேன் அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லை என்று சொல்வோம். தூங்கும் போது நாம் என்ற உணர்வு இல்லை. ஆனால் எழுந்ததும் அப்போது நாம் அங்கு இல்லாது இருந்தோம் என்று சொல்கிறோம். ஆக நம் இருந்தோம் அல்லது இல்லாது இருந்தோம் என்று சொல்ல ஒரு உணர்வு நமக்கு உண்டு. இந்த உணர்வே நாம் என்று ரமணர் சொல்லி உள்ளதாக நான் விளங்கி கொண்டேன். என் அறிவில் குறை இருக்கலாம்.

  ReplyDelete

 39. @எஸெஸ்கே டிபிஜெ
  என் மறு மொழி உங்களைப் பாதித்துள்ளது என்று தோன்றுகிறது. நாம் பல இடங்களிலிருந்தும் கற்க வேண்டும் இருந்தால்தான் நம்மால் ஒரு கருத்துக்கு வர முடியும். நான் அதைத்தான் சொல்ல வந்தேன் நாம் விழித்திருக்கும் போது உணரும் உடம்பை ஸ்தூல சரீரம் என்கிறார்கள்/ கனவிலும் நமக்கு ஒரு உடம்பு இருக்கிறது ஆனால் அதன் பிரக்ஞை ஏதும் இல்லாது இருக்கிறது. அதையே சூக்கும சரீரம் என்கிறார்கள் இந்த சூக்கும சரீரத்தையும் தபஸ் தியானம் மூலம் உணர முடியும் என்கிறார்கள் இது கேள்விஞானமே அறிந்தவர்கள் என்று நாம் நம்பும் சிலரது கூற்றும் நிரூபிக்கப்படவில்லை. நம்பிக்கையே அடிப்படையாக இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 40. அருமைங்க ஐயா :-) நல்லதொரு சிந்தனை

  ReplyDelete