தொடர் பயணம் -நாகர் கோவில் -1
---------------------------------------------------ப்
24-ம் தேதி அதிகாலையில் சுமார் மூன்று மணி அளவில் நாகர் கோவில் போய்ச் சேர்ந்தோம் ஊர் புதியது என்பதாலும் ஹோட்டலில் அறைகள் காலை ஏழு மணியிலிருந்தே முன் பதிவு செய்திருந்ததாலும் ரயில் ப்லாட்ஃபாரத்திலேயே காலை ஆறரை மணிவரை இருக்க முடிவு செய்யப்பட்டது நாங்கள் போகுமுன்பே ஹோட்டலில் இருந்து நாங்கள் வருவதை உறுதிசெய்யச் சொல்லி தொலைபேசியில் செய்தி வந்தது. நாகர் கோவிலில் வடசேரி என்று நினைக்கிறேன் ஹோட்டல் உடுப்பி இண்டர்னேஷனலில் அறைகள் முன் பதிவாகி இருந்தன. சௌகரியங்கள் பொருந்திய ஹோட்டல் முதல் வேலையாகக் காலைக்கடன்களைக் கழித்துக் குளித்து காலை உணவு அருந்தி நேரே சுசீந்திரம் சென்று பின் அங்கிருந்து கன்னியா குமரி செல்லத் திட்டமிட்டோம்
சுசீந்திரத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கும்
தெய்வம். சிவன் விஷ்ணு பிரம்மா
மூவரும் சேர்ந்திருக்கும் தாணுமாலயன்
என்று அழைக்கப்படுகிறார் கோவில்
உள்ளே மேல் சட்டை அணியக் கூடாது. ஒரு பெரிய விஸ்வரூப ஆஞ்சநேயர் இருக்கிறார் .நவக்
கிரகங்கள் மேலே விதானத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறதுஅங்கிருக்கும் துவார பாலகர்
சிலையில் ஒரு காதில் ஒரு குச்சியைச் செலுத்தி இன்னொரு காதில் வருமாறு அதிசய
சிற்பவேலை இருக்கிறது சில தூண்களில் தட்டினால் இசை ஓசை வருமாறு
அமைத்திருக்கப்பட்டிருக்கிறது
தாணுமாலயன் கோவில் முன்பு |
சுசீந்திரம் கோவில் கோபுரம் |
வெயில் அதிகமாகும் முன்பே கன்னியாகுமரி செல்ல வேண்டி
சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டோம் விவேகாநந்தர் பாறை மற்றும் ஐயன் திருவள்ளுவர் சிலையையும் காண நினைத்தோம் கடல் கொந்தளிப்பால் திருவள்ளுவர் சிலை
இருக்கும் இடத்துக்கு போட் செல்லாது என்றனர் விவேகாநந்தர் பாறைக்குச் சென்று வர
ஒருவருக்கு ரூபாய் 34/- போட்டுக்காக வசூலிக்கிறார்கள் இருக்கும் வரிசையையும்
கூட்டத்தையும் பார்த்தால் காத்திருக்கவே
இரண்டு மணி ஆகும் போலிருந்தது. சிறப்பு வரிசையில் சென்றால் ஆளுக்கு ரூபாய் 169 /-
என்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.
வேறுவழியின்றி. நேரத்துக்காக அந்த வரிசையில்
சென்றோம் விவேகாநந்தர் பாறைக்கு ஒரு போட் ரைட்
விவேகாநந்தர் நினைவிடம் பாறை |
முன்பு நாங்கள் சென்றிருந்தபோது
லைஃப் ஜாக்கெட் ஏதும் தரவில்லை. மேலும் பாறையின் மேலேற கட்டணம் ஏதும்
வசுலிக்கப்பட்டதில்லை. இம்முறை லைஃப் ஜாக்கெட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதை
எப்படி உபயோகிப்பது என்று எவரும் கூறவில்லை. மேலும்பாறைமீதேற ஆளுக்கு ரூபாய் 20/- வசூலிக்கிறார்கள் நானும் என்மனைவியும் அவளது சகோதரியும் மாமியும் மேலே போகாமல்
கீழேயே மற்றவருக்காகக் காத்திருந்தோம் நாங்கள் ஏற்கனவே மும்முறை சென்றிருந்த
இடம்தானே
விவேகாநந்தர்
பாறைக்குச் சென்றுவரும்போது கன்னியாகுமரிக் கோவிலுக்கும் சென்றோம் கன்னியா குமரியை
முக்கடலும் சங்கமிக்கும் இடம் என்கிறார்கள் வங்காள விரிகுடா இந்து மகா
சமுத்திரம் அரபிக்கடல் முன்பு போயிருந்தபோது கண்ட இந்திரா காந்தி பாயிண்ட் என்னும் வாசகங்கள் இப்போது காண வில்லை. கன்னியா குமரி
கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகி இருக்கிறதே தவிர கோவிலின் களை ஏதும் இல்லை
.
பத்மநாப புரம் அரண்மனை ஒரு தோற்றம்( வெளியில் இருந்து) |
அரண்மனை காண
அனுமதிக்கு ரூ 35/- ஒருநபருக்கு வசூலிக்கிறார்கள் வாகனப் பார்க்கிங்குக்கு ரூ 85 /- வசூலிக்கிறார்கள் புகைப்படம் எடுக்கக்
கூடாது. என் ஹாண்டி காமைக் கொண்டு போய் படம் எடுக்க ரூ 2000/- கேட்டார்கள் மறுத்து
விட்டேன் லாக்கரில் வைத்துப் போனேன் பதிவிட்டிருக்கும் குதிரை வீரன் படம்
புத்தகத்தில் இருந்தது அரண்மனை பற்றிய
செய்திகள் கொண்ட புத்தகம் ரூ 120/- ஆக அரண்மனை
நிறையவே சம்பாதித்துக் கொடுக்கிறதுஅந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் இத்தனை பெரிய அரண்மனையில் எண்ணை
விளக்குகளுடன் எப்படி வாழ்ந்தார்களோ என்னும்
சிந்தனை மனதில் ஓடாமல் இல்லை.
வெளியில் வந்த பிறகும் எதையோ பார்க்காமல் போகிறோம் என்றே தோன்றியது
அங்கிருந்து காமராஜரால் கட்டப்பட்ட தொட்டி[ப்பாலம்
என்னும் இடத்துக்குப் போனோம் அந்த இடம் சுற்றுலாவில் எப்படி முக்கியத்துவம் பெற்றது என்பது தெரியவில்லை. போகாமலேயே கூட
இருந்திருக்கலாம்
தொட்டிப்பாலம் அருகே ஒரு அறிவிப்பு |
அங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் சென்றோம் . முன் போல் இருந்தால் நானே அருவியில் நீராடி இருப்பேன் இப்போது கீழே இறங்கவே தயக்கமாக இருந்ததால் மேலிருந்தே கண்டு ரசித்தேன் ரம்மியமான சூழ்நிலை. அழகான இடம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது ஒரு சிறிய காணொளி
திற்பரப்பு அருவி -ஒரு காட்சி |
அருவியின் பின்னணியில் |
நாகராஜா கோவில் |
ஹோட்டல் லாப்பியில் |
நாகராஜா கோவில் முகப்பு நாளெல்லாம் பயணித்ததில் உடல் நான் இருக்கிறேன் என்று கெஞ்ச ஆரம்பித்தது ஒரு வழியாய் அறைக்கு வந்தோம் . நாளை பயணத்தின் கடைசி நாள் திருச் செந்தூர் சென்று வரத் திட்டம் ( தொடரும் ) |
/
இனிய பயணம் ஐயா... படங்கள் அருமை...
பதிலளிநீக்குநாங்களும் தொட்டிப்பாலமும், திற்பரப்பு அருவியும் தவிர மற்ற இடங்கள் சென்றோம். :) திருவட்டாறு செல்லவில்லையா?
பதிலளிநீக்குவிளக்கம் நன்று புகைப்படங்கள் அருமை காணொளிகள் 3-ம் கண்டேன் ஐயா புகைப்படத்தில் உங்களைக் காணவில்லையே...
பதிலளிநீக்குதொடர்கிறேன்
நெருக்கிய பயணம்.
பதிலளிநீக்குபடங்கள் அந்தந்த இடங்களின் அழகைச் சொல்கின்றன. விவேகானந்தர் பாறைக்கு எப்போதோ ஒஎ ஒருமுஐ 1985 இல் என்று ஞாபகம்.. அப்போது போயிருக்கிறேன். கன்னியாகுமரியில் அப்போது ஹோட்டல் எதுவும் நன்றாக இல்லை.
பதிலளிநீக்குதிருச்செந்தூர் பதிவிலாவது ஹோட்டல் சமாசாரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தங்கினீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்பதா முக்கியம்?
பதிலளிநீக்குஇந்த மாதிரிப் பயணங்களில் நமக்கேற்படும் அனுபவங்களில் புதுசாக நாம் தெரிந்து கொண்டதைத் தெரியப்படுத்துவதற்குத் தானே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்?..
"ஒரே ஒரு" என்கிற வார்த்தையைக் கொலை செய்திருக்கிறேன். திருத்தம்!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகீதா: சார்..எங்கள் ஊருக்குச் சென்று வந்து படங்களுடன் சொல்லியிருப்பது மீண்டும் ஊருக்குச் சென்ற நினைவு. கன்னியாகுமரியில் பாறையில் ஏற வசூலா ...ஆச்சரியமாகி இருக்கிறது. சுற்றுலா என்று வணிகமயமாகிவிட்டது போலும். கோயில் களை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குசார் மாத்தூர் தொட்டிப்பாலம் அழகான இடமாச்சே. வட சேரி உடுப்பி ஹோட்டல் இப்போது நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது தெரிகின்றது தங்கள் பதிவிலிருந்து. நாகராஜா கோயில் நினைவுகள் பலவற்றை மீட்டியது...
மிக்க நன்றி சார் எங்கள் ஊரை உங்கள் பதிவு வழி பார்க்க முடிந்தது.
துளசி : நானும் அங்கு கல்லூரிப்படிப்பு படித்ததால் நாகர்கோயில் நல்ல பழக்கம். நாகராஜா கோயில், திற்பரப்பு, பாலம், சுசீந்திரம், கன்னியாகுமரி, எல்லாம் அப்போதும் அதற்குப் பின்னரும் சென்றதுண்டு. நல்ல நினைவுகளை அசை போட்டேன் சார் தங்கள் பதிவால்...
உங்களுனேயே வந்தது போன்ற உணர்வை உங்களின் இந்த பதிவு தந்தது. நிங்கள் உங்கள் பாணியிலேயே எழுதவும்.
பதிலளிநீக்குமரியாதைக்குரிய ஜீவி அவர்களே,
’’ திருச்செந்தூர் பதிவிலாவது ஹோட்டல் சமாசாரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தங்கினீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்பதா முக்கியம்?’’
என்று சொல்லி இருக்கிறீர்கள். மறுத்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். இப்போதெல்லாம் பலரும் ஒரு இடத்திற்குப் போவதற்கு முன்னால் அந்த இடம் சம்பந்தப்பட்ட வலைத்தளங்களையும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு G.M.B. அவர்களின் தங்குமிடம், உணவு விஷயம் போன்ற விவரிப்பு நிச்சயம் ’TRAVEL GUIDE’ போன்று உதவும். துளசி டீச்சர் ( துளசி கோபால் ) அவர்களது பயணக் கட்டுரைகளில் இன்னும் நிறையவே இருக்கும். அங்கு புதிதாக செல்பவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.
பொறுமை, பொறுமை திரு. தமிழ் இளங்கோ அவர்களே!
பதிலளிநீக்குஎனக்குத் தெரியாதா, இப்படித்தான் பதில் வரும் என்று.
ஜிஎம்பீ ஐயா பாணியே தனி. அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
இப்போதெல்லாம் பின்னூட்டங்களில் உங்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
திருவட்டாறு பற்றி மச்சினனிடம் சொன்னேன் நேரம் இன்மை காரணமாகவோ என்னவோ அங்கு செல்லவில்லை. வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
ஏறத்தாழ முப்பது வருடங்கள் எவ்வளவோ மாற்றங்கள் இருக்கும் நான் இதோடு நான்கு முறை கன்னியாகுமரி சென்றிருக்கிறேன் விசேஷமாகக் கூறப்படும் சூரியோதயமும் அஸ்தமனமும் கண்டதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கில்லர் ஜி
என் மறுமொழிகளை நீங்கள் பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மறு மொழியில் பதில் சொல்கிறேன் என்புகைப்படங்கள் இல்லாததன் காரணம் கூறி இருக்கிறேன் நான் உபயோகிப்பது ஹாண்டிகாம் அதில் புகைப்படமும் வீடியோவும் எடுக்கலாம் ஆனால் செல்ஃபி கிடையாது ஆகவே என் புகைப்படம் இருக்க வாய்ப்பில்லை. வேறு யாராவது எடுத்தால்தான் உண்டு. வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
ஆம் சில நாட்கள் பல இடங்கள் நெருக்கிய பயணம்தான்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
நீன்களாவது தவறைக் கண்டிருக்கிறீர்கள் பலமுறை நான் தட்டச்சு செய்யும்போது தவறுகளைத் தெரியாமலேயே செய்து விடுகிறேன் அதைக் கண்டு கொள்வதும் குறைவு. மீள்வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ ஜீவி
இப்பதிவில் தங்கும் இடம் பற்றியும் அங்கு காலை உணவு உண்டது பற்றியுமே சொல்லி இருக்கிறேன் மற்றவைகள் பற்றியே அதிகம் எழுதி இருக்கிறேன் பதிவுகள் முடியும் நேரத்துக்கு வந்து விட்டன. அடுத்து பயணம் மேற்கொண்டு எழுதும்போதுதங்குமிடம் உணவு பற்றிச் சொல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன் வருகைக்கும் குறிப்பிட்டுக் காட்டொஇயதற்கும் நன்றி
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
நாங்கள் சென்ற முறை நாகர்கோவில் போயிருந்தபோது மண்டைக்காடு முட்டம் போன்ற இடங்களுக்கும் திருநெல்வேலி க்கும் சென்றிருக்கிறோம் இந்தமுறை எல்லாமே மச்சினன் நிரலின் படியே நடந்ததுவருகைக்கு அதனால் ஏற்பட்ட நினைவோட்டங்களைப் பற்றி குறிப்பிட்டதற்கும் நன்றி கீதா
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
வருகைக்கும் எனக்காக ஜீவிக்கு பதில் இட்டதற்கும் நன்றி ஜீவி அவர்கள் என் பதிவுகளுக்கு ஐந்து வருடங்களாகப் பின்னூட்டமிடுகிறார் அவருக்கு என்னிடம் எதையாவது கூறி என்னை உசுப்பிவிடுவது பிடிக்கும் எனக்கும் அது தெரியும் மீண்டும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஜீவி
என் பாணியில் என்ன பதிலை எதிர்பார்த்தீர்களோ . வருகைக்கு நன்றி சார்
நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகள் எழுதுபவர் அல்ல என்ற நோக்கில் உங்களிடம் என் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்.
பதிலளிநீக்குஎனக்காக எதையும் குறைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டபடி உங்கள் விருப்பப்படி எழுதி இந்தப் பகுதியை நிறைவு செய்ய வேண்டுகிறேன்.
//என் பாணியில் என்ன பதில் எதிர்ப்பார்த்தீர்களோ..//
எதற்காகக் கேட்டேன் என்பதை நிச்சயம் சொல்கிறேன். நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் சொல்கிறேன்.
ஜிஎம்பீ ஐயா,
பதிலளிநீக்குசொன்னது இது தான்:
http://jeeveesblog.blogspot.in/
பதிலளிநீக்கு@ ஜீவி
ஏறத்தாழ உங்கள் எதிர்பார்ப்புகளைத் தருகிறேன் என்று நினைக்கிறேன் ஒரு சிலர் பின்னூட்டமிட்டால் அதை அலசி ஆராய்வது என் வழக்கம் அதில் நீங்களும் ஒருவர் தொடர்ந்து வாருங்கள் ஊக்குவிக்கவோ உசுப்பி விடவோ எதுவானாலும் பரவாயில்லை. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஜீவி
என் டாஷ் போர்டில் உங்கள் பதிவு கண்டேன் அதிலும் என் பாணியில் என்ன எதிர்பார்த்தீர்களோ என்னும் கேள்விக்கு பதில் இல்லை. பெரும்பாலும் பதிவுகளில் சொல்லும் விஷயங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்னும் ஆதங்கம் எனக்குண்டு. அண்மையில் ரமணி அவர்கள் நான் எழுதியதைப் புரிந்து கொண்டு (?) எழுதியதே சாட்சி . இத்தனைக்கும் நான் அப்ஸ்ட்ராக்டாக எதையும் சொல்வதில்லை என்றே எண்ணுகிறேன் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி சார்
தொட்டிப் பாலத்தைக் கண்ணாரக் காண வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை ஐயா.
பதிலளிநீக்குஆசை நிறைவேறாமலேயே நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன
தங்களின் பதிபு என் ஆசையை புதுப்பித்து இருக்கிறது
நன்றி ஐயா
படங்களும் பகிர்வும் நான் சென்று வந்த இடங்களை எல்லாம் மீண்டும் நினைவில் நிறுத்திச் சென்றன.... அருமை ஐயா...
பதிலளிநீக்குகன்னியாகுமரி மட்டுமல்ல திருச்செந்தூர் கூட பணம் பறிக்கும் இடமாக மாறித்தான் இருக்கிறது...
விவேகானந்தர் பாறை மீது ஏற இப்போது பணமா...? அழகர் கோவிலில் நூபுர கங்கை தீர்த்தத்துக்கும் இப்போ பண வசூல்... கோவில்கள் எல்லாமே பணம் பறிக்கும் இடமாக மாறிவிட்டன. பிள்ளையார்பட்டி மட்டுமே சுற்றுலாத்தளமானாலும் பணம் பறிக்கும் இடமாக இன்னும் மாறவில்லை... சாமியை அருகில் சென்று பார்க்க கட்டணம் ஏதுமில்லை...
தொட்டிப்பாலத்தில் நடக்கும் அனுபவம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்....
நல்ல பகிர்வு அய்யா...
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
பெருந்தலைவர் காமராஜரின் உபயம் என்பது தவிர என்னைத் தொட்டிப்பாலம் ஈர்க்கவில்லை ஐயா வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
நானும் விவேகாநந்தர் பாறை போவது இது நான்காவது தடவை. இப்போதுதான் பாறைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கிறார்கள் கணக்குப் பார்த்து சுற்றுலா எல்லாம் திட்டமிடக் கூடாதுஎல்லா இடங்களிலும் காசுதான் பேசுகிறது தொட்டிப்பாலத்தில் நடந்தபோது நான் எதையும் வித்தியாசமாக உணரவில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்