Sunday, February 7, 2016

ஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்


                   ஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்
                   -------------------------------------------------------------------------
அண்மையில் இராமேஸ்வரம் சென்றிருந்தோம் அன்று கும்பாபி ஷேகம் கும்பாபிஷேக விசேஷ மலராக மாலை முரசு வெளியிட்டிருந்த எட்டு பக்கங்களைப் பார்த்த போது மனம் வலித்தது அம்மாவின் ஆணைக்கிணங்க கும்பாபிஷேகம் நடை பெற்றதாகச் செய்திகள் இருந்தனஅதே நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும்  கும்பாபிஷேகம் நடை பெற்றது அதே நாளில் தமிழகத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடை பெற்றதாக அறிகிறேன் இதெல்லாம் அம்மாவின் ஆணைக்கிணங்க என்று அ்றியும்போது நாம் இன்னும் அரசியலுக்கு அடிமைகள் என்று நினைக்கத் தோன்றுகிறது இம்மாதிரி கும்பாபிஷேகம் நடந்தால் அது அம்மாவுக்கு நல்லது என்று சோதிடர்கள் சொன்னதாகக் கேள்வி. என்று ஸ்டேடஸ் போட்டிருந்தேன்  

 அதற்கு கமெண்ட் எழுதிய நண்பர் ஒருவர்
அப்படி இல்லை பாலு . ஜெ ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ,பக்தி மார்க்கம் ,செழிக்க நிறைய ,நடவடிக்கைகள் நடப்பதுண்டு .இது இப்போது என்று இல்லை .எப்போதெல்லாம் ,ஜெ ஆட்சியில் இருந்தாலும் நடந்து வருகிறது .அவளையும் ,கடவுளை வெறுப்பவர்களின் ,எதிர் மறை பிரச்சாரமும் மீடீயா மூலம் ஒரளவுக்கு எடுபடத்தான் செய்கிறது .
இதிலே இன்னோர் ஆதாயமும் உள்ளது .MGR வந்த பிறகு ,கீழே உள்ள ஜாதிகளை ,மேலே உள்ள ஜாதிகளை அச்சுறுத்த ,கொச்சைப்பட ,பயப்பாகிறார்கள் .இதை 52-54 பீரீயட் ,மற்றும் ,காமராஜர் காலம் ,கருணாநிதி காலம் ,இவற்றுடன் ஒப்பிட்டால் தான் தெரியும் .ஜெ ,கும்பாபிஷேகம் ,கோயில் அன்னதானம் ,போன்றவற்றில் ,கவனம்செலுத்துவதால் ,ஒரளவுக்கு கருணாவும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ./ எனறு எழுதி இருந்தார்

 முதலில் அடிமைத்தனம் என்று எதை நான் கூறுகிறேன் என்பதைப்பார்ப்போம்

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.." 

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம்கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாதமுறைக்குட்பட்டு நடப்பது.."

"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

 இனம் மொழி மதம் போன்றவை சென்சிடிவான விஷயங்கள்.இப்போது இந்தவகையில் அரசியலும் சேர்ந்து விட்டது என்னைப் பொறுத்தவரை இவைகளே தனி மனிதனை அடிமைப்படுத்த அதிகம் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் பக்தி மார்க்கம் செழிக்க ஜெ பல நடவடிக்கைகள் எடுப்பதாக நண்பர் கூறுகிறார். ஆதிகாலம் முதலே இந்தபக்தி மார்க்கமும்  அதன் விளைவான இறை நம்பிக்கையும்தான்  மனிதனை தானாக சிந்திக்க விடாமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது அடிமைத்தனம் என்பது என்ன என்று மேலே கூறி இருக்கிறேன்
 மேலும் இங்கு உலவும்  ஏற்றதாழ்வுகளின் மூல காரணமே இந்த மத நம்பிக்கைதான் ஜாதி என்றும் மதம் என்றும் இனம் என்றும் பல வகையாகக் கூறி மனிதனை உசுப்பேற்றிவிடும் விஷயங்களே நடக்கின்றன.கர்நாடகாவில் ஏறத்தாழ எல்லாக் கோவில்களிலுமே தினம் அன்னதானம் நடைபெறுகிறது. இவை பெரும்பாலும் கோவில் நிர்வாகத்தாலேயே செய்யப்படுகிறதுதமிழ் நாட்டில் அன்னதானம் செய்யப்படுவது ஜெயின் சொந்தப்பணத்திலா அதற்கான க்ரெடிட்டை அவர் பெறுவது என்ன நியாயம் அரசாங்கமே குடி விற்பனையில் முன் நின்று உழைப்பவனின் பணத்தை உறிஞ்சி அதன்  மூலம் கிடைக்கும் வருமானத்தில் இலவசப் பொருட்களை விலையில்லாதவை என்று கூறி வருவது மிகவும் தவறு அவற்றின் விலை உழைப்பவனின் வியர்வையே
சமூகத் தளங்கள் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும்  ஆனால் அவை இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. பல நல்ல விளைவுகளுக்கு உறு துணையாக இருந்தவை  அதே நேரம் தவறான செயல்களுக்கும் விளக்கம் கொடுத்து வருபவை. பொதுவாக நான் இம்மாதிரியான விஷயங்களில் இருந்து ஒதுங்கியே இருப்பவன்  இருந்தாலும்  ஒரு பத்திரிக்கை அரசு செய்யும் முதல்வருக்கு இவ்வளவு கேவலமாக அடிவருடுவது என்னை அந்த ஸ்டேடஸ் போட வைத்தது/31 comments:

 1. சென்ற ஆண்டு தீபாவளிக்கு முன் நிகழ்ந்த - திருஆரூர் திருக்கோயில் குடமுழுக்கின் போதும் இப்படித்தான் விளம்பரம் செய்திருந்தார்கள்..

  ReplyDelete
 2. உணர்ச்சி பூர்வமான பதிவு. தனி மனித துதிகளும், தற்பெருமைகளும் எப்போதுமே முகம் சுளிக்க வைப்பவை.

  ReplyDelete
 3. வாய்ப்பிருப்பின் அண்மையில் கும்பகோணத்தில் குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களில் சென்ற கல்வெட்டு ஏதாவது ஒன்றினைப் பார்க்கவும். அதிலும் இதுவே.

  ReplyDelete
 4. சார் என்ன இது இப்படி...எல்லாம் அம்மா மயம் என்றால் நாம் சுதந்திரம் பெற்றவர்களா என்ற யோசனையும், ஊடகங்களும் கருத்துச் சுதந்திரம் அற்றவை போலல்லவா இருக்கின்றது..முனைவர் ஜம்புலிங்கம் ஐயா சொல்லுவது இன்னும் வேதனையாக இருக்கின்றதே கல்வெட்டிலும்...நல்ல பதிவு சார் .இப்போது இங்கு எங்கு பார்த்தாலும் அம்மாவின் திரு உருவம் தான் பார்க்கவே பல சமயங்களின் எரிச்சலாக இருக்கின்றது சார். பேனர்களும் கட்டவுட்டுகளும் என்று அடச்சீ என்று தோன்றுகின்றது...யார் இதை எல்லாம் தட்டிக் கேட்பது...

  கீதா

  ReplyDelete
 5. Replies
  1. தவறு. இதுதான் தமிழ்நாடு.

   Delete
  2. தவறு. இதுதான் தமிழ்நாடு.

   Delete
 6. அம்மா என்பது புனிதமான உறவு அதை தமிழன் அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறான் வேதனையாக இருக்கிறது ஐயா.

  ReplyDelete
 7. பக்தி, கும்பாவிசேகம், அன்னதானம் எல்லாம் இன்றைய அரசியல்வாதிகளின் பகடைக் காய்கள், சார்! இதுபோல் செயல்கள் எல்லாம் உண்மையான ஆத்திகர்களை பாதிக்கும் அளவுக்கு நாத்திகனை பாதிக்காது! I am better off, Sir! :-)

  ReplyDelete
 8. அடிமைகள் சுயலாபத்துக்காகக் காலில் விழுந்து தமது தரம் தாழ்த்திக் கொள்ளும் விடயம் தலைவிக்குத் தெரிந்தாலும் அதை அவர் ரசிப்பதாகவே தெரிகிறது. ஆட்சியாளர்கள் இப்படி அமைந்தது தமிழகம் வாங்கி வந்த சாபம்.

  ReplyDelete
 9. கும்பாபிஷேஹம் கோயில்களுக்குப் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தாகவேண்டும் என்பது ஆகம விதிகள்! இதில் அம்மாவின் ஆணை என்பது ஆர்வமிகுதியால் அவங்களாப் போடறாங்களா இல்லை போடச் சொல்றாங்களா என்பதே புரியவில்லை. பெரும்பாலான மக்கள் இதைப் பொருட்படுத்துவதும் இல்லை.

  ReplyDelete
 10. இதெல்லாம் முதல்வருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. இதை திசை திருப்ப, தொண்டர்கள் செய்வது அம்மாவின் பேரைக் கெடுக்கிறது என்ற பொய்ப் புலம்பல் வேற. இதே வேற ஏதாவது கட்சிக்கார முதல்வர் செய்தா...அது எப்படி அவர் உத்தரவு இல்லாமல் செய்யமுடியும் என்று கேப்பார்கள்!

  முதலவருக்கு ஒரு பேட்டி இன்றைக்கு கொடுத்தல் அடுத்த நாள் பதவி காலி...மலைச்சாமி, நடராஜன், இ. சம்பத், ப. கருப்பையா? ஆனால், ஸ்டிக்கர் ஓட்டுவது...இதெல்லாம் அம்மாவிற்கு தெரியாமல் நடக்கிறது என்ற சால்ஜாப்பு வேற! அதையும் நம்பும் மக்கள் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 11. தனிமனித துதிகள் என்றுமே வெறுக்க வைப்பவைதான் ஐயா...

  ReplyDelete

 12. @ துரைசெல்வராஜு
  வணக்கம் ஐயா . ஜாதி மத இனங்களினால் இருக்கும் அடிமைத்தனம் போதாதென்று இப்போது அரசியல் அடிமைத்தனமும் ஆதங்கம் கொள்ள வைத்தது விளைவே இப்பதிவு வருகைக்கு நன்றி

  ReplyDelete

 13. @ ஸ்ரீராம்
  மன ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 14. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  என் எழுத்துக்கு வலு சேர்க்கிறது உங்கள் பின்னூட்டம் நன்றி ஐயா

  ReplyDelete

 15. @ துளசிதரன் தில்லையகத்து
  வாருங்கள் என்னைப் போல் நீங்களும் குமைவது தெரிகிறதுஎல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் மீளும் நாள் என்றோ. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 16. @ டாக்டர் கந்தசாமி
  அப்படி வாளா இருக்க முடியவில்லையே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 17. @ கில்லர்ஜி
  இது அம்மா பற்றிய செய்திக்கான பதிவு மட்டுமல்ல என்று நாம் சுதந்திரமாகச் சிந்தனை செய்வோம் என்னும் ஆதங்கமும் சேர்ந்தது. வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 18. @ வருண்
  இது கும்பாபிஷேகம் பற்றிய பதிவு மட்டுமல்ல. நம் மன அடிமைத்தனம் பற்றியதும் ஆகும் வருகைக்கு நன்றி வருண்

  ReplyDelete

 19. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
  அரசியல் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே இது. வருகைக்கு நன்றி உமேஷ்

  ReplyDelete

 20. @ கீதா சாம்பசிவம்
  எல்லாக் கோவில்களிலும் 12 ஆண்டுகளுக்குஒரு முறை கும்பாபிஷேகம் நடை பெறுகிறதா. இவற்றையும் அரசியல் ஆதாயம் தேட உபயோகிக்கிறார்கள் அதை அறிய முடியாதவர்களாய் பாமர மக்கள். வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 21. @ நம்பள்கி
  இதெல்லாம் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடந்தால் என்ன. ? நாம் அடிமைத்தனத்தில் உழல்கிறோம் என்பதே உண்மை. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 22. @ பரிவை சே குமார்
  தனிமனிதத் துதிகள் ஆதாயம் தருவதாய் இருந்தால்....? வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 23. `ஆதிகாலம் முதலே இந்த பக்தி மார்க்கமும் அதன் விளைவான இறை நம்பிக்கையும்தான் மனிதனை தானாக சிந்திக்கவிடாமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது` என்கிறீர்கள். அடடா! நீங்களும் சமயம் கிடைக்கும்போதெல்லாம், கோவில் கோவிலாக ஏறி, ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்களே, இது எந்த மார்க்கமோ, புரியமாட்டேன் என்கிறதே?

  சரி, விடுங்கள்! ஒருவேளை, உங்களிடமிருந்து இனிவரப்போகும் அரசியல் பதிவுகளுக்கு இது ஆயத்தமோ!

  ReplyDelete

 24. @ ஏகாந்தன்
  அடடா! நீங்களும் சமயம் கிடைக்கும்போதெல்லாம், கோவில் கோவிலாக ஏறி, ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்களே, இது எந்த மார்க்கமோ, புரியமாட்டேன் என்கிறதே?/ எந்த விஷயத்தைப் பற்றியும் பேச அதில் ஓரளவாவது ஞானம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் உங்களை விமரிசிக்க முடியுமா. அதுபோல் தான் இதுவும் நான் எழுதியதை முழுவதும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 25. @ jk22384
  கும்பாபிஷேக நிகழ்வைத் தவிர அடிமைத்தனம் பற்றி நான் எழுதியவையே முக்கியம் என்று நினைக்கிறேன் நன்றி சார் வருகைக்கு

  ReplyDelete
 26. @ கரந்தை ஜெயக்குமார்
  புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 27. விளம்பரம்! அதுவும் சுய விளம்பரம் - வேதனையான விஷயம்.

  உங்கள் ஆதங்கம் புரிகிறது. நம் ஊரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இப்படி விளம்பரப் பிரியர்கள் நிறைந்து வருகிறார்கள்!

  ReplyDelete

 28. ! வெங்கட் நாகராஜ்
  வருகைக்கும் புரிந்துகொண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete