Friday, February 5, 2016

தொடர்பயணம் இராமேஸ்வரம் -2


                          தொடர்பயணம் இராமேஸ்வரம் -2
                          ------------------------------------------------------
இரண்டாம் நாள் அதிகாலையிலேயே ஸ்படிகலிங்க தரிசனம் ஆளுக்கு ரூ.50/- டிக்கெட் என்று கூறி இருந்தான் மச்சினன் இராமநாதஸ்வாமியைத் திரை போட்டு மறைத்து அதன் முன்னே ஒரு ஸ்படிக லிங்கத்தை வைத்திருந்தார்கள் அதைக்காண என்று கூட்டமோ கூட்டம் சிதம்பரத்தில் தினமும் பக்தர்கள் முன்னிலையில் ஸ்படிக லிங்க அபிஷேகமே நடைபெறுகிறது தனியே பணம் ஏதும் வசூலிப்பதில்லை இராமேஸ்வரத்தில் ஸ்படிகலிங்கத்தை காணவே வசூல்  எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்ததுஎன் கணக்குப் படி சுமார் மூவாயிரத்துக்கும் மேலானவர் கட்டணம் செலுத்தி ஸ்படிக லிங்க தரிசனம் செய்திருப்பர். கோவிலுக்கு வருமானத்துக்கு இதுவும் ஒரு வழியோ.?
அன்று அக்னிதீர்த்தம் என்னும் கடலில் நீராடி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலிருந்தும் வாளி வாளியாக நீராட்டப்பட்டோம் அதற்குப் பின் அறைக்குச் சென்று குளித்தோம்  அவர்கள் சொல்படி இவ்வாறு நீராடியதால் எங்களுக்கு எல்லா வளமும் சம்பவிக்க வேண்டும்  காலை உணவு உண்டு சுற்றுலா கிளம்பினோம்
இதற்கு முன்பே இரு முறை இராமேஸ்வரம் வந்திருக்கிறேன்சென்ற முறைகளில் தனுஷ்கோடி வரை செல்ல முடியவில்லை. ஆகவே இந்த முறையாவது தனுஷ் கோடி வரை சென்று அழிந்து போன சின்னங்களின் மிச்சத்தையாவது காண வேண்டும் என்றிருந்தது.
 தனுஷ்கோடி வழி போகும் போது கெந்தமான பர்வதம் என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கும் ராமர் பாதங்களை தரிசிக்கக் கூட்டிச் சென்றார் ஓட்டுனர் ஒரு சிறிய குன்றின் மீது இரு கருங்கல் பாதங்களைக் காண்பித்து ராமர் பாதம் என்கிறார்கள் இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல்  வெளிப்படுகிறான் சிறிய குன்றின் மீதேறி அங்கிருந்து காண முடியும் காட்சிகளை ரசித்தேன் வெயிலுக்கு இதமாக தர்பூஸ் துண்டங்களை விற்கிறார்கள் நாவுக்கும் தொண்டைக்கும் இதமாய் இருந்தது தனுஷ் கோடி வரை செல்ல தார் பாதை போட்டிருந்தும் அதில் பயணிக்க அது அதிகார பூர்வமாகத் திறக்கப்படாததால் அனுமதி இருக்கவில்லை. கடலோரம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினோம் .அங்கு பயணிக்க சில வான்கள் இருக்கின்றன. ஆனால் அதில் செல்வது உசிதமல்ல என்றும் மேலும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் கேட்கிறார்கள் இன்னுமொரு வாய்ப்பு இருந்தால் தனுஷ் கோடி செல்லலாம்  என்று காற்று போன பல்லூன்  போல் திரும்பினேன்

இந்தமுறை சென்றபோது அங்கும் ஒரு பாபா கோவில் வந்து பிரபலமாகி வருவது தெரிந்தது. 2012-ம் ஆண்டு கட்டப்பட்ட பாற்கடலைக் கடையும் சிற்பங்கள் கொண்ட முகப்புடன் கூடிய ஒரு கிருஷ்ணன் கோவில் புதுமையாக நன்றாக இருக்கிறது சென்று மகிழ்ந்தோம் கண்ணாடி கூண்டுக்குள் அசையும் மற்றும் அசையாத சிற்பங்கள் எல்லாமே குகையைக் குடைந்து கட்டியதுபோல் இருக்கிறது (கடந்த பதிவுகளில்  நான் எடுத்திருந்த காணொளிகள் சில திறக்காததால் காணொளிகளை முதலில் யூ ட்யூபில் இணைத்து பின் இங்கு பதிவிடுகிறேன்  அந்தப் பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன் )
ராமர் பாதத்திலிருந்து ஒரு காட்சி
   
ராமர் பாதம் இருக்கும் குன்று
பிரசித்தி பெற்றுக் கொண்டிருக்கும் சாய்பாபா கோவில் 
கிருஷ்ணன் கோவில் முகப்பு 
கோவர்த்தன கிரிதாரி 
ராமர் லிங்கம் வடிக்கிறார் 
பசுவின் மடியிலிருந்து நேராக.....!
காளிங்க நர்த்தனன் 
கண்ணனின் விளையாட்டு
கிருஷ்ண பிரேமிகள்.... !
கண்ணனும் குசேலனும் 

அதன் பின் பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோவிலில்  மிதக்கும்  கற்கள் ராமர் பாலம் கட்ட உபயோகப்பட்டவை என்று கூறி கற்களைக் காட்டி அவற்றைப் பூசை அறையில் வைத்து வழிபடச் சொல்லி விற்கிறார்கள் பலரும் வாங்கியும் போகிறார்கள் இராமேஸ்வரத்துக்கு வட இந்திய யாத்திரிகர்களின் வரவே அதிகமாகி இருக்கிறது நம்மைவிட பக்தி மிகுந்தவர்கள் போல் தென்படுகின்றனர். அங்கிருந்து லக்க்ஷ்மணதீர்த்தம் ராமர் தீர்த்தம் என்று இரண்டு தடாகங்களைக் காட்டுகிறார்கள்  செய்த பாப விமோசனத்துக்காக நீராடிய/ நீராடப்படவேண்டிய  தீர்த்தங்கள் என்கிறார்கள்
மாலையில் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் சன் ரைஸ் வியூவின் மேல்தளம் சென்று இராமேஸ்வரத்தின் பல பகுதிகளையும் கண்டு ரசித்தோம் அதன் பின் 
 அப்துல் கலாமின் குடும்பத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டு  பேசப்படும் க்யூரியோஸ் கடையில்  ஷாப்பிங் செய்யப்பட்டது. இப்படியாக இராமேஸ்வரத்தில் இரண்டாம் நாளும் சென்றது 


ஹோட்டலின் மேல் தளத்தில்
  
ஹோட்டலின் மேல் தளத்தில் இருந்து ஒரு காட்சி 
எங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு காகம் 
சுற்றுப்புறத்தைக் கவர் செய்து எடுத்த காணொளி இதை முதலில் யூ ட்யூபில் ஏற்றிப்பிறகு பதிவில் ஏற்றி யிருக்கிறேன்  இல்லாவிட்டால் காணொளி திறப்பதில்லை  ஏன் என்று வித்தகர்கள் கூறலாமே 


     ( தொடரும்  )


29 comments:

 1. 094, 097 அப்புறம் கடைசி வீடியோக்கள் ஓடுகிறது. ஒரு வீடியோ வேலை செய்யவில்லை. படங்கள் அழகு.

  ReplyDelete
 2. இந்த வயதிலும் யாத்திரை மேற்கொள்ளும் உங்கள் இளமை மனதைப் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 3. //இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல் வெளிப்படுகிறான் //

  வெளிப்பட்டு?..

  //சிறிய குன்றின் மீதேறி அங்கிருந்து காண முடியும் காட்சிகளை ரசித்தேன் //

  வெளிப்பட்டவன் ரிலாக்ஸ் ஆகிறான்.

  ரிபெல்களை அடக்கக் கூடாது. ரிபெல்களை சாந்தப்படுத்த மனத்தை கன்வின்ஸ் பண்ணக்கூடிய கோபப்படாத அறிவுபூர்வமான விவாதங்கள் அவசியம்.

  பிறரை ஏற்றுக்கொள்ள, நாம் சொல்வதை பிறர் ஏற்றுக்கொள்ள எது பற்றியுதுமான விவர சேகரிப்புகள் நம் மனசை ஆக்கிரமிக்க வேண்டும். அதற்கான நமது தேடல் முக்கியமானது.
  நாம் நினைப்பதற்கு புறம்பான விஷயங்களில் நிறைய அனுபவ அறிவு தேவை. இல்லையென்றால் நாம் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களின் பிரதிநிதி நாமாகி, ஏற்றுக் கொள்கிறவர்களை நமக்கு எதிராக நிற்க வைக்கும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதற்கான மனநிலை சகலத்தையும் கடந்த ஞானத்தில் விளையும். இப்பூவுலகில் சகலமும் நம் ரசனைக்காகவே. வெறுப்பதற்கென்று எதுவுமில்லை.

  எல்லா விஷயங்களிலும் எதிர்-நேர் இருக்கிறதோ இல்லையோ, நாமாகவே அதற்கான எதிரி-நேர்களை ஏற்படுத்துகிறோம். யோசித்துப் பார்த்தீர்களென்றால் புலப்படும்.

  ReplyDelete
 4. புகைப்படங்கள் நல்ல தெளிவு ஐயா 3 காணொளிகள் கண்டேன் பகிர்வுக்கு நன்றி தொடர்கிறேன் படத்தில் உங்களைக் காணவில்லையே,,,,,,

  ReplyDelete
 5. // இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல் வெளிப்படுகிறான்.//

  இதுதான் GMB அய்யா! படங்களையும் காணொளிகளையும் இரசித்தேன்! தொடர்கிறேன்!

  ReplyDelete
 6. பயணப் பதிவும் படங்களும் அருமை!

  ReplyDelete
 7. ராமேஸ்வரம் படங்கள் நன்றாக உள்ளன. கோவில் கட்டட அமைப்பே ராமேஸ்வரம் ஒருவேளை வட இந்தியாவில் இருக்கிறதோ என எண்ணத் தோணுகிறது.வட இந்தியர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணன் கோவிலோ? கிருஷ்ணன் கோவில் என்கிறீர்கள். வாசல் முகப்பில் ஜடாமுடியுடன் சிவன்!

  ReplyDelete
 8. படங்களும் காணொளியும் கண்டேன்....

  வட இந்தியர்களுக்கு இராமேஸ்வரம் சென்று வருவது பழக்கம். அதனால் அங்கே வடக்கைப் போலவே சில கோவில்களும் அமைத்திருக்கிறார்கள் போலும்......

  ReplyDelete

 9. @ ஸ்ரீராம்
  நான் எடுக்கும் வீடியோக்களை முதலில் கணினியில் ஏற்றுவேன்.பிறகு பதிவில் ஏற்றுவேன் ட்ராஃப்டில் காணொளி ஏற்றியது தெரிந்தாலும் பப்லிஷ் ஆன பதிவில்தான் திறக்கும் ஆனால் இம்முறை ஏனோ தெரியவில்லை. பதிவுகளில் காணொளிகள் திறக்கவில்லை. அதுதான் நான் உங்களுக்கு அஞ்சல் அனுப்பினேன் பின் என் காணொளிகளை முதலில் யூ ட்யூபில் ஏற்றிப் பின் அங்கிருந்து பதிவுக்கு ஏற்றினேன் மூக்கைச் சுற்றி வருவது போல் இருந்தாலும் பலன் கிடைத்தது. வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 10. @ டாக்டர் கந்தசாமி
  நீங்களும் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறீர் நன்றி சார்.

  ReplyDelete

 11. @ நாகேந்திர பாரதி
  வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 12. @ ஜீவி
  /எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதற்கான மனநிலை சகலத்தையும் கடந்த ஞானத்தில் விளையும். இப்பூவுலகில் சகலமும் நம் ரசனைக்காகவே. வெறுப்பதற்கென்று எதுவுமில்லை/ இத்தனை வயது அனுபவத்தில் எதையும் வெறுக்கும் மனநிலை கிடையாது.That which can not be cured must bee endured என்பதை நன்கு அறிந்தவன் நான். என்ன, நான் என் மன நிலைகளைப் பகிர்கிறேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 13. @ கில்லர்ஜி
  வருகைக்கு ரசிப்புக்கும் நன்றி ஜி. நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நான் உபயோகிக்கும் ஹாண்டி காமில் செல்ஃபி வசதி இல்லை. நான் எடுக்கும் படங்களில் நான் எப்படி வர முடியும்

  ReplyDelete

 14. @ வே நடன சபாபதி
  என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 15. @ எஸ்பி செந்தில்குமார்
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ ஏகாந்தன்
  அது கிருஷ்ணன் கோவில்தான் . கோவில் முகப்பில் பாற்கடலைக் கடையும் சிற்பங்கள் இருக்கின்றன. கோவில் வட இந்திய பாணியில் இருக்கிறது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 17. @ வெங்கட் நாகராஜ்
  நான் 2004 -லிருந்து மூன்றாம் முறையாக இராமேஸ்வரம் சென்றேன் இக்கோவில் 2012-ல் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தகவல் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்றது
  மீண்டும் நினைவுபடுத்தி மகிழ்ந்தேன்
  பாபா கோவில் அப்போது இல்லையா
  அல்லது எனக்குத் தெரியவில்லையா எனத் தெரியவில்லை
  உடன் பயணிக்கிற அனுபவம் தருகிறது புகைப்படங்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடி சென்றுவநதேன் ஐயா
  அப்பொழுது ஒருவருக்கு ரூ.50 மட்டுமே கட்டணம் வாங்கினார்கள்
  இப்பொழுது தொகை ஏறிவிட்டது போல் இருக்கிறது
  படங்கள் அருமை ஐயா
  தொடர்கிறேன்

  ReplyDelete
 21. முன்பே படித்துவிட்டேன், ஆனால் கருத்திட இயலவில்லை,, அருமையான பயணம்,, தொடர்கிறேன் ஐயா

  ReplyDelete

 22. @ ரமணி
  நான் கடைசியாக2005 -ல் சென்றபோது பாபா கோவில் பற்றி யாரும் கூறவில்லை. இம்முறை இரு புதுக் கோவில்கள் கண்டேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 23. @ கரந்தை ஜெயக்குமார்
  நான் சென்றமுறை இராமேஸ்வரம் சென்றபோது ஒரு சீரியலில் கண்ட தனுஷ்கோடி மிச்சங்களைப்பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் அப்போது ஒரு விசேஷ ஜீப் மூலம் தான் செல்ல முடியும் என்றனர். இப்போது சென்றபோது வேன்கள் செல்கின்றன/ வேனின் கட்டணம் இருக்கைகளுக்காக சொல்லப் பட்டது வேன் முழுவதும் நிரம்பினால்தான் வண்டியை எடுப்பார்கள் நீங்கள் சென்றபோது ஜீப்பில் ஒருவருக்கு அந்தக் கட்டணமாக இருந்திருக்கும் . வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 24. @ மகேஸ்வரி பால சந்திரன்
  மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 25. நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, பழைய தனுஷ்கோடி வரை ரெயிலில் சென்று இருக்கிறேன். அப்போதெல்லாம் இவ்வளவு வேன்கள் இல்லை.

  ReplyDelete
 26. @ திதமிழ் இளங்கோ
  1964-ல் நிகழ்ந்த புயலில் தனுஷ்கோடி சேதமடைந்து விட்டதாம் நான் 2004-ல் சென்றபோது ஆட்டோ ஓட்டுனர் சேதமடைந்த ரயில் பாதைகள் ரயில் நிலையம் இருந்த இடம் என்றெல்லாம் சொல்லிக் காண்பித்துக் கொண்டு போனார் ஒரு தொடரில் சித்தி என்று நினைக்கிறேன் ராதிகா அவர்கள் சிதிலமடைந்த தனுஷ்கோடி கட்டிடங்கள் சிலவற்றைக் காண்பிப்பார். அவற்றை பார்வையிட வேண்டியே தனுஷ் கோடி செல்ல விரும்பினேன்இப்போது தனுஷ்கோடி வரை செல்லப் பாதை போட்டுவிட்டார்கள். ஆனால் அது அதிகாரபூர்வமாகத் திறக்கப்படாததால் செல்ல முடியவில்லை. மணல் பாதையில் செல்ல விசேஷ வேன்கள் வேண்டும் என்கிறார்கள். அதுவும் வழியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள்

  ReplyDelete
 27. ஐயா! நீங்கள் கூப்பிட்டு வெகு நாட்கள் கழித்து வந்திருக்கிறேன். பொறுத்தருள வேண்டும்! புனிதப் பயணம் பற்றிய பதிவு என்றாலே எல்லாரும் சொறிந்து மாளாத அளவுக்குப் புல்லரிக்க அரிக்க எழுதுவார்கள். ஆனால், நீங்கள் அதையும் ஒரு சுற்றுலாப் பயணம் பற்றிய பதிவு போல இயல்பாக எழுதியிருந்தது படிக்க நன்றாயிருந்தது! குறிப்பாக, படிக இலிங்கக் கட்டணம், பாபா கோயில்களின் பெருக்கம், புனித நீராடலின் பலன் பற்றிச் சொல்லும்பொழுது 'அவர்கள் சொல்படி' என்று குறிப்பிட்டிருந்தது, "இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல் வெளிப்படுகிறான்" என்று எழுதியிருந்தது ஆகியவை வியக்க வைத்தன. கட்டுரையின் தொடக்கத்திலிருந்து கடைசி வரையிலும் புனித நீராடல்கள், புனிதப் பொருட்கள் தொடர்பான விதயங்கள் அனைத்துமே 'அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்' என்கிற மாதிரியாகவே நீங்கள் எழுதியிருப்பது அருமை!

  மிதக்கும் கற்கள் பற்றிக் கூறியிருந்தீர்கள். நானும் அவற்றைப் பார்த்திருக்கிறேன். எனக்கென்னவோ அவை பவழப் பாறைத் துண்டங்களாக இருக்குமோ என ஐயம். அவை பார்ப்பதற்குக் கல்லாலோ மண்ணாலோ ஆன பொருட்கள் மாதிரியே தென்படவில்லை. ஏதோ கடல் உயிரினத்தின் கூடு அல்லது அப்படிப்பட்ட ஏதோ ஒரு பொருள் போலவே காணப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பொருள் மிதப்பதில் எந்த வியப்பும் இல்லை எனத் தோன்றுகிறது.

  அழைத்தமைக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வருவேன்!

  ReplyDelete
 28. //"இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல் வெளிப்படுகிறான்"//

  ஆஹா.... அந்த ரிபெல் என்னையும் விட்டு வைப்பதில்லை! ஒரே படுத்தல்தான்:-)

  இந்தப்பயணத்தில் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை இடங்களுக்கும் (அந்த கிருஷ்ணன் கோவில்தவிர) போய் வந்ததால் காட்சிகள் மனசுக்குள் ரீவொய்ன்ட் ஆகிக்கிட்டே இருக்கு.

  ReplyDelete
 29. @ துளசி கோபால்
  அந்த ரிபெல் வெளிப்படும்போது என்னையே நான் என் கையாலாகாத்தனத்துக்கு நொந்து கொள்வேன் கிருஷ்ணர் கோவில் 2012-ல் கட்டப்பட்டதாக அறிகிறேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete