சில அனுமானங்கள்
--------------------------------
எனக்கு மனிதர்களைப் படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டு. நாம் காண்பவர்கள் , பேசுபவர்கள், பழகுபவர்கள்
என்று பலரது குணாதிசயங்களை ஆராயும்போது இன்னின்ன பேர் இப்படியிப்படி இருநதால் இன்னின்ன குணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று ஓரளவு சரியாகக் கணிக்க முடிந்தது கண்டு எனக்கு என் மேலேயே கொஞ்சம் பெருமிதம் தோன்றுவதுண்டு. முகம் பார்த்து மனிதர்களைப் படிப்பதில் ஏற்பட்ட நம்பிக்கை முகம் காணாதவர்களை ஏதாவது முறையில்
கணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியதன் விளைவே இந்தப் பதிவு. வலையுலக நண்பர்களை, அவர்களின் எழுத்தின் மூலம் கணிக்க முயற்சிக்கிறேன். பெயர் கூறாமல் அவர்களைப் பற்றிய என் அநுமானங்கள், படிப்பவர்களுக்குப் புரிந்து, சரியாக இருப்பதாகத் தோன்றினால் நான் ஓரளவு வெற்றி பெற்றவனாவேன். ஆனால் அறிந்து கொள்வதுதான் எப்படி.? எப்படியானாலும் ஒரு பதிவுக்கு விஷயம் கிடைத்து விட்டது. இவர்களின் எழுத்தின் மூலம், நான் இவர்களைப் பற்றி கொண்டுள்ள அனுமானங்களே
இதே
தலைப்பில் 2011-ன் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன் ஆனால் அதில் அனுமானிக்கப்பட்டவர்கள் சிலர் வலை
உலகில் எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள் இன்னும் தொடர்ந்து எழுதுபவர்களைப் பற்றிய
கணிப்பை மாற்றாமல் அப்படியே பதிவிடுகிறேன் எழுதியதை நிறுத்தியவர்களுக்குப் பதில்
இப்போது எழுதும் சிலரைச் சேர்த்து எழுதுகிறேன் யார் பற்றிய அனுமானம் எது என்று
கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்களேன்
1) இவர் எப்படியோ..
.. ஆனால் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று எண்ணுபவர். இவர் செய்வதற்கும் சொல்வதற்கும், எதிர்ப்பு இருநதால் விரும்பாதவர். தனக்குத் தெரியாத விஷயங்கள் மிகவும் குறைந்ததே என்ற எண்ணம் கொண்டவர். ஒருவரை முன்னிலைப் படுத்தவோ கீழிறக்கவோ தன்னால் முடியும் என்று நம்புபவர். கஷ்ட நஷ்டங்கள் அதிகம் அறியாதவர்.முகஸ்துதிக்கு மயங்குபவர் (மயங்காதவர் அநேகமாக யாருமில்லை.)மொத்தத்தில் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர். இப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும்.
2) இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். மிக எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடியவர். எல்லோருடைய குணத்திலும் நல்லதையே காண்பவர். யார் மனமும் புண்படாமல் இருக்க பிரத்தியேக முயற்சிகள் எடுக்கக்கூடியவர். நிறையத் தெரிந்தவர். இருந்தாலும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை கொண்டவராயிருப்பாரோ என்ற சந்தேகம் எனக்குண்டு. நான் தவறாக இருக்கலாம். தவறாக இருக்க வேண்டும்.
3 தான் உண்டு தன் பணி உண்டு ,தன் உலகுண்டு என்று ஒரு வட்டத்துக்குள் இருப்பவர் இவர். இவருக்கு யாரையாவது பிடித்துப் போனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர். செய்கிறாரோ இல்லையோ என்பது வேறு விஷயம். சின்னச்சின்ன விஷயங்கள் கூட இவருக்குப் பிரமாதமாகத் தெரியலாம். மொத்தத்தில் ஒரு QUIET AND GOOD MAN. இவரால்
யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது
4) இவருக்குத்
தெரிந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர். தெரிந்ததை நன்றாக அறிந்தவர். தெரியாததை சில சமயம் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளத்துடிக்கும் குணம் ,மற்றவரிடம் அதைக் காணும்போது அடிபணியும் தன்மையும் கொண்டவராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்குள்ளது. குடத்திலிட்ட விளக்குபோல் பிரகாசிக்கும் இவர் குன்றின் மேல் வைத்தால் அணைந்து விடக் கூடாதே என்ற பரிதவிப்பு எனக்குண்டு. தன் திறன் தானறிந்து பிறரை அறியும் குணத்தையும் இவர் வளர்த்துக்கொண்டால் இவர் வெகு தூரம் செல்ல வாய்ப்புள்ளது.
5 சுருங்கச் சொல்வது என்றால் என்ன என்றே
தெரியாதவர் எப்படிப்பதிவிட்டாலும் குறை என்று சொல்ல மாட்டார் அதேபோல் குறை
சொன்னாலும் மசியாதவர் பல துறைகள் பற்றியும் எழுதுவார் அதற்காக ஆராய்ச்சி எல்லாம்
செய்வார்எனக்கு என்னவோ இவர் பலருக்கும் ஓவர் மரியாதை தருகிறாரோ என்னும் சந்தேகம்
உண்டு. அது உண்மையிலேயே மரியாதைதானா
என்றும் புரிவதில்லை
6. சில எண்ணங்களை உடும்புப் பிடியாகப்
பிடித்துக் கொண்டிருப்பவர் சிலரை வெகுவாக சிலாகிப்பார் மறதி அதிகம் அல்லது
மறதிஎன்று கூறுவது ஆதாயமாக இருக்கலாம் சில நேரங்களில் நினைத்துப் பார்க்க இயலாதவரை
பிரமாதமாக எழுதுவார் இவருக்கு என்று சில சித்தாந்தங்கள் இருந்தாலும் அதை
தெரிவிக்காதவர்
7. பல விஷயங்களில் துறைபோகியவர் என்று
கருதப்படுபவர்இவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம் இவர் எழுதுவன எல்லாம்
எல்லோருக்கும் புரியும் என்று எண்ணுவார். சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காதவர்.
எந்த விஷயம் கூறினாலும் அதில் அவருக்கும் அனுபவம் உண்டு என்று கூற முயல்பவர்
பொதுவாக ஒரு பிள்ளைப் பூச்சி எனலாம்
8 இவர் என்ன எழுதினாலும் சிலாகிக்கவே ஒரு
கூட்டம் உண்டு இன்னதுதான் எழுதுவார் என்று சொல்ல இயலாதுசில விஷயங்களில் அதீதப்
பற்றும் சில விஷயங்களில் அதீத வெறுப்பும் காட்டுவார் ஏனோ ஒரு தாழ்வு மனப்பான்மை
என்று கூடத் தோன்றுகிறதுஅவர் எழுதுவது எல்லாம் எல்லோரும் படிக்க வேண்டும் என்னும்
விருப்பம் உள்ளவர் ( எல்லோருக்கும்
அப்படித்தானே)
9.ஒரு புத்தகப் பிரியர். தனக்கென ஒரு இடம்
வகுத்துக் கொள்ள முயன்றால் நிச்சயம் முடியும் ஆனால் இவர் மட்டும் பல விஷயங்களைத்
தெரிந்து கொண்டாலும் தன் கருத்து இதுதான் என்று சொல்லத் தயங்குபவர்( வலையுலகில்
பெரும்பாலோர் அப்படித்தானே இருக்கிறார்கள்) எனக்கென்னவோ ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சியே
அவரை முன்னிலைப் படுத்திக் கொள்ளதயங்க வைக்கிறது என்று தோன்றுகிறது
10 ஒரு தனிக்காட்டு ராஜா என்னும் எண்ணமே இவரை நினைத்தால் எழுகிறதுஇவரது
மதிப்பீடுகள்தான் சரி என்று எண்ணம் கொண்டவரோ என்றும்தோன்றுகிறதுநிறையவே
தனித்திறமைகள் உள்ளவர் என்றாலும் அதுவே இவரது சுபீரியர் காம்ப்லெக்ஸுக்கு வழி
வகுக்கிறதோ என்றும் தோன்றுகிறது தான்
செய்வதே சரி என்றும் அதை ஆமோதிக்க பலரும் இருக்கிறார்கள் என்னும் எண்ணமும் உள்ளவர்
சிலரைப் பற்றி எழுதி இருப்பது குறைகள் போலத் தோன்றினாலும் குறைகளே இல்லாத மனிதரே இல்லை என்று திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டுகிறேன்
என்ன
வாசகர்களே இந்தமட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?இது ஒருவகையான குத்துமதிப்பீடுதான்
யாரையும் நோகடிக்கும் எண்ணம் இல்லை. இதில் கூறப்பட்டவர்கள் யார் யார் என்று
அனுமானிக்க முடிகிறதா. முயற்சி செய்துபாருங்களேன் ஒரு க்லூ. முதல் நான்குபேர்
முதலில்எழுதிய பதிவிலேயே இடம் பிடித்தவர்கள் ஏனையோர் பற்றிய கணிப்பு புதிது.
சில கணிப்புகள் எல்லோருக்கும் பொருந்தும். ஜோசியம், வார ராசி பலன் போல! சில கணிப்புகளை 'இது எனக்கானதாக இருக்காது' என்று தோன்றும். தன்னைப் பற்றி அப்படி எண்ணாததால். சுய மதிப்பீடு என்பது சற்று சிரமமான காரியம். எல்லோருமே பிறரைத்தான் அதில் தேடுவார்களா? அல்லது ஒரு ஃபோட்டோ ஆல்பம் வந்தால் அதில் தான் எங்கிருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்று தன்னையே எல்லாவற்றிலும் தேடுவார்களா!
பதிலளிநீக்குயார் யார் யார் அவர் யாரோ?
பதிலளிநீக்குகொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி! இது ஒண்ணுதான் புரிஞ்சது! மத்ததெல்லாம் புரியலை! ஏனெனில் நான் எழுதுவதை வைத்தெல்லாம் மனிதர்களை எடைபோடும் அளவுக்குத் திறமைசாலி இல்லை. :)))))
பதிலளிநீக்குமுழுமையாக நிறுத்தி உணர்ந்து படித்தேன் ஐயா ஏதேதோ... யார் யாரோ நினைவில் வந்து மறைகின்றார்கள் சொல்லத்தான் தெரியவில்லை
பதிலளிநீக்குஇருப்பினும் எழுத்தை வைத்து சிலரின் குணங்களை மதிப்பிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நல்லதொரு உளவியலான அலசல் இன்னும் தொடருங்களேன்....
மண்டைக் காய்கிறது ,க்ளு கொடுக்க முடியுமா :)
பதிலளிநீக்குதாங்களே இவர்கள் யார் யார் என்பதைச் சொல்லிவிடுங்கள் ஐயா
பதிலளிநீக்குஅனைத்தும் நீங்கள் தான் ஐயா...
பதிலளிநீக்குமற்றவரின் இடத்தில் இருந்து யோசிப்பவன் அடியேன்...
உங்களைப் போல் அல்ல...!
நன்றி...
அப்படிப் போடுங்க DD சார்.😊
நீக்குஅப்படிப் போடுங்க DD சார்.😊
நீக்குநல்ல அலசல்.
பதிலளிநீக்குஎல்லோரையும் தெரியவில்லை. ஆனால் 5ம் 8ம் கொஞ்சம் புரிகின்றது. ஹஹஹ்
பதிலளிநீக்கு5 எங்களைப் பற்றியதோ.
8 கில்லர்ஜியோ என்பது எங்கள் அனுமானம்.
எங்கள் கருத்து. ஒருவரது குணத்தைப் பழகும் போதே கூட கணிக்க முடிவதில்லை. மனித குணங்கள் மாறிக் கொண்டே இருக்கும். சூழ்நிலைகளுக்கேற்ப. எனவே ஒருவரை நாம் ஜட்ஜ்மென்ட் செய்வது என்பது சரியா என்று தெரியவில்லை சார். நட்புகளிலும் உறவுகளிலும் அது நல்லதல்ல. ஏனென்றால் அப்படி ஜட்ஜ்மென்ட் செய்யும் போது நம் செயல்கள் அதைச் சார்ந்து இருக்கக் கூடும்.
எனவே நாம் முடிந்தவரை accept people as they are என்று இருந்துவிட்டால் மனம் குழப்பத்திற்கு, வீணான சிந்தனைகளுக்கும் உள்ளாகாது. நீங்கள் இறுதியில் சொல்லியிருப்பது போல..குறையில்லாத மனிதர்கள் யாரும் இல்லையே...என்பதே..
கீதா
எண் 9 இல் புத்தகப் பிரியர் என்பதாலும் அதிலுள்ள மற்ற விஷயங்கள் ஒத்து வருவதாலும் அது என்னை நினைத்து எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.நன்றி.
பதிலளிநீக்குஒரு சிலர் ஞாபகத்தில் வந்து போனாலும் முடிவுகளை அறியக் காத்திருக்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குஅது நீங்கள்தான் என்பது என் அனுமானம்))
பதிலளிநீக்குயாரைத்தான் தாங்கள் கூறுகிறீர்
பதிலளிநீக்குஎன்பது புரியவில்லை....
நம்மைதான் சொல்கிறாரோ என்று
எங்களில் சிலரின் உள்மனம்
கூறிக்ககொண்டே இருக்கிறது....
என்மனம் உட்பட...
சுவாரஸ்யமாகப் புதிர் போட்டுள்ளீர்கள், ஆனால் புதிரை விடுவிக்கத்தான் தெரியவில்லை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
சரிதான் . சில கணிப்புகள் பலருக்கும் பொருந்தும்தான் இதில் நம்மைத் தேடி அகப்படவில்லையெனின் நாம் அறிந்த பிறரைத் தேடலாம் சற்றுத் தூக்கலாக உள்ள குணங்கள் காட்டிக் கொடுத்துவிடும் இதில் சில க்லூக்களும் இருக்கலாம் சிலர் அவர்களைப் பற்றிய மதிப்பீடுகளை ரசிப்பதில்லை அதுவே நான் வெளியிடத் தயங்குவதன் காரணம் ஆனால் கொடுத்திருக்கு செய்திகளில் இருந்து வாசகர்கள் தெரிந்துகொண்டு தெரிவித்தால் அது தவறாக எண்ணப்படாது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குயார் யார் யார் அவர் அல்ல அவர்கள் யாரோ தெரியவில்லையா
பதிலளிநீக்கு@கீதாசாம்பசிவம்
நானும் தேர்ச்சி பெற்றவனல்ல. இருந்தாலும் சில அடையாளங்கள் காட்டிக் கொடுத்து விடும் உங்கள் யூகம் சரிபோல் தெரிகிறது தெளிவாகக் கூறாவிட்டாலும் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
உணர்ந்து வாசித்ததற்கு நன்றி உங்களுக்கு உங்களைஅடையாளம் தெரியவில்லையா ?
பதிலளிநீக்குபகவான் ஜி
க்லூ கொடுக்க முடியுமா?/ சில இடங்களில் கொடுத்திருக்கிறேனே வேண்டுமானால் பத்து பேரின் பெயரையும் வெளியிடலாம் அதிலிருந்து கண்டு பிடிக்க முடியுமா வருகைக்கு நன்றி ஜி
கரந்தை ஜெயக் குமார்
பதிலளிநீக்குநானே சொல்லி விட்டால் சுவாரசியம் போய் விடுமே வேண்டுமானால் பத்துபேரின் பெயரையும் சொல்லட்டுமா.?வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன் இது என்னைப் பற்றிய கணிப்பு அல்ல. என்னைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறேன் புதிரான பின்னூட்டம் டிடி சார்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
நீங்கள் தொடர்ந்து படிக்கும் பதிவரும் இருக்கிறார் கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
உங்கள் யூகத்தில் ஒன்று சரி 8-ல் கில்லர் ஜி இல்லை.
மனித குணங்கள் அடிப்படையில் மாறாது என்றே எண்ணுகிறேன் ஒருவரது குணம் தெரிந்தால் அதற்கேற்ப நாமும் நடந்து கொள்ளலாம் அல்லவா ஆனால் ஜட்ஜ்மெண்ட் எல்லாம் இல்லைஎந்த வீணான குழப்பமும் சிந்தனையுமில்லை. குறை என்று ஏன் நினைக்கவேண்டும் நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் அவ்வளவே இதில் கூறி இருக்கும் குறைகள் என்று தோன்றுவது யாரையும் காயப்படுத்த அல்ல வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
ஒரு வார்த்தை உங்களை அடையாளப்படுத்திவிட்டதா. பாராட்டுக்கள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
யார் யார் நினைவுக்கு வருகிறார்கள் என்றாவது கூறலாமே வருகைக்கு நன்றி குமார்
பதிலளிநீக்கு@ தனிமரம்
பத்திலும் நான் இல்லை என்று சொல்ல முடியாதுஆனால் கூறப்பட்டவர்களில் நான் இல்லை. வருகைக்கு நன்றி சார்
@ அஜய் சுனில்குமார் ஜோசப்
பதிலளிநீக்குபத்திலும் நிச்சயமாக நீங்கள் இல்லை. உங்களைக் கணிக்கும் அளவுக்கு உங்கள் பதிவுகளை நான் இன்னும் படித்ததில்லை. வருகைக்கு நன்றி சார்
என் பதிவுகளை படித்து பாருங்கள் ஐயா கிறுக்குத்தனமானதாகவே இருக்கும்.....
நீக்குநன்றி ஐயா....!!
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
புதிர் இல்லை ஐயா வெறும் அனுமானங்களே கண்டுபிடிப்பதில்தான் சுவாரசியம் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ அஜய் சுனில்கர் ஜோசப்
கூடிய மட்டும் வருவேன் எழுத்துக்கள் ஈர்த்தால் அடிக்கடி வரலாம் எழுதுவது கவிதையாய்த் தான் இருக்கவேண்டும் என்றில்லை/ புரிந்து கொள்ளும் அளவுக்கு எழுதுங்கள் வாழ்த்துக்கள்
சரி ஐயா....
நீக்குஒரு க்லூ கொடுத்தாலும் கண்டுபிடிக்கிறதுக்கு அம்புட்டு அறிவெல்லாம் கிடையாது அய்யா...
பதிலளிநீக்குஒரு க்லூ கொடுத்தாலும் கண்டுபிடிக்கிறதுக்கு அம்புட்டு அறிவெல்லாம் கிடையாது அய்யா...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வலிப்போக்கன்
அறிவெல்லாம் தேவை இல்லை நண்பரே சிலரது பதிவுகளை பின்னூட்டங்களை ஊன்றிப் படித்தால் போதும் வருகைக்கு நன்றி
உங்கள் அலசல் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன், எதிலும் நான் இல்லை.😊😱😖
பதிலளிநீக்குஉங்கள் அலசல் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன், எதிலும் நான் இல்லை.😊😱😖
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ சிவகுமாரன்
என் அலசலில் உங்களை அடையாளம் தெரிய வில்லையா.You must do some introspection .
பதிலளிநீக்கு@ சிவகுமாரன்
/அப்படிப் போடுங்க டிடி சார் / டிடி-க்குகான மறு மொழி பார்க்கவும்
நன்றி சிவகுமாரா
நீங்களே சொல்லிவிடுங்களேன்!
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
பதிலளிநீக்குநானே சொல்லிவிட்டால் சுவாரசியம் குறைந்து விடும் இருந்தாலும் இதி இருப்போர் எல்லோரது பெயர்களையும் கூறு கிறேன் யார் யார் என்று அனுமானித்துக் கொள்ள முடிகிறதா பாருங்கள்
சிவகுமாரன், டாக்டர் கந்தசாமி. திதமிழ் இளங்கோ. துளசிதரன் தில்லையகத்து, ஜீவி. கீதா சாம்பசிவம் மோகன் ஜி, கில்லர் ஜி. ஹரிணிமுத்து நிலவன்
இவர்களின் பெயர்கள் கொடுத்துள்ள பதிவர்களின் வரிசைப்படி இல்லைபார்ப்போம் எத்தனை பேர் முயற்சிக்கிறார்கள் என்று.
நான் எழுதுவதே மாதத்துக்கு ஒன்று இல்லை.இரண்டு.
பதிலளிநீக்குமற்றவர்களை அலசவும் அவ்வளவாகத் தெரியாது. அதனால்
உங்கள் பதிவை மிக மதிக்கிறேன் சார்.
பதிலளிநீக்கு@ வல்லி சிம்ஹன்
வருகைக்கு மிக்க நன்றி மேம் நீங்கள் எழுதாவிட்டாலும் வாசிக்கிறீர்கள் அல்லவா?எவ்வளவு உன்னிப்பாக வாசிக்கிறோம் என்பது தெரியும்
பத்து பேரின் பெயரையும் அறியக் காத்திருக்கிறோம் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
திரு நடன சபாபதிக்கான மறு மொழியில் பத்து பேரின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறேனே ஐயா பாருங்கள் நன்றி
ஜிஎம்பீ சார்!
பதிலளிநீக்குஉங்கள் அனுமானங்கள் பிர்மாதம்.
பத்து குறிப்புகளில் ஒவ்வொரு குறிப்பிலிருந்தும் ஒரு வரி எடுத்துக் கொண்டால் உங்களைப் பற்றிய அனுமானம் துல்லியமாகக் கிடைத்து விடுகிறதே!
குறிப்பு: க்ஷ்ட நஷ்டம் அறியாதவர், வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடியவர், தாழுவு மனப்பான்மை கொண்டவராய் இருப்பாரோ, பிள்ளைப்பூச்சி ஓவர் மரியாதை தருகிறாரோ போன்ற வார்த்தைகள் வரும் வரிகளை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
2. ஒவ்வொரு குறிப்பிலிருந்தும் ஒரு வரி தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-- இவையே கண்டிஷன்கள்.
@ ஜீவி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார். ஸ்ரீராமின் பின்னூட்டம் சரியே. பெரும்பாலான கணிப்புகள் பலருக்கும் பொருந்தும் விதமாக இருக்கும் ஜோசியர்கள் பிழைப்பே அதிலிருந்து தானே இந்த பத்து கணிப்புகளிலும் நானும் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட நபர்களிடம் சற்று தூக்கலாக எனக்குத் தெரிந்த குணாதிசயங்களே பதிவுக்கு ஆதாரம் மீண்டும் நன்றி
அதெல்லாம் போகட்டும், சார்! உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அதைக் கூட இன்னொருத்தர் சொல்ல வேண்டுமா, என்ன? இன்னொருத்தர் சொன்னாலும் அதுவே அபத்தமாகப் போய்விடும். நமக்கு நாமே நீதிபதி. அதான் சரி.
பதிலளிநீக்குஉங்களது இந்தப் பத்துக் கணிப்பிலுமீருந்து உங்கள் சாய்ஸ் படி ஒரே ஒரு வரி மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு அனுமானத்தை எழுதிப் பாருங்களேன். அதில் உங்களை நீங்களே காணலாம். படித்துப் பார்க்க சுவாரஸ்யமாகவும் கிருக்கும். 100% அது தன்னைத் தானே ரசிக்கிற சுயரசனையாக இருக்கும்.
இன்னொன்று. இந்த பத்து கணிப்புகளுக்கும் மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அதில் ஏதாவது ஒரு வரி உங்களுக்குப் பொருந்தியதாக இருக்கும். ஏனெஹ்றால் உங்கள் மன இசைவுப்படி நீங்களே கோர்த்ததாக இருப்பதினால் தவறாமல் கண்ணாடியில் முகம் பார்க்கிற அவை ஒவ்வொரன்றிலும் நீங்கள் தெரிவீர்கள். அத்னால் தான் 'உடும்புப்பிடி' போன்ற வார்த்தைகள் உங்கள் கண்கிப்பில் வந்திருக்கின்றன. இது ஜோதிடக் கணிப்பு மாதிரி இல்லை. சுத்த சுயம்பிரகாச மனக்கணிப்பு.
ஆனால் கணிப்பு வரிக்சளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது 'தன் நெஞ்சு பொய்யற்க' என்னும் மனநிலையில் இருக்க வேண்டும். இந்த சுயபரிசோதனையை செய்து தான் பாருங்களேன்!
பதிலளிநீக்குமுதலில் படித்த உடனேயே No 1..தங்களைத்தான் குறிப்பதாக எண்ணினேன் ..
மாலி
இதில் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம்
பதிலளிநீக்குஎன்னிடம் உண்டு தவறியும் நிறைகள் ஏதும் இல்லை
எனவே நானில்லை என்பதில் வெகு திருப்தி
சுவாரஸ்யமான பதிவு
@ வி மாலி
பதிலளிநீக்குநெம் 1ல் கண்டுள்ள குணங்களில் என்னைக் காண்கிறீர்கள் இருந்தாலும் என்னை நினைத்து எழுதப்பட்டதல்ல வருகைக்கு நன்றி சார்
@ ரமணி
பதிலளிநீக்குபின்னூட்டத்துக்கான மறு மொழி ஒன்றில் பத்து பேர்களின் பெயர்களையும் கொடுத்திருக்கிறேன் அதில் நீங்கள் இல்லை வருகைக்கு நன்றி சார்