Sunday, March 20, 2016

பழையன புதுப்பொலிவுடன்


                                                      பழையன புதுப்பொலிவுடன்
                                                      ---------------------------------------


2014 –ம் ஆண்டு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் எனக்கு இருக்கும் ஹாபிகளில்  அறிந்தவர் குரல்களைப் பதிப்பித்துக்  கொள்வதும் ஒன்று. என்னிடம் இருபதுமுப்பது வருடத்து  பழைய டேப்புகளில் பலரது குரல்கள் பதிந்திருக்கின்றன. இப்போது சிலர்  உயிரோடு இல்லை  அவர்களது நினைவு வரும்போது அவர்களது குரல்களைக் கேட்பதில் ஒரு அலாதி திருப்தி ஏற்படும்  என் பேரக் குழந்தைகளின் மழலைக் குரல்களை இப்போது கேட்பதும் மிகவும் பிடிக்கும்
ஆனால் துரதிர்ஷ்டமாக என்னுடைய டேப் ரெகார்டர் பழுதாகி விட்டதாலும்  அதை ரிபேர் செய்ய யாரும் முன் வராததாலும்  அந்த மகிழ்ச்சியை இழக்க வேண்டி உள்ளது. என் வீட்டுக்கு வந்திருந்த பதிவர்கள் சமுத்ரா எனும் மது ஸ்ரீதர் திருமதி ஷைலஜா . திரு ஐயப்பன் போன்றோரது குரல்களும்  பதிவு செய்திருந்தேன் டாக்டர் கந்தசாமி ஐயா வந்தபோது அவரது குரலை டேப் செய்யவும்  அவருக்கு ஏற்கனவே பதிவாக்கி இருந்த குரல்களைப் போட்டுக்காட்டவும்  இயலாமல் என் டேப் ரெகார்டர் பழுதாகி இருந்தது செய்வது அறியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன்  அப்போது ஒரு நாள் என் பெரிய மச்சினனும்  அவனது மகனும் வந்திருந்தபோதும்  என்  புலம்பல் இருந்தது. என் மச்சினனின்  மகன் உடனே அமேஜான்நிறுவனத்துக்குத் தொடர்பு கொண்டு  ஒரு கருவியை ஆர்டர் செய்தான் இரு நாட்களில் அது வந்து விட்டது அதை வைத்துக் கொண்டு நான் குருடர்கள் யானையை அடையாளம் காண முயன்றது போல் சரியாக ஏதும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன் அவனை மீண்டும் வரவழைத்து அது பணி செய்யும் முறை பற்றிக் கேட்டேன்  அவன் சொன்னது எல்லாமே எனக்கு கிரீக்  லத்தீன் போல இருந்தது மீண்டும் ஒரு முறை அவனை வரவழைத்து அதை டெமான்ஸ்ட்ரேட்  செய்யச் சொன்னேன்  ஒரு சாஃப்ட் வேர் சிடி அதில் இருந்தது. அதை முதலில் என்  கணினியில் டௌன் லோட் செய்தான் அதுவே சிரமமானபகுதி  வாக்மானுக்கு வருவது போல் டேப்பை செருக ஒரு வசிi இருந்தது. டேப்பை அதில் ஓடவிட்டு  அதில் இருப்பதை என் கணினியில் ஏற்றினான்  பிரகு அதையே எம்பி 3  ஃபைலாக மாற்றினான்  இப்போது கணினியிலிருந்து  குரல்களை கேட்க முடியும்  தேவைப் பட்டால் பென்  ட்ரைவிலும்  சேமிக்கலாம்  ஆனால் என்ன.. ஒவ்வொரு டேப்பும் ஒன்றரை மணிநேரம் ஓடும் அதைப் பொறுமையாகக் கணினியில் ஏற்ற வேண்டும்  நான் நான்க டேப்புகளை ஏற்றி விட்டேன் எம்பி 3 வடிவில் அவை என் கணினியில் . அதை என் உறவினர்கள் வந்தபோது  போட்டுக் காட்டியபோ அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்  மச்சினன் மகனது சிறு வயதுக் குரலும்  அதில் அடக்கம்  எதையோ சாதித்து விட்டது போல் ஒரு உணர்வு. அந்தக் கருவியின் விலை ரூ.2500/- கணினியில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கேட்கலாம் என் பழைய பதிவில் பலரும் அவர்களிடம் இருக்கும்  பழைய டேப்புகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள் அவை ஒரு வேளை மார்க்கெட்டில் சீடிக்களாகக் கிடைக்கலாம்  ஆனால் அது உற்றார் உறவினர் குரல்களைக் கேட்பது போல் ஆகுமா ? 
 ஒரு முறை என் பழைய டேப் ரெகார்டரை ஓரளவு ரிபேர் செய்து  டேப்பினை ஓடவிட்டு அதில் வந்த குரல்களை என் கைபேசியில் பதிவு செய்து “ மறக்க முடியுமா -குரல்கள்” என்றொரு பதிவு எழுதி இருந்தேன் பார்க்க இங்கே சொடுக்கவும்                     


                   

 


36 comments:

 1. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். நன்று ஐயா!

  ReplyDelete
 2. இனிமையை தங்களின் எழுத்தில் உணர்கிறேன் அய்யா...

  ReplyDelete
 3. எங்கள் வீட்டிலும் இதுபோன்ற டேப்கள் உள்ளன. அந்தக் கருவி / ஸாஃப்ட்வேர் பெயர் சொல்லுங்கள்.

  ReplyDelete
 4. நெருங்கியவர்களின் குரல்களைப் பதிவு செய்யவும் அவற்றை பத்திரமாக சேமித்து வைக்கவும் எப்படியெல்லாம் சிரமப்பட்டிருக்கிறீர்கள்! அவற்றை பொக்கிஷமாக சேமித்து வைத்திருக்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்று புரியவில்லை!!

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா என்னிடமும் இந்தப்பழக்கம் அவ்வப்பொழுது உண்டு எனது குழந்தைகளின் மழலை மொழி எனது மனைவியின் பேச்சொலி அவ்வப்பொழுது கேட்பதுண்டு ஒலிநாடாவில்....
  மறக்க முடியுமா இணைப்புக்கு போகிறேன் ஐயா.

  ReplyDelete
 6. போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா
  இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
  நன்றி

  ReplyDelete
 7. உங்கள் முயற்சி பலன் தந்திருக்கிறது. ஸ்ரீராம் கேட்ட அதே கேள்வி எனக்குள்ளும். பதில் சொல்லுங்கள்.

  ReplyDelete
 8. குரல்களைப் பதிந்து வந்த வழக்கம் பாராட்டுக்குரியது.

  பத்து வருடங்களுக்கு முன் இந்த வசதியுள்ள ஃபிலிப்ஸ் டேப் ரெக்கார்டர் (+ சிடி ப்ளேயர்) வாங்கினோம் கேசட்களை mp3 ஆக மாற்றுவதற்கு. பாடல்களை ஓட விடும் போது அதிலிருக்கும் usb point_ல் pen drive_யைப் பொருத்தி mp3 ஆக்கிவிட முடியும். பிடித்தப் பாடல்களைப் பதிந்து வாங்கிய கேசட்கள் சிலவற்றை மட்டும் செய்தேன். மற்றவற்றில் வேண்டியதை மட்டும் பார்த்துப் பதியும் பொறுமை இருக்கவில்லை:). ஆனால் இப்போது எல்லாப் பழைய பாடல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றன.

  ReplyDelete

 9. @ கீதா சாம்பசிவம்
  ஆம் மேடம் இந்தக் குறை எனக்கு வெகுநாட்களாக இருந்தது மச்சினன் பையனுக்கு நன்றிஇப்போதெல்லாம் பழைய டேப்புகளை கணினியில் ஏற்றி கொண்டிருக்கிறேன் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி

  ReplyDelete

 10. @ திண்டுக்கல் தனபாலன்
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 11. @ ஸ்ரீ ராம்
  இந்தக் கருவி அமேஜானிலிருந்து ஆன்லைனில் வரவழைக்கப் பட்டதுsuper usb cassette capture என்று எழுதி இருக்கிறது மேலும் அட்டையில் ezcap என்றும் எழுதி இருக்கிறது உள்ளே ஒரு சிடி வைத்திருந்தார்கள் அதை கணினியில் ஏற்றியவுடன் audacity என்னும் ஐகான் வருகிறதுஅதில்தான் இதற்கான சாஃப்ட்வேர் இருக்கும் போலிருக்கிறது வாக்மானைப் போலவும் உபயோகிக்கலாம் பாட்டெரியில் ஆப்பரேட் ஆகும் ஆனால் இயர் ஃபோன் வைத்துத்தான் கேட்கமுடியும் எனக்கு இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை/ உங்களைப் போன்றோர் அமேசான் ஆன் லைனில் பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் பழைய பதிவு செய்த குரல்களைக் கேட்பதே ஆநந்தம் வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 12. @ மனோசாமிநாதன்
  உற்றாரின் நினைவுகளைப் பேணிக்காப்பதில் புகைப்படங்களும் குரல் பதிந்த டேப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனமுன்புபோல் ஃபில்மில் படமெடுத்து சேமித்தமாதிரி டிஜிடல் காமிராவில் எடுக்கும் படங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சி குறைவே வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 13. @ கில்லர்ஜி
  நினைவுகளை நிலைக்க வைக்கும் கருவிகள் வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete
 14. @ கரந்தை ஜெயக்குமார்
  இணைப்பில் என் பேரனின் அப்போது ஐந்து வயதிருக்கும் கலைஞரின் வீரத்தாய் வசனத்தையும் நான் 1977ல் உடல் நலமில்லாமல் இருக்கும் போது என் மக்களுக்கு அறிவுரையாக சில எண்ணங்களையும் பதிவு செய்திருந்தேன் அவையே மறக்க முடியுமா குரல்கள் பதிவு சுட்டிக்குச் சென்று பாருங்கள் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 15. @ வெங்கட் நாகராஜ்
  ஸ்ரீ ராமுக்குக் கொடுத்த மறு மொழியைப் பாருங்கள் ப்ளீஸ் . வருகைக்கு நன்றி. சார்

  ReplyDelete

 16. @ ராமலக்ஷ்மி
  பிரபலமானவர்களின் குரல்கள் சிடிக்களாகக் கிடைக்கலாம் நமக்கு வேண்டியவர்கள் குரலைப் பதிப்பித்து வைத்திருந்ததைப் பாராட்டுவதற்கு நன்றி மேம்

  ReplyDelete

 17. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று சும்மாவா சொன்னார்கள். தங்களின் முயற்சி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 18. @ வே நடனசபாபதி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 19. பழைய ரெக்கார்டிங்ஸ் உள்ள டேப்புகள், சிடிக்கள் மூலையில் தூங்கிக்கிடந்து பாழாகியிருக்கும்-இதுதான் பெரும்பாலானோரின் வீடுகளில் நடப்பது. உங்களுடைய கதை கொஞ்சம் வித்தியாசமானது! பிடித்தமானவர்களின் குரல்களை டேப்பில் வெகுநாட்களுக்கு வைத்திருந்து, அதனை ஒருவழியாக கம்ப்யூட்டருக்கு `மாற்றி`, கேட்டு மகிழ்கிறீர்கள். நன்று. (உங்களது அக்டோபர் 2014 பதிவின் ஆடியோ கேட்டுப்பார்த்தேன்.)

  ReplyDelete
 20. மறக்க முடியுமா பதிவில் உங்களின் குரலைக் கேட்டேன் ஐயா

  ReplyDelete
 21. ஸ்ரீராம். said...

  //எங்கள் வீட்டிலும் இதுபோன்ற டேப்கள் உள்ளன. அந்தக் கருவி / ஸாஃப்ட்வேர் பெயர் சொல்லுங்கள்.//

  ஒரு நல்ல டேப் பிளேயர் வேண்டும். Audacity software ஐ கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். பிறகு டேப்பை ஓடவிட்டு கணினியில் அந்த பாட்டுக்களையோ அல்லது பேச்சுக்களையோ பதியவேண்டும். அதை MP3 format ல் சேமித்துக்கொள்ளலாம். ஏதாவதொரு புரொக்ராம் மூலம் (Nero is good) அவைகளை சிடி யில் பதிவு செய்து கொள்ளலாம். பாட்டுகளின் தரம் நீங்கள் உபயோகிக்கும் டேப் பிளேயரைப் பொறுத்து இருக்கும்.

  மிகுந்த பொறுமை வேண்டும்.

  ReplyDelete

 22. @ ஏகாந்தன்
  அவர்களே மறந்து போயிருக்கும் நிகழ்வுகளை நினைவு படுத்தவும் அவர்கள் குரலைக் கேட்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியும் காண்பது இனிமையாய் இருக்கும் 2014-லின் ஆடியோவில் என் பேரன் 18 ஆண்டுகளுக்கு முன் பேசியதையும் 1977-ல் நான் உடல் நலமின்றி விஜயவாடாவில் இருந்தபோது என் மகன்களுக்கு அறிவுரையாகப் பேசியதும் இன்னும் பசுமையான நினைவுகளைத் தருகிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 23. @ கில்லர் ஜி
  அந்தக் குரல் 1977-ல் பதிவு செய்தது கேட்டதற்கு நன்றி ஜி.

  ReplyDelete

 24. @ டாக்டர் கந்தசாமி
  /ஒரு நல்ல டேப் பிளேயர் வேண்டும். Audacity software ஐ கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். பிறகு டேப்பை ஓடவிட்டு கணினியில் அந்த பாட்டுக்களையோ அல்லது பேச்சுக்களையோ பதியவேண்டும். அதை MP3 format ல் சேமித்துக்கொள்ளலாம்/ இதைத்தான் அமேசான் அனுப்பிய கருவி மூலம் செய்தேன் என்னிடம் இருந்த டேப் ப்ளேயர் பழுதடைந்து விட்டதாலும் அதை பழுது பார்க்க முடியாததாலும் இந்தக் கருவியை வாங்கினேன் சிடியில் அடாசிடி மென் பொருள் இருக்கிறது அதை கணினியில் நிறுவ வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா .

  ReplyDelete

 25. @ டாக்டர் கந்தசாமி
  அந்த சாஃப்ட்வேர் கருவியுடன் வரும் சிடியில் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 26. விடா முயற்சி செய்து வெற்றியும் பெற்றுவிட்டீர்கள். பழைய வீடியோ டேப்களை நம் ஊரிலேயே சிடிக்கு மாற்றித் தருகிறார்கள் என்று நினைக்கிறேன். பழையவற்றை புதிய தொழில் நுட்ப வடிவில் சேமித்து வைப்பது நல்லதுதான்

  ReplyDelete

 27. @ டிஎன்முரளிதரன்
  நான் பதிவிட்டிருப்பது ஆடியோ யேப்புகளை சேமிப்பது பற்றி வருகைக்கு நன்றி

  ReplyDelete
 28. எதையெல்லாம் எப்படியெல்லாம் சேமிக்கத் தோன்றுகிறது உங்களுக்கு! நல்ல ஐடியா.

  ReplyDelete
 29. தங்களது இம்முயற்சி எங்களுக்கு ஒரு பாடமாக உள்ளது. நன்றி.

  ReplyDelete

 30. @ அப்பாதுரை
  நீங்கள் வந்திருந்தபோது உங்கள் குரலைப் பதியத் தவறி விட்டேன் அப்படிச் செய்திருந்தால் உங்களை நினைக்கும் போதெல்லாம் உங்கள் குரலைக் கேட்டுக்கொண்டிருப்பேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 31. @ டாகடர் ஜம்புலிங்கம்
  நான் நினைத்ததை யாருடைய உதவியோடாவது செய்து முடிக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 32. Philips AZ1852/98 Portable CD Player can be used
  check amazon.in
  http://www.amazon.in/Philips-AZ-1852-Mp3-Player-Silver/dp/B007M6D8BS?tag=googinhydr18418-21&tag=googinkenshoo-21&ascsubtag=98e4356e-a2ae-423c-a607-eda30e146d06

  ReplyDelete

 33. @ பாபு.
  என் தேடல் முடிந்து விட்டது. பழைய ஒலி நாடாக்களை கணினியில் சேமிக்கத் தொடங்கி விட்டேன் ஒரு வேளை ஸ்ரீராமுக்கு உதவலாம் நன்றி சார்

  ReplyDelete
 34. இயந்திரமயமான இந்த டிஜிட்டல் வாழ்க்கையில பழச நெனச்சுப் பார்க்கறதுலதான் எவ்வளவு சந்தோஷம்.

  ReplyDelete

 35. @ அருள்மொழி வர்மன்
  இன்றைக்கும் நான் பலருடைய குரல்களைக் கேட்டு ரசிக்க முடியும் சில குரல்களின் சொந்தக் காரர்கள் இன்று எம்மோடு இல்லை. நினைத்துப் பார்ப்பதல்ல சார் கேட்டுப்பார்ப்பது....! வருகைக்கு நன்றி

  ReplyDelete