பழையன புதுப்பொலிவுடன்
---------------------------------------
2014 –ம் ஆண்டு பழையன கழிதலும் புதியன
புகுதலும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் எனக்கு இருக்கும் ஹாபிகளில் அறிந்தவர் குரல்களைப் பதிப்பித்துக் கொள்வதும் ஒன்று. என்னிடம் இருபதுமுப்பது
வருடத்து பழைய டேப்புகளில் பலரது குரல்கள்
பதிந்திருக்கின்றன. இப்போது சிலர் உயிரோடு
இல்லை அவர்களது நினைவு வரும்போது அவர்களது
குரல்களைக் கேட்பதில் ஒரு அலாதி திருப்தி ஏற்படும் என் பேரக் குழந்தைகளின் மழலைக் குரல்களை
இப்போது கேட்பதும் மிகவும் பிடிக்கும்
ஆனால் துரதிர்ஷ்டமாக என்னுடைய டேப் ரெகார்டர்
பழுதாகி விட்டதாலும் அதை ரிபேர் செய்ய
யாரும் முன் வராததாலும் அந்த மகிழ்ச்சியை
இழக்க வேண்டி உள்ளது. என் வீட்டுக்கு வந்திருந்த பதிவர்கள் சமுத்ரா எனும் மது
ஸ்ரீதர் திருமதி ஷைலஜா . திரு ஐயப்பன் போன்றோரது குரல்களும் பதிவு செய்திருந்தேன் டாக்டர் கந்தசாமி ஐயா
வந்தபோது அவரது குரலை டேப் செய்யவும்
அவருக்கு ஏற்கனவே பதிவாக்கி இருந்த குரல்களைப் போட்டுக்காட்டவும் இயலாமல் என் டேப் ரெகார்டர் பழுதாகி இருந்தது
செய்வது அறியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன்
அப்போது ஒரு நாள் என் பெரிய மச்சினனும்
அவனது மகனும் வந்திருந்தபோதும்
என் புலம்பல் இருந்தது. என் மச்சினனின் மகன் உடனே அமேஜான்நிறுவனத்துக்குத் தொடர்பு
கொண்டு ஒரு கருவியை ஆர்டர் செய்தான் இரு
நாட்களில் அது வந்து விட்டது அதை வைத்துக் கொண்டு நான் குருடர்கள் யானையை அடையாளம்
காண முயன்றது போல் சரியாக ஏதும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன் அவனை
மீண்டும் வரவழைத்து அது பணி செய்யும் முறை பற்றிக் கேட்டேன் அவன் சொன்னது எல்லாமே எனக்கு கிரீக் லத்தீன் போல இருந்தது மீண்டும் ஒரு முறை அவனை
வரவழைத்து அதை டெமான்ஸ்ட்ரேட் செய்யச்
சொன்னேன் ஒரு சாஃப்ட் வேர் சிடி அதில்
இருந்தது. அதை முதலில் என் கணினியில் டௌன்
லோட் செய்தான் அதுவே சிரமமானபகுதி
வாக்மானுக்கு வருவது போல் டேப்பை செருக ஒரு வசதிi இருந்தது. டேப்பை அதில்
ஓடவிட்டு அதில் இருப்பதை என் கணினியில்
ஏற்றினான் பிரகு அதையே எம்பி 3 ஃபைலாக மாற்றினான் இப்போது கணினியிலிருந்து குரல்களை கேட்க முடியும் தேவைப் பட்டால் பென் ட்ரைவிலும்
சேமிக்கலாம் ஆனால் என்ன.. ஒவ்வொரு
டேப்பும் ஒன்றரை மணிநேரம் ஓடும் அதைப் பொறுமையாகக் கணினியில் ஏற்ற வேண்டும் நான் நான்கு டேப்புகளை ஏற்றி விட்டேன் எம்பி 3
வடிவில் அவை என் கணினியில் . அதை என் உறவினர்கள் வந்தபோது போட்டுக் காட்டியபோது அவர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர் என் மச்சினன் மகனது சிறு வயதுக்
குரலும் அதில் அடக்கம் எதையோ சாதித்து விட்டது போல் ஒரு உணர்வு.
அந்தக் கருவியின் விலை ரூ.2500/- கணினியில் சேமித்து எப்போது வேண்டுமானாலும்
போட்டுக் கேட்கலாம் என் பழைய பதிவில் பலரும் அவர்களிடம் இருக்கும் பழைய டேப்புகள் பற்றிக்
குறிப்பிட்டிருந்தார்கள் அவை ஒரு வேளை மார்க்கெட்டில் சீடிக்களாகக் கிடைக்கலாம் ஆனால் அது உற்றார் உறவினர் குரல்களைக் கேட்பது
போல் ஆகுமா ?
ஒரு முறை என் பழைய டேப் ரெகார்டரை ஓரளவு ரிபேர் செய்து டேப்பினை ஓடவிட்டு அதில் வந்த குரல்களை என் கைபேசியில் பதிவு செய்து “ மறக்க முடியுமா -குரல்கள்” என்றொரு பதிவு எழுதி இருந்தேன் பார்க்க இங்கே சொடுக்கவும்
ஒரு முறை என் பழைய டேப் ரெகார்டரை ஓரளவு ரிபேர் செய்து டேப்பினை ஓடவிட்டு அதில் வந்த குரல்களை என் கைபேசியில் பதிவு செய்து “ மறக்க முடியுமா -குரல்கள்” என்றொரு பதிவு எழுதி இருந்தேன் பார்க்க இங்கே சொடுக்கவும்