நடப்பது என்றும் நலமாய் நடக்கும்..
---------------------------------------------------------
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
நடந்ததை எண்ணி அசை போட
நன்கே வாய்த்த புத்தாண்டே
உன் வரவு நல்வரவாகுக..
வேண்டத்தான் முடியும், எண்ணியபடி
மாற்றத்தான் முடியுமா.?
நடைபயிலும் அருணோதயத்தில்
வந்துதித்த ஞானோதயமா .?
வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று
நினைத்தாயோ என்றவனே
வாடிக்கை மனிதர்போல்தானே மாண்டுபட்டான்.
அவன் பாட்டின் தாக்கம் அது இது
என்றே கூறி பலன் பல பெறுவதே
பலரது நோக்கம் என்றானபின்
அவன் இருந்தபோது இல்லாத பெயரும் புகழும்
இறந்தபின் வந்தார்க்கென்ன லாபம்.?
எனக்கொரு நூறு இளைஞர்கள் தாரீர்
மாற்றிக்காட்டுகிறேன் இவ்வுலகை, -உள்ளப்
பிணியிலிருந்து அதை மீட்டுத்தருகிரேன்
என்றே சூளுரைத்த விவேகானந்தன்
கேட்டதனைப் பெற்றானா, இல்லை
சொன்னததனை செய்தானா.?
அக்கினிக் குஞ்சான அவர்தம் வார்த்தைகள்
வையத்து மாந்தரின் உள்ளத்தே
ஆங்காங்கே கணப்பேற்றி இருக்கலாம்
சில கணங்கள் உள்ளத்து உணர்வுகளை
உசுப்பேற்றி இருக்கலாம் - என்றாவது
அவனிதன்னை சுட்டுத்தான் எரித்ததா.?
நன்மையையும் தீமையும், இரவும் பகலும்,
நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்
இயற்கையின் நியதி.
கூடிப் புலம்பலாம், ஒப்பாரி வைக்கலாம்,
நடப்பதென்னவோ நடந்தே தீரும்.
நீயும் நானும் மாற்றவா முடியும்.?
எண்ணி மருகினும் இயலாத ஒன்று.
புத்தாண்டுப் பிரமாணம் ஏற்க
எண்ணித் துணிந்து விட்டேன்.
நாமென்ன செய்ய என்றே
துவண்டாலும்- நலந்தரும்
சிந்தனைகள் நம்மில் வளர்க்க
செய்யும் செயல்கள் நலமாய் இருக்கும்.
ஊரைத் திருத்த உன்னால் முடியாது,
முடியும் உன்னை நீயே மாற்ற
(நீ ஏமாற்ற அல்ல.)
எண்ணில் சொல்லில் செயலில்
நாளும் பொழுதும் நல்லவனாய் இரு.
நடப்பது என்றும் நன்றாய் நடக்கும்.
========================================
அன்புள்ள..
ReplyDeleteசரியான இலக்கிற்கு வந்துவிட்டீர்கள். மாற்றம் என்பது தனி மனிதனிடமிருந்ததான் உருவாக வேண்டும். தனி மனிதன் தன்னை ஒழுங்கமைவு செய்துகொண்டால் போதும். எல்லாமும் ஒழுங்குக்கு வந்துவிடும்.
Sir,
ReplyDeletePlease remove the word verification. It disturbs to write comments. Thank you.
திரு.ஹரணி அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிடும் வார்த்தை எங்குள்ளது. புரியவில்லையே. ஒரு முறை திரு.கலாநேசனும் இதே போல் கூறியிருந்தார்.தவறு ஏதேனும் இருப்பின் அது நான் செய்யாதது..பொறுத்துக்கொள்ளவும்
ReplyDeleteடாஷ் போர்ட் போங்க பாலு சார்.
ReplyDeleteஅமைப்புக்கள் என்ற தலைப்பில் கருத்துரைகள் என்ற பக்கத்தில் கருத்துக்களுக்குச் சொல் சரிபார்ப்பைக் காண்பிக்க வேண்டுமா?என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலைத் தேர்வு செய்து விட்டு பின் அப்பக்கத்தைச் சேமியுங்கள்.
ஹரணியும் கலாநேசனும் இனி பயமுறுத்த மாட்டார்கள்.
உடல் நலக் குறைவு.தாண்டிவிட்டேன்.வந்துவிடுவேன் நாளைமுதல்.
நீங்கள் நலமா பாலு சார்?
\\நாளும் பொழுதும் நல்லவனாய் இரு.
ReplyDeleteநடப்பது என்றும் நன்றாய் நடக்கும்///
---மிகச் சரியாக சொன்னிர்கள். யாருக்கும் தன் பின்புறத்திலிருந்து வரும் நாற்றம் தெரிவதில்லை . ஆனால் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
வெரிஃபிகேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன்.இனி யாரும் கருத்துகள் போட தயங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.நன்றி சுந்தர்ஜி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசிவகுமாரா.
ReplyDeleteசுந்தர்ஜி, உங்களை சில நாட்கள் காணாதது கவலை அளித்தது. தொடர்பு கொள்ள மின்னஞசல் முகவரி இல்லாததால் முடியவில்லை. என் முகவரி
gmbat1649@yahoo.in OR gmbat1649@gmail.com