-------------------------------------------------------------
சில நேரங்களில் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்
என்று தோன்றும்போது CAUSE-EFFECT அறிய விழைந்தேன்.
THOMAS.A.HARRIS அவர்கள் எழுதிய I AM OK-YOU ARE OK என்ற
புத்தகம் படிக்க நேரிட்டது. மனோதத்துவ நிபுணர்களால்
ஆராயப்பட்ட ,அறியப்பட்ட முடிவுகள் ,தெளிவுகள் எல்லாம்
புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன. அதில் காணப்பட்டுள்ள
விஷயங்களை சுருக்கமாகத் தொகுத்து இந்தப் பதிவில் வெளி
இடுகிறேன்.இந்தப் புத்தகத்தைப் படித்தறிந்தவர்கள் என் புரிதலில்
குறை இருந்தால் சுட்டிக் காட்டலாம்.
விவசாயப் பட்டதாரி ஒருவன் விவசாயம் பற்றிய விவரங்கள்
அடங்கிய புத்தகம் ஒன்றை விவசாயி ஒருவரிடம் அவர் அதை
வாங்குவாரா என்று விசாரித்தான். அதற்கு அவர் "தம்பி ,எனக்கு
விவசாயம் பற்றித் தெரிந்ததில் பாதி விவரங்களைக் கூட
என்னால் சரியாக உபயோகிக்க முடிவதில்லை .புத்தகம் படித்து
அறிந்தா இனி ....." என்றாராம். இந்தக் கட்டுரையின் நோக்கமும்
ஏன் மக்களுக்கு நல்லது அல்லாதது என்று தெரிந்த விஷயங்கள்
அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவது
இல்லை என்பதை ஓரளவு அலசுவதுதான்.
வாழ்க்கைமுறை அமைவது அவரவர் குணாதிசயங்களைப்
பொறுத்தது.இந்த குணாதிசயங்கள் அமைவதன் காரணம் என்ன.?
இந்த குணாதிசயங்கள்தான் என்ன.?அதை மாற்ற முடியுமா எனப்
பல கேள்விகள் எழுகின்றன. வல்லுனர்களின் ஆராய்ச்சிகளின்
முடிவின்படி மனிதன் அவனது வாழ்வியல் பரிமாற்றங்களின்
அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவது
இல்லை என்பதை ஓரளவு அலசுவதுதான்.
வாழ்க்கைமுறை அமைவது அவரவர் குணாதிசயங்களைப்
பொறுத்தது.இந்த குணாதிசயங்கள் அமைவதன் காரணம் என்ன.?
இந்த குணாதிசயங்கள்தான் என்ன.?அதை மாற்ற முடியுமா எனப்
பல கேள்விகள் எழுகின்றன. வல்லுனர்களின் ஆராய்ச்சிகளின்
முடிவின்படி மனிதன் அவனது வாழ்வியல் பரிமாற்றங்களின்
(TRANSACTIONS) போது அவனை நான்கு விதமாக வெளிப்படுத்திக்
கொள்கிறான். பரிமாற்றம் (transaction) எனப்படுவது, ஒருவரை
ஒருவர் எதிர்கொள்ளும்போது உபயோகிக்கும் வார்த்தைகள்
மற்றும் செய்கைகள் மூலம் புரிந்து கொள்வதாகும். இந்த நான்கு
வித வெளிப்பாடுகளை 1.நான் சரியில்லை-நீ சரி (I AM NOT OK. -
YOU ARE OK.) 2. நான் சரியில்லை- நீ சரியில்லை (I AM NOT OK -
YOU ARE NOT OK.) 3.நான் சரி- நீ சரியில்லை.(I AM OK. -YOU ARE
NOT OK) 4.நான் சரி- நீ சரி (I AM OK YOU ARE OK ) என்ற விதமாக
உளக்கூறு நிபுணர்கள் பிரித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி பரிமாற்ற வெளிப்பாடுகள்ஒருவனின் குணாதி
சயத்தைப் பொறுத்தே அமைகிறது..இந்த குணாதிசயங்கள்
ஒருவனது மூன்று வயதுப் பிராயத்துக்கு உள்ளேயே அவனது
மூளையிலும் ஆழ் மனதிலும் பதிவாகி விடுகின்றன .இந்த
குணாதிசயங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறியவன்
(CHILD) பெரியவன் (PARENT) அறிந்தவன் (ADULT) என்ற
முறையில் பதிவாகி வெளிப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் அதன் உயிருக்கும் ,உடலுக்கும்,
வாழ்வுக்கும் அது பிறருடைய உதவியையே நம்பி இருக்கிறது.
பெற்றோருடையவும் மற்றோருடையவும் அரவணைப்பு ,பாசம்
ஊக்கம் ,கண்டிப்பு, பரிசு, தண்டனை எல்லாமே குழந்தையின்
மூளையில் பதிவாகி விடுகிறது. இந்தப் பிராயத்தில் பதிவாகும்
அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெறும்
உணர்வுகளாகத்தான்(FEELINGS) இருக்கும்..உணர்வுகளாகப் பதிவு
ஆகும்விவரங்கள் பிற்காலத்தில் காணப்படும் குணாதிசயங்களுள்
முக்கிய பங்கு வகிக்கும். எதையுமே தன்னால் செய்ய முடியாத
குழந்தையிடம் , உணர்வுகளால் உந்தப்பட்டு நான் சரியில்லை
(I AM NOT OK.) என்ற உணர்வே மேலோங்கி நிற்கும் .இந்த
குனாதிசயத்தின் வெளிப்பாடு பிற்பாடு வளர்ந்த வாழ்விலும் அவர்
களிடம் சிறியவனாக (CHILD) தலை காட்டும்.
மூன்று வயதுக்குள் பதிவாகும் உணர்வுகளால் நான் சரி
இல்லை என்று எண்ணும் குழந்தை தன்னைச் சுற்றி இருப்பவர்
பற்றிய அனுபவங்களையும் மூளையில் பதிவாக்கிக் கொள்கிறது.
இப்படிப் பதிவாகும் உணர்வுகள் சுற்றியிருப்பவர்களின் மொழி,
செய்கை முதலியவற்றால் உணரப்படுகிறது..குழந்தையை
அரவணைபபவர்கள்,அதன் ஆதாரத் தேவையான உணவு ,உடை
போன்றவற்றைக் கொடுப்பதும், கொஞ்சுதல், பரிவு, கண்டிப்பு,
பரிசு, தண்டனை போன்றவற்றின் வெளிப்பாடுகள் அவர்களது
எதிர்பார்ப்புகளை தெரியப் படுத்துவது, எல்லாம் அவர்களைப்
பற்றிய உணர்வுகளாக குழந்தையின் மூளையில் பெரியவர்களின்
மூன்று வயதுக்குள் பதிவாகும் உணர்வுகளால் நான் சரி
இல்லை என்று எண்ணும் குழந்தை தன்னைச் சுற்றி இருப்பவர்
பற்றிய அனுபவங்களையும் மூளையில் பதிவாக்கிக் கொள்கிறது.
இப்படிப் பதிவாகும் உணர்வுகள் சுற்றியிருப்பவர்களின் மொழி,
செய்கை முதலியவற்றால் உணரப்படுகிறது..குழந்தையை
அரவணைபபவர்கள்,அதன் ஆதாரத் தேவையான உணவு ,உடை
போன்றவற்றைக் கொடுப்பதும், கொஞ்சுதல், பரிவு, கண்டிப்பு,
பரிசு, தண்டனை போன்றவற்றின் வெளிப்பாடுகள் அவர்களது
எதிர்பார்ப்புகளை தெரியப் படுத்துவது, எல்லாம் அவர்களைப்
பற்றிய உணர்வுகளாக குழந்தையின் மூளையில் பெரியவர்களின்
(PARENT) அம்சமாக பதிவாகிறது.
குழந்தைகள்பிறந்துவாழ்க்கையில்சிலகாரியங்களை
தானாகச்செய்யத்துவங்குகின்றன. மல்லாக்கப் படுக்க வைத்த
குழந்தைகள் உருளவும், தவிழவும், எழவும் நடக்கவும் செய்யத்
தொடங்கும்போது, தன்னால் முடியும் என்ற உணர்வு குழந்தை
இடம் பதிவாகும். கண்ணில் கண்ட பொருள்களை எடுத்தும்,
பிடித்தும், சுவைத்தும் தானாகவே சில முடிவுகளை எடுக்கும்.,
உணர்வுகளும் குழந்தையிடம் பதிவாகும். இந்த குணாதிசயம்
அறிந்தவன் (ADULT) என்று அறியப்படும்.
பிறந்து வளர்ந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறியவன் ,
பெரியவன், அறிந்தவன் (child,parent,adult) என்று எல்லோருடைய
குணாதிசயங்களும் இருக்கும். இந்த உணர்வுகள் பெற்றோரால்
கற்பிக்கப்பட்டதும் ,குழந்தையாக உணரப்பட்டதும் அல்லாமல்
தானாகவே அறிந்து கொண்டதுமாகும். உதாரணமாக தொடாதே
சுடும் என்பதை தொட்டுப்பார்த்து சுட்டுககொள்வது போலவும் ,
போகாதே, விழுவாய் என்பதை பொய் விழுந்து அறிந்து கொள்வது
போலுமாகும்.
பெரும்பாலும் புற உலகத் தொடர்பாக குழந்தைகள் வார்த்தை
களாக இல்லாமல் செய்கைகளாலேயே தெரிவிக்கின்றன.
பிற்கால வாழ்வியல் பரிமாற்றங்களில் ஒரு சிறியவனாக வெளிப்
படுவது கண்ணீர், உதடுகள் துடிப்பது, முகம் கோணுவது, திடீர்க்
கோபம் காட்டுவது, கண்களை உருட்டுவது, கீழ்நோக்கிப் பார்ப்பது ,
கேலி செய்வது, நகம் கடிப்பது, சிரிப்பது போன்ற உணர்வுகளே.
வார்த்தைகளாக வெளிப்படுவது,எனக்குத் தெரியாது,நான் நினைக்
கிறேன்,எனக்குக் கவலையில்லை, நான் செய்யப்போகிறேன்
போன்றவையே.
குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்களின் குணங்களாக
நெரித்த புருவம் ,கடித்த உதடு, சுட்டிக்காட்டும் விரல், தலை
ஆட்டல், கோபக் கண்கள், இடுப்பில் கை, மார்பில் கட்டிய கைகள் ,
பெருமூச்சுவிடல் , சப்புக்கொட்டுதல், போன்றவை சைகைகளாக
பதிவாகி இருக்கும். குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்
குணங்களாக அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் முக்கிய
மாக முட்டாள், போக்கிரி, உபயோகமில்லாதவன், சோம்பேறி,
ஐயோ பாவம் ,எத்தனை முறை கூறுவது, என்ன தைரியம்,
ஒரேயடியாய் நிறுத்துவேன், கட்டாயம் போன்றவைகளும்
பதிவாகி இருக்கும்.
மேற்கூறிய சிறியவன், மற்றும் பெரியவர் குணாதிசயங்கள்
வாழ்வியல் பரிமாற்றங்களில் நான் சரியில்லை, - நீ சரி,
நான் சரியில்லை, - நீ சரியில்லை என்ற முறையில் வெளிப்
படுகிறது.
வாழ்வியலின் மூன்றாவது பரிமாற்ற நிலையான நான் சரி-நீ
கிறேன்,எனக்குக் கவலையில்லை, நான் செய்யப்போகிறேன்
போன்றவையே.
குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்களின் குணங்களாக
நெரித்த புருவம் ,கடித்த உதடு, சுட்டிக்காட்டும் விரல், தலை
ஆட்டல், கோபக் கண்கள், இடுப்பில் கை, மார்பில் கட்டிய கைகள் ,
பெருமூச்சுவிடல் , சப்புக்கொட்டுதல், போன்றவை சைகைகளாக
பதிவாகி இருக்கும். குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்
குணங்களாக அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் முக்கிய
மாக முட்டாள், போக்கிரி, உபயோகமில்லாதவன், சோம்பேறி,
ஐயோ பாவம் ,எத்தனை முறை கூறுவது, என்ன தைரியம்,
ஒரேயடியாய் நிறுத்துவேன், கட்டாயம் போன்றவைகளும்
பதிவாகி இருக்கும்.
மேற்கூறிய சிறியவன், மற்றும் பெரியவர் குணாதிசயங்கள்
வாழ்வியல் பரிமாற்றங்களில் நான் சரியில்லை, - நீ சரி,
நான் சரியில்லை, - நீ சரியில்லை என்ற முறையில் வெளிப்
படுகிறது.
வாழ்வியலின் மூன்றாவது பரிமாற்ற நிலையான நான் சரி-நீ
\சரியில்லை (I AM OK, YOU ARE NOT OK), என்பதற்கான உணர்வு
மூன்று வயதிற்குள்ளேயே எப்படி பதிவாகி இருக்க முடியும்.?
பொதுவாக இந்தப் பதிவு, குழந்தைகளை எடுப்பது ,கொஞ்சுவது,
தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த்துவது குறைந்து, அடி, உதை
தண்டனை, கண்டிப்பு, போன்று குழந்தைகள், அலைக்கழிக்கப்
படும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்
நிலைக்கு தள்ளப்படும்போதும், அந்த துன்பங்களிலிருந்து மீளும்
போதும் நான்சரி,என்னை விடு, நீசரியில்லை என்ற உணர்வைப்
பெறுகிறார்கள்.இந்த நிலையில் இருந்தவன் ,பிற்காலத்தில்
எல்லோருமே சரியில்லாதவர்கள் என்ற நிலையில் நீடிக்கவே
விரும்புகிறான். அவனுள் பதிவாகி இருக்கும் பெரியவர் பற்றிய
உணர்வு அவனுடைய செயல்களுக்கு அனுமதி அழிப்பது போல்
இருக்கும்.
இனி வாழ்வியல் பரிமாற்றத்தில் (TRANSACTION)நான்காவது
நான் சரி-நீ சரி (I AM OK-YOU ARE OK) என்ற நிலைக்கு
வருவோம். இந்த நிலை மற்ற மூன்று நிலைகளில் இருந்து
மாறுபட்டது. மற்ற மூன்று நிலைகளும் அறியாப் பருவத்தில்
அறியாமலேயே ஊன்றப்பட்டது. பெரும்பாலோர் குணம் முதல்
நிலையையே நான் சரியில்லை, நீ சரி என்பதை ஒத்தே
இருக்கிறது. பெரும்பாலும் மாறுவதில்லை. துரதிருஷ்டவசமாக
சிலருக்கு இரண்டாம் நிலைக்கும், மூன்றாம் நிலைக்கும் மாறு
கிறது. இந்த வாழ்க்கையின் பரிமாற்ற நிலைகள் மூன்றாவது
வயதுக்குள்ளாகவே தீர்மானிக்கப்படுவதாக வல்லுனர்கள்
கருதுகிறார்கள்.
இந்த நிலைகள் குழந்தையில் உள்ள அறிந்தவன் (ADULT)
வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சி
யின் முடிவைத் தீர்மானிக்கிறது. முதல் மூன்று நிலைகளும்
உணர்வுகளால் தீர்மானிக்கப்படுகிறது. நான்காவது நிலை
எண்ணம், நம்பிக்கை, செயல்கள் மூலம் உருவாகிறது. முதல்
மூன்று நிலைகள் ஏன் என்பதன் விடையாக இருக்கும். நான்காம்
நிலை ஏன் கூடாது என்பதை செயல் படுத்துவதில் இருக்கும்.
ஆரம்ப கட்டத்தில் அவர்கள் சரி என்ற நிலைக்கு உட்படுத்தப்
பட்டு, அதை அவர்கள் காண்பிக்க வழிமுறைகளும் கொடுக்கப்
பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளே.
நான் சரி - நீ சரி என்ற நிலை உணர்வுகளால் ஏற்படுவது
அல்ல. எண்ணங்களாலும் சோதனைகளாலும் எடுக்கப்படுவது.
பரிமாற்றங்களில் சிறியவன் (CHILD) குணாதிசயம் ,பெரியவன்
) குணாதிசயம் வெளிப்படும்போது சாதாரணமாகத் தெரிய
வரும் செய்கைகளையும் வார்த்தைகளையும் ஏற்கனவே
பார்த்தோம். அதுபோல் அறிந்தவன் (ADULT) குணாதிசயம் அவன்
கண்களிலும் காணலாம். ஆழ்ந்த தீர்க்கமான படபடப்பில்லாத
நேரான பார்வை. வார்த்தைகளில் ஏன் , என்ன, எங்கு, எதற்கு, யார்,
எப்படி போன்றவற்றின் வெளிப்பாடாகவும், உண்மை, பொய்,
தவறு ,தெரியாது, நான் நினைக்கிறேன், என்பனவற்றின் மூலமும்
வெளிப்படுத்தப் படுகிறது. ஏற்கனவே பெரியவனில் (PARENT),
பதிவாகி இருக்கும் விவரங்களின் (DATA), அடிப்படையில்
அறிந்தவன் (ADULT) பிரித்து எடுக்கிறான்.
மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் கடந்து வந்திருந்தாலும்
நம்மில் பலர்,சரியில்லைஎன்ற நிலைப்பாட்டுடன் கூடிய, ஏதுமே
செய்ய இயலாத குழந்தையின் நிலையிலேயே வாழ்க்கையைக்
கழிக்கிறோம். உணர்வுகளால் பதிவாக்கப்பட்ட நிலைப்பாடுகளில்,
நான்சரியில்லை என்ற சிறியவனின் (CHILD),அணுகுமுறையை
ஏற்பவர்கள் நான் சரி,என்ற நிலைப்பாடுடைய அறிந்தவனின்
(ADULT),பரிமாற்றத்தை சாதாரணமாகத் தவிர்க்கிறார்கள்.
பரிமாற்ற அலசலில் மனிதர்களின் குணாதிசயங்களின்
காரணங்கள் தெரிய வரும்போது ,புரிதலும் அதிகரிக்கும்.
================================================
.
படிப்பும் அனுபவமும் கலந்த தெளிவான பதிவு. ஆனால் அனைவருக்கும் புரியும்படியான எளிய உதாரணங்களையும் சேர்த்து உங்களுக்கு நேரமிருப்பின் இன்னும் விளக்கலாமே அய்யா...
ReplyDeleteபடித்தேன். புரிந்து கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு
ReplyDeleteவாழ்வியலை சிறப்பாக ஆராய்ந்த கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteபின்னூட்டத்தில் கலாநேசன், டாக்டர் கந்தசாமி அவர்களின் கருத்துக்களைக் கண்டபோது, எனக்கு ,நான் இந்தப் பதிவை எழுதத்துவங்குமுன் எழுந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிறது. கனமான பொருளுடைய தலைப்பில் எழுதினால் படிப்பார்களா என்றும்,எழுதவருவதன் பொருள் போய்ச்சேருமா என்றும் மிகவும் யோசித்தேன். எழுதும்போது, கருப்பொருளின் ஆழ,அகலத்தைக் குறைக்காமல் நீளத்தைக் குறைத்தேன்.ஆழ அகலங்களை விளக்கப்போனால்,என்னுடைய சொந்த கருத்துக்களை தவிர்க்க முடியாது. அது நான் படிப்பவருக்கு இழைக்கும் அவமரியாதையாய் இருக்கும். ஒவ்வொரு குணாதிசயத்தையும் உதாரணங்களுடன் விளக்கினால், உதாரணங்களேகுணாதிசயமாக கருதப்படக் கூடும். நம் ஒவ்வொருவரிடமிருந்தும் வெளிப்படும் குணங்களுக்கு உள்ள ஆதார காரணங்களைக் கூறியுல்ளேன்.எதையும் சரியென்றோ தவறென்றோ முற்படுத்த முயலவில்லை. அடல்ட்- அடல்ட் ட்ரான்ஸாக்ஷ்னே சிறந்ததாயிருக்கும். அது மாதிரியான பரிமார்றங்கள் வளர இள வயதிலேயே வித்தூன்றி விட்டால்,பிற்காலத்தில் பயனிருக்கும்.
ReplyDeleteபரிமாற்றங்களின் விதங்கள் அறிந்தால் , நாமாகவே முயன்று, அறிந்தவன் - அறிந்தவன் பரிமாற்றத்துக்கு முயலலாம்.
மேலும் குழப்பி விட்டேனோ, தெரியவில்லை.
Sir,
ReplyDeleteMy dad's a 'Transactional Analysis' Specialist. I've had rare opportunities to attend a few of his presentations on TA. Had I not attended them before, or had I not been exposed to this field of study before, I would have not understood a word of your post. Same way- having known about the complexity and the depth in the subject dealt here, I'm amazed that this could presented in Tamil- so effectively! Kudos to you...
Will you permit me to share with you, the essence of TA as I've understood from my dad...
We can improve our interpersonal relationship- we must 1st introspect and understand who we are and we cannot change others, we can only change ourselves. While the 1st 3 are the unconscious 'position's- the 4th one-- "I'm OK-You're OK" is a conscious deliberate 'decision' by the "Adult". This involves unconditional acceptance of the other, for what he-she is and not for what he-she does. In fact, this is the position of a Sage; "the 'Child' is unconsciously a Sage and a Sage is consciously a 'Child'..."
Am I right, sir?
"I am not OK- You are OK"- fundamental position of most of us bcoz of physical reality of inadequacy. This could be termed as a 'suicidal' position- that is not necessarily physical suicide. it may take many forms like -under-playing our capabilities.
ReplyDelete"I am not OK- You are not OK"- therefore we both do not deserve to live. tendency of a 'terrorist'...
"I am OK- You are not OK"- therefore i only should live and you shouldn't live. so i will kill you-- homicidal/criminal position. (dad mentioned in one of his presentations about one Jeyaprakash who killed 9 members of his family in 5 hrs; and the Judge who handled the case had summed up the story of Jeyaprakash in one of the early issues of a prominent tamil weekly under the title-'or anaathaiyum onbathu kolaikalum'. and that a perusal of the story makes it clear of his unfortunate falling into the 3rd position...)
"I'm OK-You're OK"- acceptance of everybody/everything along with pluses and minuses-- a case of 'choice-less awareness', as J.Krishnamurthy would say...
Dr.Thomas Harris had attempted to do his research from his own observation. You might be delighted to know that deeper analysis exists in Ch.14 of Baghavath Geetha. You have to understand the verses from word to word translations offered and not through the explanation of any of the teachers. Subramania Bharathiyar's attempt is good I would say. It is a very big subject. Rajo, Sathva ,and Thamo are more realistic than Parent, Adult and Child. This may give raise to 7 transactional planes and one to one transaction can have 49 channels.(A little bit of set theory)
ReplyDeleteYou may kindly see my posting on communication in English. It will be posted in Tamil soon.
Matangi Mawley சொல்லியிருப்பதில் 'We can improve our interpersonal relationship' என்பது இந்த TA குறித்தான மிக முக்கிய பலன்.
ReplyDelete1994-லேயே இந்த TA பற்றியதான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். பணியாளர்--வாடிக்கையாளர் அலுவலகத் தொடர்பின் சிக்கல்களுக்கும், சிடுக்குகளுக்கும் இந்தப் பயிற்சி தீர்வளிக்கும் என்று பலமாக நம்பப்பட்டது. "I am O.K-- You are O.K" அந்தக் காலத்திலேயே எங்களிடையே மிகப் பிரபலமான வாசகம். ஒவ்வொரு நிலையையும், Child Ego, Parent Ego, Adult Ego என்று பிரித்துச் சொல்வோம். மனிதர்களின் மனங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட'மனவளக்கலை'யின் எனது ஆரம்பக்கல்வி இந்த TA பயிற்சியிலிருந்து தான் தொடங்கியது என்று நினைக்கிறேன்.
நானும் அந்த புத்தகத்தைப் படித்துள்ளேன்
ReplyDeleteஆயினும் இத்தனை எளிமையாக
அனைவரும் அறிந்து கொள்ளும்படி
சொல்ல முடியுமா என்பது சந்தேகமே
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
MY BASIC IDEA WAS TO JUST NARRATE HOW WHY TRANSACTIONS WE COME ACROSS TAKE PLACE. I HAVE KEFT IT TO THE READERS TO DWELVE ON THAT AND MAKE THEIR OWN CONCLUSIONS. IF YOUNG PROSPECTIVE PARENTS UNDERSTAND THIS THIS MIGHT HELP THEM BRING UP THEIR CHILDREN. ADULT -ADULT TRANSACTION IS DIFFICULT FOR WHICH YOU NEED TWO PEOPLE. THAT IS ASKING FOR THE MOON ,I FEEL. HOWEVER ADULT TRANSACTION FROM OUR SIDE WILL HELP BETTER UNDERSTANDING I APPRECIATE THE RESPONSES FROM JIVI, MAATHANGKI, USSS VENKAT, AND RAMANI. THANK YOU ALL.
ReplyDeleteஅந்த புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லை. வாசிக்க தூண்டும் பதிவு இது.
ReplyDeleteமனித குணம் செயல்களை அணுக்களின் உள்ளோட்டமும், வெளிச்சிதறலுமாய் இயங்கிக் கொண்டேயிருக்கிற தன்மையுடன் ஒப்பிடலாம். அதன் தன்மை மற்றும் தனித்துவம், அதனது இருப்பிடம், சூழல், இணையும் பொருள்கள், கையாளப்படும் முறை, காலம், நேரம்,வானிலை, மாசு சார்ந்தே மாறி மாறி அவை தன் தன்மைகளை வெளிப்படுத்துகின்றன.
ReplyDelete"பசித்த வயிற்றோடு வியாபர ஒப்பந்தங்கள் செய்யாதே" என்பது ஒரு உதாரணம்.
காலையில் டீ குடித்து பழகிய ஜப்பானியர்களுக்கு காபி கொடுத்து, ஜெட் லாக் சூழலில், சிட்னி ஷெல்டன் கதையின் முக்கிய எதிர்பாராத திருப்பத்தை ஒரு நாவலில் தருவார்.
இங்கும் ஒரு கேள்விப்பட்ட செய்தி. அண்ணன் மிக நல்லவன் எந்த கெட்ட வழக்கங்களும் இல்லாத பெர்பெக்ட் ஜென்டில்மேன். தம்பியோ தலைகீழ் பகை, புகை, மது, மாது, சூது என் அனத்தும் அணைப்பவர். இருவருக்குமே ரோல் மாடல் அவர்களது தந்தைதான். அவரும் தம்பியைப் போன்று எல்ல பழக்கமும் வழக்கமாய் கொண்டவர். தம்பி அவர் வழியிலும், அண்ணன் எதிர் வழியிலும் வாழ்வதாய் முடியும்.
என்னளவில் ஒவ்வொருக்குள்ளும் இந்த நான்கு (1.நான் சரியில்லை-நீ சரி (I AM NOT OK. -
YOU ARE OK.) 2. நான் சரியில்லை- நீ சரியில்லை (I AM NOT OK -
YOU ARE NOT OK.) 3.நான் சரி- நீ சரியில்லை.(I AM OK. -YOU ARE
NOT OK) 4.நான் சரி- நீ சரி (I AM OK YOU ARE ஓக் )) இருந்து சமய சூழலுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட கலவையில் அல்லது தனித்து வெளிப்படுகிறது என்பதே இந்தச் சூழலில் என் வெளிப்பாடு. உங்களைப் போன்றவர் பதிவில் தான் மனம் திறந்து எழுத முடியும், ரெம்ப உறுத்தானவர் வீடுகளில் வெறும் சாரத்துடன் இருத்தல் போல.
மனித குணங்களின் வெளிப்பாடு குறித்து எத்தனை கருத்துகள் வேண்டுமானாலும் இருக்கலாம். சரி, தவறு என்ற பேச்சுக்கே இடமில்லை. அயல் நாட்டு உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் நான் கற்றுக்கொண்டதை முடிந்த அளவில் எழுதியுள்ளேன்.அதில் முக்கியமானது பெரும்பாலும் இந்த குணாதிசயங்கள் மூன்று வயதுக்குள்ளேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான். இளைய தலைமுறையினர் இதனை அறிந்தால் பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தலாமே என்ற எண்ணமும் ஒரு காரணம்.திரு. வாசனுக்கு, என் பதிவு பற்றிய கருத்துகளை எதிர்மறையாக இருந்தாலும் தாராளமாக தெரிவிக்கலாம்.உண்மையில் மனம் திறந்து எழுதுவதை நான் வரவேற்கிறேன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றி.
ReplyDeleteநல்லதொரு ஆய்வுக்கட்டுரை. பாராட்டுக்கள்.
ReplyDelete