Friday, March 18, 2011

பெண் எழுத்து......தொடர்..

பெண் எழுத்து.......தொடர்
-----------------------------------

அன்புடன்  மலிக்கா,பெண் எழுத்து என்ற தலைப்பில் தொடர் 
எழுதி இருக்கிறார். தொடரைத் தொடர எதிர்மறையாக உள்ள 
ஆண்களிடம் கருத்து தொடர வேண்டி என்னையும் எழுத 
அழைத்துள்ளார். முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 
சாதாரணமாக எழுதுவது குறித்து எழுதச் சொன்னால் எழுதலாம்.
யாரும் கேட்காமலேயே எழுதியுமிருக்கிறேன். எழுதுபவர்களின்  
எழுத்துக்களையும் நோக்கங்களையும் விமரிசித்தும் இருக்கிறேன் 
அதில் ஆண் எழுத்தாளர்களும் பெண் எழுத்தாளர்களும் 
அடங்குவர்.(பார்க்க: பதிவு."எழுதுவது எழுதுவதின் நிமித்தம் --
படிப்பது படிப்பதின் நிமித்தம்")


எழுதுவதில் ஆண் எழுத்து பெண்எழுத்து எதுவும் இருப்பதாக நான் 
நினைக்கவில்லை. எழுத்துக்களின் வெளிப்பாடு எண்ணங்களின் 
வெளிப்பாடுதானே. அப்படிப் பார்க்கும்போது, சிந்திக்கும் விதமும் 
அணுகு முறையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமாகலாம். 
மனிதனின் குணாதிசயத்தைப் பொறுத்தே சிந்தனை அமையும். 
இந்த சிந்தனைகள் எல்லாம் பிறந்த மூன்று வயதுக்குள்ளேயே 
நிர்ணயிக்கப் படுகின்றன. இதைப்பற்றிய விரிவான பதிவை நான் 
எழுதிக்கொண்டு இருக்கிறேன். இதற்கு அடுத்தது அதுதான். 
சிந்தனைக்கு எல்லைக்கோடு கிடையாது. சிந்தனைகளை வெளிப் 
படுத்துவதில் வேண்டுமானால் எல்லைக்கோடுகள் இருக்கலாம். 
அந்த எல்லைக்கோடும் அவரவர் வளர்ந்த முறை, இருக்கும் சூழ் 
நிலை, வாழ்வைப் பற்றி விதைக்கப்பட்ட எண்ணங்களின் தாக்கம் 
போன்றவற்றின் பேரில்தான் இருக்கும். அதற்கு ஆண் பெண் 
பேதம் கிடையாது. 


ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும்.
நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரை
யும் நோகடிக்கும் நோக்கம் கூடாது  ஆனாலும் ஒன்றைக் குறிப்பிட
வேண்டும் .வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்
இறையுணர்வு பற்றிய எழுத்துக்களுடனும் படங்களுடனுமே
பதிவு இடுகிறார்கள். ஒன்று, இவை அவர்களாகவே வகுத்து
கொண்ட எல்லை கோட்டுக்கு உள்ளானதாக இருக்கும், இல்லை
அவர்கள் வேறு மாதிரி எழுத விரும்புவதில்லை, இல்லை
எழுதத் தெரிவதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நான் அப்படிக்
குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் எழுச்சி மிக்க , துடிப்புள்ள,
பகுத்துப் பார்க்கும் சிந்தனையுள்ள பெண்களின் எழுத்துக்களையும்
பார்க்கிறேன்.


மொத்தத்தில் எழுத்தை ஆண் எழுத்து ,பெண் எழுத்து என்று பகுத்து
பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.    












   
.      .   

21 comments:

  1. //ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும். நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரையும் நோகடிக்கும் நோக்கம் கூடாது. .......

    மொத்தத்தில் எழுத்தை ஆண் எழுத்து ,பெண் எழுத்து என்று பகுத்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. //

    சொல்ல வந்ததை மிக அழகாக தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.

    தான் எடுத்தாளுகிற கருத்துக்களை ஆணோ, பெண்ணோ, அந்தந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளில் வடித்துத் தருபவன் தான் சிறந்த எழுத்தாளன். எழுதுபவரின் வளர்ச்சிக்கேற்ப அவர் தம் சிந்தனைதான் வெளிப்படுகிறதே தவிர, இதில் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று எந்த பேதமுமில்லை.

    ReplyDelete
  2. தங்கள் கருத்தை வழக்கம்போல்
    எவ்வித குழப்பமுமில்லாமல்
    தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தாங்கள் முன்மொழிந்ததை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  4. நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.

    ReplyDelete
  5. ரொம்பவும் நாசூக்கா எழுதீட்டிங்க. நான் கொஞ்சம் தடாலடி கேஸ். என்னுடைய இன்றைய பதிவையும் பார்க்கவும்.

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன். மனதைப் புண்படுத்தாத, எந்த எழுத்தும், ஆக்க பூர்வமான எந்த எழுத்தும் ஆணோ பெண்ணோ

    யார் எழுதினாலும் படிக்க இனிமை.
    மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. நான் கேட்டுகொண்டதிற்கிணங்க பதிவிட்டமைக்கு.
    முதல் நன்றி அய்யா.

    //சிந்தனைக்கு எல்லைக்கோடு கிடையாது.//
    இல்லைவேயில்லை உண்மை


    //சிந்தனைகளை வெளிப்
    படுத்துவதில் வேண்டுமானால் எல்லைக்கோடுகள் இருக்கலாம்.
    அந்த எல்லைக்கோடும் அவரவர் வளர்ந்த முறை, இருக்கும் சூழ்
    நிலை, வாழ்வைப் பற்றி விதைக்கப்பட்ட எண்ணங்களின் தாக்கம்
    போன்றவற்றின் பேரில்தான் இருக்கும்//

    நிச்சயமான உண்மை.

    ReplyDelete
  8. //ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும்.
    நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரை
    யும் நோகடிக்கும் நோக்கம் கூடாது//

    அருமையான வார்த்தைகள்..


    வித்தியாசம் எழுதுக்களில் இல்லை அவரவர்களிலிருந்து வெளிப்படும் எண்ணங்களில் இருக்கிறது.

    மிக அருமையாக தெளிவாக தங்களின் வெளிப்பாடுகளை வெளிப்படுதியமைக்கு வாழ்த்துக்கள்..

    மிக்க நன்றி அய்யா..

    ReplyDelete
  9. இருபால‌ரின் குணந‌ல‌ன் ம‌ற்றும் செய‌ல்பாடுக‌ளின் மாற்ற‌ங்க‌ள் ஐந்து வய‌தில் தொட‌ங்கி அறுப‌துக‌ளில் தொட‌ங்கிய‌ இட‌த்திற‌கு (போத‌மின்மை நிலை) வ‌ந்துவிடுமோ? அறிவு த‌த்துவ‌ம் போன்ற‌ எழுத்துக்களில் (ஒளவை) ஆண், பெண் பேத‌ங்க‌ள் அதிக‌ம் தெரிவ‌தில்லை. ஆனால், உண‌ர்வு நிலைப்பாடு, ச‌முதாயப் பார்வை, அர‌சிய‌ல், பாலுண‌ர்வு , உட‌ற்கூறு,ப‌க்தி (ஆண்டாள்), ப‌திவு ஆகிய‌வ‌ற்றில் ஆண், பெண் என்ற‌ பேத‌ங்க‌ளின் வெளிப்பாடு ச‌ட்டென‌ மாறுப‌டுகிறதோ என்ப‌து என் ஐய‌ம் ஐயா.
    (சாரு, ம‌னுஸ்ய‌புத்திர‌ன் போல எழுதிவிட்டு ந‌ம் பெண்க‌ள் த‌ப்பித்து சென்றுவிட‌முடியுமா?)

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு ஐயா.//சிந்திக்கும் விதமும்
    அணுகு முறையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமாகலாம்.
    மனிதனின் குணாதிசயத்தைப் பொறுத்தே சிந்தனை அமையும்// மிகச்சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.

    //..வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்
    இறையுணர்வு பற்றிய எழுத்துக்களுடனும் படங்களுடனுமே
    பதிவு இடுகிறார்கள். ஒன்று, இவை அவர்களாகவே வகுத்து
    கொண்ட எல்லை கோட்டுக்கு உள்ளானதாக இருக்கும், இல்லை
    அவர்கள் வேறு மாதிரி எழுத விரும்புவதில்லை, // நான் வலையில் எழுத ஆர்ம்பிக்கும் பொழுதே ஆன்மீகம் பற்றி எழுதவே அரம்பித்தேன்.ஆரம்பத்தில்ட் ஓரிரு இடுகைகளைப்பார்த்தால் உங்களுக்கே புரியும்.நாளைடைவில் பிற இடுகைகளிலும் ஈடுபாடு ஏற்பட்டு விட்டது.இருந்தாலும் எனது ஆத்மதிருபதியை ஈடு செய்வதற்கு தனியாக அதற்கும் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete
  12. அன்பு வாசனுக்கு ,சிந்தனை ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமாகலாம். அது சிறு வயதில் அறியாப்பருவத்திலேயே சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப் படுகிறது. அது குறித்த பதிவே இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்,அந்த வயதிலும் பேதங்கள் மனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.கொஞசம் கடினமான கருவைப் பதிவில் இட முயல்கிறேன் அதைத் தவறாமல் படியுங்கள்.கமலா தாஸ் போன்றோரின் படைப்புகள் வரவேற்கப்பட்டிருக்கின்றன, விமரிசிக்கவும் பட்டிருக்கிறது.
    என் கருத்துகளை ஆதரித்து ஊக்கம் கொடுக்கும் அனைவருக்கும் என் நன்றி,தொடர்ந்து வருகை தந்து உற்சாகப்படுத்துங்கள் .

    ReplyDelete
  13. ஐயா,

    மிகவும் தெளிவுபடவும் எளிமையாகவும் கூறியிருக்கிறீர்கள். நிறைவான பதில். ஆனாலும் பல பெண் படைப்பாளிகள் நிச்சயம் வேறுபாடாகத்தான் எழுத்தை அணுகுகிறார்கள் என்பதை அவர்களின் படைப்புக்கள் அறிவுறுத்துகின்றன, இருப்பினும் ஆணாயினும் பெண்ணாயினும் எழுத்தில் பயணிக்கும்போது அவர்களின் இலக்கு என்பது ஒருமுகப்பட்டதாகவும் ஒருமித்தப் பொருண்மையும் கொண்டிருந்தால் போதும். நீங்கள் குறிப்பிட்டபோல எழுத்து நேர்மை குறைந்துகொண்டிருக்கிறது. மற்றவரைக் காயப்படுத்தலும் எழுத்தின் வன்மை என்பது தன்னுடைய அதிகப்பட்ச அறிவின் விலாசத்தை அறிவிப்பதும் என்பதுமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கும் சரியான பதிலை உங்களுடைய பதில் விளக்கியிருக்கிறது. அருமை. மனநிறைவு. நன்றிகள்.

    ReplyDelete
  14. நீங்கள் கூறி இருப்பது மிகவும் சரி ஐயா.இன்றுதான் உங்கள் வலைப்ப்க்கத்திற்கு வந்தேன்.தங்களது எழுத்துக்கள் வெளிப்படையாகவும்,அதே சமயம் மிகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன.வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  15. எப்போதும்போல் ஹரணி அவர்களின் பின்னூட்டம் உற்சாகம் தருகிறது.சில நேரங்களில் உங்கள் வருகை அருகையாகி (சரியான பதம்தானே.?) விடுகிறது. தொடர்ந்து வர வேண்டுகிறேன். ஜிஜி அவர்களுக்கு முதல் வருகைக்கு நன்றி. என் பழைய பதிவுகளையும் படித்துப் பாருங்கள். பிடிக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  16. ///வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்
    இறையுணர்வு பற்றிய எழுத்துக்களுடனும் படங்களுடனுமே
    பதிவு இடுகிறார்கள். ஒன்று, இவை அவர்களாகவே வகுத்து கொண்ட எல்லை கோட்டுக்கு உள்ளானதாக இருக்கும், இல்லை அவர்கள் வேறு மாதிரி எழுத விரும்புவதில்லை, இல்லை எழுதத் தெரிவதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நான் அப்படிக்
    குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் எழுச்சி மிக்க , துடிப்புள்ள, பகுத்துப் பார்க்கும் சிந்தனையுள்ள பெண்களின் எழுத்துக்களையும் பார்க்கிறேன்.///

    உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவே ஏற்றுக்கொள்கிறேன்:)

    ///மொத்தத்தில் எழுத்தை ஆண் எழுத்து ,பெண் எழுத்து என்று பகுத்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.///

    இதையும்:) உங்கள் கருத்து இதுவென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ஸாதிகா உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொல்வது:)

    ReplyDelete
  17. //ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும்.
    நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரை
    யும் நோகடிக்கும் நோக்கம் கூடாது //

    சரியாக சொன்னீர்கள். நானும் அதைதான் விரும்புகிறேன்.

    ReplyDelete
  18. மதுமிதா அவர்களுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவே ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். என் கருத்துதான் அது. யார் மீதும் திணிக்கவில்லையே. வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள். கோமதி அரசுக்கு, வருகைகு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  19. பெண் எழுத்து பற்றிய பகிர்வு அருமை.நானும் எழுதியிருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது கருத்து சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  20. தங்கள் கருத்தை வழக்கம்போல்
    எவ்வித குழப்பமுமில்லாமல்
    தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்
    பாராச்ட்டுக்கள்

    ReplyDelete