ஒரு இனிமையான சந்திப்பு
------------------------------------------
டாக்டர்
கந்தசாமிக்கும் எனக்கும் ஒரு அபூர்வ நட்பு இருக்க வேண்டும் முதலில் கோவையில் அவரது
இல்லத்தில் என் மனைவி தம்பி , தம்பி மனைவியுடன் சந்தித்தேன் நான் எழுத
ஆரம்பித்தகாலத்திலேயே. பதிவுலகில் என்னை ஒரு பிரபல பதிவராக்குகிறேன் என்று சொல்லி
இருந்தார். நான்தான் என் எழுத்து என்னைப் பிரபலம் ஆக்குவதையே விரும்புவேன் என்று
கூறி விட்டேன். திருச்சிக்குச் சென்று வை.கோபால கிருஷ்ணனை சந்தித்ததாக எழுதி
இருந்தபோது என்னை சந்திக்க வரமாட்டீர்களா என்று கேட்டேன் என்னைச் சந்திக்கவே பெங்களூர் வந்திருந்தார்.
அது பற்றி எழுதி இருந்தேன் எங்கள் நட்பு மோசி கீரனார் முரசுகட்டிலில் என்பது போல்
இருப்பதாக திரு, ஜீவி பின்னூட்டம் எழுதிய நினைவு இப்போது அது சரித்திரமாகி
விட்டது.
ஐயாவின் பேரன் பெங்களூரில் பிடியாட்ரிக் மருத்துவம்
ஸ்பெஷலைஸ் செய்கிறார். போன மாதம் பேரனைப் பார்க்க கோவையிலிருந்து காரில் துணைவியாருடன்
வர இருப்பதாகவும் ஜூலை ஏழாம் தேதி
வாக்கில் வருவதாகவும் அஞ்சல் அனுப்பி இருந்தார். நான் வரும் தேதியை உறுதி செய்யக்
கேட்டு எழுதி இருந்தேன் ஐந்தாம் தேதி காலை பெங்களூர் வருவதாகவும் காலை சுமார்
பதினொரு மணி அளவில் என் வீட்டுக்கு வருவதாக்வும் கூறினார். காலை பதினொரு மணி
என்பதால் என் மனைவியிடம் மதிய உணவுக்கு அவர்கள் இருப்பார்கள் என்று கூறி விட்டேன்
கலாசிபாளையம் பேரூந்து நிலையத்துக்கு ஆம்னி பஸ்ஸில் வந்து அவர்களது பேரனை
மருத்துவமனையில் பார்த்துவிட்டு. சிடி மார்க்கெட் பஸ்நிலையத்திலிருந்து பஸ் ஏறி
வீட்டுக்கு ஒன்றரை கி. மீ/ தூரத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ ஏறி துணைவியாருடன்
எங்கள் வீட்டுக்கு வந்தவரை வீடு அடையாளம் தெரிய வீட்டு வாசலில் நின்று வரவேற்றேன்
காரில் வருவதற்கு /ஓட்டுவதற்கு
அனுமதி மறுக்கப் பட்டது என்றும் அதனால் பஸ்ஸில் வந்ததாகவும் கூறினார் என் வீட்டில்
மராமத்து வேலைகள் நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டார் வந்தவர் சீக்கிரமே
திரும்புவதில் குறியாய் இருந்தார். என் மனைவி திருமதி கந்தசாமியுடன் உரையாடத்
தொடங்கி நல்ல நட்பைப்பெற்று விட்டார். மதிய உணவை சுமார் பனிரெண்டு மணிக்குப்
பறிமாறினாள். அதற்குள் நான் ஐயாவை எங்கள் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று சில
புகைப்படங்கள் எடுக்கக் கேட்டுக் கொண்டேன் அவரை நான் மொட்டை மாடிக்குக் கூட்டிப்
போனதற்கு என் மனைவி பிற்பாடு கடிந்து கொண்டாள். அவர் மாடியேறி இறங்கி வந்ததும்
களைத்து இருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லை,மதியம்
ஓய்வெடுக்க வேண்டும் என்றும் இன்னும் சில இடங்களுக்குப் போக வேண்டும் என்றும்
கூறினார். இதன் நடுவில் என் பேத்தி அவர்கள் வீட்டு நாய்க்குட்டி முழுங்கி இருந்த
நீச்சல் தொப்பியை நாய் வெளியேற்றி விட்டது என்ற சந்தோஷ சமாச்சாரத்தைத்
தெரிவித்தாள்,( அது பற்றி பிறிதொரு பதிவில் )உணவு முடிந்து ஒரு ஆட்டோவில் அவரை பஸ்
ஏறும் இடத்துக்கு அனுப்பி வைத்தோம் என்னைவிட மூத்தவர் சிரமம் பாராது
எங்களைப்பார்க்க வந்தது எங்களைப் நெகிழச் செய்துவிட்டது.இனி சில புகைப் படங்கள் திரு, கந்தசாமியின் காமிராவில் எடுத்தது
என் மனைவியும் கந்தசாமி தம்பதியரும் |
நானும் கந்தசாமித் தம்பதியரும் |
எங்கள் வீட்டுத் தென்னை--கந்தசாமி ஐயா எடுத்த படம் |
இனிய சந்திப்பு, நட்பு வாழ்க!
ReplyDeleteஇனிமையான சந்திப்பு
ReplyDeleteஅழகான படங்கள்...நன்றி ஐயா
V A Z T H U K A L
ReplyDeleteஒரு இனிய சந்திப்பை சுவைபட சொன்னமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய மகிழ்வான சந்திப்பு இல்லையா? படங்கள் நன்றாக வந்துள்ளது சார். கந்தசாமி ஐயாவின் முகம் சற்று வாடியது போல்தான் உள்ளது பயணக் களைப்பாக இருக்கலாம்...
ReplyDelete//நான் பயணிக்கப் போறேனே// என்ற உங்கள் வரிகள் ஒரு சிறு குழந்தையின் குதூகலத்தை வெளிப்படுத்தியது போல் உள்ளது சார்...ரொம்பவே ரசித்தோம்....
எனக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது. இப்படி ஐஸ் வைத்தால் ஜலதோஷம் மட்டுமா? நிமோனியா வந்தாலும் வரும். அப்படி வந்தால் வைத்தியச் செலவு முழுவதும் ஜிஎம்பி தலையில் கட்டுவேன்.
ReplyDeleteஇனிய சந்திப்பு... மிகவும் மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteபயணம் (எங்கே என்பது சொல்லவேயில்லை) இனிமையாக அமைய வாழ்த்துகள் ஐயா...
இந்தச் சந்திப்புப் பற்றி கந்தசாமி ஸார் பதிவிலும் படித்தேன். நட்புகள் வாழ்க.
ReplyDeleteதோளில் ஒரு துண்டுடன் நிற்பது உங்கள் பாணி என்று நான் உங்கள் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்!
:))))
மூத்த வலைப்பதிவர்களது இனிய சந்திப்பு நிகழ்ச்சி. படிப்பதற்கு மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteதங்களுடைய சந்திப்பு எமக்கும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..
ReplyDeleteபெரியவர்களின் நல்லாசிகள்..
என்றென்றும் நலம் வாழ்க..
படங்களுடன் சந்திப்புப் பதிவு அருமை
ReplyDeleteபயணமும் அது குறித்த பதிவுகளும் தொடர
வாழ்த்துக்கள்
இனிய சந்திப்பினை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா! பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது சந்திப்பைப் பகிர்ந்த விதம் அருமையாகஇருந்தது. தங்கள் பாணியில் அதனைப் படிக்கும்போது நாங்களும் உடன் இருந்ததுபோல உள்ளது. நன்றி.
ReplyDeleteஅழகான சந்திப்பு...
ReplyDeleteஇனிய சந்திப்பு அழகான நட்பு தாங்கள் பயணிப்பது எங்கே என்று அடுத்த பகிர்விள் சொல்லுங்க சார்!
ReplyDeleteஅருமையான சந்திப்பு. இந்தப் பதிவைப் பார்க்கவில்லை. அதனால் தான் நீங்கள் பயணத்தில் இருப்பதும் தெரியவில்லை. காணோமேனு நினைத்துக் கொண்டேன். சந்திப்பைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇனியஅழகிய படங்களும் சந்திப்பும் நல்ல நட்பு நெகிழ்ச்சியாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅழகான சந்திப்பு. அதைப் படங்களுடன் பதிவிட்டதும் சந்திப்பில் உண்டான சுவாரசியங்களைச் சொல்லிப்போனதும் ரசிக்க வைத்தது. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDelete@ கோமதி அரசு
வெகு நாட்களுக்குப்பின் வருகைக்கு நன்றி மேடம்
ReplyDelete@ உமையாள் காயத்திரி
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம்
ReplyDelete@ கில்லர்ஜி
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி.
ReplyDelete@ வே நடனசபாபதி
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
பயணம் போகும் குதூகலத்தைக் கண்டு பிடித்து விட்டீர்களே. பயணத்தில் துளசிதரனை சந்தித்தது மகிழ்ச்சி. அது பற்றிய பதிவு விரைவில்.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி. ஜலதோஷம் பிடித்தால் சிகிச்சை செய்ய வீட்டிலேயே மருத்துவர்கள் இருக்கிறார்களே. உங்களுக்கு மருத்துவம் இலவசமாயிருக்க நான் ஏன் செலவு ஏற்கவேண்டும்.? வருகைக்கு நன்றி ஐயா,
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
பயணம் முடிந்து விட்டது டிடி. அது பற்றிய பதிவு விரைவில். நன்றி.
ReplyDelete@ ஸ்ரீராம்
தோளில் துண்டுடன் இருப்பது என் பாணி அல்ல ஸ்ரீ. எனக்கு எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஜலதோஷம் வரலாம் அதற்கான முன் எச்சரிக்கையாக வீட்டில் இருக்கும் போது கைக்குட்டையுடன் இருப்பேன் கவனிப்பு போறாத நேரம் படம் எடுக்கப் பட்டது கூர்ந்து கவனிப்பதற்குப் பாராட்டுக்கள் ஸ்ரீ.
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
என் பயணத்தில் இரு இளைய பதிவரையும் சந்தித்தேன் அது பற்றிப் பிறகு. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ துரை செல்வராஜு
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.
ReplyDelete@ ரமணி
பயணம் பற்றிய பதிவு தொடரும் விரைவில்/ நன்றி சார்.
ReplyDelete!@ தளிர் சுரேஷ்
பயணம் முடிந்து திரும்பியாகி விட்டது ஐயா. வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி ஐயா.
ReplyDelete@ பரிவை சே குமார்
வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ தனிமரம்
பயணம் பற்றிய பதிவு விரைவில் ஐயா. வருகைக்குநன்றி.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
பயணம் முடிந்து வந்து விட்டேன் மேடம். வருகைக்கு நன்றி.
ReplyDelete!@ இனியா
இந்த சந்திப்பு என்னையே நெகிழச் செய்து விட்டது. வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ கீத மஞ்சரி
அடுத்து இன்னுமொரு பதிவரை சந்த்தித்தது பற்றி . வருகைக்கு நன்றி மேம் .