ஒரு இனிமையான சந்திப்பு
------------------------------------------
டாக்டர்
கந்தசாமிக்கும் எனக்கும் ஒரு அபூர்வ நட்பு இருக்க வேண்டும் முதலில் கோவையில் அவரது
இல்லத்தில் என் மனைவி தம்பி , தம்பி மனைவியுடன் சந்தித்தேன் நான் எழுத
ஆரம்பித்தகாலத்திலேயே. பதிவுலகில் என்னை ஒரு பிரபல பதிவராக்குகிறேன் என்று சொல்லி
இருந்தார். நான்தான் என் எழுத்து என்னைப் பிரபலம் ஆக்குவதையே விரும்புவேன் என்று
கூறி விட்டேன். திருச்சிக்குச் சென்று வை.கோபால கிருஷ்ணனை சந்தித்ததாக எழுதி
இருந்தபோது என்னை சந்திக்க வரமாட்டீர்களா என்று கேட்டேன் என்னைச் சந்திக்கவே பெங்களூர் வந்திருந்தார்.
அது பற்றி எழுதி இருந்தேன் எங்கள் நட்பு மோசி கீரனார் முரசுகட்டிலில் என்பது போல்
இருப்பதாக திரு, ஜீவி பின்னூட்டம் எழுதிய நினைவு இப்போது அது சரித்திரமாகி
விட்டது.
ஐயாவின் பேரன் பெங்களூரில் பிடியாட்ரிக் மருத்துவம்
ஸ்பெஷலைஸ் செய்கிறார். போன மாதம் பேரனைப் பார்க்க கோவையிலிருந்து காரில் துணைவியாருடன்
வர இருப்பதாகவும் ஜூலை ஏழாம் தேதி
வாக்கில் வருவதாகவும் அஞ்சல் அனுப்பி இருந்தார். நான் வரும் தேதியை உறுதி செய்யக்
கேட்டு எழுதி இருந்தேன் ஐந்தாம் தேதி காலை பெங்களூர் வருவதாகவும் காலை சுமார்
பதினொரு மணி அளவில் என் வீட்டுக்கு வருவதாக்வும் கூறினார். காலை பதினொரு மணி
என்பதால் என் மனைவியிடம் மதிய உணவுக்கு அவர்கள் இருப்பார்கள் என்று கூறி விட்டேன்
கலாசிபாளையம் பேரூந்து நிலையத்துக்கு ஆம்னி பஸ்ஸில் வந்து அவர்களது பேரனை
மருத்துவமனையில் பார்த்துவிட்டு. சிடி மார்க்கெட் பஸ்நிலையத்திலிருந்து பஸ் ஏறி
வீட்டுக்கு ஒன்றரை கி. மீ/ தூரத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ ஏறி துணைவியாருடன்
எங்கள் வீட்டுக்கு வந்தவரை வீடு அடையாளம் தெரிய வீட்டு வாசலில் நின்று வரவேற்றேன்
காரில் வருவதற்கு /ஓட்டுவதற்கு
அனுமதி மறுக்கப் பட்டது என்றும் அதனால் பஸ்ஸில் வந்ததாகவும் கூறினார் என் வீட்டில்
மராமத்து வேலைகள் நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டார் வந்தவர் சீக்கிரமே
திரும்புவதில் குறியாய் இருந்தார். என் மனைவி திருமதி கந்தசாமியுடன் உரையாடத்
தொடங்கி நல்ல நட்பைப்பெற்று விட்டார். மதிய உணவை சுமார் பனிரெண்டு மணிக்குப்
பறிமாறினாள். அதற்குள் நான் ஐயாவை எங்கள் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று சில
புகைப்படங்கள் எடுக்கக் கேட்டுக் கொண்டேன் அவரை நான் மொட்டை மாடிக்குக் கூட்டிப்
போனதற்கு என் மனைவி பிற்பாடு கடிந்து கொண்டாள். அவர் மாடியேறி இறங்கி வந்ததும்
களைத்து இருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லை,மதியம்
ஓய்வெடுக்க வேண்டும் என்றும் இன்னும் சில இடங்களுக்குப் போக வேண்டும் என்றும்
கூறினார். இதன் நடுவில் என் பேத்தி அவர்கள் வீட்டு நாய்க்குட்டி முழுங்கி இருந்த
நீச்சல் தொப்பியை நாய் வெளியேற்றி விட்டது என்ற சந்தோஷ சமாச்சாரத்தைத்
தெரிவித்தாள்,( அது பற்றி பிறிதொரு பதிவில் )உணவு முடிந்து ஒரு ஆட்டோவில் அவரை பஸ்
ஏறும் இடத்துக்கு அனுப்பி வைத்தோம் என்னைவிட மூத்தவர் சிரமம் பாராது
எங்களைப்பார்க்க வந்தது எங்களைப் நெகிழச் செய்துவிட்டது.இனி சில புகைப் படங்கள் திரு, கந்தசாமியின் காமிராவில் எடுத்தது
| என் மனைவியும் கந்தசாமி தம்பதியரும் |
| நானும் கந்தசாமித் தம்பதியரும் |
| எங்கள் வீட்டுத் தென்னை--கந்தசாமி ஐயா எடுத்த படம் |