இராராவின் நினைவுகளில்
------------------------------------------
( சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் )
மணிராஜ் எனும் வலைத்தளத்தில் பதிவுகள்
வெளியிட்டு வந்த திருமதி இராஜராஜேஸ்வரி
மறைந்த செய்தியை அவரது வலைத்தளத்திலேயே
அவரது மகன்களும் மகள்களும் வெளியிட்டிருந்தார்கள் தமிழ்வலை உலகில்
தனக்கென
ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட திருமதி இராராவின் மறைவு ஈடு செய்ய இயலாதது
கோவில்கள் பற்றியும் அதன் விசேஷங்கள் பற்றியும் அழகான படங்களுடன் பதிவிடும்
இராராஅவர்கள் என்னில் சில நினைவுகளைத் தூண்டிச் செல்கிறார் நான் பதிவெழுத
ஆரம்பித்த சில நாட்களிலிருந்தே
என்பதிவுகளைப் படித்துக் கருத்திடுவார் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற என்
ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது 2011-ன் கடைசி நாட்களில், நான் படித்த
பள்ளிக்கூடம் வாழ்ந்த இடங்கள் என்று பார்த்துவர நீலகிரிக்குச் சென்றிருந்தேன்
திரும்பி வரும் போது கோவையில் ஐயா கந்தசாமியையும் சந்தித்தேன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதிருமதி கோவை
வாசிதானே அவரைச் சந்திக்க முடியுமா, முகவரிகிடைக்குமா என விசாரித்தேன் . அதற்கு அவர் பொதுவாக திருமதி
இராரா யாரையும் சந்திக்க விரும்பமாட்டார் என்று கூறிவிட்டார்
ஒரு
பதிவில் ஆஸ்திரேலியா பற்றி நிறைய எழுதி இருந்தார் அவர் கோவையில் இருந்து அத்தனைப்
படங்களுடன் ஆஸ்திரேலியா பற்றி எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்
வாசம் கோவைதான் என்றாலும் மனம் ஆஸ்திரேலியாவில் அவருடைய மகனிடம்தான் என்று எழுதினார்
ஒருமுறை
என் பதிவில் எங்கள் ஊருக்கு அருகே ஏதோ ஒரு ஊரில் குதிரை வாகனத்துடன் சுவாமி ஓட்ட
உலா நடக்கும் அந்த ஊரின் பெயர் தெரியவில்லை என்று பூவனம் ஜீவி எழுதி இருந்தார்
அந்த ஊரின் பெயரைக் குறிப்பிட்டு இராரா
பதிலெழுதினார் அதை அப்பாதுரையும் ஜீவியும் சிலாகித்து எழுதினது நினைவுக்கு
வருகிறது
நான் சுடோகு என்னும் கணக்குப் புதிர் ஒன்றை
வெளியிட்டு வாசகர்களிடம் அதை சால்வ் செய்யக் கேட்டிருந்தேன் மிகவும் கடினமான புதிர் அது அப்பாதுரையும்
இராராவும் சரியாக சால்வ் செய்திருந்தார்கள் அதற்கு பதிலாக நான் அவர்களுக்கு
ஜீனியஸ் என்னும்பட்டப் பெயர் கொடுத்தேன்
புதுகை
வலைப் பதிவர் விழாவுக்கு வருகை தர பெயர்
கொடுத்திருந்தவர்களில் இராராவும் ஒருவர் . என் நீண்ட நாளைய விருப்பம் பூர்த்தியாகும்
என்று எண்ணி இருந்தேன் ஆனால் ஏனோ அவர்கள்
வரவில்லை. பல நாட்களாகப் பதிவோ
பின்னூட்டமோ இல்லாதிருந்ததால் அவருக்கு நலம் விசாரித்து அஞ்சல் அனுப்பினேன் இரத்த
அழுத்த நோய் காரணமாக மருத்துவ மனையில் இருந்து ஏழு மாதங்களுக்குப் பின் நலமாகி
வந்திருப்பதாக பதில் எழுதினார் அதன் பின் அவ்வப்போது சில பதிவுகளும் வெளியிட்டார்
ஒரு முறை சாட்டுக்கு அவரை அழைத்திருந்தேன் ஓரிரு கேள்விகளுக்கு மிகவும்
சுருக்கமாகப் பதில் தந்தார் ஏனோ விரும்பவில்லை என்று விட்டு விட்டேன் அவருடைய
புகைப்படத்தை திரு தி தமிழ் இளங்கோவின் பதிவில்தான் முதன் முதலாகப்
பார்க்கிறேன் என் மனைவிக்கும் காட்டினேன் அவளுக்கு இராராவின் மீது தனி மரியாதை உண்டு.
சில நினைவுகளை அசை போடுவது தவிர ஏதும் செய்ய
இயலவில்லை. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பார்த்ததே இல்லை அவரை என்றாலும் நெருங்கிய நட்பை இழந்த உணர்வு. சிறந்த மனுஷி.
ReplyDeleteஅவருடைய் பதிவுகள் அனைத்தையும்
ReplyDeleteநான் படித்து விடுவேன்
பின்னூட்டமும் இட்டு விடுவேன்
சில சமயங்களில் பின்னூட்ட மிட முடியாது போகும்
ஆனாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே
என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தருகிறார்ப்போல
தினம் ஒரு பதிவு அவர் கொடுத்துக் கொண்டிருந்தது
ஆச்சரியப்படுத்துவதாகத்தான் இருக்கிறது
ஒரு சமயம் பதிவுக்கென தனியாக
ஊழியர்களை வைத்து அலுவலகம் வைத்திருக்கிறீர்களா
எனக் கூட பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்
நிச்சயம் அவருடைய இழப்பு
பதிவுலகிற்கு ஓர் பேரிழப்பே
அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
ஆன்மீகப் பதிவர் திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகளும்....
ReplyDeleteஆழ்ந்த அஞ்சலிகள்.
ReplyDeleteபடங்கள், தகவல்களைத் தேடிச் சேகரித்து அர்ப்பணிப்புடன் பதிவுகள் தந்து வந்தார்.
அவருடைய புகைப்படத்தை முதன் முறை தேனம்மையின் ‘சாட்டர்டே’ பேட்டிப் பதிவிலேயே பார்த்தேன்.
ஈடு செய்ய இயலா இழப்பு ஐயா
ReplyDeleteஎனது இரங்கல்களும்.....
ReplyDeleteஉலகம் பூராவும் உள்ள வாசகர்களுக்கு அவர் தன் ஈடு இணையில்லா பதிவுகளை விட்டுச் சென்றிருக்கிறார். எவ்வளவு எழுதினாலும் அவர் எழுத கோயில்கள், பூஜைகல், பண்டிகைகள் என்று இருந்து கொண்டே இருந்தன. இது தான் அவர் நேசித்த ஆன்மீகத்தின் சிறப்பு.
ReplyDeleteகுதிரை வாகனம் இல்லை. ஒரு குறுகிய தார்ச்சாலையில் குதிரையின் மீது ஆரோகணித்து படு வேகமாக ஓட்டி வருவார்கள். பாலக்காடு பக்கம் நண்பருடன் சென்றிருந்த போது அவர் ஊரில் நடந்த அட்டகாசமான திருவிழாவில் கலந்து கொண்டேன். கிட்டதட்ட 50 வருடங்களுக்கு மேலாகி விட்டதால் ஊர் பெயர் மறந்து விட்டது. பாலக்காடு, இப்படியான குதிரையோட்டம் என்று பின்னூட்டத்தில் நினைவு கொண்டவுடனேயே டக்கென்று அவரிடமிருந்து பின்னூட்டமாக தத்தமங்கலம் என்று ஊரின் பெயரைத் தெரிவித்திருந்தார்கள். நேற்று கூட தத்தஞ்சேரி என்று இந்த ஊரிப் பெயரைத் தவறாக நினைவு கொண்டிருந்தேன். அற்புத நினைவாற்றல் கொண்டவர் அவர் என்று அவர் பதிவுகளே சொல்லும்..
அவர் நினைவுகளை ஆழ்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
திருமதி இராஜராஜேஸ்வரியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அவர் மறைந்தாலும் அவரின் நல்ல எழுத்துக்கள் நம் மனதில் நிலைத்திருக்கும்.- இராய செல்லப்பா
ReplyDeleteநாமும் துயர் பகிருவோம்.
ReplyDeleteநான் ப்ளாகர் க்கு புதிது என்பதால்
ReplyDeleteஇராஜ இராஜேஷ்வரி அம்மாவின் தளத்திற்கு
நான் சென்றதில்லை....
இருந்தாலும் அன்னாரது
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்....
திருமதி ராஜராஜேஸ்வரியின் வலைப்பக்கத்தை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். பின்னூட்டம் தந்ததில்லை. அவருடைய திடீர் மறைவு அயற்சியைத் தருகிறது. அவருடைய வலைப்பதிவுக்கு சென்று அஞ்சலிப் பின்னூட்டம் செய்தேன். போய்ச்சேரவில்லை.
ReplyDeleteLow profile-ல் இருந்துகொண்டு,high profile பதிவுகளைத் தந்தவர் என்று தெரிகிறது. மறைவுக்குப்பின் நான் படித்த, 2012-ல் அவர் எழுதியிருந்த கடுக்காய் பற்றிய பதிவு நுண்ணிய விபரங்கள் அடங்கியது.உங்கள் மற்றும் திரு. தமிழ் இளங்கோவின் பதிவுகளில் அவர்பற்றிய மேலதிக விபரங்கள் கண்டேன். இன்னும் கொஞ்சநாள் நம்மோடு அவர் இருந்திருக்கலாமே எனத் தோன்றுகிறது.
என்னுடைய அருட்கவி வலைத்தளத்திற்கு தவறாது வந்து பின்னூட்டமிடுவார்.அதுவும் முதல் ஆளாய். பேரிழப்பு . ஆன்மா இறையடி சேர ஈசனை வேண்டுகிறேன்.
ReplyDelete
ReplyDeleteதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து அதிர்ச்சியுற்றவர்களில் நானும் ஒருவன். எனது வலைப்பதிவிற்கு வந்து பலமுறை பின்னூட்டம் இட்டிருக்கிறார். விசேட நாட்களில் நிச்சயம் அந்த நாள் பற்றியும் அது சம்பந்தமான அழகான படங்களையும் தருவது அவரது சிறப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
நாளும் ஒரு நல்ல பதிவு தந்தவர்..
ReplyDeleteபதிவின் சிறப்புக்காக கடுமையாக உழைத்ததை அறியமுடிகின்றது..
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்..
ReplyDelete@ ஸ்ரீராம்
பெரும்பாலும் பலரும் சந்தித்திருக்கமாட்டார்கள் யார் மனதும் நோகாது கருத்திடுபவர் வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ ரமணி
ஆம் அந்த சந்தேகம் எனக்கும் இருந்ததுண்டு ஒரு பல்துறை வித்தகி வந்து அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி சார்
ReplyDelete@ கில்லர் ஜி
எந்நேரமும் ஈசுவர சிந்தனையில் இருந்தவர் வந்து இரங்கல் தெரிவித்ததற்கு நன்றி ஜி
ReplyDelete@ ராமலக்ஷ்மி
தன்னைப் பற்றி அதிகம் எண்ணிக் கொள்ளாதவர் வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ கரந்தை ஜெயக் குமார்
ஆம் இழப்பு பெரிதே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
இரங்கல் தெரிவிக்க வந்தமைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜீவி
ஒவ்வொருவரிடமும் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் இராராவின் இழப்பில் வருத்தம் தெரிவிக்க வந்ததற்கு நன்றி சார்
ReplyDelete@ செல்லப்பா யக்ஞசாமி
திருமதி இராஜராஜேஸ்வரியின் பதிவுகள் கோவில்களின் என்சைக்லொபிடியா வாக இருக்கும் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
துயரில் பங்கு பெற வந்ததற்கு நன்றி ஐயா
ReplyDelete@ அஜய் சுனில்கர் ஜோசப்
முதல் வருகைக்கு நன்றி ஐயா. இராராவின் பழைய பதிவுகளைப் போய்ப் பாருங்களேன்
ReplyDelete@ ஏகாந்தன்
சரியாகச் சொன்னீர்கள் லோ ப்ரொஃபைலில் இருந்து ஹை ப்ரொஃபைல் பதிவுகளைத் தந்தவர் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ சிவகுமாரன்
பக்திப் பதிவுகளைத்தருபவர் உங்கள் தளத்துக்கு முதலாய் வருவதில் ஆச்சரியமில்லை. நினைவு கூர்ந்ததுக்கு நன்றி சிவகுமாரா
@ வேநடனசபாபதி
ReplyDeleteபக்திப் பதிவுகளுக்குக் கையேடு போன்றது அவரது தளம் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ துரை செல்வராஜு
அவரது பாதையில் உங்கள் பதிவுகளைக் காண்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா
அய்யா சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது மறைவு என்பது வலையுலகில் நமக்கெல்லாம் பெரிய இழப்புதான். அவரது ஆன்மா அமைதி அடைய எனது பிரார்த்தனை. இவரது படத்தை , சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கான எனது பதிவினிலும் குறிப்பிட்டு இருக்கிறேன்.
ReplyDelete
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
ஐயா உங்கள் பதிவுக்கும் வந்திருந்தேன் இராராவைச் சந்திக்க இயலாதது பெரிய குறையாய் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்
இராஜேஸ்வரி மேடம் அவர்கள் மறைவு மிக்க வேதனை அளிக்கிறது. நேரில் பார்த்ததில்லை எனினும், வானவில் மனிதன் பதிவுகளுக்கு வலுவான கருத்துக்களை சேர்ப்பார். அவருடைய பதிவுகளுக்காக அவர் தரும் உழைப்பை வியந்து பலமுறை பாராட்டி இருக்கிறேன். பதிவுகள்,படங்கள் இணைத்தல், புகைப்படம் எடுத்தல் என பல நுட்பங்களை கற்றுக்கொண்டு வலைப்பூவுக்கு வந்தார் என படித்திருக்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
ReplyDelete@ மோகன் ஜி
ReplyDeleteவர்கஹாலிக் என்பது போல் இராரா ஒரு பதிவாலிக் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மோகன் ஜி