Saturday, April 21, 2018

நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு


                    நினைக்கும் போது  நகைப்பு வரும் நிகழ்வு
                   ------------------------------------------------------------------
வாழ்வில் சில நிகழ்வுகள் திகிலூட்டும்  அதிர்ச்சி தரும்   நகைப்பூட்டும்  அவ்வப்போது சிலவற்றைப்பகிர்ந்து வருகிறேன்  அதில் இது நகைப் பூட்டுவது

இவன்1966ம் ஆண்டு பொன்மலைப் பட்டியில் ஒரு வீடுவாடகைக்கு  எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் நான்கு மாத மகனுடனும்  தனிக் குடித்தனம் நடத்தத் துவங்கிய காலம்  இவனது வீட்டுக்கு நண்பர்கள் வந்து இவனது வாழ்க்கையை கண்டு போவது வழக்கம்   இவனது  மூத்த மகன்தான் அப்போதைய குழந்தை வருபவர்கள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவார்கள்  அப்போது நடந்த ஒரு நிகழ்வுஇன்று நினைக்கும் போதும்  சிரிப்பு வரும்
ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான் எல்லோரையும் போல் குழந்தையை எடுத்துக் கொஞ்சினான்  இவன் மனைவிக்கு   மிகவும்  சங்கோஜமாக இருந்தது ஏன்  என்றால் அவன்  குழந்தையை எடுத்து சாந்தி . சாந்துக் குட்டி என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்  என்ன விஷயம் என்றால்   இவன்  இவனது மனைவியை சாந்தி என்று கூப்பிடுவதைக்கேட்டுகுழந்தையின் பெயரையும்  அதுதான் என்று அவன் நினைத்து   கொஞ்சி கொண்டிருந்தது தான்   இவனுக்கோ  மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருந்தது  அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி  ஒரு முறைக்குப் பலமுறை  மனோக் கண்ணா  என்று கூப்பிட்டு நண்பனைப் பார்த்த்தான்   சிலநொடி நேரத்தில் நண்பனுக்கும்   அவனது தவறு தெரிந்தது  அசடு வழிய  இவர்களை  பார்த்தான்   சகஜநிலைக்கு வர சிறிதுநேரம் பிடித்தது அந்தநிகழ்வு இன்றும்  முகத்தில் ஒருசிரிப்பை வர வழைக்கும் 
  

27 comments:

  1. ஆண் குழந்தை அது என்பது கூட நண்பருக்கு பெயர்ச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடாதா?.. வேடிக்கை தான்.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஒரு ஆவல் மிகுதியில் செய்த பிழை நான்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை வேடிக்கைதான்

      Delete
  2. Replies
    1. அதுதான் நகைக்க வைக்கும் எனப் பெயர் எழுதியிருக்கிறேனே

      Delete
  3. ஹா.... ஹா.... ஹா.... சங்கடமான கணங்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. எங்களை விட அவருக்கு பிழை தெரிந்தபின் சங்கடம் ஏற்பட்டிருக்கும்

      Delete
  4. சில நேரங்களில் பழைய நினைவுகள் பசுமையாகவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை

      Delete
  5. அருமையான நினைவூட்டல்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நகைத்துச் செல்ல நல்ல நினைவூட்டல்தான்

      Delete
  6. குழந்தைகளைக் கொஞ்சுவதற்கென்றே மான் குட்டி, மயிலுக் குஞ்சுன்னு வார்த்தைகள் இருக்கே. நண்பர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. யோசித்திருந்தால் எனக்கு இப்போது பதிவு தேறி இருக்காதே

      Delete
  7. Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. என் தோழியின் கணவர் பெயர் ஷ்யாம். நானும் அவளும் புத்தகங்களை பகிர்ந்து கொள்வோம். என் வீட்டிற்கு தன் மகனோடு தோழியின் கணவர் வந்த பொழுது நான் அவர் மகனைப்பார்த்து,"வா ஷ்யாம், எப்படி இருக்க?" என்று கேட்க,தோழியின் கணவர்,"நான், நான்,நான்தான் ஷ்யாம்" என்க,நான் வழிந்த அசடு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. என்னைப் பார்க்க வந்த என் நண்பரிடம் அவர் பெண் குழந்தையைப் பற்றி விசாரிப்பதாக நினைத்து அவர் மனைவியைப் பற்றி விசாரித்தேன்... அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் புறப்பட்டுச் சென்றபின் என் மனைவிஇடம் அவர் வந்து சென்றதையும் நான் 'அபி'யை விசாரித்ததையும் சொன்னபோதுதான் அது அவர் மனைவியின் பெயர் என்று தெரிந்தது. கூச்சமாக இருந்தது! ஆனால் நான் விசாரித்ததில் குழந்தையை விசாரிக்கிறேன் என்பதற்கான கேள்விகள் இருந்ததால் ("ஒழுங்கா ஸ்கூல் போறாளா?") ஒரு ஆறுதல்!

      Delete
    2. இப்பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதோ

      Delete
    3. @ ஸ்ரீ எப்படியாவது தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்

      Delete
  9. ஹாஹா, இப்படி அ.வ. எல்லோருக்கும் நிகழும். (அசடு வழிதல்) என் பெயரைச் சொல்லி என் பெண்ணைக் கொஞ்சுவதும், என் பெண்ணின் பெயரை எனக்குச் சூட்டுவதும் நிறைய நடந்திருக்கு! :))))

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே அறியாமல் நடை பெறுபவையே என்ன சில நேரங்களில் அசடு வழிய நேரும்

      Delete
  10. சங்கடமான நிகழ்ச்சிதான். ஆனாலும் ரசிக்கும்படி இருந்தது. (எப்போதும் அடுத்தவர் பல்ப் வாங்கும்போது நமக்கு நகைச்சுவையாகத்தான் இருக்கும்)

    ReplyDelete
  11. இதில் பல்ப் வாங்கியது யார் என்னும் சந்தேகம் எழுகிறது இப்போது இந்தியாவில்தானே எப்போது பெங்களூர்

    ReplyDelete
    Replies
    1. நண்பன்'தான் பல்ப் வாங்கியது. (இந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது ஒரு கைதியின் டைரியில் மலேஷியா வாசுதேவன் அரசியல்வாதியாக நடிக்கும் ஒரு சீன் நினைவுக்கு வந்துவிட்டது)

      ரொம்ப சாரி ஜிஎம்பி சார். அவசர வேலையாக பெங்களூர் இரு நாட்கள் வந்தேன். இன்னும் உடல் நிலை மிக சுகமாக ஆகவில்லை. அஸ்டிராலஜர் சந்திப்பு, புது Flat கட்டிமுடிக்கும் தறுவாயில் இருக்கு (பலமாடிக் கட்டடத்தில் ஒரு சிறிய flat வாங்கியிருக்கிறேன்) - அதைப் பார்த்து வருதல், பையனின் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு என்று டைட் ஷெடியூல். பிறகு சென்னை திரும்பி அன்றிரவே இங்கு வந்துவிட்டேன். எல்லாம் நினைத்தபடி நடந்தால் மே இறுதியில் சென்னை திரும்பிவிடுவேன். அத்துடன் வெளிநாட்டு வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. இந்தியாவந்திருப்பது யூகித்தேன் உடல் நலம் சரியில்லை என்று தெரியைல்லை டேக் கேர் வண்டுகருத்திட்டதற்கு நன்றி

      Delete
  12. haha....You reminded me of another friends story. Ive personally witnessed a similar situation too. Both the parties concerned turn pink with embarassment. Very enjoyable to recollect even after years.

    ReplyDelete
    Replies
    1. you could have shared your experiences thank you for your visit

      Delete