நகைச் சுவை நிகழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச் சுவை நிகழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஏப்ரல், 2018

நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு


                    நினைக்கும் போது  நகைப்பு வரும் நிகழ்வு
                   ------------------------------------------------------------------
வாழ்வில் சில நிகழ்வுகள் திகிலூட்டும்  அதிர்ச்சி தரும்   நகைப்பூட்டும்  அவ்வப்போது சிலவற்றைப்பகிர்ந்து வருகிறேன்  அதில் இது நகைப் பூட்டுவது

இவன்1966ம் ஆண்டு பொன்மலைப் பட்டியில் ஒரு வீடுவாடகைக்கு  எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் நான்கு மாத மகனுடனும்  தனிக் குடித்தனம் நடத்தத் துவங்கிய காலம்  இவனது வீட்டுக்கு நண்பர்கள் வந்து இவனது வாழ்க்கையை கண்டு போவது வழக்கம்   இவனது  மூத்த மகன்தான் அப்போதைய குழந்தை வருபவர்கள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவார்கள்  அப்போது நடந்த ஒரு நிகழ்வுஇன்று நினைக்கும் போதும்  சிரிப்பு வரும்
ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான் எல்லோரையும் போல் குழந்தையை எடுத்துக் கொஞ்சினான்  இவன் மனைவிக்கு   மிகவும்  சங்கோஜமாக இருந்தது ஏன்  என்றால் அவன்  குழந்தையை எடுத்து சாந்தி . சாந்துக் குட்டி என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்  என்ன விஷயம் என்றால்   இவன்  இவனது மனைவியை சாந்தி என்று கூப்பிடுவதைக்கேட்டுகுழந்தையின் பெயரையும்  அதுதான் என்று அவன் நினைத்து   கொஞ்சி கொண்டிருந்தது தான்   இவனுக்கோ  மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருந்தது  அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி  ஒரு முறைக்குப் பலமுறை  மனோக் கண்ணா  என்று கூப்பிட்டு நண்பனைப் பார்த்த்தான்   சிலநொடி நேரத்தில் நண்பனுக்கும்   அவனது தவறு தெரிந்தது  அசடு வழிய  இவர்களை  பார்த்தான்   சகஜநிலைக்கு வர சிறிதுநேரம் பிடித்தது அந்தநிகழ்வு இன்றும்  முகத்தில் ஒருசிரிப்பை வர வழைக்கும்