Thursday, April 25, 2019

பார்த்ததில் பிடித்தது


                             பர்த்ததில் பிடித்தது
                             ------------------------------
பதிவுக்காக என்ன எழுதுவது  என்று நினைத்து இணையத்தில்  மேய்ந்து கொண்டிருந்த போது பார்த்த படித்தவற்றையே பகிரலாம்  என்று தோன்றியது அது இப்போதெல்லாம் வாட்ஸாப்பில் வருவதைப் பகிர்வதை விட நன்றாயிருக்கு ம்போல் இருந்தது  இனி பார்த்து ரசிப்பது உங்கள் கையில்








வலைத்தளம்  உபயோகம் வந்தபின்  பல இணைய சொற் களுக்கு  இணையான தமிழ்ச் சொற்களைத் தேட வேண்டி  உள்ளது அண்மையில் நண்பர் ஒருவர்

மலேசியாவில் நடத்தப் பெற்ற தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்:  என்று சில சொற்களை  எழுதி இருந்தார்  இவற்றை நாம் உபயோகப்படுத்தினால்   நாளா வட்டத்தில் அவை புழங்கு சொற்களாகலாம்

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி.
 என்ன நண்பர்களே பகிர்ந்த செய்திகள்  பிடித்திருந்ததா  சொல்லிச் செல்லலாமெ














14 comments:

  1. காமராஜர் பற்றிய செய்தி முன்னரே படித்திருக்கிறேன். தனித்தமிழ்ச் சொற்கள் படிக்க சுவாரஸ்யம். ஆனால் நடைமுறையில் கடினம். யாரும் செய்ய மாட்டோம். அதுமட்டுமல்ல, படிக்க, புரிந்து கொள்ள எது எளிதாக இருக்கிறதோ அதை உபயோகிக்கலாம். மன்னர்கள் காலத்தில் இருந்த தமிழ் வார்த்தைகளை நம்மால் படிக்க முடியவில்லை! மாறிக்கொண்டே வருகிறது. மாற்றம்தானே நிரந்தரம்...

    ReplyDelete
    Replies
    1. புழக்கத்தில் சில வார்த்தைகள் இவால்வ் ஆனவைகளே காணினி இடுகை முகநூல் போன்றவை இத்ல் நாம் இதில் வலையொளி கீச்சகம்மின்கலம் போன்றவற்றை எளிதாக் உபயோகிக்கலாம் என்று தோன்று கிறது

      Delete
  2. காமராசர் வியப்பூட்டும் செய்தி
    இக்காலத்தில் இதுபோல் எதிர்பார்க்க முடியுமா

    ReplyDelete
  3. காமராஜர் போன்றவரினின்செய்திகளே பகிரப்படுகின்றன. ஆனால்சில்ச எதிர்மறையான செய்திகளையும் கண்டேன் இது காமராஜரைக் குறை கூறவல்ல எல்லோரும்காமராஜர் ஆக முடியுமா வருகைக்கு நன்றி நான் படித்டதில் பிடித்தது என்றால்வருகைப் பதிவே குறைகிறது

    ReplyDelete
  4. காமராஜரின் விடயம் ஏற்கனவே அறிந்தவையே... வியப்பான மாமனிர்தான்.

    தமிழ் வார்த்தைகள் பயனுள்ளவை ஐயா.

    ReplyDelete
  5. தனித்தமிழ் - ரொம்ப மெனக்கெட வேண்டாம்னு தோணுது. உபயோகிக்க சுலபமாக இருந்தால் பெயர்ச்சொல்லையே ஏற்றுக்கொள்ளலாம். பஸ், கார், ப்ரெட்/ரொட்டி, பன் என்பதுபோன்று.

    'ஆலலை', 'இயங்கலை', 'முடக்கலை' --எனக்குப் படிக்கத் தாளலை..ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் நெல்லைப் போன்றவர்கள் அல்லவே

      Delete
  6. அதனால்தான் அவர் பெருந்தலைவர். அவரைப்போல இனியொரு தலைவரைக் காண முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வருகசிக்கும் கருத்துக்கும் நன்ற் சார்

      Delete
  7. சொல்வளம் தான்
    மொழிவளம் சிறக்க வழி!
    புதிய சொல்களை பயன்படுத்துவதால் நன்மையே!

    ReplyDelete
    Replies
    1. நம்மால் புது தமிழ் சொற்களை ஆக்க முடியாவிட்டாலு பல சொற்கள் எளிதாய் இருப்பதாலும் முயற்சிக்கலாமே ஆனால் எந்த மாற்றமு எளிதில் நிகழ்வதில்லை

      Delete
  8. எல்லாக் காணொளியும் கண்டிருக்கிறோம் சார். எல்லாமே சிறப்பும் கூட.

    தமிழ் வார்த்தைகளை அறிந்து கொண்டோம் இருந்தாலும் எல்லாம் பயனப்டுத்த முடியாதுதான். சிலவற்றை எது எளிதாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  10. த்னித் தமிழ்ச் சொற்களைக் குறித்துக்கொண்டேன் .பயன்படுத்துவேன் . நன்றி .

    ReplyDelete