Sunday, April 14, 2019

போன மச்சான் திரும்பி வந்தான் l

குட்டியாய் என் மனைவி மடியில்  buddy 
மகன் வீட்டில் 
என் வீட்டில் buddy 
திருச்சியில் நாங்கள் வள்ர்த்த  நாய்  செல்லி 
எங்கு போனாலும்கூடவே 

போன மச்சான் திரும்பி வந்தான்  என் இளைய மகன்  ஒரு கோல்டென்  ரெட்ரீவர்  நாய் வாங்கி அதை ஒருவருக்கு கொடுத்ததை எழுதி இருக்கிறேன் 2015ம் வருடம் அடுக்கு மாடி குடியிருப்பில் நாய் வளர்ப்பது மிகவும் சிரமம் ஒரு வழியாய் நாயைக் கொடுத்துவிட்டான்    ஆனால் அந்த நாய்க்கும் இவனுக்கும் உள்ள பந்தம்   அறு படவில்லை  அவ்வப்போது  சென்று பார்த்து வருவான்  நாயை யாரிடம் கொடுத்தானோ அவருக்கு சில சிரமங்கள் காரணமாக நாயைத் தொடர்ந்து பராமரிக்கஇயலாததால் நாயை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டார் இவனும்  வேறு வழி இல்லாததால்  திரும்ப வாங்கி வந்து விட்டதாகச் சொல்கிறான் எனக்கு செல்லப் பிராணிகளிடம் வெறுப்பில்லை ஆனால் நல்ல விதமாய் நாய் வளர்ப்பதுஎன்பது மிகவும்சிரமமான ஒன்று என்பது தெரியும் எனக்கும்  நாய் வளர்த்த அனுபவம்  உண்டுஎன் மனைவி எங்கள் நாயை ஒரு மாமியார் என்று  கூறுவாள் அந்த நாய் ஒரு முறை  ஒரு எலும்பைக் கடிக்க அந்த எலும்பு வாயில் நீளவாக்கில் சிக்கிக் கொள்ள  அண்ட எலும்பை எடுப்பதற்கு நாங்கள்பட்ட பாடு சொல்ல முடியாததுஎன்மனைவிநாகைஆரோக்கிய மாதா கோவிலுக்கு வேண்டிக்கொள்ள அண்ட வேண்டுதலை நாங்கள் நிறைவேற்ற  நாகப்பட்டினம்போனதும்   போதுமப்பா சாமி செல்லங்கள் பலநேரங்களில் தொல்லையே. இவனது நாயே ஒருமுறை  ஒரு சின்ன தொப்பியை விழுங்கி அது வெளிவரும்வரை  பட்ட பாடும்கொஞ்சமல்லவீடை விட்டு எல்லோருமெங்கும் செல்ல முடியாது பிள்ளைகளின் பட்ப்பு கெடும் மேலு நாயின் சுதந்திரமும் போய் விடும் ஆனால் என்ன சொல்லி என்னபயன்   பட்டுத்தான்  தெரிந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது  நம் பட்டறிவுக்கு மதிப்பில்லை நாங்கள் தனியேதான்  இருக்கிறோம்  நாய் இருந்தால் நல்லதுதான்  என்று நினைக்க முடியவில்லை என்னால் தனியாகவே சரிவர நடக்க முடியவில்லை வயதும் ஆகிறது  நான் அடிக்கடிசொல்வதுதான்   THAT  WHICH CAN NOT BE CURED  MUST BE ENDURED 


என்பேரனுடன்BUDDYஇப்போது

நாயுடன்விளையாட்டு 
                         
                            வாட்ஸாப்பில் வந்தது
                   







22 comments:

  1. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
    ஆயிரமாயிரம் நன்மைகள் சேர்வதற்கு அம்மையப்பன் அருள் புரியட்டும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் உங்களுக்கும் இனிய புத்தாண்டாக அமையட்டும்

      Delete
  2. பிராணிகளை வளர்ப்பது முக்கியமில்லை அதனுடைய சுதந்திரம் பறிபோகக்கூடாது பக்கத்து வீட்டில் நாய்க்குட்டியை தண்ணீர்த் தேங்குமிடத்தில் கட்டி விட்டு வேலைக்கு போய் விடுவார்கள் கத்திக்கொண்டே இருக்கும்...

    அதனை அவுத்து சுத்தமான இடத்தில் கட்டி வைத்து பிஸ்கட் வாங்கி போடுவது எனது வேலை.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நாய் வளர்ப்பது அதற்கு வேளைக்கு உணவு இடுவது மட்டுமல்ல

      Delete
  3. செல்லப் பிராணிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு ஐயா
    எங்களின் வீட்டிலும் ஒரு செல்லப் பிராணி இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆம் எப்படி சிரமங்களை எதிர் கொள்வது என்றும்கற்க வேண்டும்

      Delete
  4. பிராணிகள் வளர்ப்பதில் பல சிரமங்கள் உண்டு. சுதந்திரமாக இருக்க முடியாது என்பது கொஞ்சம் சோகம் தான்.

    காணொளிகள் இரண்டும் நன்றாக இருக்கிறது.

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் செல்லப்பிராணிக்கும் சுதந்திரம் போய் விடுகிறது உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  5. சிரமம் இருந்தாலும் உங்களின் அன்பு புரிகிறது ஐயா...

    ReplyDelete
  6. வெறும் அன்பு போதாது சார் சிரமங்கள் அதிகம் நாய் என்னோடு இல்லை

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    செல்லப்பிராணிகள் காணொளி மிக அருமை.

    உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  8. புத்தாண்டு வாழ்த்துகள்.

    buddy ரொம்ப க்யூட்டாக இருக்கிறான்.

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  9. விளையாட்டுக் காணொளியும், வாட்சப் காணொளியும் ரசித்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாய்பாடு என்பார்கள் அதுவே தேவலாம் போல் இருக்கிறது

      Delete
  10. நாய்கள் வளர்ப்பதில் உள்ள சிரமங்களை சொல்லி நீங்கள் அலுத்துக் கொண்டாலும், அடி மனதில் அவைகளின் மீது உங்களுக்கிருக்கும் பாசம் தெரிகிறது.
    //That which cannot be cured must be endured// மிகவும் சரி.

    ReplyDelete
  11. எல்ல உயிரினங்கள் மீதும்பாசமுண்டு நமக்கு தொந்தரவு தராதவரை

    ReplyDelete
  12. நாய் வளர்ப்பது கஷ்டமோ இல்லையோ வளர்த்த பின்னர் பிரிவது தான் அதைவிடக் கஷ்டம்! ஆகவே நாங்க மோதிக்குப் பின்னர் செல்லங்களே வேண்டாம்னு வைச்சுட்டோம்.

    ReplyDelete
  13. அதுவும் சரிதான்

    ReplyDelete
  14. செல்லப் பிராணிகள் என்றாலே எங்கள் வீட்டில் அனைவருக்கும் அலர்ஜி.

    நீங்க சொன்னது போல் அதிக கவனிப்பு வேறு கொடுக்க வேண்டும்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. செல்லப்பிராணிகள் விலையாடுவத்தைப் பார்த்து ரசிக்கலாம் நாமே வளர்ப்பதில் தொல்லைகள் அதிகம்

    ReplyDelete