Tuesday, March 17, 2020

உதய கீதம்





                                     உதய கீதம்
                                      ------------------


பொழுது புலர்ந்தது மெல்லன எழுவீர்
 புள்ளினங்கள்சிறுகாலைப் பொழுதில் பறந்துதம் இரைதனை தேடவே
நாற்திசையும் பறந்து திரிகின்ற்ன
மானிடர்கள்தம் பாபம்போக்கவே   உன்சன்னதியில்
 காத்திருக்கின்றனர் உந்திரு நாமம் சொல்லியே புண்ணியம் விழைகின்றனர் உன் திருக்கண் அருள் பொழிய எழுந்தருள்வாய்  ராமா கிருஷ்ணா கோவிந்தாஎன
நாமங்களில்லா பெரும்பேரைஏதோ அழைத்தே ஏத்துகின்றனர்
நின் திருப்பெயர் பலசொல்லி  நின்னடியார் மெய் மறக்க
நின் செவியால் கேட்டருளி அவர்தம்   குறைநீக்க
எழுந்தருள்வாய
உன்னை      உறங்க விடாமல் குருவாயூர்
நிர்மால்ய தரிசனம்  காணஏங்கும்  பக்தர்க்கு  அருள
மெல்லென எழுவீர் ஆதவன் குணதிசை எழுமுன்

நீர் எழுந்தருள்வீர் ஐயா 
நேற்று   என்பது அனுபவமானால் 
இன்றைய தினம்நம்பிக்கை ஆகட்டும்
பொழுது புலர்கிறது  மெல்லென எழுவீர்

இத்துடனொரு பாடல் பகிர்வு



இன்னுமொரு பாடல் பகிர்வு 




  

16 comments:

  1. இரண்டும் இனிய, மனதில் நின்ற பாடல்கள்.  உதயகீதமும் அருமை.

    ReplyDelete
  2. உங்கள் உள் மனதில் குடி கொண்டிருக்கும் இறைவன் தன்னையும் அறியாமல் வெளிப்பட்டிருக்கிறான். நல்லதொரு பகிர்வு. காணொளியைப் பின்னர் பார்க்கிறேன். ஆனால் கேட்ட பாடல்கள் தாம்.

    ReplyDelete
  3. எழுத்தும்நானே எழுத வைப்பவனும் நானே வந்து கருத்துரை இட்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. அற்புதமான காணொளி பாடல்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஜி

      Delete
  5. பாடல்கள் இரண்டும் என்றும் ரசிக்கத்தக்கவை...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடித்த பாடல்கள்

      Delete
  6. பழைய காலத்தில் மன்னர்களைத் துயிலெழுப்பப் பள்ளி யெழுச்சி பாடினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தூங்குபவரை எழுப்பலாம் ஆனல் தூங்குவது போல் இருப்பவரை ?

      Delete
  7. இனிய பாடல்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அப்வியஸ்லி என் உதயகீதம் யாரையும் ஈர்க்கவில்லை

      Delete
  8. அருமையான பாடல்கள்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    ReplyDelete
  9. இனிய பாடல்கள் இரண்டுமே!...

    ReplyDelete
  10. பாடல்களை ரசித்ததற்கு நன்றி

    ReplyDelete