GM Vs GM
என்ன எழுதுவது என்று மனதை குடைந்து கொண்டிருந்தபோது
ஒரு ட்ரெண்டி தலைப்பில் எழுதினால் என்ன என்று
தோன்றியது ட்ரெண்டி சப்ஜெக்ட் என்றால் இப்போது கிரிக்கட் தான்
என் கிரிக்கட் அனுபவங்களைப் பகிரலாமென்று தோன்றியதுவழக்கம்
போல் நினைவுகள் துணை போயின திருச்சியில்நிகழ்ந்த விளை யாட்டு நினைவுகள்
அன்று ஒரு அனொஃபிஷியல் நோட்டிஸ் வந்தது ஒரு கிரிக்கட் மாட்ச் ஆடலாமென்றும் ஆடத்தெரிந்தவர்கள்
கிளப் நிர்வாகியிடம் பெயர் கொடுக்கலாமென்றும்
எழுதி இருந்தது நான் ஏன் பெயர் கொடுக்கக்
கூடாது என்று தோன்றியது பெங்களூரில் எச் ஏஎல்லில் இருந்தபோது கிரிக்கட் கிளப் பில் உறுப்பினராயிருந்து
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக
எல்லா கிரௌண்டுகளிலும் ஆடியதும் நினைவுக்கு வந்தது எங்கள் டீமில் ஆடிய ஒருவர் பிற்காலத்தில்
கர்நாடக மந்திரியாக இருந்தாரென்பதும் நினைவுக்கு வந்தது அதுவா இப்போது முக்கியம் நான்
ஆடலாமா வேண்டாமா என்பதே கேள்வி
ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளிகளில் நோட்டிஸ்
அதிகாரிகளைக் குறி வைத்திருந்தது ஒரு
டீமுக்கு அன்றைய ஜெனரல் மானேஜர் காப்டனாக இருப்பார்
என்று தெரிந்தது பெரிய கம்பனியின் நிர்வாகி ஒரு டீமுக்குக் காப்டன் அவர் தனது டீம் மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தார் இன்னொரு டீமில்யார் யார் ஆடப்போகிறார்கள் என்பதே
கேள்விக்குறியாகி இருந்தது ஆட விருப்பம் தெரிவித்தவர்கள் தங்களுடைய அனுபவப் பிரலாபங்களைத்
தெரிவிக்க வேண்டப்பட்டு இருந்தனர் நான் என்பிரலாபங்களில் பெங்களூரில் விளையாடி இருந்தது
குறித்து நிறையவே எழுதி இருந்தேன் ஒரு லெக்
ஸ்பின் போலர் என்றும் சிறந்தஃபீல்டரென்றும் எழுதி இருந்தேன் என்பெயரில்
இனிஷியலும் ஜீ எம் என்று இருந்ததால் எதிர் டீமுக்கு என்னைக் காப்டன்
ஆக்கினார்கள் என் டீமில் ஆடியவர்கள் ஒரு சந்தேகம்
கிளப்பினார்கள் நாம்திறமையாக விளையடினால் ஒரு வேளை ஜெனரல் மானேஜரின் டீம் தோல்வி
யடைந்தால் அதனால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமோ
என்று பயந்தனர் எதிர் டீமின் தலைவன் என்னும் முறையில் அவர்களை தைரியப்படுத்துவது என் வேலையாயிற்று ஆட்ட மைதானம் வேறு தொழிற்கூடம்
வேறு என்று எடுத்துரைத்தேன் உனக்கென்ன நீ ஒரு
டெம்பொரரி காப்டன்தானே என்று கூறி என்னை வெறுப்பேற்றினார்கள்
ஆட்ட மைதானம் எல்லோருக்கும் பொதுவானது அங்கு நன்கு திறமையை காட்ட
வேண்டுவதெ ஒவ்வொருவரின்கடமை என்றேன்
டீம் என்பதை நான் நம் தின வாழ்வின் செய்கைகளுக்கு
ஒப்பிட்டுக் காட்டினேன் டீமில் ஏற்றதாழ்வுகள் பார்க்கக் கூடாது என்று எடுத்துக்
கூறினேன் ஆடுகளத்தை வாழ்வியலுக்கு ஒப்பிட்டு
கூறினேன் வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம்தான் வெற்றிதோல்வி
முக்கியமல்ல வெற்றியடையநம் முயற்சிகளே முக்கியம்
ஆட்டம் ஆட
டாஸ் போட்டார்கள் அதில் தோல்வியே வந்தது எங்கள்
டீம் முதலில் ஃபீல்டிங் என்றாயிற்று முதலில் பாட் செய்பவர்கள் நம்மை முதலில் துவம்சம்செய்யப்போகிறார்கள் என்னும்குரல் முதலில் ஒலித்தது கிரிக்கட் விளையாடியவருள்
காட்ச் கோட்டை விட்டவர்கள் யார் என்று கேட்டேன் யரும் காட்ச் கோட்ட விட்டிருக்கவில்லை
என்ற படி பதில் வந்தது கிரிக்கட்விளையாடி இருந்தால் ஒரு முறையாவது காட்ச் பிடிக்க முடியாமல்
இருந்திருக்கும் என்னும் அடிப்படை உண்மையைச்சொல்லாமலிருந்தேன் அவர்களுக்கு ஆடத்தெரியாது என்று சொல்லி பயமுறுத்த
விரும்பவில்லை
முதலில் பாட் செய்ய வந்த பொது மேலாளர் குழுவில் அவ்ரே
வந்தார் எங்கள்டீமுக்கு அதுவே கிலி கொடுத்தது
முதலில் பந்தை வீசியவுடன் அவர் எதிர் கொண்டதைப் பார்த்தபோது அவரும் ஆடி நாட்களாகி விட்டது தெரிந்தது நம்மைப்
போல்தான் என்னும் எண்ணம் உதித்தது எல்லோருக்கும் ஆடி நாட்களாகி விட்டதுஅவர்கள் ஓடுவதிலேயெ
தெரிந்ததுநான் என்னை கல்லியில் ஃபீல்ட் செய்ய நிறுத்திக் கொண்டேன்
ஆட்டம்பார்க்க
பலரும் குழுமி இருந்தனர் போடப்பட்ட பந்துகள் விக்கெட்டுக் கெதிரில் வந்தால்தானே
அவர்களாலும் அடிக்க முடியும் எப்படியோ பந்துகள் போடப்பட்டு அடிக்கப்பட்டு ரன்கள்
எடுக்கப்பட்டன
ஒரு சமயம்
ஒரு பாட்ஸ்மன் அடித்த பந்து என்னை நோக்கி வந்தது அடிபடாமல் காக்க கையால் முகத்தை மறைத்துக் கொண்டேன் என்ன ஆச்சரியம் கையில்விழுந்த பந்தை என்னை அற்யாமல் பிடித்துக் கொண்டேன் பாட்ஸ்மன் அவுட் உற்சாகம்பீரிட்டது
ஆட்டத்தை எழுத்தில் வர்ணித்தால் சுவை குறையு,ம் எங்கள்டீம் வீரர்களுக்கு
எப்படியாவது ஆட்டம் முடிந்தால் போதுமென்று இருந்தது
திறமையை வெளிப்படுத்த முடியாமல் பயம் இருந்தது பொது மேலாளர் குழு வெற்றி பெற்றது அவரை
எல்லோரும் வாழ்த்தினர்
இதன்நடுவில்
மாட்சை ஒலிபரப்பினார்கள் ஒலி பரப்பும்திறமையாளர்களுக்கு
தெரியும் பொது மேலாளரைப் புகழ்ந்து தள்ள கிடைத்த
வாய்ப்பு அது நன்றாகவே செய்தார்கள் முடிவில்
ஒன்று மட்டும் தெரிந்தது பொறுப்பில் இருப்பவர்க்கு
எதிராக செயல்பட அது ஆட்டமாக இருந்தாலும் சரி பலரும் தயங்குகின்றனர் இப்போது மோதியை எதிர்க்க பலரும் தயங்குவதில்லையா G M
GM தான் இனிடிஷியல் ஜீஎம் வேறுதான் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
கிரிக்கெட் அனுபவங்கள் சுவாரஸ்யம்தான். எல்லோருமே அதிகாரிகளுக்கு பயந்து ஆட மாட்டார்கள். அணியை கவனமாக தேர்வு செய்திருந்தால், ஐம்பது சதவிகிதம் துணிந்தவர்களைத் தெரிவு செய்திருந்தாலே போதும்!
ReplyDeleteஆடுவதற்கு ஆட்டக்கரர்கள் வருவதே பெரும்பாடாயிருந்த நிலையில்தேர்வு எல்லாம் எங்கே
Deleteடீம் என்பதை தின வாழ்வின் செய்கைகளுக்கு நீங்கள் அக்காலத்திலேயே ஒப்பிட்டுக் காட்டிய விதம் போற்றத்தக்கது ஐயா.
ReplyDeleteஎக்காலமும் பொருந்தக் கூடியது தானே சார்
Deleteதங்களது அனுபவம் சுவாரஸ்யம் ஐயா.
ReplyDeleteஎனது அலுவலகத்தில் பலசாலி யாரென்று போட்டி வைத்தார்கள். எஜிப்தியர் ஒருவர் வேண்டுமென்றே தோற்றார் என்பது எங்களுக்கு புரிந்தது காரணம் எதிர்புரம் லோக்கல் அரபியர் மேலும் மேலாளர்.
அதற்குதான் மோதியுடன் ஒப்பிட்டேன்
Deleteநீங்கள் எந்த முகூர்த்தத்தில் கிரிக்கெட் பற்றி எழுனீர்களோ இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோற்று விட்டது.
ReplyDeleteJayakumar
you get what you deserve
Deleteநல்லா இருக்கு ஐயா...
ReplyDeleteபராட்டுக்கு நன்றி சார்
ReplyDeleteதங்களின் கிரிக்கெட் அனுபவங்களை ரசித்தேன் ஐயா
ReplyDeleteசில கற்பனைகள் ரசிக்கப்படுகின்ற்ன
ReplyDeleteமிகச் சுவையாய் வர்ணித்திருந்தீர்கள். நீங்கள் பந்து பிடித்த நிகழ்ச்சி துப்பறியும் சாம்புவை நினைவூட்டிற்று .
ReplyDeleteஇப்பதிவில் துப்பறியும் சாம்புவ ஒப்பிட பந்து பிடிட்ட விடம் புரிந்து கொள்ள முடியவில்லை சாம்பு ஏதேனும் காட்ச் பிடித்திருக்கிறரா என்ன
Delete//ஆட்டம்பார்க்க பலரும் குழுமி இருந்தனர் போடப்பட்ட பந்துகள் விக்கெட்டுக் கெதிரில் வந்தால்தானே அவர்களாலும் அடிக்க முடியும் எப்படியோ பந்துகள் போடப்பட்டு அடிக்கப்பட்டு ரன்கள் எடுக்கப்பட்டன//:))))
ReplyDeleteஇம்மாதிரி ஆட்டங்களில் அப்படித்தான் நடக்கும்
ReplyDelete