Wednesday, December 9, 2020

துணுக்குகள்

 

துணுக்குகள்  

 

 தன் தாயிடம்  அடி வாங்கிய சிறுவன் ஒருவன் சோகமாக 
ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அதைக்  கண்ட அவன்  தந்தை 
அவனருகில் பரிவுடன் வந்துநடந்தது  என்ன என்று  விசாரித்தார்
கோபமும் , அழுகையும் ஒருங்கே  சேர  அந்த   சிறுவன்  “ அப்பா வரவர 
உன் மனைவியின்  தொல்லை அதிகமாகிறது. உன்னைப்  போல்  உன் 
மனைவியுடன் என்னால் ஒத்துப்போக  முடியவில்லைநான் ஒத்துப்
போக  எனக்கு ஒரு மனைவி  வேண்டும்  “ என்றான்

                    --------------------------------------------------------. 

யாரும் பயணிக்காத தடங்களில் சுவடு பதிப்பதுதான் எனக்குப்பிடித்தது என் ஸ்பெஷாலிடி.

                                      ------------------------------------

தினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லைதரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டதுநான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தனஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும்இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லைமூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY      அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம்அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன் இதே ஸ்டாடிச்டிகல்  ப்ராபபிலிடி பிரகாரம் புதுவை பதிவர்மாநாட்டில் ஒருபோட்டிக்கு  சரியான விடை கூறு வது இயலாதகாரியம்  என்று  நான்கூற  பலரது புருவங்களும் நெரிந்ததும்   நான்  அறிவேன்

                  ------------------------------------        

                       

 அரசியல்  நடத்தும்  அநியாயம்
ஊழல்   சாக்கடை   என்றெல்லாம்
எதிர் மறை  எண்ணங்கள்
கோஷம்  இட்டே  வந்தாலும்
உழைப்பும்  ஊக்கமும்   ஒன்றானால்
அடைவோம்   இலக்கை   நிச்சயமாய்

 

                                    -------------------------------------

நான் பள்ளியில் படித்த ஒரு போர் முழக்க பாடல்

 

. ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்த்துவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென  நெருங்கித் தாக்குவோம்,
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம்  முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....

                                        -----------------------------------------

எதற்கும்   காரணம்   தெரிய விரும்பும் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டம்ஒன்று -

மனுவோ பின் யாரோ பாலு சாரோ அவர்கள் மனம் ஏற்கும் விஷயங்கள் முதலில் காரணம் கேட்பதில்லை.காரணம் காணத் துவங்குகையில் விரும்பிய பொருளிலோ கருத்திலோ முரண்படத் துவங்குகிறோம் என நினைக்கிறேன்.

                          ---------------------------------------------------------

ஸ்வாமி சின்மயானந்தா கூறுவார், பலமணிநேரம் வரிசையில் நின்று திருப்பதியில் பாலாஜியை நெருங்கும்போது கண்களை மூடி ஆண்டவனை காண்கிறோமே என்று. உருவம் இல்லா ஆண்டவனுக்கு நாம் கொடுத்த உருவை காணமுடிவதில்லையே என்பதே என் ஆதங்கம்.

                                                 ----------------------------------

 உடலைரிலாக்ஸ் செய்ய

         ஒரு நாற்காலியில்  சௌகரியமாக  உட்கார்ந்து கொள்ளுங்கள்இல்லையென்றால்
மலர்ந்து  படுத்துக்கொள்ளுங்கள். கண்களை  மூடிக் கொள்ளுங்கள். கண்களை  மூடச்  சொல்வது  கவனச் சிதறல்களைக்  குறைக்க. இப்போது  உங்கள்  கவனம்   உங்கள்   பாதங்களில்  இருக்கட்டும்என் கவனம் என்  பாதங்களில்   உள்ளது  என்று உங்களையே  தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள் . என் பாதங்கள்  இறுக்கம்   குறைந்து   தளர்வாக  உள்ளது என்று உங்களுக்கு நீங்களே  கூறிக் கொண்டு   ( Auto suggestion  )
பாதங்கள்  தளர்வாவதை  உணருங்கள்பாதங்கள் தளர்வாகிவிட்ட நிலையில்  அடுத்து
உங்கள் கால் முட்டிப் பகுதிக்கு  உங்கள் கவனத்தை  செலுத்துங்கள் .அதே  முறையில்
உங்கள் கால்முட்டி தளர்வாக உள்ளது. இறுக்கம்  குறைகிறது என்று மறுபடியும்  உங்களுக்கு  நீங்களே   உறுதி படுத்திக்கொள்ளுங்கள். பாதங்கள், கால்முட்டி, முடிந்து
உங்கள்  தொடைப்பகுதிஇடுப்பு , வயிறுமார்புகைகள்தோள், கழுத்து  என்று ஒவ்வொரு  உறுப்பாகஅதில்  கவனம் செலுத்தி இறுக்கம்  குறைக்க  எண்ணிஉங்களை  நீங்களே  ஆட்டோ  சஜெச்சன்  முறையில்  டென்ஷனைக்  குறைக்கலாம்.   இந்தப்  பயிற்சியின்  தொடக்கத்தில்  டென்ஷன்  குறைய  பதினைந்து   நிமிடங்கள்   ஆகலாம்தேர்ச்சி  பெற்று  விட்டால்  ஐந்து  முதல்  எட்டு  நிமிடங்களுக்குள்  உடல்   ரிலாக்ஸ்  ஆவதை  உணர்வீர்கள்.

 

உண்ணும் போது செய்ய வேண்டியது 


    
அன்பு  மனைவியோ  உறவினர்களோ   உங்கள்  மீது  அதிக  அக்கறை  கொண்டு   உணவு   பரிமாற வரும்போதுநீங்கள்  செய்ய  வேண்டிய  பயிற்சி , ஒரு முறை  மேலும்  கீழும்  தலையை  ஆட்டினால்  மூன்று  அல்லது  நான்கு  முறை தலையை   இடமும்   வலமுமாக  ஆட்டவும்இந்தப்   பயிற்சி  மிக  முக்கியமானதுயாரோ  பெரியவர்கள்   கூறியதாக  நினைவு. " உண்டி  சுருங்கு ' என்றுஅதற்கு  இது  உதவும்.
--------------------------------------------------------------------------------

வாரணாசி அல்லது காசியில் மாடுகள் முட்டாதாம் காகங்கள் கரையாதாம் மல்லிகை  மணக்காதாம் முதுகை சொரிய ஆட்கள்கிடைப்பார்களாம்  இந்த செய்திகளை யாராவது ஊர்ஜிதம் செய்வீர்களா கடைசி செய்தி துஷ்யந்த்ன் ஸ்ரீதர் உபன்யாசத்தில்கேட்டது 

               -----------------------------------------------                                

 

 

 

 

 

 

 

               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

16 comments:

  1. //உழைப்பும்  ஊக்கமும்   ஒன்றானால்
    அடைவோம்  இலக்கை   நிச்சயமாய்//
    உழைப்பைச் சுரண்ட ஒரு முதலாளியும் ஊக்கத்திற்கு முட்டுக்கட்டை போட ஒரு அரசும் உண்டானால் உழைப்பும் ஊக்கமும் இருந்தென்ன பயன்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ந்மக்கு வேண்டியது அந்த ந்ம்பிக்கை

      Delete
  2. பஞ்சாபில் பணி புரிந்திருக்கிறீர்களா?  மொழிப்பிரச்னை எப்படி சமாளித்தீர்கள்?  ரிலாக்ஸ் செய்ய சொல்லி இருக்கும் நடைமுறை பயனளிக்குமா தெரியவில்லை.  முதலில் மனதில் நம்பிக்கை இருந்தால்தான் எல்லாம் நடக்கும் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. இர்ண்டு வாரங்கள் எனக்கு தெரிந்த ஹிந்தி கை கொடுத்தது

      Delete
  3. வாரணாசியில் முரட்டு மாடுகள் பயமுறுத்தும் வண்ணம் வழியை அடைத்துக்கொண்டு நின்றன.  மிக மிகக் குறுகலான பாதை.  பயந்துகொண்டேதான் தாண்டிச் சென்றோம்.  நாம் முட்டைக்கோடானது, நாம் இருப்பது வாரணாசி என்று அதற்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை!!

    ReplyDelete
    Replies
    1. மற்ற செய்திகள் ப்ற்றி கூறவில்லையெ

      Delete
  4. வாசித்தேன் ; கருத்துக் கூற எதுவும் தோன்ரவில்லை.

    ReplyDelete
  5. போர் முழக்க பாடல் உட்பட பலவற்றும் சிந்திக்க வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மூன்றாம் வகுப்பில் கற்பிக்கப்பட்டது

      Delete
  6. ரிலாக்ஸ் செய்யச் சொல்லியிருப்பது, நான் வாரம் ஒரு முறை யோகாவில் செய்வதுதான். இதன் பல்வேறு வெர்ஷன்ஸ் இருக்கிறது. சுதர்ஸன கிரியாவிலும் கடைசியில் இத்தகைய ரிலாக்சேஷன் உண்டு.

    /உண்டி சுருங்கு// - நான் படித்த வரையில் 'உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு' என்பதைத்தான்..ஹாஹா.

    வாரணாசி - நான் பார்த்த வரையில் ஓரளவு உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்டி சுருங்கல் எல்லோருக்கு உதவும்

      Delete
  7. வாரணாசி செய்திகள் வியப்பூட்டுகின்றன

    ReplyDelete
    Replies
    1. சென்று வந்தவ்ர் ஊர்ஜிதப்படுத்த வில்லையே

      Delete
  8. பஞ்சாபில் சென்று வென்று விட்டீர்கள்.

    வாரணாசி விடயம் படித்து இருக்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பஞ்சாப் என்னை வென்று விட்டது வாரணா சி வ்ஷய ம் கேள்விப்பட்ட்து

      Delete