இன்னும் சில பொன் மொழிகள்
பேசும் முன் கேள்.
எழுதும் முன் படி.
செலவழிக்கும் முன் சம்பாதி.
முதலீடு செய்யும் முன் விசாரி.
குற்றம் செய்யும் முன் நிதானி.
ஓய்வு பெறும் முன் சேமி.
இ றக்கும் முன் தருமம் செய்.
-------------------------------
கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்.
அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்.
வெட்டியாய்ப் பேசினால் வேலையை இழப்பாய்.
வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்.
ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்பாய்.
பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்.
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்.
நல்லவற்றைக் கூட்டிக்கொள்.
தீயவற்றைக் கழித்துக்கொள்.
அன்பைப் பெருக்கிக் கொள்
நல் வாழ்க்கையை வகுத்துக்கொள்.
-------------------
ஜனனம் என்பது தாய் தந்தையர் படைப்பு.
மரணம் என்பது இறைவனின் அழைப்பு.
இடைப்பட்ட வாழ்க்கை அத்தனையும் நடிப்பு.
பயனில்லா ஏழு
----------------------
ஆபத்துக்குதவா நண்பன்.
அரும்பசிக்குதவா அன்னம்
பெற்றோர் சொல் கேளா பிள்ளை.
தரித்திரம் அறியா பெண்டிர்
வறியோர்க்குதவா பொருள்.
எழுத்தறிவில்லா பிறவி.
பிறர்க்குதவா வாழ்க்கை.
---------------
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கின்றோம்.
நம் செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.
========================
தாயின் அருமை,குழந்தையின் பிறப்பில்.
தந்தையின் அருமை , பிள்ளையின் வளர்ச்சியில்.
ஆசிரியரின் அருமை, மாணவனின் படிப்பில்.
இறைவனின் அருமை, இயற்கையின் படைப்பில்
. அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
------------
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.
கெட்டுப்போனவர் விட்டுக்கொடுத்ததில்லை.
------------------
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது
வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்
--------------
தண்ணீரையும் சல்லடையில்
எடுத்துச் செல்லலாம் அது
பனிக்கட்டியாக உறையும் வரை
பொறுத்த்திருப்போமேயானால்.
. கடமையைச் செய்யுங்கள்
பலனை எதிர் பாருங்கள்.
மனிதர்களிடத்தில் அல்ல,
இறைவனிடத்தில்.
-----------
விழித்து எழுந்தவுடன்
கிடைப்பதல்ல வெற்றி
விழுந்து எழுந்தபின்
கிடைப்பதே வெற்றி
---------------------=
முயலும் வெற்றி பெறும்
ஆமையும் வெற்றி பெறும்
முயலாமை ஒன்றுதான்
வெற்றி பெறாதது.
--------------------
பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட
பிறர்க்கு உதவும் கரங்கள் உயர்வானவை.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது
திருவாசகம்
இறைவன்
சொல்ல
மனிதன்
கேட்பது
கீதை
மனிதன்
சொல்ல
மனிதன்
கேட்பது
குறள்
அருளாளன்
சொல்ல
ஞானிகள்
கேட்பது
திருவருட்பா
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது
திருமந்திரம்
மகன் சொல்ல மகேசன் கேட்பது
பிரணவம்
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது
வாழ்க்கை.
மேலே கண்டவை எல்லாம் ஒரு
ஆலயத்தில் திரட்டியது
வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் ஐயா. இதில் சிலவற்றை நான் கடைபிடித்து வருகிறேன்.
ReplyDeleteசென்னையில் ஒரு ஆலயத்தில்கண்ட வாசகங்கள்
Deleteஎல்லாமே சுவாரஸ்யம். எஸ் எம் எஸ் கால வாசகங்கள். இவதில் பலவற்றை அப்போது எங்கள் பிளாக்கில் உள்பெட்டியிலிருந்து என்கிற தலைப்பில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteஎஸ் எம் எஸ் காலம் என்று இருக்கிறதா என்ன
ReplyDeleteஉள்பெட்டியின் காலம் எது நான் எங்கள் ப்ளாகின் தொட்ர் வாசகன்
ReplyDeleteநல்ல பழமொழிகள் சார். அனைத்தும். ஒரு சிலது மட்டுமே கடைபிடிக்க முடிகிறது.
ReplyDeleteகீதா