Thursday, December 24, 2020

ஹிந்து மதம்

நான் ஒரு ஹிந்து 


 என்னால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்  எழுத முடிகிற அளவுக்கு கிடைக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறதா.? உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம். என் எண்ணங்களுக்குத் துணை போவதால் இந்தப் பதிவு பகிர்வு

ஒரு பயணத்தில்  அயல் நாட்டவர் ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது அறிமுகத்துக்குபின் நடந்த சம்பஷணை தொகுப்பு உங்கள் நம்பிக்கை எது

புரியவில்லை

உங்கள்  மதம்  எது ரிலிஜியன்எது  இஸ்லாமா கிருத்துவமா

 (ஒரு சராசரி மேற்கத்தியருக்கு தெரிந்த மதம்இஸ்லாமும்  கிருத்துவமும்தான்)

அப்படியயானால்  நீங்கள்  யார்

நனொரு ஹிந்துஒரு ஹிந்து தாய்க்கும்ஒரு ஹிந்து தந்தைக்கும் பிறந்ததால் பிறப்பாலேயே நானொரு ஹிந்து உங்கள் மதகுரு யார்

மதகுரு யார்

மத குரு என்று யாரும்  கிடையாது

உங்கள் புனித நூல் எது

எங்களுக்கு புனித நூல்  என்று ஏதும்கிடையாது நூற்றுக்கணக்கான வேதாந்த எண்ணங்களும் எழுத்துக்களும் அடங்கிய நூல்கள் ஏராளம் உண்டு

உங்கள் கடவுள்தான் யார் என்றாவது சொல்லுங்களேன்.

 

“ என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள். 

” கிருத்தவருக்கு ஏசுவும், இஸ்லாமியருக்கு அல்லாவும் இருப்பதுபோல் உங்களுக்கு என்று கடவுள் கிடையாதா.?

 

நான் ஒரு சில வினாடிகள் சிந்தித்தேன். கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒரு கடவுள் ( ஆண் ) இந்த உலகை சிருஷ்டித்ததாகவும் அவர் இவ்வுலகில் வாழும் மனிதர்கள்பால் அக்கறை கொண்டுள்ளவர் என்னும் போதனையில் வளர்ந்தவர்கள்.ஹிந்துமதம் குறித்து அறியாதவர்களுக்கு ஒரு மதகுரு, ஒரு புனித நூல், ஒரு கடவுள் என்னும் கோட்பாடு தவிர மற்றவை புரிந்து கொள்ள, முடியாதது தெரியாதது.

 நான்  விளக்க முயன்றேன்.ஒருவன் ஒரு கடவுளை நம்புபவனாக, ஹிந்துவாக இருக்கலாம். பல கடவுள்களை நம்புபவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளையே நம்பாதவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம்

 

இந்தமாதிரியான எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத ஒரு மதம் மாற்றாரின் தாக்குதலைதாங்கி இத்தனை வருடங்கள் இருக்க முடியுமா என்னும் வியப்பு அவர் முகத்தில் தெரிந்தது


“ வித்தியாசமாகவும் இண்டெரெஸ்டிங் ஆகவும் இருக்கிறது நீங்கள் பக்தி உள்ளவரா.?

 

நான் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்வதில்லை. எந்த வழிபாட்டு முறையையும் செய்வதில்லை. சின்ன வயதில் செய்திருக்கிறேன்.இப்போது  சில நேரங்களில் செய்யும்போதும் விரும்பிச் செய்கிறேன்.மகிழ்ச்சியாக இருக்கும்.

 

“ விரும்பிச் செய்கிறீர்களா.? கடவுளிடம் உங்களுக்கு பயம் இல்லையா.?

 

“ கடவுள் ஒரு நண்பர். அவரிடம் பயம் ஒன்றுமில்லை. மேலும் இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாரும் எப்போதும் கட்டாயப் படுத்துவதில்லை.“


சிறிது நேர யோசனைக்குப் பிறகு
 ” மதம் மாற வேண்டும் என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

 

” நான் ஏன் மாற வேண்டும்.? எனக்கு சில சடங்குகளும் கோட்பாடுகளும் உடன் பாடில்லை என்றாலும் என்னை யாரும் மத மாற்றம் செய்ய முடியாது. ஹிந்துவாக இருப்பதால் எனக்கு சுதந்திரமாக சிந்திக்கவும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகவும் முடியும். எந்தக் கட்டாயத்தின் பேரிலும் நான் ஹிந்துவாக இல்லை. விரும்பியே இருக்கிறேன்.

 

நான் அவருக்கு விளக்கினேன். ஹிந்துயிஸம் என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை நெறியும் முறையும் என்று. கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் போல் எந்த ஒரு தனி மனிதராலும் தோற்றுவிக்கப் படவில்லை. எந்த அமைப்போ குழுவோ சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில்லை

 

“ அப்படியானால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.?


“ நான் அப்படிச் சொல்லவில்லை. ஒரு தெய்விக சக்தியை மறுத்து ஒதுக்கவும் இல்லை. எங்கள் நூல்கள்,
 ஸ்ருதிக்களும், ஸ்மிருதிக்களும், வேதங்களும், கீதையும் உபநிஷத்துக்களும் கடவுள் இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம் என்றே கூறுகின்றன. ஆனால் நாங்கள் எங்கும் நிறைந்த, சர்வ சக்தி மிகுந்த அந்த பரப் பிரும்மத்தை இந்த பிரும்மாண்டத்தை சிருஷ்டி செய்தவராக வணங்குகிறோம்.

 

“ நீங்கள் ஏன் ஒரு தனிப்பட்ட கடவுளை வணங்கக் கூடாது.?

” எங்களுக்கு கடவுள் என்பது ஒரு கோட்பாடு. நம்பிக்கை. விவரிக்க இயலாத எங்கும் விரவி இருக்கும் அரூபம். ஒரு குறிப்பிட்ட கடவுளின் பின் மறைந்து அவரை நம்பாவிட்டால் தண்டனைஎன்றெல்லாம் பயமுறுத்தி அவரை வணங்க வைக்க அவர் ஒன்றும் கொடுங்கோலர் இல்லை. பயத்தையும் மரியாதையையும் திணிப்பவர் அல்ல. ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களை ஏமாற்றி , மூட நம்பிக்கைகளை வளர்த்து ,மதம் குறித்த சிந்தனைகளையே தடம் மாறச் செய்பவர்களும் அவர்கள்போதனையில் மயங்கி ஏமாறுபவர்களும் இருக்கலாம். ஆனால் வேதாந்த ஹிந்துமதம் இவற்றை எல்லாம் மறுதளிக்கிறது.

 

“ நல்லது கடவுள் இருக்கலாம் என்று நம்பி வழிபடுகிறீர்கள். வேண்ட்வும் 

.உங்கள் வேண்டுதல்தான் என்ன.?

 

” லோக சமஸ்த சுகினோ பவந்து. ஓம் ஷாந்தி ஷாந்தி.”( அமைதியுடன் வாழ்க வையகம்.)

 

 வியப்பாயிருக்கிறது. இந்த வேண்டுதலின் பொருள் என்ன. ?

 

இந்த உலகும் அதில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்

எங்கும் அமைதி நிலவட்டும்

 

இந்த மதம் பற்றிய விஷயங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது. ஜனநாயக முறையில் இருக்கிறது.பரந்த விசாலமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

 

உண்மையில் ஹிந்துயிசம் என்பது வேதங்களிலும் பகவத் கீதை போன்ற நூல்களிலும் வேர் விட்டுக் கிளர்ந்த ஒரு தனி மனிதனின் மதம்..அவனது வாழ்வியலுக்கும், எண்ண ஓட்டத்துக்கும் சித்தாந்தங்களுக்கும் ஈடு கொடுத்து அவன் விரும்பும் பாதையில் அவனுடைய கடவுளை அடைய வழி வகுக்கும் மிக எளிமையான மதம்

 

“ ஒருவன் ஹிந்து மதத்துக்கு மாறுவது எப்படி.?

“ யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின் கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம் விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது. ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி

” எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனையும் அவனது சிருஷ்டியையும் நேசிப்பதேஅவனைத் தேடும் முயற்சியின் முதல் படி. இசவஸ்யம் இதம் ஸர்வம் ( ISAVASYAM  IDAM  SARVAM ) 

எங்கும் நிறைந்திருக்கும் அவனை எதிலிருந்தும் பிரித்து அறிய முடியாது. உயிருள்ள மற்றும் ஜடப் பொருளை கடவுளாக மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது ஹிந்துயிசம் .அது சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது. வாழ்வின் நியதிகளைக் கடைபிடிப்பதில் அடங்கி இருக்கிறது. அவனவனுக்கு உண்மையாக இருப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.ஹிந்துயிசத்தில் கருத்துக்களுக்கு உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரமில்லை. எல்லோருக்கும் பொதுவானது. ஹிந்துக்கள் ஒரு ஆண்டவனை பல உருவங்களில் பல நிலைகளில் வழிபடுகிறார்கள் அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.

எம்மதமும் சம்மதமே என்றே முன்னோர்கள் அறிவிறுத்தினர். ஆனால் சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக  மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது.



நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.

யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன். 

ஹிந்து மதம்பற்றிய எண்ணங்கள் பதிவாகிறது
























 

19 comments:

  1. அருமை.  நல்ல கருத்துகள்.

    ReplyDelete
  2. நிறைவான கருத்தை நிறைவாகச் சொல்லியிருக்கின்றீர்கள்... தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...

    ReplyDelete
  3. இதற்கும் சிலர் கம்பு சுற்றிக் கொண்டு வருவார்கள்...

    ReplyDelete
    Replies
    1. போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவ தூற்றட்டும்

      Delete
  4. நல்ல முயற்சி. ஆனால் தற்போதைய ஹிந்துயிசத்திற்கும் (குறிப்பாக உத்தர பிரதேச) தங்களுடைய விளக்கத்திற்கும் மிகவும் வித்யாசம் உள்ளது. ராமகிருஷ்ணர் விவேகானந்தர் போன்றோரைக் கொண்டாடுபவர்கள் (பிரதமர் உள்பட) அவர்கள் சொன்ன விளக்கங்களை புறக்கணிப்பது தான் வேதனை. முக்கியமாக துவேசம்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. முன்பு ஒருபதிவுக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டத்துக்குபதிலாக ஒருமுயற்சி எனக்கு உத்தர பிரதேச ஹிந்துயிசம் தெரியாது

      Delete
  5. மனிதத்திற்கு மதம் ஒரு பொருட்டல்ல...

    ReplyDelete
  6. இந்து என்ற சொல் தற்கால அரசியலில் பலவாறான பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது பதிவில் உள்ளது .

      Delete
  7. நல்ல கருத்துகள் சார்..மதத்திற்கும் அப்பாற்பட்டது மனிதம்.

    //ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது.//

    அதே சார்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹிந்துயிச்ம் பற்றிய என் கருத்துகளை எழுதி இருக்கிறேன்

      Delete
  8. நமஸ்காரங்கள். நல்ல பதிவு. அருமையான பாகுபாடற்ற கருத்துகள். நன்றி.

    ReplyDelete
  9. பாரட்டாக எடுத்துக்கொண்டு நன்றி கூறுகிறேன்

    ReplyDelete
  10. அருமை
    ஆனாலும் மதத்தைவிட மனிதமே முக்கியம் என எண்ணுகிறேன்

    ReplyDelete
  11. எந்த கருத்து வேறுபாடும் இல்லையே

    ReplyDelete
  12. இந்து மதத்தில் உள்ள சுதந்தரம் வேறெந்த மதத்திலும் இல்லை .

    ReplyDelete
  13. இந்து மதத்தில் உள்ள சுதந்தரம் வேறெந்த மதத்திலும் இல்லை .

    ReplyDelete