நினைவோட்டங்கள்
-------------------------------
வாழ்வின் அநித்தியம் பற்றி
நிறைய்வே பேசிவிட்டோம், எழுதிவிட்டோம் இந்த வாழ்வுக்குப் பின் என்ன இருக்கிறது?
பதில் தெரியா புதிர் அது. ஹேஷ்யங்களை நான் நம்பத்தயாரில்லை. இறந்தபின் பேரினை
நீக்கிப் பிணமென்பார்கள் ஓரிரு நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். இறந்தவனை
நினைத்துக் கொண்டே இருக்க முடியுமா. அதற்குத்தானே நமக்கு மறதி என்னும் வரம்
இருக்கிறது. நான் நானாக இல்லாமல் சிலரது மனதில் நினைவாக இருக்கலாம். எனக்கு ஒரு
ஆசை. இறந்தபின் நடப்பதை நான் எல்லோரோடும் வலையினில் பகிர வேண்டும். முட்டாள்தனமான
ஆசை. நாம் உயிர்த்துடிப்புடன் இருப்பதாலேயே எண்ணங்கள் உருவாகின்றன. இருந்த இருப்பை
எண்ணி என்றோ எழுதிய சில வரிகள் என்னை மீண்டும் பிடித்திழுக்கின்றன. எண்ணங்களைப்
பகிரத்தானே வலை. என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே.
எண்ணச் சிறகுகளில்
அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
அந்த நாள் அக்குயவன் கை
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாயே .
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
அந்த நாள் அக்குயவன் கை
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாயே .
எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன்தானே நீ.
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணங்களாக சிறகடிப்பாயே
.