சந்தேகங்கள்
---------------------
எனக்கொரு சந்தேகம்
என்ன இது சந்தேகமெல்லாம் கேட்கப்படாது
வழிவழியாய் நடை முறைப் படுத்தப்பட்டு பழகி
வரும் விஷயங்களில் பொருள் இல்லாமல் போய் விடுமா
அதிகப்பிரசங்கித்தனமாய் கேள்விகள்
கேட்டுபதில்கிடைக்காவிட்டால் வருத்தப்படக் கூடாது
இருந்தாலும் கேள்வி கேட்காமலேயே எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே கேள்விகள் கேட்கப்படும்
போதாவது சிலர் அதுபற்றிசிந்திப்பா
ர்கள் அல்லவா
சூரியனையும் நவகிரகத்தில் ஒன்றாக எண்ணுவது சரியா
உன்னைத் திருத்த முடியாது
நீஎழுதுவாய் எல்லோரும் உன்னைப் படிக்கவே
தயங்குவார்கள்
என் கருத்தைச் சொல்லி விடுகிறேன் பின் என்னைப் பற்றி எடை போடட்டும்
விண்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் இவற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்று ஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தியவர்தான் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்.
இதையே நான் கூறினால் ஏற்க தயங்குவார்கள்
இந்த நிலையில் அந்த ஜோதிடத்தை, விஞ்ஞானப் பூர்வ மானது என்று நிரூபிப்பதற்கும் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இன்றைய பாஜக மோடி அரசு பாடாய்ப்படுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மேலும் ஒரு விஷயம் எந்த
ஒரு செயலைச் செய்யும் முன் ராகு காலம்
பார்ப்பவர்கள் இங்கு உண்டு இதில் படித்தவர்களும் பாமரர்களும்அடக்கம்! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமி தன்னைத் தானே சுற்றுவதன் மூலமாகக் கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தா விற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ள கால வித்தியாசம் ஒரு மணி நேரம். அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும் உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் இராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்பு சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்
இன்னொரு விஷயம் எதற்கும் சாஸ்திரம் என்று சொல்லி அடக்குவார்கள்
இந்த சாஸ்திரம்தான் என்ன சம்பிரதாயம் என்றாலாவது வழிவழியாகப் புழங்கி வருவது என்று
அர்த்தம் கொள்ளலாம் கோவிலுக்கு எண்ணை
எடுத்துச் செல்வதை இப்படிச் சொல்லலாம் முன் காலத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கும்
முன் வெளிச்சத்துக்கு எண்ணை தேவைப்பட்டது
ஆனால் இப்போதும் கோவிலில் ஆண்டவனுக்கு எண்ணை
விளக்குதான் கண்ணுக்கே புலப்படாமல் இருப்பதே ஆண்டவனின் உருவம் நேரில்தான் காண முடியாததை சிலை வடிவிலாவது
காணலாம் என்றால் அதுவும்
கற்பனையாகத்தான் காண வேண்டும் பகுத்தறிவுக்கு
ஒவ்வாதது என்றால் நாத்திகன் என்னும் முத்திரைவிழும்இதில் வேறு இத்தனை விளக்குக்கு எண்ணை கொடுத்தால் புண்ணியம் என்று சொல்லி பணம்பார்க்கும் வியாபாரிகளும் உண்டு
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் நான்
மீண்டும் மீண்டும் எழுதுவதன்விளைவு என்று சொல்ல மாட்டேன் ஆனால் என் அறச்சீற்றம் அதன் விளைவுகளை உண்டு பண்ணியிருக்கிறது
ஒருமகிழ்ச்சியான விஷயமே இந்த ராகுகால
அனுஷ்டானங்கள் சரியில்லையோ என்னு
சந்தேகம் பல வலைப் பதிவர்களிடம் தெரிவது
மக்கள் சிந்திக்க துவங்கி இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்னதான்
சிந்திக்கத் துவங்கினாலும் அவர்கள் உறக்கம்
தெளிந்து எழ நாட்கள் ஆகுமென்று தெரிகிறது வேறு வேறு கண்டங்களில் வசிப்பவர்கள் அந்த கண்டங்களுக்கான பஞ்சாங்கம் கிடைக்குமா என்று தேடுகிறார்கள்
இன்னொரு விஷயம்
கடவுளுக்குப்படைக்கப்படும் நைவேத்தியம் நாம் உண்ணும் உணவுக்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமே முதலில் அவனுக்குப்படைத்துபின்நாம்
உண்பது ஆனால் விளங்காத விஷயமென்னவென்றால்
இன்ன கடவுளுக்கு இன்ன உணவு என்றுதீர்மானித்து படைப்பதுதான்
தமிழர் நிலங்களைப் பாகுபாடு செய்தார்கள். அதனை அனபின் ஐந்திணை என்பார்கள். அதாவது குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்) முல்லை (காடும் காடைச் சார்ந்த இடமும்) மருதம் (வயலும் வயலைச் சார்ந்த் இடமும்) நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்) பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்). இதற்கேற்றவாறு முதல்பொருள் (அதாவது நிலமும் பொழுதுகளும்) கருப்பொருள் (தெய்வம் தொடங்கி விளையும் அத்தனைப் பொருட்களும். இது அந்தந்த இடத்தைப் பொறுத்தது) உரிப்பொருள் (இது உணர்வுகளைக் குறிப்பது - இதுவும் அந்தந்த இடத்தைப் பொறுத்தது.) எனவேதான் அங்கு உருவாக்கப்பட்ட தெய்வங்களை அந்தந்த நிலப்பகுதில் விளைந்த பொருள்களால் நிவேதனம் செய்யப்பட்டு வழிபட்டமை உண்மையானது. அப்படித்தான் நடக்கிறதா
எது எப்படியானால் என்ன பதிவில் வரும் பின்னூட்டங்கள் இன்னும் பகுத்தறிவுக்கு ஒப்புக் கொள்ளும்படியான பதில்கள் தருவதில்;லை ஒரு பதிவரின் எழுத்துப்படி கன்வின்சிங் ஆன பதில் கிடைக்கவில்லைஎன்பதே நிஜம் இருந்தாலும் ஒவ்வொரு விசேஷ நாட்களில் நமக்குப்பிடித்த தின்பண்டங்களை செய்து ஆண்டவனுக்குப் படைப்பதாகபேர் பண்ணி நாம் உண்ணுவதால் குறை ஏதும் இல்லை என்று திருப்தி கொள்ளலாம் சில விஷயங்களை அடிக்கடி எழுதுவது எப்படியாவது சிலரை யோசிக்க வைத்தால் நலமே
மேலே கூறப்பட்டது ஒரு
பெரியவர் என்னிடம் கூறியது ஆனால் நிவேதனங்கள் என்பது அப்படிய்யா
இருக்கின்றதுஎன்பதே என்கேள்வி பிள்ளையார்சதுர்த்திக்குகொழுக்கட்டையும் கிருஷ்ண ஜயந்திக்கு
சீடையும்(இதுபோல் பிற நிவேதனங்களும் )அந்தந்த இடத்துக்கு தகுந்தவாறு என்பதுபொருந்துகிறதா
அண்மையில் ஒரு அவதாரக்கதையும் அதன்பின்னணியும்பற்றிஎழுதி இருந்தேன்
அப்போது என் சிந்தையில் தோன்றிய சில எண்ணங்கள் இந்த அவதாரங்களைக் கொஞ்சம் ஆராய்ந்தால் அவதாரங்களில் எங்கோ பரிணாம வளர்ச்சி
தெரிவதுபோல் இருக்கிறது உலகில் உயிரினங்களில்
முதன்மையானதாக மீன் அவதாரம் நீரில் வாழ்பவை அதன் பின் நீர் நிலம் இவற்ற்ல் வாழும்ஆமை அவதாரம் அதன்பின்
விலங்காக பன்றிஅவதாரம் அதன்பின் மனிதனும் விலங்கும் சேர்ந்தநர சிம்ம அவதாரம்
அதன் பின்முற்றிலும் வளர்ச்சிஅடையாத வாமன
மனிதன் அதற்குப்பிறகு குண விசேஷங்களில்
மாறுபட்ட அவதாரங்கள்இவை என்னைச் சிந்திக்கச் செய்கிறது வாமன அவதாரத்துக்குப் பின் வந்த
அவதாரங்களில் பரிணாம வளர்ச்சி பிடி படவில்லை இவை யெல்லாம் என் சிந்தைகளே ஏன் கற்பனைஎன்றுவேண்டுமானால்
கொள்ளலாம்
----------------------------------------------
(சில செய்திகள்
இணையத்தில் இருந்து)