பல்சுவைப்பதிவா...?
----------------------------
எழுத
ஒரு விஷயம் வேண்டும் அதுவும் ஒரு இடுகையாக இட சம்பவங்கள் வேண்டும் அது
இல்லாத போதும் இடுகை இட குட்டி குட்டி
விஷயஙள் இருந்தாலும் போதும் தேற்றிவிடலாம்
அப்படித் தேற்ற முயன்றதன் விளைவே இப்பதிவு ஒரு பல்சுவைபதிவு எனலாமா உணர்ச்சிகளைப் பற்றி சொல்லும்போது முக்கியமாக
பயம் கோபம் சந்தோஷம் ஆச்சரியம் வெறுப்பு
என்பதுபோல் கூறு கிறோம் ஆனால் அதற்குள்ளேயும்
எத்தனை எத்தனை பகுதிகள் என்பதை விளக்கும்
ஒரு படம் கிடைத்தது பகிர்கிறேன் பாருங்களேன்
பள்ளியில் படிக்கும் பொது ( படித்ததே
சொற்பம்தான் )கட்டுரை எழுதச் சொல்வார்கள் என்னைப் போல் இருப்பவர்கள் இந்தக்
கட்டுரையை சமாளிக்கும் விதமே அலாதி ஏதோ
ஒன்றிரண்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டு
வியாசத்தில் அவற்றைக் கொண்டு வருவதே நோக்கமாய் இருக்கும் என் ஆசிரியர்
இம்மாதிரி இருக்கும் மாணவர்களை
பசுமாட்டுகதை தெரிந்தவர்கள் என்பார் உங்களுக்கும் அதைச் சொல்கிறேனே
ஆசிரியர்
பல தலைப்புகளைக் கொடுத்து கட்டுரை எழுதிப் பழகச் சொல்வார் ஆனால் என் போல்
ஓரிருவர் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு தயாராய் இருப்பார்கள்
ஆசிரியர் தென்னை மரம் பற்றிய கட்டுரை எழுதச் சொன்னால் இவர்கள் படித்திருக்க மாட்டார்கள் ஆனால்
கட்டுரையும் எழுதியாக வேண்டும் இவர்கள் படித்ததெல்லாம் பசுமாடு பற்றி மட்டுமே ஆனால் வியாசம்
எழுத வேண்டியது தென்னை மரம் பற்றி
சூட்டிகையானவர்கள் அல்லவா அவர்கள் தென்னைமரம் நெடிது ஓங்கி வளரும் அதில் ஒரு பசுமாடு கட்டப்பட்டிருந்தது என்று
தொடங்கி பசுமாடு பற்றி விலாவாரியாக எழுதுவார்கள் ஏனென்றால் அதுதானே அவர்களுக்குத் தெரியும்
வாழ்க்கையில் இம்மாதிரி பசுமாடு பற்றி மட்டுமே தெரிந்திருக்கும் பலரும்
உண்டு அடியேனும் அவர்களில் ஒருவனோ என்னும் ஐயமும் வருவதுண்டு
கட்டுரை
என்னும்போது அண்மையில் படித்த ஒரு மாணவனின் கட்டுரை பற்றிய எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை
ஒரு
வகுப்பில் அம்மா பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பணித்தார்கள் ஐந்து நிமிட நேரம் கொடுக்கப்பட்டது எல்லோரும் முனைந்து எழுதிக்
கொண்டிருந்தார்கள் அதில் ஒருவன் சில விநாடிகளிலேயே எழுதி முடித்து விட்டான்
ஆசிரியர் அவன் எழுதியதை வாங்கிப் படித்துப்பார்த்தார் வெகுவாக அவனைப் பாராட்டினார்
அப்படி என்னதான் எழுதி இருந்தான் …?ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களின் எந்தகூட்டாலும் வருணிக்க முடியாதவர் அன்னை என்றிருந்ததாம்……!
வாழ்க்கை
நிலை பற்றி என்னவெல்லாமோ கேள்விப்படுகிறோம்
எப்படி வாழ்ந்தாலும் அவர்களுக்கும்
தேவை வயிறார உண்ண உணவும் மானத்தை காக்க
சிறு துணியும் போதும் தானே அதில்லாமல் தன்
தேவைக்கு மீறி எவன் வைத்துக் கொண்டிருக்கிறானோ அவன்
எங்கோ ஒரு பிச்சைக்காரனை அல்லது திருடனை உருவாக்குகிறான் என்று காந்திஜி சொன்னாராம் அவர் இந்தக் காணொளியைக் கண்டால் என்ன நினைப்பார் நமது குடியரசு தின முக்கிய விருந்தினராக வந்திருந்த
அபு தாபியின் இளவரசர் ( அவர் பெயர்
நினைவுக்கு வரவில்லை பெரிய பெயர் ) அவரது தனி விமானத்தில் வந்தாராம் அது பற்றிய காணொளி
இது பாருங்கள்
மனம்
அலைபாயாமல் இருக்க சில விஷயங்களில் அதைச் செலுத்த வேண்டும் அதுவே நான் தஞ்சாவூர் ஓவியம் கண்ணாடி ஓவியம் இவற்றைத் தீட்டக் காரணமாய் இருந்ததுகண்களும்
கைகளும் ஒருங்கிணைந்து செயல் படாமல் போகவே கவனத்தை வேறு திசையில் செலுத்த க்வில்லிங் மற்றும் டெரகோட்டா
அணிகலன்கள் செய்வதைக் கற்கத்
தோற்றுவித்தது அதிலும் ஒரு பிரச்சனை என்னவென்றால் நான்
ஆசையாய் செய்வதை அணிந்துகொள்ள என்
வீட்டில் பெண்குழந்தைகள் இல்லை வெறுமே செய்து இட மனமும் இல்லை இருந்தாலும் செய்தவற்றை விரும்பும் சில
பெண்குழந்தைகளுக்குக் கொடுக்கிறேன் நான் செய்த
சில அணிகலன்களைப் படமாக்கி இருக்கிறேன்
கடைசியாக சில்க் நூலில் சுற்றிய ஜிமிக்கி செய்யக் கற்றது
![]() |
டெரகொட்டா அணிகலன்கள் ஒரு படத்திில் |
![]() |
க்வில்லிங்கில் ஒரு ஜிமிக்கி |
![]() |
சில்க் நூல் சுற்றிய ஜிமிக்கி |
இந்தப்பதிவு
எழுதும் நாள்ஜனவரி 30. தியாகிகள் தினம்
என்று நினைக்கப்படுவது இந்த நாளில் நாங்கள் அரக்கோணத்தில் இருந்தபோது
காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ரேடியோவில் கூறிய செய்தியை அந்த
தாசில்தார் தெரு முழுதும் கூவித்தெரிவித்தோம் எங்கள் வீட்டிலேயே இழவு விழுந்தது போல்
என் தந்தையாரும் வீட்டில் உதவிக்கு இருந்த அம்மையாரும் நிலை குலைந்து கதறி அழுதது நினைவில் இருக்கிறது
இப்போதெல்லாம் காந்திஜி பற்றி வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ என்னும்
பாவனையில் அவதூறாகக் கருத்து கூறுவது
அவர்களை அறிவு ஜீவிகளாகக் காட்டும் திறனோ
என்று சந்தேகப்பட வைக்கிறது
காந்திஜியின் அடிப்படைக் கொள்கைகளிலும் அஹிம்சையிலும் நம்பிக்கை அற்றவர்கள் காதி கேலண்டரில் காந்திஜி
போல் ராட்டினம் சுற்றும் போஸ் கொடுப்பது
வருத்தமளிப்பதுடன் நேரத்துக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்காட்டும் குணமும் எச்சரிக்கை விடுக்கிறது
கீழே
ஒரு ஆங்கில வாக்கியம்
இதைப்படித்ததும் என்ன தோன்றுகிறது
ஒரு ஆச்சரியமான நீள வாக்கியம் இதன் முதல்
வார்த்தை ஒரு எழுத்தில் இருக்கிறது இரண்டாம் வார்த்தை இரண்டு எழுத்தில் இருக்கிறது
மூன்றாவது வார்த்தை மூன்று எழுத்து என்று தொடர்ச்சியாக ஒவ்வொரு வார்த்தையும்
எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போக கடைசி வார்த்தை இருபது எழுத்துக்கள் கொண்டது இந்த
வாக்கியத்தை அமைத்தவர் ஒரு வொகாபுலரி ஜீனியஸாக இருக்க வேண்டும்
I
DO NOT KNOW WHERE FAMILY DOCTORS ACQUIRED ILLEGIBLY PERPLEXING HANDWRITIING; NEVERTHELESS
EXTRAORDINARY PHARMACEUTICAL INTELLECTUALITY CONTERBALANCING INDECIPHERABILITY
TRANSCENDENTALISES INTERCOMMUNICATION”S INCOMPREHENSIBLENESS