கண்ணன் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணன் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 செப்டம்பர், 2018

கண்ணனைக் காண வாரீர்



                                                     கண்ணனைக் காண வாரீர்
                                                     ---------------------------------------------
கண்ணனை காண வாரீர்

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி இன்றா நேற்றா  ஏதோ காரணங்களுக்காக இரு நாட்களிலும்  கொண்டாடப்படும்  நாள். வெகு துல்லியமாக கிருஷ்ணனின் பிறப்பும் ஆயுசும் பற்றி ஒரு பதிவில் குறிப்பு காணப்பட்டது கண்டு ஆச்சரியாமாக இருந்தது that is besides the point
என்னால் நேற்று  பதிவிட முடியவில்லை  இருந்தால் என்ன கண்ணன் பற்றி இன்று எழுதலாமே பதிவு கண்ணன் குறித்ததாக இருக்க வேண்டும்  ஏற்கனவே கிருஷ்ணாயணம்  என்று கண்ணன் பற்றி எழுதி இருக்கிறேன் சுட்டியை க்லிக்கி பார்க்கலாம் அவனதுகேசாதி பாதவர்ணனையும் பார்க்கலாம்    அவன்வாழ்வில் நிகழ்த்தியதாகக் கூறப்படும்சில சம்பவக் கோர்வையும் எழுதக்கூடியதுதானே கண்ணனுக்கு இன்னொருபெயர் மாயன்  ஆகவே மாயைபற்றி எழுதலாம்தானே  மேலும் ஒரு விளம்பரமாக நான்  வரைந்திருந்த சில ஓவியங்களும் இடம்பெறலாமே என்று தோன்றியது         
   
பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்




 காளிங்க நர்த்தனம்  காணொளி 


ராதா கிருஷ்ணன்   அடியே கை வண்ணம் 

வெண்ணை உண்ணும்கிருஷ்ணன் 

ராதா கிருஷ்ணன்   கண்ணாடி ஓவியம்  n


வெண்ணை தின்னும் கண்ணன்  இன்னொரு படம் 
கீதா உபதேசம்  சிற்பம்  பெங்களூர் கோவில் ஒன்றில் 

கீதா உபதேசம் கொண்டப்பள்ளி பொம்மை என் வீட்டில்