இன்னொரு கதையல்ல .....நிஜம்...!
----------------------------------------------
சில நேரங்களில் உண்மை நிகழ்வுகள் கற்பனைக் கதைகளையும் விஞ்சி
விடுகின்றன. அண்மையில் செய்தித்தாளில் படித்தது எனக்குள் பல கேள்விகளை எழுப்பிச்
சென்றது.. இதைப் படித்து முடித்தபிறகு இதன்
காரண காரியங்கள் என்ன என்று வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாமே
தன்னுடைய இரு மகள்களைக் கற்பழித்தக் குற்றத்துக்காக நீதி
மன்றத்தில் விசாரிக்கப் பட்டவர் விடுவிக்கப் பட்டார்.வழக்கின்போது புகார் கொடுத்த
பெண்கள் புகாரை வாபஸ் வாங்கி விட்டனர்.
இரண்டு பெண்களும் அவர்களது தாயும் நீதிபதி முன்
கொடுக்கப்பட்ட வாக்கு மூலத்தில் அந்தத் தந்தை தன் பெண்களை கற்பழித்ததாகக் குற்றம்
சாட்டி இருந்தனர். ஆனால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசார்ணைக்கு
வந்தபோது அவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்ததை உறுதி செய்யவில்லை.
கற்பழிப்புக்காகவும் protection of children from sexual offences (POCSO)சட்டத்தின்
கீழும் வழக்கு பதிவாகி இருந்தது.
பெண்களில் இளையவள் 2013-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவள்
ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய தந்தை தன்னைக் கற்பழிப்பது உண்டு
என்றும் தன் அக்காவையும் கற்பழித்திருக்கிறார்
என்றும் , எப்படியோ தப்பித்து காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்ததாகவும் கூறி
இருந்தனர். இரண்டு பெண்களுடையவும் அவர்களது தாயுடையவையுமாக வாக்கு மூலங்கள்
மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவாக்கப் பட்டது அதன்படி குற்றப் பத்திரிக்கையும்
தாக்கல் செய்யப் பட்டது.
வழக்கின் போது பெண்களின் தாய் கொடுக்கப்பட்ட எல்லாப்
புகார்களையும் மறுத்தார். மூத்த பெண்ணுக்கும் அவர்களது தந்தைக்கும் சிற்சில சின்ன
மனஸ்தாபங்களும் சண்டைகளும் இருந்ததென்றும் கூறினார். வழக்கின் போது இரண்டாவது மகளும்
தாய் சொன்னதையே கூறினார். தந்தையிடம் ஏற்பட்ட சண்டை ,மனஸ்தாபத்தில் அக்கா காவல்
நிலையத்துக்குப் போனபோது தானும் கூடப் போனதாகவும் அங்கு ஒரு NGO வில் இருந்த
ஒரு பெண்மணியைக் கண்டதாகவும் அவர் ஆலோசனைப் படி தந்தைக்கு எதிராகப் புகார்
கொடுத்ததாகவும் சொன்னார். தந்தை தன்னைக் கடிந்து கொண்டதாகத் தமக்கையும் கூறினார்.
வழக்கு விசாரணையில் தள்ளி வைக்கப் பட்டது
பத்திரிக்கையில் வந்த ஒரு inocuous செய்தியாக
இல்லாமல் தற்காலப் பெண்கள் நினைத்தால் யாரையும் குற்றம் சாட்டலாம் என்றும் தோன்றுகிறது.
உண்மையிலேயே தந்தை தவறாக நடந்து கொண்டாரா.? நடந்தது என்ன.?நிஜ நிகழ்ச்சி ஒரு நல்ல
கற்பனைக் கதைக்கு வழி வகுக்கலாம் என்றே தோன்றுகிறது. வாசகர்கள் கருத்து தெரிவிக்க
வேண்டுகிறேன்
இந்தப் பதிவை வெளியிடும் முன் இன்றைய (16-06-2014) ஆங்கில ஹிந்துவில்(பெங்களூர் பதிப்பு )இன்னுமொரு செய்தி மனசை வெகுவாக பாதித்தது.முன்பொரு முறை இங்கிலாந்தில் இந்தியர் ஒருவர் தன் பெண்ணையே ( குழந்தையையே ) பலாத்காரம் செய்து , மனைவி போலீசில் புகார் கொடுத்தபோது வழக்குக்காக ரிமாண்டில் வைக்கப் பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்டதை கதையல்ல நிஜம் என்று பதிவெழுதி இருந்தேன் தான் பெற்ற பெண்ணையே பலாத்த்காரம் செய்பவரின் மனம் எத்தனை வக்கிரமாக இருக்கவேண்டும். இன்றைய செய்தியில் தந்தை ஒருவன் தன் 18 வயது பெண்ணை கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பலவந்தப் படுத்திப் புணர்ந்து வந்ததும் அவளை மிரட்டி வெளியே சொல்லாமல் இருக்க வற்புறுத்தியதும் கடைசியில் குடி போதையில் பலர் முன்னே பலாத்காரம் செய்ய முயன்றபோது அகப்பட்டுக் கொண்டதாகவும் செய்தி.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.? நான் என் முந்தைய பதிவில் முதன்மையாகக் குறிப்பிட்டிருந்த நன்மொழிப் படி நடப்பதில்லை என்பது தெளிவாகிறது .