விநாயக சதுர்த்தி
------------------------------
விநாயக சதுர்த்தி
கடந்த விநாயக சதுர்த்திகளின் போது அகவலுக்கு பொருள் எழுதி
இருந்தது நினைவுக்கு வருகிறது இந்த முறை சற்று வித்தியாசமாக தொழில் நுட்பமே தெரியாத நான் என்பழைய டேப்புளில் இருந்து என் மனைவி பாடியிருப்பதை என்னவெல்லாமோ
செய்துபதிவாக்கி இருப்பதை இப்போது
இடுகிறேன் திருச்சியில் இருந்த போது கர்நாடிக் சங்கீதம்கற்க விருப்பப்பட்டு பாடியதை டேப்புகளில் பதிவு
செய்திருந்தேன் ஆனால் டேப் ரெகார்டர் பழுதாகிவிட அதை ரிப்பேர் செய்யமுடியவில்லை
எத்தனையோ ஆண்டுகள் என் ஹாபி யாக இருந்தது வீட்டுக்கு வருகிறவர் குரலைஎல்லாம் பதிவாக்கி விடுவேன் எத்தனையோ ஆண்டுகள் கழித்து இருப்பவர் இல்லாதவர்
குரலையெல்லாம் கேட்டு மகிழ்வதே ஒரு ஆனந்தம் டேப் ரெகார்டர் பழுதானபோது
மிகவும்வருத்தமாய் இருந்தது குறிப்பிட்ட சிலகுரல்களைஎன்னவெல்லாமோ செய்து கணினியில் ஏற்றி இருக்கிறேன்
கூடவே நான் ஓவியம் தீட்டத்துவங்கிய புதிதில் வரைந்த பிள்ளையார் ஓவியமும் இதில் என் பேத்தி இதைப்பார்த்து கொடுத்த கமெண்ட் “பிள்ளையார் கோபமாக முறைப்பதுபொல் இருக்கிறதே” ஆரம்ப காலத்தில் நிறையவே பிள்ளையார் ஓவியங்கள் வரைந்ததுண்டு அவற்றில்சாண்ட் பெயிண்டிங்கும் அடக்கம் வீட்டில் நிறையவே பிள்ளையார் விக்கிரகங்கள் உண்டு
![]() |
பிள்ளையார் ஓவியம் |
என் மகன் ஜெய்பூருக்குப் போயிருந்தான் பொதுவாக ஜெய்பூர் பற்றிய புகைப்படங்களில் இருந்து வேறுபட்ட படங்கள் இங்கே
ராஜஸ்தானி இசையா
![]() |
மிக நீண்ட மீசை உடையவர் நீளம் 17 அடி ஒரு ரெகார்ட் |
![]() |
ராஜஸ்தானி மரியாதை |
![]() |
ராஜஸ்தானி மாலை மரியாதை |
![]() |
மூடிய உணவு தட்டு |
![]() |
ட்ரடிஷனல் ராஜஸ்தானி தாலி |
![]() |
அவன் தங்கி இருந்த இடத்தில் உணவகம் |
படித்ததில் ரசித்தது
ஆசிரிய தினத்தன்று ஒரு மாணவன் அவனது ஆசிரியரைக்கண்டு “ நான் இந்நிலையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்றானாம் அதற்கு அவர்
“என்னை குறைகூறாதே நானும் மிக முயன்று தோற்றுவிட்டேன் ‘ என்றாராம்
இன்னொரு மாணவனின் சந்தேகம் “ஒரு ஆசிரியர் பல பாடங்களை நடத்த முடியாதபோது ஒரு மாணவன் எப்படி பல பாடங்களைக்கற்க முடியும்?”
இப்போது ஒரு சந்தேகம்
இன்னொரு சந்தேகமா பதிவுலகம் தாங்காது
ஔவையார் எழுதியதாகச் சொல்லப் படும் நல்வழியில் ஒருபாடல்
ஆசிரிய தினத்தன்று ஒரு மாணவன் அவனது ஆசிரியரைக்கண்டு “ நான் இந்நிலையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்றானாம் அதற்கு அவர்
“என்னை குறைகூறாதே நானும் மிக முயன்று தோற்றுவிட்டேன் ‘ என்றாராம்
இன்னொரு மாணவனின் சந்தேகம் “ஒரு ஆசிரியர் பல பாடங்களை நடத்த முடியாதபோது ஒரு மாணவன் எப்படி பல பாடங்களைக்கற்க முடியும்?”
இப்போது ஒரு சந்தேகம்
இன்னொரு சந்தேகமா பதிவுலகம் தாங்காது
ஔவையார் எழுதியதாகச் சொல்லப் படும் நல்வழியில் ஒருபாடல்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
சந்தேகமென்னவென்றால் நாம் பொதுவாக அறியப்படும் ஔவையார் அகவல் எழுதியவரும் நல்வழி எழுதியவரும் ஒருவரா இவர்கள்காலம் எது இப்பாடலில் சங்கத்தமிழ் மூன்றும்தா என்று கேட்பதால் நல்வழி எழுதியவர் சங்ககாலத்தவராக இருக்க முடியாது என்று தோன்றுகிறதுபடிப்பவர்கள் பலருக்கும் ஔவையார்களின் வித்தியாசம் தெரியுமா எனக்குத் தெரிய வில்லை ஔவையாரின் பெயரென்ன ஔவை என்றால் மூதாட்டி என அர்த்தம் உண்டு தெலுங்கில் ஔவா என்றால் பாட்டி என்றுபொருள் உண்டு
நல்வழிப் பாடலில் இன்னொரு பாடல்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
இதன்படி நல்வழி எழுதிய ஔவையார் காலத்தில் சாதி வேறுபாடுகளிருந்ததாகத் தெரிகிறது