மகளிர் தினம்
--------------------
மகளிர் தினத்தில் பலரும் எழுதி இருக்கிறார்கள். பெயரும் புகழும் பெற்ற பெண் மணிகள் விருது பெற்றோர் , மகளிர் தினத்துக்கு காரணமானவர்கள் என்று பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு மூதாட்டி பற்றிய செய்தியைப் பகிர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் குறித்த செய்திகள் சரியாக நினைவுக்கு வராததால் கணினியில் தேட முயன்றேன் வெற்றி பெறவில்லை. ஆகவே நினைவுக்கு வருவதைப் பகர்கிறேன் கர்நாடக மாநில மூதாட்டி வயது எழுபதுக்கும் மேல் (இப்போது) அவர் என்னதான் சாதித்து விட்டார். தனி ஒரு ஆளாக நூற்றுக் கணக்கில் மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். பெயர் சாலு மாரக்கா என்று நினைவு. கர்நாடக மாநிலத்தில் இவரது சேவை அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டிருக்கிறார். அண்மையில் இவர் உடல் நலமில்லாதபோது அரசாங்கமே மருத்துவ உதவி செய்திருக்கிறது. படித்தவர் அல்ல. பாமரர். சுற்றுச் சூழல் பற்றிப் பேசியே காலங் கழிக்கும் நம்மிடையே ஒரு அசாதாரண தொண்டு மனம் படைத்தவர். இன்னுமிவர் பற்றி செய்திகள் தெரிந்தவர் பகிர்ந்து கொள்ளலாமே
தவறான பெயரில் தவறான இடத்தில் தேடி இருக்கிறேன், அவர் பெயர் சாலு மாரத திம்மக்கா. 285 ஆல மரங்களை நான்கு கிலோமீட்டர் இடையே நட்டு பராமரித்திருக்கிறார். இவருக்கு அனெரிக்க அரசின் பாராட்டும் கிடைத்திருக்கிறது குழந்தைகள் இல்லாத இவர் மரங்களை குழந்தைகள் போல் பாவித்திருக்கிறார்
ஸ்ரீராமின் பின்னூட்டம்கிடைக்கு முன்பே நானும் பார்த்து விட்டேன். பதிவை சரி செய்தும் விட்டேன். ஸ்ரீராமுக்கு நன்றி.
( காதல் காதல் காதல் , காதல் போயின்” போட்டி மீதிக்கதைக்கு கடைசிநாள் 10-ம் தேதி. நினைவூட்டுகிறேன்)