தொடர் பயணம் -நாகர் கோவில் -1
---------------------------------------------------ப்
24-ம் தேதி அதிகாலையில் சுமார் மூன்று மணி அளவில் நாகர் கோவில் போய்ச் சேர்ந்தோம் ஊர் புதியது என்பதாலும் ஹோட்டலில் அறைகள் காலை ஏழு மணியிலிருந்தே முன் பதிவு செய்திருந்ததாலும் ரயில் ப்லாட்ஃபாரத்திலேயே காலை ஆறரை மணிவரை இருக்க முடிவு செய்யப்பட்டது நாங்கள் போகுமுன்பே ஹோட்டலில் இருந்து நாங்கள் வருவதை உறுதிசெய்யச் சொல்லி தொலைபேசியில் செய்தி வந்தது. நாகர் கோவிலில் வடசேரி என்று நினைக்கிறேன் ஹோட்டல் உடுப்பி இண்டர்னேஷனலில் அறைகள் முன் பதிவாகி இருந்தன. சௌகரியங்கள் பொருந்திய ஹோட்டல் முதல் வேலையாகக் காலைக்கடன்களைக் கழித்துக் குளித்து காலை உணவு அருந்தி நேரே சுசீந்திரம் சென்று பின் அங்கிருந்து கன்னியா குமரி செல்லத் திட்டமிட்டோம்
சுசீந்திரத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கும்
தெய்வம். சிவன் விஷ்ணு பிரம்மா
மூவரும் சேர்ந்திருக்கும் தாணுமாலயன்
என்று அழைக்கப்படுகிறார் கோவில்
உள்ளே மேல் சட்டை அணியக் கூடாது. ஒரு பெரிய விஸ்வரூப ஆஞ்சநேயர் இருக்கிறார் .நவக்
கிரகங்கள் மேலே விதானத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறதுஅங்கிருக்கும் துவார பாலகர்
சிலையில் ஒரு காதில் ஒரு குச்சியைச் செலுத்தி இன்னொரு காதில் வருமாறு அதிசய
சிற்பவேலை இருக்கிறது சில தூண்களில் தட்டினால் இசை ஓசை வருமாறு
அமைத்திருக்கப்பட்டிருக்கிறது
தாணுமாலயன் கோவில் முன்பு |
சுசீந்திரம் கோவில் கோபுரம் |
வெயில் அதிகமாகும் முன்பே கன்னியாகுமரி செல்ல வேண்டி
சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டோம் விவேகாநந்தர் பாறை மற்றும் ஐயன் திருவள்ளுவர் சிலையையும் காண நினைத்தோம் கடல் கொந்தளிப்பால் திருவள்ளுவர் சிலை
இருக்கும் இடத்துக்கு போட் செல்லாது என்றனர் விவேகாநந்தர் பாறைக்குச் சென்று வர
ஒருவருக்கு ரூபாய் 34/- போட்டுக்காக வசூலிக்கிறார்கள் இருக்கும் வரிசையையும்
கூட்டத்தையும் பார்த்தால் காத்திருக்கவே
இரண்டு மணி ஆகும் போலிருந்தது. சிறப்பு வரிசையில் சென்றால் ஆளுக்கு ரூபாய் 169 /-
என்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.
வேறுவழியின்றி. நேரத்துக்காக அந்த வரிசையில்
சென்றோம் விவேகாநந்தர் பாறைக்கு ஒரு போட் ரைட்
விவேகாநந்தர் நினைவிடம் பாறை |
முன்பு நாங்கள் சென்றிருந்தபோது
லைஃப் ஜாக்கெட் ஏதும் தரவில்லை. மேலும் பாறையின் மேலேற கட்டணம் ஏதும்
வசுலிக்கப்பட்டதில்லை. இம்முறை லைஃப் ஜாக்கெட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதை
எப்படி உபயோகிப்பது என்று எவரும் கூறவில்லை. மேலும்பாறைமீதேற ஆளுக்கு ரூபாய் 20/- வசூலிக்கிறார்கள் நானும் என்மனைவியும் அவளது சகோதரியும் மாமியும் மேலே போகாமல்
கீழேயே மற்றவருக்காகக் காத்திருந்தோம் நாங்கள் ஏற்கனவே மும்முறை சென்றிருந்த
இடம்தானே
விவேகாநந்தர்
பாறைக்குச் சென்றுவரும்போது கன்னியாகுமரிக் கோவிலுக்கும் சென்றோம் கன்னியா குமரியை
முக்கடலும் சங்கமிக்கும் இடம் என்கிறார்கள் வங்காள விரிகுடா இந்து மகா
சமுத்திரம் அரபிக்கடல் முன்பு போயிருந்தபோது கண்ட இந்திரா காந்தி பாயிண்ட் என்னும் வாசகங்கள் இப்போது காண வில்லை. கன்னியா குமரி
கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகி இருக்கிறதே தவிர கோவிலின் களை ஏதும் இல்லை
.
![]() |
பத்மநாப புரம் அரண்மனை ஒரு தோற்றம்( வெளியில் இருந்து) |
அரண்மனை காண
அனுமதிக்கு ரூ 35/- ஒருநபருக்கு வசூலிக்கிறார்கள் வாகனப் பார்க்கிங்குக்கு ரூ 85 /- வசூலிக்கிறார்கள் புகைப்படம் எடுக்கக்
கூடாது. என் ஹாண்டி காமைக் கொண்டு போய் படம் எடுக்க ரூ 2000/- கேட்டார்கள் மறுத்து
விட்டேன் லாக்கரில் வைத்துப் போனேன் பதிவிட்டிருக்கும் குதிரை வீரன் படம்
புத்தகத்தில் இருந்தது அரண்மனை பற்றிய
செய்திகள் கொண்ட புத்தகம் ரூ 120/- ஆக அரண்மனை
நிறையவே சம்பாதித்துக் கொடுக்கிறதுஅந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் இத்தனை பெரிய அரண்மனையில் எண்ணை
விளக்குகளுடன் எப்படி வாழ்ந்தார்களோ என்னும்
சிந்தனை மனதில் ஓடாமல் இல்லை.
வெளியில் வந்த பிறகும் எதையோ பார்க்காமல் போகிறோம் என்றே தோன்றியது
அங்கிருந்து காமராஜரால் கட்டப்பட்ட தொட்டி[ப்பாலம்
என்னும் இடத்துக்குப் போனோம் அந்த இடம் சுற்றுலாவில் எப்படி முக்கியத்துவம் பெற்றது என்பது தெரியவில்லை. போகாமலேயே கூட
இருந்திருக்கலாம்
தொட்டிப்பாலம் அருகே ஒரு அறிவிப்பு |
அங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் சென்றோம் . முன் போல் இருந்தால் நானே அருவியில் நீராடி இருப்பேன் இப்போது கீழே இறங்கவே தயக்கமாக இருந்ததால் மேலிருந்தே கண்டு ரசித்தேன் ரம்மியமான சூழ்நிலை. அழகான இடம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது ஒரு சிறிய காணொளி
திற்பரப்பு அருவி -ஒரு காட்சி |
அருவியின் பின்னணியில் |
நாகராஜா கோவில் |
ஹோட்டல் லாப்பியில் |
நாகராஜா கோவில் முகப்பு நாளெல்லாம் பயணித்ததில் உடல் நான் இருக்கிறேன் என்று கெஞ்ச ஆரம்பித்தது ஒரு வழியாய் அறைக்கு வந்தோம் . நாளை பயணத்தின் கடைசி நாள் திருச் செந்தூர் சென்று வரத் திட்டம் ( தொடரும் ) |
/