ஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்
-------------------------------------------------------------------------
அண்மையில்
இராமேஸ்வரம் சென்றிருந்தோம் அன்று கும்பாபி ஷேகம் கும்பாபிஷேக விசேஷ மலராக மாலை முரசு வெளியிட்டிருந்த எட்டு பக்கங்களைப் பார்த்த போது மனம் வலித்தது அம்மாவின் ஆணைக்கிணங்க கும்பாபிஷேகம் நடை பெற்றதாகச் செய்திகள் இருந்தனஅதே நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் கும்பாபிஷேகம் நடை பெற்றது அதே நாளில் தமிழகத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடை பெற்றதாக அறிகிறேன் இதெல்லாம் அம்மாவின் ஆணைக்கிணங்க என்று அ்றியும்போது நாம் இன்னும் அரசியலுக்கு அடிமைகள் என்று நினைக்கத் தோன்றுகிறது இம்மாதிரி கும்பாபிஷேகம் நடந்தால் அது அம்மாவுக்கு நல்லது என்று சோதிடர்கள் சொன்னதாகக் கேள்வி. என்று ஸ்டேடஸ்
போட்டிருந்தேன்
அதற்கு கமெண்ட் எழுதிய நண்பர் ஒருவர்
அப்படி இல்லை பாலு . ஜெ ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ,பக்தி மார்க்கம் ,செழிக்க நிறைய ,நடவடிக்கைகள் நடப்பதுண்டு .இது இப்போது என்று இல்லை .எப்போதெல்லாம் ,ஜெ ஆட்சியில் இருந்தாலும் நடந்து வருகிறது .அவளையும் ,கடவுளை வெறுப்பவர்களின் ,எதிர் மறை பிரச்சாரமும் மீடீயா மூலம் ஒரளவுக்கு எடுபடத்தான் செய்கிறது .
இதிலே இன்னோர் ஆதாயமும் உள்ளது .MGR வந்த பிறகு ,கீழே உள்ள ஜாதிகளை ,மேலே உள்ள ஜாதிகளை அச்சுறுத்த ,கொச்சைப்பட ,பயப்பாகிறார்கள் .இதை
52-54 பீரீயட் ,மற்றும் ,காமராஜர் காலம் ,கருணாநிதி காலம் ,இவற்றுடன் ஒப்பிட்டால் தான் தெரியும் .ஜெ ,கும்பாபிஷேகம் ,கோயில் அன்னதானம் ,போன்றவற்றில் ,கவனம்செலுத்துவதால் ,ஒரளவுக்கு கருணாவும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ./ எனறு
எழுதி இருந்தார்
முதலில் அடிமைத்தனம் என்று
எதை நான் கூறுகிறேன் என்பதைப்பார்ப்போம்
"அடிமைத்தனம்
என்பது.. ஏன்
செய்கிறோம் என்றச்
சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."
"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம்கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாதமுறைக்குட்பட்டு நடப்பது.."
"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம்கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாதமுறைக்குட்பட்டு நடப்பது.."
"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது..
செய்யத்தூண்டுவது.."
இனம் மொழி மதம் போன்றவை சென்சிடிவான விஷயங்கள்.இப்போது
இந்தவகையில் அரசியலும் சேர்ந்து விட்டது என்னைப் பொறுத்தவரை இவைகளே தனி மனிதனை
அடிமைப்படுத்த அதிகம் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் பக்தி மார்க்கம் செழிக்க ஜெ பல
நடவடிக்கைகள் எடுப்பதாக நண்பர் கூறுகிறார். ஆதிகாலம் முதலே இந்தபக்தி
மார்க்கமும் அதன் விளைவான இறை நம்பிக்கையும்தான் மனிதனை தானாக சிந்திக்க விடாமல் அடிமைப்படுத்தி
வைத்திருக்கிறது அடிமைத்தனம் என்பது என்ன என்று மேலே கூறி இருக்கிறேன்
மேலும் இங்கு உலவும் ஏற்றதாழ்வுகளின் மூல காரணமே இந்த மத
நம்பிக்கைதான் ஜாதி என்றும் மதம் என்றும் இனம் என்றும் பல வகையாகக் கூறி மனிதனை
உசுப்பேற்றிவிடும் விஷயங்களே நடக்கின்றன.கர்நாடகாவில் ஏறத்தாழ எல்லாக்
கோவில்களிலுமே தினம் அன்னதானம் நடைபெறுகிறது. இவை பெரும்பாலும் கோவில்
நிர்வாகத்தாலேயே செய்யப்படுகிறதுதமிழ் நாட்டில் அன்னதானம் செய்யப்படுவது ஜெயின்
சொந்தப்பணத்திலா அதற்கான க்ரெடிட்டை அவர் பெறுவது என்ன நியாயம் அரசாங்கமே குடி
விற்பனையில் முன் நின்று உழைப்பவனின் பணத்தை உறிஞ்சி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இலவசப்
பொருட்களை விலையில்லாதவை என்று கூறி வருவது மிகவும் தவறு அவற்றின் விலை
உழைப்பவனின் வியர்வையே
சமூகத்
தளங்கள் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும்
ஆனால் அவை இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. பல நல்ல விளைவுகளுக்கு உறு
துணையாக இருந்தவை அதே நேரம் தவறான
செயல்களுக்கும் விளக்கம் கொடுத்து வருபவை. பொதுவாக நான் இம்மாதிரியான விஷயங்களில்
இருந்து ஒதுங்கியே இருப்பவன்
இருந்தாலும் ஒரு பத்திரிக்கை அரசு
செய்யும் முதல்வருக்கு இவ்வளவு கேவலமாக அடிவருடுவது என்னை அந்த ஸ்டேடஸ் போட
வைத்தது
/