தொடர்பயணம் இராமேஸ்வரம் -1 நான் முதலிலேயே கூறி இருந்தேன் முதலில் பத்து
பெண்மணிகள் வருவதாக இருந்ததும்பின்னர்
ஒருவர் சேர்ந்ததும் 13 பேர் கொண்ட குழுவாக இருந்தது இருவர் வர இயலாத காரணத்தால் 11
பேர் கொண்ட குழுவாக மாறி இருந்தது இதில்நான்கு பேர் 60 வயதுக்கும் குறைந்தவர்கள் இப்படி
இருக்க டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட்களைப் பரிசோதிக்கும் போது சீனியர்சிடிசன்களின் வயது ப்ரூஃப் கேட்கும்
முகாந்திரமாக எல்லோரது ஐடிக்களையும்கேட்டார். இதில் ஒரு டிக்கட்டுக்கான ஐடி புரூஃப் காண்பிக்க முடியாததால் ரூ
400 ஃபைன் கட்டவேண்டி இருந்தது
20ம் தேதி காலைஎட்டுமணி அளவில் இராமேஸ்வரம்
வந்தடைந்தோம் பொதுவாக இராமேஸ்வரம் வருபவர்களை வரவேற்பதே சில வழிகாட்டிகளாக
இருப்பர். ஆனால் இந்தமுறை யாருமே வரவில்லை ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை
கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்தது எங்களுக்கு அறைகள் முன் பதிவு
செய்திருந்த ஹோட்டல் சன் ரைஸ் வியூ. அன்றுதான் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க
இருந்தது. இதை நாங்கள் எதிர்
பார்க்கவில்லை என்றாலும் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி
அளித்தது எங்கள் முதல் கவனமே ஹோட்டல் போய்ச் சேருவதுதான் 11 பேருடைய இரண்டு வாரப்
பயணத்துக்கான லக்கேஜ் , ரயில் நிலையம் வாசலில் வராத ஆட்டோ ரிக்ஷாக்கள்( அதற்காகத்
தனி பாஸ் வேண்டுமாம்)மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஒரு எல்லைக்கு மீறி உள்ளே
போக விடாத காவல் கெடுபிடி. இவை எல்லாவற்றையும் மீறி ஹோட்டலுக்கு அரை கிலோ மீட்டர் வரை ஆட்டோக்களில்
பயணம் செய்து அங்கிருந்து லக்கேஜ்களை இழுத்துக் கொண்டு கூட்ட நடுவில்
முண்டியடித்து ஒரு வழியாய் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்வரும் வழியிலேயே ஒரு பாட்டில் குடி நீரும் ஒரு கை விசிறியும் தன்னார்வலர்கள் கொடுத்தார்கள்
ப்லாட்ஃபாரக் கோவில் இரண்டாம் ப்லாட்ஃபார்முக்காகத் தோண்டும் போது கிடைத்தசிலை என்று எழுதி இருக்கிறது
ரயில் நிலையத்துக்கு வெளியே கணபதி கோவில்
ஆட்டோவுக்காகக் காத்திருப்பு
ஹோட்டலின் முன்பிருந்து ஒரு காட்சி
சுவரில் வாசகம்
சற்று நேரத்தில் காலை உணவுக்காக ஒரு ராஜஸ்தானி
ஓட்டலுக்குச் சென்றோம் சுவையான பூரி சப்ஜி.
உண்டுமுடித்து வெளியில் வந்தால் கூட்டமான கூட்டம் காணொளி எடுத்தேன் அதில்
கோபுர உச்சியிலிருந்து அபிஷேக நீர் பீய்ச்சி அடிப்பதும் பதிவாகி இருக்கிறது
ஓட்டலின் உள்ளே எழுதி இருந்த வாசகம் கவனத்தை ஈர்த்தது.
அன்று இருந்த கூட்டத்தில் எங்கும்போவது இயலாததானதால் குளித்து முடித்து சுவாமி
தரிசனம் செய்யச் சென்றோம் அந்தக் கூட்ட நெரிசலில்அப்போதே சென்று பார்ப்பதே விசேஷம் என்று பலரும்
கருதியதால்தரிசன வரிசையின் கூட்டத்தில்
ஐக்கியமானோம்ஒரு வழியாக தரிசனம்
முடிந்தது. இராமநாதஸ்வாமி விஸ்வநாதர் பர்வத வர்த்தினி அனைவரையும் தரிசித்தோம்
காலை
உணவுநன்றாக இருந்ததால் மதிய
உணவுக்கும்அங்கே சென்றோம் பின் சிறிதுநேர
ஓய்வுக்குப் பின் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலைக் காணச் சென்றோம்
அக்னி தீர்த்தம் எனப்படும் கடல்
அக்னி தீர்த்தக் கரையில்
கிழக்கே கோபுரப் பின்னணியில்
காலை மதிய உணவு உண்ட ராஜஸ்தானி ஹோட்டல்.
இரவு உணவுக்காக அக்னி தீர்த்தம் அருகில் இருக்கும் குஜராத்தி போஜனாலயா சென்றோம் சப்பாத்தி சப்ஜியுடன் கிச்சடி என்று ஒன்றும் தருகிறார்கள். எதுவுமே ருசிக்கவில்லை. முதல் நாள் இராமேஸ்வரத்தில் கும்பாபிஷேகம் கண்டது தவிர எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியும் இல்லாமல் கடந்து போனது. அடுத்த நாளும் பிறகும் செல்ல வான் பேசி முடித்து இருந்தான் மச்சினன் ( தொடரும் )