நிறைவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிறைவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மார்ச், 2020

வீடு மகாத்மியம்



                                                               வீடு மகாத்மியம்
                                                               --------------------------

 வீடுகட்டல் பற்றி  இரண்டு பதிவுகள் எழுதி அவற்றின்  சுருக்கம் கீழே
 நான் வீடு கட்டியகதையை ஏற்கனவே பதிவில் பகிர்ந்துள்ளேன் 1979/ ல் இடம் வாங்கி 1986-ல் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் வாடகைக்கு விட்டேன் அப்போது நான் திருச்சியில் இருந்தேன் 1991-ம் ஆண்டின்  கடைசியில் என் மூத்த மகனை குடி யிருத்துவதற்கு வாடகைக்கு இருந்தவரைக் காலி செய்யச் சொன்னேன்  அவரும்  எந்தப்பிரச்சனையும்  தராமல் காலி செய்ய என் மகனும் மருமகளும் குடி வந்தனர் நானும் என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று என் மகனுடன் வந்து விட்டேன் என் இளைய மகனுக்கும் இங்கே வேலை கிடைக்கவும் .அவனுக்கும் மணமுடித்தால் இந்த வீடு சிறியதாய் இருக்கும் என்று எண்ணி மாடியில் இன்னொரு வீடு கட்டினேன் 1992-ம் ஆண்டு. வீடு கட்டி முடித்தவுடன்  நாங்கள் மேல் தளத்துக்குச் சென்று கீழ் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதில் ஒரு டாக்டரும் அவர் கணவரும்   குடி வந்தனர்
சுமார் ஏழு ஆண்டுகள் அவர்கள் இங்கிருந்தனர் பின் சொந்தவீடு கட்டி குடிபோயினர்  அத்ற்குபின்  பலரும்வந்துபோனார்கள் சிலர் என் கதை மாந்தர்கள் ஆனார்கள்மெல் வீடு சற்றே பெரியது  அங்கு போனபின்  என் இளையமகன் திருமணம்  நடந்ததுஅதன் பின் சில நாட்களில் நாங்கள்கீழே வந்து விட்டோம்

முன்பே சொன்னது போல்  எனக்கும் ஏதும் வரவு இருக்கவில்லை வீட்டை வாடகைக்கு விட்டுஅதில் வரும் வாடகையே எங்கள்  வருவாயாயிற்று வாடகைக்கு வருபவர்களுக்காக வீட்டை புதுப்பித்து அதன் வால்யூவை அதிகரித்தேன் என்வீட்டில்டி குடி வருபவர் ஒரு ரிச்நெஸை  உணர்வார்கள் 
வீடு கட்டிய செலவை விட புதுப்பிக்கும்போது செலவு   அதிகமாயிற்று வருத்தமில்லை 
சில நினைவோட்டங்கள்  வீடு கட்டுவதே வேஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தவன்  விட்டின் வாடகையே சோறு போடுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது எண்ணங்கள் நிலையானது அல்ல என்பது புரிகிறது  முதலில் வீடு கட்டும்போது  செலவு செய்ததை விட புதுப்ப்பிக்கவும்   அதன் மதிப்பை உயர்த்தவும்செய்த செலவு அதிகம்  விட்டின் உள்ளிருந்தே  டைல்ஸ் மாற்றிய அனுபவம் முதலில்  நமக்கு வேண்டியது  தெரிந்திருக்க வேண்டியதுஅவசியம் நம்பிக்கையான ஒப்ப்ந்ததாரர் கிடைக்கவேண்டும் சிலரைநம்பவேண்டும் இல்லைஎன்றால் நாமே எல்லாவற்றுக்கும் அலையவேண்டும் எனக்கு கிடைட்தவர்கள் நம்பிக்கையானவர்கள்   
  
    

என் வீட்டி சில புகைப்படங்கள்முதலிலேயே செலவுபற்றி பேசிவிட வேண்டும்என் வீட்டி சில புகைப்படங்கள் பொறிஇயல் பற்றிய தெளிவு இருக்கவேண்டும்முதலில் காண்டி லிவெர் போர்டிகோ டிசைன் செய் திருந்தாலும்மேல்மாடி கட்டும்போதுசப்போர்டிங்  தூண்கள் கூடுதலாக  கட்டினோம் 


வீட்டின் முன்புற தோற்றம்  


பக்க வாட்டும்  மாடிக்கு போகும் படிகளும் 


மாடியிலிருந்து போர்டிகோ மேல் பாகம்
இதுபோல் இரு படுக்கை அறைகள்
  






    

உள் ஹாலும்  வாசலும் 


ஹாலின் இன்னொரு புறம் 


அடுக்களை n


பாத் ரூம் 


வீட்டின் எல்லா படங்களும்  பதிவிடவில்லை

வீடு மகாத்மியம் முற்றும்