வலைப் பதிவர் மைய அமைப்பு சில கருத்துப் பகிர்வுகள் --------------------------------------------------------------------------------------
வலைப்
பதிவர்களுக்கான ஒரு மைய அமைப்பு தேவை என்று புலவர் ஐயா கூறிவருவதை ரமணி சார் அவர்
பதிவில் குறிப்பிட்டிருந்தார் மூன்று நான்கு பதிவர் சந்திப்புகள் நடந்து முடிந்தபின்னும் அடுத்த சந்திப்புக்கான
நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்தத்
தேக்க நிலை ஒரு மையஅமைப்பு இருந்தால் இருந்திருக்காது எந்த பதிவர் சந்திப்பும்
தானாக நடப்பதில்லை. சிலர் முன் நின்று முயற்சி செய்ததனாலேயே நிகழ்ந்தது இம்மாதிரி
பதிவர் சந்திப்புகளை நடத்த நிறையவே உழைக்க வேண்டும் நடத்த தேவையான பணமும் வேண்டும்
சந்திப்பு நடத்த யாரிடமும் கையேந்தும் நிலை வரக் கூடாது எதையும் துல்லியமாக
திட்டமிடவேண்டும் ஒருவர் முன் நின்று
நடத்த முன் வரும்போது எல்லாப் புகழும் அல்லது எல்லா வசவுகளும் அவருக்கே சேரும் என்று அப்படித் தனிப்பட்ட முறையிலிருப்பது சரியல்ல
எதையும்
கொண்டு நடத்திச் செல்ல ஒரு அமைப்பு இருந்தால.சில பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் .
ஆனால் பதிவுலகில் யாரும் யாருடைய ஆலோசனைகளையும் கேட்க விரும்புவதில்லை. பதிவர் சந்திப்பு நடக்கிறதா முடிந்தால் சென்றோமா
வந்தோமா என்கிற நிலையில்தான் பலரும்
இருக்கிறார்கள் நடந்து முடிந்த பதிவர் சந்திப்புகளின் அனுபவங்கள் இதை இன்னும் நல்ல
முறையில் எப்படி எடுத்துச் செல்வது
என்பதற்கு அடி கோலவேண்டும் நடந்து
முடிந்த சந்திப்புகளில் அபிப்பிராய பேதம் இல்லை என்று கூற முடியாது
இம்மாதிரியான
நிலையில் எண்ணங்களைப் பகிரவும் யோசிக்க வேண்டி இருக்கிறது இன்னும் சிறப்பாகச்
செய்திருக்கலாமே என்று கூறினால் :” வா நீயே வந்து நடத்திக் காட்டு” என்பது போல்
பேசப்படுகிறது ஆகவே ஒரு மைய அமைப்பின் முக்கியத்துவம் தெரிய வருகிறது
” பதிவுலகை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்ல இனிச் செய்ய வேண்டுவது
என்ன என்று ஒரு அமர்வு உட்கார்ந்து கருத்துப் பகிர்வுகள் நடந்தால் அது ஒரு ஆக்கப்
பூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்”
என்ன எங்கேயோ படித்ததுபோல்
இருக்கிறதா? கூடவே இதுவும் நினைவுக்கு வந்தால்
// ஓர் // // அமர்வு // // உடகார்ந்து // // கருத்துப் பகிர்தல்கள் //
1) //ஓர் // அல்ல பல கூட வைத்துக் கொள்வோம்...
2) // அமர்வு // எங்கே ? எப்போது...? யார் தல...? சே தலைமை...?
3) // உடகார்ந்து // நின்று கொண்டே இருந்தாலும் பரவாயில்லை...
4) // கருத்துப் பகிர்தல்கள் // பகிர்ந்து தானே...? செய்து விடுவோம்...
1) //ஓர் // அல்ல பல கூட வைத்துக் கொள்வோம்...
2) // அமர்வு // எங்கே ? எப்போது...? யார் தல...? சே தலைமை...?
3) // உடகார்ந்து // நின்று கொண்டே இருந்தாலும் பரவாயில்லை...
4) // கருத்துப் பகிர்தல்கள் // பகிர்ந்து தானே...? செய்து விடுவோம்...
கருத்துப் பகிர ஏன் பலரும் தயங்குகிறார்கள் என்பதும் விளங்கும்
வலை
உலகில் புகழ்ந்து பேசுவதே நட்பை வளர்க்கும் என்பது போல் ஒரு கருத்து இருக்கிறது
தவறு என்று தெரிந்தால் சுட்டிக்காட்டுவதும் நட்பை பாதிக்கக் கூடாது என்பதே என்
கருத்து. வலையுலகை பொறுத்தவரை நட்பு என்பதை விட அறிமுகங்கள் என்பதே சரியாய் இருக்கிறது
என்பது என் கருத்து. பதிவுலகில் பலரும்
தொட்டாவாடிகளாக இருக்கிறார்களோ என்னும் சந்தேகம் எனக்குண்டு. இருந்தாலும் என் கருத்துக்களைப் பகிர நான்
தயங்குவது இல்லைஆனால் அது நான் எண்ணிய விதத்தில் போய்ச் சேருகிறதா என்பதும் பெரிய கேள்விக்குறிதான்
இப்போது
மையக் கருத்துக்கு வருவோம் . வலை உலகுக்கு
தமிழ் வலை உலகுக்கு ஒரு மைய
அமைப்பு தேவை அதில் ஒரு தலைவர் ஒரு உபதலைவர்
ஒரு காரியதரிசி ஒரு உப காரியதரிசி ஒரு பொருளாளர் என்று சிலர் இருப்பது
அவசியம் பதிவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் இருந்து இந்த மையம்செயல்
பட்டால் பல அனுகூலங்கள் உண்டு பதிவர்கள் இந்த மைய அமைப்பில் உறுப்பினர் ஆகலாம்
ஒவ்வொரு பதிவரும் ஒரு கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆகலாம்இது மைய அமைப்பின்
கார்பஸ் நிதியைத் துவக்க உதவும் எந்த அமைப்பும் பணம் இல்லாமல் செயல்பட முடியாது
இதல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சாப்டர்
இயங்கலாம் பதிவர் சந்திப்பு என்று வரும்போது எந்த மாவட்டத்தில் அது நடந்தாலும்
பதிவர்கள் கலந்து கொள்ள உரிமை உண்டு அப்படிப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும்
வலைப்பதிவர்கள் கலந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னாலேயே செலுத்த வேண்டும் இப்படி செலுத்த வேண்டிய தொகை என்ன என்பதை மையக் குழுவும் மாவட்டக் குழுவும் செலவாகப்
போகும் கணிப்புக்கு ஏற்ப தீர்மானிக்கலாம்
பதிவர் மாநாட்டில் செலவு போக மீதம் பணம்
இருந்தால் அது மையக் குழுவின் கார்ப்பஸ் ஃபண்டில் சேர்த்து விட வேண்டும் வசூலிக்கப்படும்
தொகையிலிருந்தே செலவுகள் ஏற்கப்பட வேண்டும் இந்தமாதிரியான வரவு செலவுகள் சரியாகத் தணிக்கை செய்யப்படவேண்டும்
இந்த
எண்ணங்களை வெகுவாக சர்க்குலேட் செய்து
பதிவர்களின் அபிப்பிராயங்களைக் கோரலாம்
நான்
முன்பே சொன்னது போல் கருத்துச் சொன்னவர்களை கூட்டி ஒரு அமர்வு நடத்தி
முடிவெடுக்கலாம்அல்லது எழுதிக் கேட்டுப் பின் முடிவெடுக்கலாம் எந்த முடிவானாலும் அவை
செயல் படுத்தப்படும் முன்பு பதிவர்களின் ஒப்புதலைக் கேட்கலாம் இப்படியான அமர்வு
மாவட்டப்பதிவர்கள் பலரையும் கொண்டிருக்கவேண்டும்
முக்கியமாக இதுவரை சந்திப்பு நடத்தியவர்களின் பங்கெடுப்பு அவசியம் இருக்கவேண்டும்
புதுகை
சந்திப்பில் பணம் நிறையவே வீணாகி
நடத்தியவர்கள் கையைக்கடித்தது
என்று அறிகிறேன் யாரும் பதிவர்
சந்திப்பை நடத்தி நஷ்டப்படக் கூடாது ஏறத் தாழ முன்னூறு பதிவர்கள் வருவதாக வாக்களித்து நூற்றுக்கும் குறைவாகவே வந்தால் விரயம்
ஏற்படத்தானே செய்யும் வருபவர்கள் ஒரு தொகை செலுத்தி பெயர்களைப் பதிவு செய்து
கொண்டால் அவர்களுக்கு ஒரு கமிட்மென்ட்
இருக்கும்
பதிவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே எதையும் செய்ய ஒரு கன்சென்சஸ் தேவை அல்லவா
பதிவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே எதையும் செய்ய ஒரு கன்சென்சஸ் தேவை அல்லவா
( இது என்னுடைய எழுநூறாவது பதிவு உருப்படியாக
இருக்கிறது என்று நம்புகிறேன் )
/