Wednesday, August 20, 2014

சித்தம் கொள்ளாததேனோ .......!


                                        சித்தம் கொள்ளாததேனோ........
                                        -------------------------------------


யாதுமறியாப் பருவத்தே என்னை ஈன்றெடுத்து
உனதன்பை நானும் உணரும் முன்பே சென்றுவிட்டாய்.
அன்னையே என் உயிர் ஈந்து உடல் தந்த அமுதமே
அம்மணியே உனைக் கண்டுன் அன்பில் திளைக்க
எனக்கேன் தரவில்லை வரமே.

இருந்தாலென்ன...இல்லாத ஒன்றை எண்ணி ஏங்கி ஏங்கி
அனவரதம் அழுது புரண்டு மருளுவதிலும் ஏது பயன்
ஈன்றெடுத்த உன்னிலும் மேலாக
நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன்
ஏழையெனை ஏற்றுக்கொண்ட ஏந்திழையும்
தாயுள்ளம் கொண்டவளே அறிவேன் நானும் 

இருக்கின்ற ஒரு மருந்தை உணராமல்
இன்னலுற்று ஏன் இடர்படவேண்டும்
யாதுமாகி நின்ற உன்னைக் காண விழைந்து
தாரமாக வந்தவளை என் தாயுமாகக் கண்டு
என் சஞ்ச்லங்கள் நீக்க முயலும் சேய் நான்
உனைக் காண வருகையில்-

பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து
காளையாய்க் காமுற்று எனதவளைக் கைப்பிடித்து
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க 

காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரை புரள  பூக்கின்ற புன்னகையால்
ஆறாத மனப்புண்ணின்  அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே
எனை ஆட்கொள்ள இம்முறை சித்தம்
கொள்ளாததேனோ எனை யாளும் சமயபுரத்தாளே,..

சமயபுரம்  மாரியம்மன் ( நான் தீட்டிய தஞ்சாவூர் ஓவியம்)

             



                   

21 comments:

  1. படம் ரொம்ப அருமை ஐயா. என் கணவருக்கும் காட்டினேன். மாரியம்மன் கண்ணெதிரே நிற்கையில் அவளைப் பார்க்கலைனு நீங்க ஏன் வருத்தப்படணும்? :)

    ReplyDelete
  2. ஓவியமும், கவியும் அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. ஆஹா சார் எவ்வளவு அழகாக வரைந்துள்ளீர்கள்! எத்தனை திறமை உங்களுக்குள்!!!

    கவிதை மிக அருமை! சம்யபுரத்தாளே தங்களுக்குள் இருக்கும் போது மனக்கவலை ஏனோ?!!

    ReplyDelete
  4. வைத்தீஸ்வரன் கோயிலில் தங்களுக்கு ஏற்பட்ட மயக்கம் (நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்) தங்கள் மனத்துள் ஒரு கவிதையை விதைத்து விட்டது. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை. எப்போதும் போல உற்சாகத்துடன் இருங்கள். நீங்கள் வரைந்த தஞ்சாவூர் ஓவியம் நீங்கள் ஒரு நேர்த்தியான கலைஞர் என்பதைக் காட்டுகிறது.

    ReplyDelete
  5. நீங்கள் வரைந்த சமயபுரத்தாளின் ஓவியம் மிக அருமையாக வந்திருக்கிறது. உங்கள் மனதிலேயே குடிகொண்டிருக்கிறாள் என்பது ஓவியத்தினூடே புரிகிறது.

    அடுத்த பயணத்தில் நிச்சயம் தரிசிக்கலாம்.....

    கவிதையும் மிக அருமையாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  6. ஓவியமும் அருமை! அதற்கு தாங்கள் படைத்த சிறு காவியமும் அருமை!

    ReplyDelete
  7. வீண் மயக்கம் ஏன்!..
    சமயபுரத்தாள் அருகிருக்கையில்
    வீண் கலக்கம் ஏன்!..

    ReplyDelete
  8. நேர்த்தியான ஓவியமும் ,
    அருமையான காவியமும்
    மனம்நிறைந்யவைத்தது.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.!

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்
    பாராட்டுக்கு நன்றி மேடம் நேரில் காண இயலாதவரை ஓவியம் மூலம் கண்டேன். எல்லாமே ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

    ReplyDelete

  10. @ கரந்தை ஜெயக்குமார்.
    கவிதையையும் ஓவியத்தையும் பாராட்டியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  11. @ துளசிதரன் தில்லையகத்து.
    வெட்கமாய் இருக்கிறது ஐயா பாராட்டிப் பேசப்படும்போது. ஆங்கிலத்தில் கூறுவதுபோல் jack of many trades, but expert in none. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

  12. @ தி.தமிழ் இளங்கோ
    ஐயா நீர் சொல்வது உண்மை. நடந்ததையே நினைத்திருந்தால் இருக்கும் நிம்மதியும் போய்விடும். பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  13. @ வெங்கட் நாகராஜ்
    கவிதை ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஓவியம் அதில் சிறு நிறைவு காணும் முயற்சி. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ வே.நடனசபாபதி.
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    கலக்கம் ஏதும் இல்லை.ஆண்டுதோறும் செய்யும் தரிசனம் இல்லையே என்ற ஆதங்கம்தான் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ இராஜராஜேஸ்வரி
    என் மனம் நிறைய வைத்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  17. அன்புள்ள ஐயா.


    வணக்கம்.எப்போது வந்தாலும் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டேயிருக்கிறீர்கள். அற்புதமாக உள்ளது உங்களின் கைவண்ணத்தில் சமயபுரத்தம்மன் ஓவியம். அம்மன் எனக்கு நிரம்பவும் பிடித்த கடவுள்.

    ReplyDelete

  18. @ ஹரணி.
    வணக்கம்
    ஆனால் எப்போதாவதுதான் வருகிறீர்கள். நான் எழுதியதை நீங்கள் படித்துக் கருத்திடுவீர்கள் என்று நினைத்த பதிவுகள் பக்கம் வராதது ....
    முன்பெல்லாம் மாதிரி ஓவியங்கள் வரைவதில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. நெகிழ்வான கவிதை.
    அருமையாக காட்சி தந்தாள் சமயபுரத்தாள் உங்கள் தஞ்சை ஓவியத்தில்.

    தாயுக்கு பின் தாரம் அல்லவா? தாரத்திற்கு முதல் குழந்தை கடைசி குழந்தை எல்லாம் கணவன் தான்.
    அவர்களை கண் போல காத்திடுவாள் மனைவி.

    //அணைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவா! அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா!
    கவிஞர் பாடுவதும், கலைஞர் நாடுவதும் அவள் அல்லவோ!
    பெண் இயற்கையின் சீதன பரிசல்லவா? //

    உங்கள் கவிதையை படிக்கும் போது இந்த பாடல் நினைவுக்கு வருகிறது.
    அன்பை கவிதையில் குழைத்து தந்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


    ReplyDelete

  20. @ கோமதி அரசு.
    மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  21. ஓவியத்தைக் கண்டேன். மிகவும் அருமை. கவிதையிலும் அசத்திவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete