சுதந்திர தினச் சிந்தனைகள்
---------------------------------------
சுதந்திரம் அடைந்து விட்டோம் 67 ஆண்டுகள் கழிந்து விட்டன.
இந்தியா அரசியல் சுதந்திரம் பெறுமுன்னே பாடினான் பாரதி
” எங்கும்
சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமம் என்று உறுதியாச்சு “ என்று .
எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் நடுவில் நாம் சிந்தித்துப்
பார்க்க வேண்டும் நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா.?அரசியல்
சுதந்திரம் , ஆட்சி அமைக்கச் சுதந்திரம் என்பதுதான் சுதந்திரமா.?சுதந்திரத்துக்கு
எதிர்ப்பதம் அடிமைத்தனம் என்றால்அரசியலை நீக்கி நாம் இன்னும் அடிமைகளாகவே
இருக்கிறோம், வாழ்கிறோம் நாம் பல விஷயங்களைக் கற்கிறோம் படிக்கிறோம் அறிகிறோம் ஆனால்
உண்மையான சுதந்திரம் என்னவென்று நினைத்துப் பார்த்தோமா. இதை எழுதும் போது நம்
வலையுலகப் பிரசித்தி பெற்ற திரு அப்பாதுரை அவர்களின் எழுத்துக்களை உபயோகிக்காமல்
இருக்க முடியவில்லை. சுதந்திரத்தின் எதிர்ப்பதம் அடிமைத்தனம் என்று சொல்லி எது
அடிமைத்தனம் என்னும் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டால் அதன் எதிர்மறைகள்
சுதந்திரம் என்று பொருள் கொள்ளலாம் இந்திய சுதந்திரம் கிடைத்த நாளில் திரு
.ஜவஹர்லால் நேரு நிகழ்த்திய உரை பிரசித்திப் பெற்றது அதன் ஆரம்ப வரிகளைக்
கொடுக்கிறேன்
Long years ago we made a tryst with destiny,
and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full
measure, but very substantially. At the stroke of the midnight hour, when the
world sleeps, India
will awake to life and freedom. A moment comes, which comes but rarely in
history, when we step out from the old to the new, when an age ends, and when
the soul of a nation, long suppressed, finds utterance.
Alas..Has that happenned after so many years .?
அரசியல்
சுதந்திரம் அடைந்து விட்டோம். .The soul of the nation , long suppressed. Has
that found the utterance.?
திரு அப்பாதுரை அவர்கள் பள்ளிச் சிறுவர்களிடம் அடிமைத்தனம்
பற்றிக் கேட்க அவர்கள் சொன்ன பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.
"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம்
என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."
"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."
"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."
"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று கூறுகிறோமே நம் எண்ணம்
செயல்கள் சுதந்திரமாக வெளிப்படுகிறதா.? ஆண்டை அடிமை என்று நிலவி வந்த நிலையை
வெள்ளையன் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மில் சுதந்திர எண்ணம் தோன்ற
முடியாதபடி செய்து விட்டான் அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள் தலை நிமிர்ந்து எண்ணவோ
செய்யவோ அதற்கான சூழலோ உருவாகி இருக்கிறதா.?அன்று அரசியலில் ஆங்கிலேயனுக்கு
அடிமையா நின்றோம். இன்றும் அடிமைத்தனத்துக்கான காரணங்கள் தவிர்க்கப்படவில்லை.
இன்றும் சுதந்திர எண்ணமோ செயலோ இல்லாமல் நம் வாழ்க்கையை நடத்துகிறோம் இன்று நம்
நாட்டில் எல்லோரும் சமம் என்னும் நிலை உருவாகி இருக்கிறதா?.
அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்
சொன்னார். கேள்விகள் கேட்கக் கூடாது. ஏனென்றால் அவற்றுக்குப் பதில்கள் கிடைக்காது.
இருந்தாலும் பிறவிக் குணம் விடுவதில்லை. நண்பர்களே சொல்லுங்கள் நாம் சுதந்திரம்
பெற்று விட்டோமா.? .
(திரு அப்பாதுரையின் பதிவுகளில் இருந்து வரிகளை அவரிடம் அனுமதி கோராமலே எடுத்தாண்டிருக்கிறேன். அவரது சிந்தனைகளும் பலராலும் விரும்பிப் படிக்கப் பட்டால் அவரும் விரும்புவார் என்பது என் எண்ணம் )
Right to know - Right to information act மூலம் அல்மோஸ்ட் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்க சுதந்திரம் இருக்கிறது. சர்வாதிகாரம் இல்லாமல் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. எதிர்மறையான கருத்துகளையும் பொதுவெளியில் அச்சமின்றிப் பேச சுதந்திரம் இருக்கிறது. ராமனும் ராவணனும் தர்மரும் துரியோதனனும் சேர்ந்தே வாழ்ந்ததாய்ச் சொல்லப் படும் பூமியில் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே இருக்கின்றன. நாம் எதை எடுக்கிறோம் (என்பதற்கும் சுதந்திரம் இருக்கிறது!) என்பதைப் பொறுத்தே நல்லதும் கெட்டதும்! :)))
ReplyDeleteஅன்புக்குரிய ஸ்ரீராம் அவர்களின் கருத்தினை வழிமொழிகின்றேன்..
ReplyDeleteதலைமுறை இடைவெளி என்பது இதுதானோ ?
ReplyDeleteஅரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கச் சுதந்திரம் இருப்பதைப் போல் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நம்மிடம் உள்ளதே! மற்றக் கருத்துகள் ஶ்ரீராம் சொல்லி இருப்பதை அப்படியே ஆமோதிக்கிறேன். மற்றபடி எல்லோரையும் சமமாக நினைக்க வேண்டியது நம் மனமே அன்றி சுதந்திரத்தினால் வந்துவிடாது. :))))
ReplyDeleteபடிப்பிலோ, பலத்திலோ, பிறப்பிலோ, நிறத்திலோ, செல்வத்திலோ, பதவி அதிகாரங்களிலோ அனைவரையும் சமமாக ஆக்கவும் முடியாது. ஏற்றத் தாழ்வுகள் இருக்கத் தான் செய்யும். எந்தப் பதவியாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும், எப்படி எளிமையானவராக இருந்தாலும் நம்முடன் சமமானவர்களே என்னும் நினைப்பே அனைவரையும் சமமாக வைக்கும். இதற்கெல்லாம் சட்டங்கள் போட்டுக் கட்டுபடி ஆகாது. இன்று உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஏற்றத்தாழ்வுகள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் மனோபாவமே பெருகி உள்ளது. இது மாற வேண்டும்.
ReplyDeleteஇந்தியா வந்த போது அப்பாதுரை அவர்கள் நெரில் வந்து சந்தித்தார் ! என் மகனை விட வயதுகுறைவாக இருக்கலாம் ! ஆனாலும் அவருடைய எழுத்துகளில் தெரிக்கும் சிந்தனைத் தெளிவும் துணிச்சலும் பிரமிக்க வைக்கிறது ! அவரை தமிழ் அறிவு ஜீவிகளுக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் ! அது என் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும் என்பது முடியாது ! என்ன செய்ய ? சுதந்திர தின சிந்தனை தெரிப்புகள் பயனுள்ளவை ! வாழ்த்துக்கள் G.M/.B !---காஸ்யபன்.
ReplyDeleteஇந்தப் பதிவு மீள் பதிவு என்று நினைக்கிறேன். ஏற்கனவே பின்னூட்டம் இட்ட நினைவு இருக்கிறது. பதிவுச் செய்தி அதே தான்; இருப்பினும் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இதே செய்திக்கு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள் போலிருக்கு!
ReplyDeleteஅதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் கடந்த அந்த ஆண்டில் நிகழ்வுற்ற சுதந்திர அல்லது அசுதந்திர செய்திகள் எதையாவது சேர்த்துக் கொள்ளலாம், இல்லையா?..
உண்மையிலேயே சுதந்திரம் நமக்குக் கிடைத்து விட்டது ஐயா,
ReplyDeleteஆனால் கிடைத்த சுதந்திரத்தை எப்படிப் பயன் படுத்துவது என்பதுதான் நமக்குத் தெரியவில்லை
சுதந்திர தின சிந்தனைகள் ஒவ்வொரு
ReplyDeleteசுதந்திர தினத்தன்று மட்டும் புதுப்பிக்கப்படாமல் ஒவ்வொருநாளும் மனதில் கொள்ளவேண்டும்..!
ReplyDelete@ ஸ்ரீராம்
வாருங்கள். என் பதிவின் உட்கருத்துச் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்றே எண்ணுகிறேன் நமக்கு சுதந்திரம் இல்லையென்று சொல்லவில்லை. மனதளவில் நம் எண்ணங்களில் சுதந்திரம் வந்து விட்டதா என்பதே பதிவின் கருத்து.இன்னும் நாம் சுதந்திரமாகச் சிந்திப்பதில்லை என்பதே இதன் அடிநாதம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ துரை செல்வராஜு
ஸ்ரீராமுக்கு எழுதிய மறு மொழியே உங்களுக்கும். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி.
தலைமுறை இடைவெளி எண்ணங்களில் ஏதும் இல்லை என்றே தோன்றுகிறதுவருகைக்கு நன்றி.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
என்னுடைய பதிவே அரசியல் சுதந்திரம் பற்றியதல்ல. சிந்தனை சுதந்திரம். அப்படி சிந்திக்க விடாமல் தடுக்கும் ஆயிரம் காரணங்கள். இதைப் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கிறோமே எனும் ஆதங்கம். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்.
/எந்தப் பதவியாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும், எப்படி எளிமையானவராக இருந்தாலும் நம்முடன் சமமானவர்களே என்னும் நினைப்பே அனைவரையும் சமமாக வைக்கும்/ அப்படி நினைக்க வைக்க முடியாத சமூக சீர்கேடுகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதே நோக்கம்
ReplyDelete@ காஸ்யபன்
/சுதந்திர தின சிந்தனைத் தெரிப்புகள் பயனுள்ளவை/கருத்த்ப் பகிர்வுக்கு நன்றி. அப்பாதுரையின் எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு. வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ காஸ்யபன்
/சுதந்திர தின சிந்தனைத் தெரிப்புகள் பயனுள்ளவை/கருத்த்ப் பகிர்வுக்கு நன்றி. அப்பாதுரையின் எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு. வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ ஜீவி
இது மீள்பதிவு அல்ல.என் எண்ணங்களைப் பலமுறை பகிர்ந்திருக்கிறேன் ஒரே சாயல் உள்ளதாக இருக்கலாம் நான் எண்ணுவது எழுத்தில் வருகிறது. ஒரு முறை நேருவின் கருத்து எதையோ சொன்னபோது நீங்கள் அவருடைய ஆகஸ்ட் 15-ம் நாள் உரை பற்றி எழுதி இருக்கலாமே என்று குறிப்பிட்டிருந்ததாக என் நினைவு,பலவாறு ஒரே சிந்தனையைப் பதிவு செய்கிறேன் என்பதும் வாசகர்களுக்கு அது எப்படிப் போய் சேருகிறது என்பதும் அறிய ஆவல் என்பது சரியே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
நமக்கு அரசியல் சுதந்திரம் இருந்தும் சுதந்திரமாக சிந்திப்பதில்லையே என்பதே என் ஆதங்கம். வருகைக்கு நன்றி ஐயா,
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி
சரியாகச் சொன்னீர்கள். சிந்தனைகளும் புதுப்பிக்கப் படவேண்டும். வருகைக்கு நன்றி மேடம்
சார்! நமக்கு நிறையவே சுதந்திரம் இருக்கின்றது சார்! நம் நாட்டைப் போல சுதந்திரம் வேறு எந்த நாட்டிலும் இருக்கின்றதா என்று தெரியவில்லை....
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் சொல்லி இருப்பதுடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
நம் வீட்டுக் குழந்தைகளை எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கலாம்....அவர்கள் எவ்வளவு சத்தம் போட்டும் வேண்டுமானாலும் அழலாம்...யாஅரும் கேட்க மாட்டார்கள்....அமெரிக்காவுல், லண்டனில்........
தெருவில் குப்பை போடலாம், துப்பலாம், கழியலாம், சிக்னலில் நிற்காமல் செல்லலாம்.....பிடிபட்டாலும் துட்டு கொடுத்து சமாளிக்கலாம்...
அடுத்த வீட்டில் குப்பை போடலாம், அவர்கள் வீட்டு மாங்காயைப் பறிக்கலாம், ஜன்னலை கிரிக்கெட் பால் அடித்து உடைக்கலாம்....
வீட்டு வேலைக்கு உதவ ஆட்கள் கிடைக்கிறது.....
இப்படிப் பல.....சுதந்திரம் உள்ள போது
ஆள்பவர்களுக்கும் சுதந்திரம் எக்கச்சக்கமாக இருக்கின்றதே.....மக்கள் கண்டு கொள்ளாததால்..
வின் வின் சிச்சுவேஷன்?!!?
தாங்கள் நண்பர் ஸ்ரீராமுக்குக் கொடுத்துள்ள பதிலை வாசித்தபின்....
ReplyDeleteஅப்படிப் பார்த்தால் நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.....நமது சிந்தனைகள் விரிவடையவில்லை....சமூகக் கட்டுப்பாடுகள் பல நமது சிந்தனைகளுக்கு தடை போடுகின்றன. முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன. சமூகத்திற்குக் கட்டுப்பட்டு நமக்கு விருப்பம் உள்ளதைச் செய்ய முடியாமலும், விருப்பம் இல்லாததைச் செய்தும்....lot of compromises un wanted compromises... சுய சிந்தனைகள், முடிவு எடுத்தல் போன்றவை இல்லாமல்....இது பல சமயங்களில் ஒரு வயதுக்குப் பிறகு முரண்படும் போது பல உளவியல் ரீதியானப் பிரச்சினைகளுக்கு வழி கோலுகின்றது......
நல்ல பதிவு சார்
தனிமனித சுதந்திரம் இல்லை எனலாம்.
ReplyDelete1. சுதந்திரமாகச் சிந்திப்பது என்றால் என்ன?
ReplyDelete2. சிந்திப்பதா, சுதந்திரமாகச் சிந்திப்பதைச் செயல்படுத்துவதா?
துளசிதரன்ஜி... உங்கள் முதல் பின்னூட்டம் அங்கதத்தில் விளையாடுகிறது!
இரண்டாவது பின்னூட்டத்தில் "சமூகக் கட்டுப்பாடுகள் பல நமது சிந்தனைகளுக்கு தடை போடுகின்றன. முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன." என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒருவர் நினைப்பதை எல்லாம் செயல் படுத்த சுதந்திரம் இருந்தால் என்ன ஆகும்? உங்கள் மூக்கின் நுனி மீது உரசாதவரைதானே என் சுதந்திரம்? நம் எண்ணங்களின் சுதந்திரம் அடுத்தவரை பாதிக்கக் கூடாது அல்லவா?
ReplyDeleteஅடிமைத்தனத்தைப் பற்றி மட்டும் பேசுவதாயிருந்தால் இந்தியர்கள் பாதி பேர் ரத்தத்தில் பிரச்னையில்லாமல் ஒதுங்கிப் போகும் குணம் இருக்கிறது. இந்தியாவின் சாதனைகள் என்று இணையத்தில் தேடித் பாருங்கள். முதல் விஷயமாகச் சொல்லப் படுவது இந்தியா தானாக வம்புச் சண்டையில் எந்த நாட்டுடனும் போர் புரிந்தது கிடையாது என்பதுதான்!
ReplyDeleteஇப்போதும் கூட உங்கள் பதிவிலிருந்து என் புரிதல் வேறு திசையில் இருக்கலாம்! ஆனால் இதுவும் கூட என் எண்ணச் சுதந்திரமோ! :)))
ReplyDelete
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
துளசி சார் பலருடைய எண்ண சுதந்திரங்களை உத்தேசித்துப் பதிவு எழுதும் போது சில விஷயங்களைக் கோடி காட்டித்தான் செல்லமுடியும் உங்கள் இரண்டாம் முறை வாசிப்பில் வித்தியாசமாக எண்ணத் தோன்றுகிறது இல்லையா. இதையே நான் என் பதிவுகளைச் சற்று ஊன்றிப் படிக்குமாறு அவ்வப்போது வேண்டுகோள் விடுக்கிறேன் எழுதுவது என்பதே எண்ணங்களைக் கடத்தத்தானே.சில சமயங்களில் சொல்லிச் செல்வதைவிட சொல்லாமல் செல்வதே பயன் விளைக்கும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
ReplyDelete@ ஸ்ரீராம்
தயவு செது கோபப் படாமல் படியுங்கள் பின்னூட்டம் எழுதுங்கள். சுதந்திரம் எது என்பதைச் சொல்வதை விட நேர்மறையான அடிமைத்தனம் என்றால் என்ன என்று சிறுவர்கள் அளித்த பதிலால் அப்பாதுரை சொல்ல முயன்றிருந்தார். அதுவே என் உத்தியுமாக இருக்கிறது. எண்ணங்களுக்குச் சுதந்திரம் இருந்தால் நம் செயல்களில் தெரியும். நினைக்கவேவிட மாட்டோம் என்ற பாவனையில் சமூகக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் இருந்தால் எங்கிருந்து சுதந்திரமாகச் செயல் படுவது.புரிதல் வேறுமாதிரியாக இருந்தால் நான் என் எழுத்தின் வெளிப்பாடு சரியில்லை என்றே நினைப்பேன். என்ன இருந்தாலும் ஒரு நல்ல கருத்தாடலுக்கு இப்பதிவு வகை செய்திருக்கிறது மகிழ்ச்சியே. மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீ.
நினைக்கவே விடமாட்டோம் என்னும் வகையில் சமூகக் கோட்பாடுகளும், கட்டுப்பாடுகளும் இருக்கையிலேயே இவ்வளவு சிந்திக்கிறோம்; அதோடு இத்தனை வன்முறைகள், கொலைகள், கொள்ளைகள், அரசியல்வாதிகள் செயல்கள் அனைத்தும் நடக்கையில் இன்னும் கட்டுப்பாடுகளே இல்லை எனில் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ReplyDeleteநம் மனதில் தான் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். சமூகக் கட்டுப்பாடுகள் எவரையும் திருத்தி ஒழுங்கு செய்யாது. அதை மதித்து மனதளவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அதற்கு முதலில் மனம் மாற வேண்டும்.
ReplyDeleteஅடிமை மனப்பான்மை எல்லோரிடத்தும் அமைந்திருக்கிறது. தன கீழ் பணிபுரிபவர்களை அடிமைகளாக இருப்பவர்கள் கேள்வி கேட்க அனுமதிக்காதவர்கள்- வேறிடத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அது ஒரு சுழற்சியாக இருக்கிறது. எண்ணங்களில் அடிமைத் தனத்தை நீக்குவது என்பது சாத்தியக் குறைவான ஒன்றாகவே கருதுகிறேன். தன்னைவிட அறிவிலும் பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் உயர்வாக இருப்பவர்கள் என்று தான் கருதிக் கொள்பவர்களிடம் அடிமை மனப் பாங்குடனும், இவற்றில் கீழ் நிலையில் உள்ளவர்கள் என்று தான் கருதுபவர்களிடம் அடிமைப் படுத்தும் மனப் பாங்குடனும் நடந்து கொள்வதே இன்றைய இயல்பாக இருக்கிறது.
ReplyDelete//நண்பர்களே சொல்லுங்கள் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா.?//
ReplyDeleteஇதைப் படிக்கும்போது எனக்கு ‘நடு இரவில் சுதந்திரம் வாங்கினோம். அதனால்தான் விடியவில்லை.’ என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
அன்னியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம். ஆனால் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteOne can appreciate the freedom we have by overlooking some -ve aspects and, some abuses done by us in "the name of freedom". That's one approach. A positive approach!
ReplyDeleteOn the other hand, we can overlook the +ve aspects of the freedom we have today, and blow up and complain only the -ve aspects of freedom we have. Talk about how our freedom has been abused etc. That's a negative approach.
WAIT!!!!
As an individual, everybody here have both views (+ve and -ve) about freedom we have or how we abuse freedom.
Fortunately or unfortunately, in a debate like this, every individual can take only one side. Every individual here certainly know the other side as well.
Freedom does have limits an limitations! So "real freedom" never exists anywhere- in theory or practice! :)
ReplyDeleteஇந்தியா சுதந்திரநாடு என்பதில் சந்தேகமே வேண்டாம். எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனாலும் அதிகாரம் ஒரு சிலரிடமே இருக்கிறது.
//பலருடைய எண்ண சுதந்திரங்களை உத்தேசித்துப் பதிவு எழுதும் போது சில விஷயங்களைக் கோடி காட்டித்தான் செல்லமுடியும்.
ReplyDelete-- ஜீஎம்பீ //
'பலருடைய எண்ணச் சுதந்திரங்கள்'
என்பது உங்களது எண்ணச் சுதந்திரத்தையும் அடக்கிய ஒன்று அல்லவா?.. அதிலேயே கோடி காட்டித் தான் சொல்ல முடிகிற உங்கள் எண்ணச் சுதந்திரத்தை நீங்கள் பறிகொடுக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமில்லையா?
என்றைக்கு பிறரது எண்ணச் சுதந்திரத்தை கெளரவிக்க நீங்கள் முற்படுகிறீகளோ அன்றைக்கே
உங்களது எண்ணச் சுதந்திரமும் கெளரவிக்கப்பட வேண்டும்.
உண்மையான எண்ணச் சுதந்திரம் என்பது அது தான்.
இது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று. தேச சுதந்திரத்தையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. தேச சுதந்திரம் வழி காட்டியிருக்கிற ஒன்றை பல தளங்களில் விரிவுபடுத்தாமல் இருக்கிறோம் என்பதே குறையானால்
ஸ்ரீராம் சொல்லியிருக்கிற பல இருக்கிறதுகளும் இல்லாமல் தான் போகும்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
சுதந்திரம் எது என்பதையே எது அடிமைத்தனம் என்று கூறுவதன் மூலம் பதிவு எழுதி இருக்கிறேன். பள்ளைச் சிறுவர்கள் கொடுத்துள்ள பதில்களோடு உடன்படுகிறோமா என்பதற்கு அவரவர் பதில் சொல்ல முடிந்தால் பதிவின் உட்கருத்து விளங்கி விடும் சுதந்திரம் என்பது எது என்பது புரிந்துவிடும். நான் என் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறேன். அது பலரும் introspect செய்ய வழிவகுக்கிறது என்பதே இந்தக் கருத்தாடல்கள் சொல்கின்றன.மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை நிலை நிறுத்த முயற்சித்ததற்கு நன்றி.
ReplyDelete@ டி.என். முரளிதரன்
உங்கள் கருத்து பெரும்பாலும் சரியே. அது அப்படித்தான் என்பதே என் ஆதங்கம். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வே. நடன சபாபதி.
நடு இரவில் சுதந்திரம் வாங்கினோம் அதனால்தான் விடியவில்லை என்பதைவிட சுதந்திரம் வாங்கியும் விடியலுக்காகக் காத்திருக்கிறோம் என்பதே சரியாய் இருக்கும்
ReplyDelete@ Varun
Real freedom never exists anywhere. Yes .That is one way of looking at it. But with the advent of freedom, it was expected that the social disparities might at least be removed. That is what I have lamented in my post.ie. we are not free as yet. I was not talking about political freedom / Thanks for your comments.
ReplyDelete# தி தமிழ் இளங்கோ
ஐயா நான் அரசியல் சுதந்திரம் பேசவில்லை. வருகைக்கு நன்றி.
ReplyDelete@ ஜீவி
நான் சில விஷயங்களைக் கோடி காட்டிச் சென்றிருக்கிறேன் என்றால் எண்ண சுதந்திரத்தைப் பறி கொடுத்தேன் என்று அர்த்தமல்ல. வெளிப்படையாகச் சொன்னால் சிலரது மனம் புண்படலாம். Ours is a heterogenius society. நான் உண்மையில் தேச சுதந்திரத்தையும்
நான் சொல்லவந்த சுதந்திரத்தையும்சேர்த்துக்குழப்பவில்லை. பலரது புரிதல் அப்படி யிருந்தால் நான் இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை என்றுதான் அர்த்தம் இந்த சுதந்திர நாளில் நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லையே என்பதே என் பதிவின் முக்கிய கரு.எண்ண சுதந்திரம் வேறு. செயல் சுதந்திரம் வேறு. சமூக சிந்தனைகளும் கோட்பாடுகளும் செயல் சுதந்திரம் கிடைக்க விடாதபடி முட்டுக்கட்டையாய் இருக்கின்றன. வருகைக்கு நன்றி சார்.
//எண்ண சுதந்திரம் வேறு. செயல் சுதந்திரம் வேறு. //
ReplyDeleteசெயல்படாத எண்ணம் குமைதலுக்கு ஆட்பட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். செயல்பட்டதால் தான் சுதந்திரமே வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
எந்த செயல்பாட்டிற்கும் அதற்கான உந்து சக்தியும் உற்பத்தி ஸ்தானமும் எண்ணமே. எண்ணம், செயல்பாடு என்று இரண்டாகப் பார்ப்பது இரண்டையுமே அதற்குரிய அர்த்தத்தை இழக்கச் செய்யும். இந்த இரண்டுமே இரண்டில் ஒன்றானது.
அதே போலத் தான் அவற்றிற்கான சுதந்திரமும்.
ReplyDelete@ ஜீவி
எதை எதையோ சொல்லி என்னைத் திசை திருப்பி விடுகிறீர்கள். நான் பதிவில் சொல்ல வந்த விஷயம் அநேகமாக வாசித்தவர்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் including you வார்த்தைகளில் விளையாட்டில் நான் தேர்ச்சி பெறவில்லை. நன்றி
ReplyDelete@ ஜீவி
எதை எதையோ சொல்லி என்னைத் திசை திருப்பி விடுகிறீர்கள். நான் பதிவில் சொல்ல வந்த விஷயம் அநேகமாக வாசித்தவர்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் including you வார்த்தைகளில் விளையாட்டில் நான் தேர்ச்சி பெறவில்லை. நன்றி
உங்களுடைய பதிவும் அதற்கு இதுவரை வந்துள்ள கருத்துரைகளும் அவற்றிற்கான உங்களுடைய பதில்களும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தன. இவர்களுடைய பலருடைய கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன் என்றாலும் உங்களுடைய பதிலுரைகளுடனும் ஒத்துப்போகிறேன். சுதந்திரம் கிடைத்திருந்தாலும் அதை முழுமையாக நான் அனுபவிக்கிறோமா அல்லது நான் உண்மையான சுதந்திர மனிதந்தானா என்றால் பதிலளிப்பது சற்று சிரமம்தான்.
ReplyDelete
ReplyDelete@ டி.பி.ஆர்.ஜோசப்
ஐயா சுதந்திர தினத்தன்று எழுந்த சிந்தனைகளின் வெளிப்பாடே இப்பதிவு.கிட்டத்தட்ட திரு டி,என்.முரளிதரன் கருத்துதான் எல்லோரிடமும் தெரிகிறது. என் குறையெல்லாம் சமூகக் கட்டுப்பாடுகளும் காலம் காலமாக நம் ரத்ததில் ஊறி யிருக்கும் மாற்ற இயலாத எண்ணங்களும் நம்மை முழு சுதந்திர மனிதராக வர விடுவதில்லை. வருகைக்கு நன்றி.
//எதை எதையோ சொல்லி என்னைத் திசை திருப்பி விடுகிறீர்கள். //
ReplyDeleteஸாரி. திசை திருப்ப அல்ல; 'ஒரு சிந்தனை' என்று நீங்களே சொல்லி விட்ட பிறகு அதன் பல்வேறு முகங்களை தரிசிக்கச் சொல்கிறேன். அவ்வளவு தான். எழுதுவது என்பது எண்ணங்களைக் கடத்தத் தான் என்று நான் சொல்லி நீங்களும் ஏற்றுக்கொண்ட ஒன்று; இல்லையா?
நீங்களும் அடுத்த பதிவிற்குப் போய் விட்டீர்கள்.
Let us close this subject. Thank you for ur replies.
சுதந்திர நாளில் சுதந்திரமான சிந்தனைகள். ஆரோக்கியமான விவாதம். நன்றி.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி.