பருந்தும் கோழியும்
-------------------------------
வெகு நாட்களுக்குப் பின் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன் சிறுகதையா அது தெரியவில்லை
பருந்தும் கோழியும்
”டேய்
தம்பி இங்கே வா”
”யார்ரா இது இவ்வளவு அதிகாரமா கூப்பிடுவது
பார்த்தால் ரவுடிகள்போல் தெரிகிறதே” –மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது கவனமாக
இருக்க வேண்டும்
மிகவும்பவ்யமாக
அவர்களிடம் போய்
“என்னண்ணே
கூப்பிட்டீங்களா”
”உன் வீடு ------தெருவில்தானே இருக்கு அடுக்கு
மாடியில்”
”ஆமாண்ணே”
”அங்கேதானே
உன்னோடுபடிக்கும் பெண்ணும் இருக்குது”
”யாரைச்சொல்றீங்க புரியலையே”
”அதாண்டா
நீண்ட ஜடையுடன் புடவையில் உன் பள்ளிக்கு
வருதே அந்தப்பெண்தான்
”
”ஐயோ அது என்
சிஸ்டர் மாதிரி அண்ணே
”
”அப்போ ரொம்பசௌகரியமாப் போச்சு நீ எங்களுக்கு மச்சான் முறை யாகிறே”
”புரியலை அண்ணே ”
”புரியாட்டி போவட்டும் அந்தப்பெண்ணோட பேரும் டெலிபோன் நம்பரும்
வேண்டும்”
”அது
எனக்குத் தெரியாதுண்ணே”
”பரவாயில்லடா கேட்டுச்சொல்லு போதும் உனக்கு ரெண்டு நாள் டைம் தரோம் சொல்லலைன்னா
என்ன நடக்கும்தெரியுமா ?” தொனியில் மிரட்டல் இருந்தது
இரண்டு நாளைக்குள் வேண்டுமாம் என்ன தொந்தரவு
வருமோ பேசாமல் அம்மாவிடம்சொல்லலாமா
அம்மா
என்ன பண்ணும் பாவம் பயந்து விடும் இந்த ரவுடிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கும்
போல் இருக்கு பேசாமல் இவர்களுடன்சேர்ந்து நாமும் ரவுடியாகலாமா சேச்சே அது ரொம்பத் தப்பு என்ன செய்யலாம்
நாமும் ஆண்பிள்ளைதானே பார்த்து விடலாம் ஒரு கை
இருட்டில் விசில் அடிப்பது போல்தானிருந்தது நம்மால் தனியே சமாளிக்க
முடியாது பேசாமல் அந்த அக்காவின் பெயரையும்சொல்லி விடலாமா போன்நம்பரையும் கேட்டுக்
கொள்ளலாம் ஆனால் அது எதுவும் முடியவில்லை என்றால்…..//
இப்போதைக்கு எதுவும் முடியுமென்று தோன்றவில்லை அப்பாவோ ஊரில்
இல்லை அயல் நாட்டில் இருக்கிறார் நமக்கு
துணையாக இருப்பவர் யார் மெதுவாக
அம்மாவிடம்சொல்லி யாயிற்று இனி அம்மா பாடு
அடுத்தநாள் பள்ளி க்கு செல்லும்போது
இவர்கள்யாராவது கண்ணுக்குத் தெரிகிறார்களா என்று பார்த்துக் கொண்டே சென்றான் அங்கே
இவனுக்காகவே காத்திருப்பதுபோல் அவர்கள்
தென்பட்டார்கள் திடீரென்று அவர்களில் ஒருவன்
“ டேய் மச்சான்
இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது
ஏதாவது தெரிந்ததா ” என்றான்
இவனுக்கு ஏதும் புரியலை
பயம்மட்டும்நெஞ்சைக்கவ்வியது
”இல்லீங்கண்ணே இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க”
அம்மாவிடம் மீண்டும் பேசினான் இரண்டு நாளில்
ஏதாவது வழிகிடைக்கும் என்றாள் அவளும் பயந்து தான் இருந்தாள் தன் மாமனாருக்கு போன்
போட்டாள் அவர் உடனே வருவதாகக் கூறினார்
மாமனாரிடம்
என்ன அவ்வளவு நம்பிக்கையோ அவர் என்ன ரவுடிகளுக்கு ரவுடியா இல்லை இல்லவே
இல்லை அவர் ஏதாவது செய்வார் என்னு நம்பிக்கைதான்
மாமனாரும் வந்தார் விவரங்களை கேட்டுத்தெரிந்துகொண்டார் முதலில் பேரனுக்கு சொன்னது இதுதான் பயமே
எல்லாவற்றுக்கும் காரணம் எதிரிக்கு நாம்பயப்படுவது தெரியக்கூடாது அதேபோல் எதிரி நம்மை பயமுறுத்துவதை நிஜம் என்று எண்ணக் கூடாது ஆங்கிலத்தில்
சொல்வார்கள் A coward dies a hubdred death இதுதான்முதல் பாடம் பயம்
இல்லாமல் இருக்காது ஆனால் அதை
வெளிப்படுத்தக் கூடாது எதிலும் கெத்தாக இருக்க வேண்டும்
முதல்
நாள் நான் உன்னுடன் வருகிறேன் உன்னை
மிரட்டுபவர் யாரென்று காண்பி அதன்பின் நீ தனியே
போ சகஜமாய் இரு பார்ப்போம் யார் என்ன செய்கிறார்கள் என்று
……ஒரு சின்ன லெக்சரே அடித்தார் முதல் நாள் அவன்
போன வழியில்பேரன்சைகை காண்பித்தான் யாரும் அவனுக்கு தொந்தரவும் கொடுக்க வில்லை ஒரு வேளை துணை
இருந்ததாலோ என்னவோ
மறு
நாளும் அவன் போக அவன் பின்னால் அவனுக்கும்தெரியாமல் போனார்
நேற்று பார்த்தவர்கள் அறி குறியே
இருக்க வில்லைஇப்படியே இரண்டு மூன்று நாட்கள் ஓடியது இனிதுணை வேண்டாமென்று
பேரனே சொன்னான்
கீழே ஒரு காணொளி கன்னடத்தில் எழுதியது தெரிய வில்லை மைசூர் சாமுண்டீஸ்வரிகோவில் வளாகத்தில் கண்ட காட்சியாம்அருகே இருந்தவீட்டில் இருந்து எடுத்தது எத்தனை சிங்கங்கள் அல்லது புலிகளா கோவிலுக்குச் செல்வோர் கவனமாக இருக்கவேண்டும்
முதலில் இலையாய் இருந்த வண்ணத்துப்பூச்சி |
இரண்டுமே ஆச்சரியமான காணொளிகள். சிறுகதை சிறிய பாடம் சொல்கிறது.
ReplyDeleteவருகைகும் கருத்துப்பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ
Deleteஎதிராளி பயப்படும் வரைதான் பயமுறுத்துபவனுக்கு மதிப்பு. கொஞ்சம் நிமிர்ந்தால் பயமுறுத்துபவன் மிரண்டு விடுவான்! வடிவேலு இதை நகைச்சுவையாக சில படங்களில் நடித்திருப்பார்.
ReplyDeleteஒரு நடை முறையை சொல்ல முயன்றிருக்கிறேன் வடிவேலு படம்பார்த்ததில்லை
Deleteஎன்ன சொல்றீங்க. வடிவேல் படம் எதுவும் இதுவரையிலும் பார்த்தது இல்லையா?
Deleteஇம்மாதிரி யான வடிவேல் படங்கள்பார்த்ததில்லை
Deleteகதை நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteசிங்கங்கள் - சாமுண்டீஸ்வரி கோவில் வளாகத்திலா? ஆ
வண்ணத்துப்பூச்சி - முன்னரே கண்டிருக்கிறேன். அருமை
/கதை நல்லாத்தான் இருக்கு./thank you for the left handed compliment
Deleteகாணொளியை நாளைக்குப் பார்க்கிறேன். சிறுகதை சிறப்பு.
ReplyDeleteஅவசியம்பாருங்கள் வருகைக்கு நன்றி
Deleteகோயில் வளாகத்துல புலிகளா? பக்கத்துல சர்க்கஸ் எதாவது நடக்குதா?
ReplyDeleteசிறுகதை சின்னதா இருந்தாலும் சிறப்பு . தொடர்ந்து கதை சொல்லுங்கள்.
எனக்கு வந்த ஒரு வாட்ஸாப் மெசேஜ் நானொரு சிறுகதை தொகுப்பே வெளியிட்டிருக்கிறேனே இப்போது சிறுகதை எழுதுவது குறைந்து விட்டது
Deleteசிறுகதை நல்ல பாடத்தை கொடுத்தது ஐயா. காணொளி கண்டேன்.
ReplyDeleteசொல்ல வந்ததைப்பிடித்து விட்டீர்கள்கற்பூர புத்தி
Deleteசிறுகதை நன்றாக இருக்கிறது. காணொளி பார்த்தேன், கோவிலுக்கு போய் விட்டு இரவு வருபவர்கள் கவனமாய் இருக்க வேண்டும்
ReplyDeleteநாய் குலைக்கிறதே! அதற்கு புலியை கண்டு பயம் இல்லையா?
வண்ணத்து பூச்சி காணொளி அருமை.
வன அதிகாரிகள் கவனத்துக்குச்செல்ல வேண்டும்வந்து ரசித்தமைக்கு நன்றி மேம்
Deleteநன்றாகப் போய்க் கொண்டிருந்த சிறூகதையை (அந்த ஆங்கில வரிகளையெல்லாம் நீக்கி விட்டு) இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நீட்டி.. என்னவானும் செஞ்சிருக்கக் கூடாதா?..
ReplyDeleteபொக்கென்று முடித்து விட்டீர்களே!
ஒரு வேளை அதுதானென் பாணியோ என்னவோ கதையை நீட்டினால் சினிமாத்தனம் வந்து விடலாம் /நன்றாகப் போய்க் கொண்டிருந்த சிறூகதையை/ நீங்கள் இவ்வளவு தூரம்சொன்னதே பெருமை
Deleteகதை நன்றாக இருக்கு.
ReplyDeleteமுதல் வீடியோ நடுங்கி விட்டேன், இப்படி ஊரில் எப்படி நிம்மதியாக வாழ முடியும் கடவுளே...
வண்ணட்த்ஹுப்பூச்சி வீடியோ ஹா ஹா ஹா உண்மையில் இலை என நினைச்சிட்டேன்.. அதுவும் நிலத்தில் கிடக்கிறதே...
இதே மாதிரி பூச்சியை என்பின்கட்டில் பார்த்டிருக்கிறேன்
Deleteபள்ளிக்கால, கல்லூரிக்கால நினைவுகளுக்குக் கொண்டு சென்றது உங்கள் கதை.
ReplyDeleteவம்பிழுத்த நினைவுகளா வம்பிழுக்கப்பட்ட நினவுகளா
ReplyDeleteசிறுகதை நல்லபாடம் சொல்கிறது.
ReplyDeleteமுதல் வீடியோ பயத்தை தருகிறது. அடுத்தது அருமை.
இரண்டுமே பயம்பற்றியது
Deleteரவுடிகள் விட்டுவிடுவார்கள் எனத் தோன்றவில்லை .பதுங்குவது பாய்ச்சலுக்காக இருக்கலாம் .
ReplyDeleteபயமே அவர்களின் துணிவுக்கு காரணம்
ReplyDelete