மழையும் எண்ணங்களும்
--------------------------------------------------------
ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ஒரு திரி விளக்கு எரிவதைப் பார்த்து கற்ப்னை
தறி கெட்டு ஓட அழுவார் அந்த விளக்கிலிருந்து தீ பற்றிக் கொள்ள எங்கும் தீ
பரவுவது போல் நினைத்து அழுவார்
கிட்டத்தட்ட அந்த மன நிலையில் தான்
நானிருக்கிறேன் ஒரே வித்தியாசம்
தீக்குப் பதில் வெள்ளம் அதென்னவோ தெரிய வில்லை
கொஞ்சம் மழை பெய்தாலேயே சென்னை வெள்ளமும் கேரள வெள்ளமும் நினைவுக்கு வருகிறது
இந்த முறை
நீர்பற்றாக்குறை என்பதுபோய் எல்லா இடத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது சில நேரங்களில் தேவைப்படும் இடங்களில் மட்டும்மழை பெய்யக் கூடாதா என்று தோன்றும் பெய் எனப் பெய்யும் மழை உண்டானால் நில் என நிற்கும் மழையும் இருக்க வேண்டுமே
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவும் கேரளவெளத்தல் மக்கள் அடைந்த அவஸ்தையு ம்
மழைபெய்யும்போது நினைவுக்கு வரு சென்னையில் மழை என்றால் ஸ்ரீராமும் கேரள மழைஎன்றல் தில்லையகத்து துளசி தரனும் கோவையில் மழை என்றால் முனைவர் பழனிசாமியும் நினைவுக்கு வருவார்கள் வானிலை
அறிக்கையாக ரெட் அலெர்ட் யெல்லோ அலெர்ட் என்று என்ன வெல்லாமோ கூறு கிறார்கள் பெங்களூரில் மாலையில் மழை பெய்தால் அன்றிரவு உறக்கம் வருவதில்லை மழை அதிகமாகி வீட்டில்வெள்ளம்புகுந்தால்
என்னும் நினைப்பே அலைக்கழிக்கும்
சென்னயைபோலோ கேரளம் போலோ மழை வந்தால் பெங்களூரால் தாக்கு பிடிக்க முடியாது பராமரிப்பு
இருக்கிறதா தெரியவில்லை அத்தனை போதாதுஎன்றெ தோன்றுகிறது இந்த வயதில் அதை எதிர் கொள்ளும் துணிவும் சக்தியும் இல்லை என்பதே நிஜம்
தீபாவளிக்கு
மகன்கள்வருவார்கள் வரும்போது கார்ப்பயணம்தான்
இருக்கும் ரயில் டிக்கட்களில்லை மேலும் வந்து மறு நாளே திரும்பவேண்டும்
அவர்கள்பயணம் நலமாக அமையவும் வரும்வழியில் இந்த மழையால் தொந்தரவு இல்லாதிருக்கவுமே நினைக்கிறேன் தினமும் தொலைபேசி நிலைமையைக் கேட்கிறேன்
இங்கு ஒரு இடத்தில் மழை வெளுத்து வாங்கும்போது இன்னொருஇடத்தில் மழையின் அறிகுறியே இருக்காது
நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் வருகையைஒட்டி மழையும்
இருக்கும் எனக்கும் சென்னைக்கும் ராசியில்லை
என்று எழுதி இருந்த நினைவு
என்னை சிலர் திட்டுவதும் தெரிகிறது மழை வேண்டுமென்னும்போது மழை வேண்டாம் என்பது சரியில்லைதானே
நான் இருக்கும் நிலையைக் கூறுகிறேன்
நேற்றிரவு ஒன்றரை மணி சுமாருக்கு சென்னையில் நல்ல மழை. இன்று காலை நடைப்பயிற்சியை நான் லேசான தூறல்களுக்கிடையேதான் முடித்தேன். முக்கால் வாசிதான் முடித்தேன்!
ReplyDeleteஎன்னே சுறுசுறுப்பு ஶ்ரீராம்... இந்த ஊர் வந்து நான் இழந்தது என் சுறுசுறுப்பை. :-(
Deleteசென்ற வாரத்தில் ஒரு நாளும் எனக்கு இதே அனுபவம் ஏற்பட்டது நெல்லை. நடைப்பயிற்சி செய்யவேண்டிய கட்டாயத்தில் நான்!!
Deleteஸ்ரீ ராம்
Deleteஇன்றுகாலை என்மகன்கள் காரில் பயணம் டொடங்கி வ்ட்டார்கள் மழை இலையாம் இங்கு சன்னி
நெல்லை உங்களால் சுறு சுறுப்பாக இல்லாமலிருக்க afford செய்ய முடியும் போல
Deleteஸ்ரீராம் நடைப்பயிற்சி நல்லதுதானே முடியுமோ இல்லையோ நானே தத்தக்கா பித்தக்கா என்று நடக்கிறேனே
Deleteமழை பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் பயம் எனக்கும் உண்டு. அநேகமாக அது சென்னை வெள்ளத்துக்கு அப்புறம் மனதில் தங்கிவிட்டபயம் . வெயிலானால் நிழலில் ஒதுங்கி கொள்ளலாம். மழை வந்து வெள்ளம் வந்து மூழ்கினால் என்னாகும் என்கிற அச்சம் என்மனத்துள்ளும் அடிக்கடி ஓடும்.
ReplyDeleteஅனுபவம் பேசுகிறதோ
Deleteசென்னை என்றதும் என் நினைவு வருவதாகச் சொல்லியிருப்பதும் நெகிழ்ந்து விட்டேன். நன்றி.
ReplyDeleteசென்னை வெள்ளத்தில் நீங்கள்பட்ட அவஸ்தைகள் கேட்டிருக்கிறேனே அதனால்தான் என்னவோ உங்கள்நினைவு
Deleteமகன்கள் நல்லபடி சிரமமில்லாமல் வந்து தீபாவளி இனிமையாகக் கொண்டாட வாழ்த்துகள்.
ReplyDeleteஅவ்ர்கள்வந்து கொண்டிருப்பதாக தகவல் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்
Deleteமகன்கள், பேரன்களுடன் விழாவினை இனிமையாகக் கொண்டாட வாழ்த்துகள்.
ReplyDeleteநானும் எதிர்பார்க்கிறேன் தீபாவளி நல் வாழ்த்துகள்
Deleteதீபாவளியை இனிமையாக்க் கொண்டாடுங்கள்.
ReplyDeleteபெங்களூர் எப்படா வருவோம், மழை செமையாகப் பெய்யணுமே என்று தோன்றுகிறது. இங்க கொஞ்சம் மழை பெய்தாலே நடக்க முடியாது.
உங்க இடம் தாழ்வான பகுதியா? மழை நீர் உள்ளே வர?
தீபாவளி நல்வாழ்த்துகள்சென்னையில் வெள்ளம்வந்தபோது தாழ்வானபகுதி மேடான பகுதி என்று நினைத்ததா சில இடங்களில் முதல் மாடிவரைநீர் வந்ததே
Deleteநீர்பற்றாக்குறை - அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பார்ப்போம்...!
ReplyDeleteஎனக்கு நினைவுக்கு வந்தது ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏலென்றய் ஏலாய் என்றுதான் அடுட்த ஏப்ரலில்நீர் பற்றாக்குறை குறைவாய் இருக்கும் என்று நம்புவோம்
Deleteதங்களது நிலைப்பாட்டிலிருந்து... சரியே...
ReplyDeleteபெத்த மனம் பித்து.
மழை பாதிப்பை பார்த்த வன் நான் தொலைக்காட்சிகளில்
Deleteபெய் என்றால் பெய்யும் மழை நில் என்றால் நிற்கவும் வேண்டும்.//
ReplyDeleteஅப்படி நினைப்பதில் தவறில்லை. நானும் அப்படி பல சமயத்தில் நினைத்திருக்கிறேன்.
பத்தினிப் பெண்டிர் பெய் எனப் பெய்யுமாம் மழை க்ரேட் பீப்பிள் திங்க் எலைக்
Deleteவெள்ள அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை . வெள்ளக் காட்சிகளைத் தொலைக்காட்சியிலோ நாளேடுகளிலோ பார்க்கையில் அந்த மக்களின் கஷ்ட நஷ்டங்களை நினைத்துப் பரிதாபப்படுவேன் ..உங்கள் பிள்ளைகள் எந்த சிக்கலுமின்றி வந்து போக வாழ்த்துகிறேன் .
ReplyDeleteஅந்தப் பரிதாபம் எனக்கு அதிகம் போல் இருக்கிறது தீபாவளி நல் வாழ்த்துகள்
Delete//..பெய் எனப் பெய்யும் மழை உண்டானால் நில் என நிற்கும் மழையும் இருக்க வேண்டுமே..//
ReplyDeleteஓஹோ! நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...
’நில்’ என நிற்கச் சொல்லிவிடுவோம்..!
அத்தனை பேருமா தெரியாது நான் உத்தமன்தான் தீபாவளி நல் வாழ்த்துகள்
Deleteதீபாவளி நல்வாழ்த்துகள். பிள்ளைகள் குடும்பத்தினருடன் களித்து மகிழுங்கள் !
Deleteபிள்ளைகள் வந்து விட்டார்கள் இனி என்ன மகிழ்ச்சிதான்
ReplyDeleteபிள்ளைகள், பேரன்கள், பேத்தி, மனைவி, மருமகள்களோடு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். பெற்ற மனம் பித்து என்பது சரியாக இருக்கிறது. மழை தேவை! நாடெங்கும் நல்ல மழைப்பொழிவு மனதில் மகிழ்ச்சியைத் தான் தருகிறது. நான் என் பெண்ணை 45 நாட்கள் குழந்தையாக அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து சென்னை வரும்போது மழை,வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டிருக்கேன். அதைத் தவிரவும் வடமாநிலத்தில் வசித்தபோதும் மழை காரணத்தால் நிறையக் கஷ்டப்பட்டிருக்கோம். ஆகவே எங்களுக்கு இந்த அனுபவங்கள் புதிதல்ல என்றாலும் சென்னை வெள்ளமும், கேரளாவின் வெள்ளமும் மறக்க முடியாத ஒன்று.
ReplyDeleteஅனுபவங்கள் ஆசானாகின்றன இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
Deleteஇனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
Deleteநான் இரண்டு வெள்ளங்களை சந்தித்திருக்கிறேன். 1977இல் திருச்சியில் வெள்ளம் வந்த பொழுது ஸ்ரீரங்கம் திருச்சியிலிருந்து துண்டிக்கப்பட்டது. எங்கள் வீட்டு மாடியில் நாலு குடும்பங்கள் அடைக்கலம் அடைந்திருந்தனர். எங்கள் வீட்டில் மாடு இருந்தது. காலையில் எங்கள் மாமா பால் கறந்து கொடுக்க, எங்கள் அம்மா எல்லோருக்கும் பக்கத்துக்கு வீடுகளுக்கும் சேர்த்து காபி,கலந்து கொடுத்ததோடு நிற்காமல், எல்லோருக்கும் தீபாவளி பட்சணங்கள் சப்ளை, மதியம் பக்கத்து வீட்டு மாமியோடு சேர்ந்து எல்லோருக்கும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று சமைத்து வழங்கினார். அப்பொழுது நான் கல்லூரி மாணவி, துளிக்கூட பயமோ, கவலையோ இல்லை. ஜாலியாக பிக்நிக் போல என்ஜாய் பண்ணினோம்.
ReplyDeleteஇரண்டாவது முறை சமீபத்தில் 2015இல் சென்னையில் புகுந்த வெள்ளம். எங்கள் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது. அப்பொழுதும் நான் பெரிதாக கவலைப்படவில்லை. பிரசவித்திருந்த என் பெண்ணையும் குழந்தையையும் அதற்கு முதல் நாள்தான் அவர்கள் வீட்டில் கொண்டு விட்டோம். அதனால் நல்லவேளை குழந்தையை கொண்டு அவர்கள் வீட்டில் விட்டு விட்டோம், இல்லாவிட்டால் கை குழந்தையோடு ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்போம் என்று தோன்றியதே தவிர பெரிதாக கவலையெல்லாம் வரவில்லை. ஆனால் வெள்ளம் வடிந்தவுடனேயே குழந்தையை பார்க்க மனம் துடித்தது. அவர்கள் வீட்டிற்குச் சென்று குழந்தையை பார்த்ததும்தான் நிம்மதியானேன். வயது ஏற ஏற பற்றும், பாசமும் அதிகமாகிறது, அதனால் கவலைகளும் அதிகமாகுமோ? என்று தோன்றுகிறது.
1977ல் விஜயவாடாவில் இருந்தேன் திருச்சியில் வெள்ளம் வந்தபொது விஜ்யவாடாவில் புயல் வந்தது மசூலிப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கடல் கரை ஏற்யதில் கொந்தளிப்பில் மாண்டனர்
Deleteஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
Deleteசமீபமாக பெங்களூரில் பெய்து கொண்டிருக்கும் மழையினால் பல பகுதிகளில் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதை தினமும் செய்தித்தாளில் பார்க்கிறோம். உங்கள் கவலை புரிகிறது. பாதிப்பு வராதிருக்குமென நம்புவோம்.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நல்லகாலம் மழையினால் தீபாவளி பாதிக்கப் படவில்லை உங்களுக்கும் குடும்பதாருக்கும் இனியதீபாவளி நல் வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
மனசில்தோன்றியதை எழுதினேன் வருகைக்கு நன்றி
Delete